Tuesday, November 30, 2010

மகரம் - குருப் பெயர்ச்சி பலன்கள்உங்களைப் பற்றி:

எதிலும் வழக்கு போடும் மகர ராசிக்காரர்களே நீங்கள் எவருக்கும் அஞ்சாமல் உண்மையைப் பேசுபவர்கள். எல்லாரும் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் உடையவர்.

எப்படி இருக்கப் போகிறது இந்த குருப் பெயர்ச்சி:

இது வரை வாக்கு ஸ்தானத்தில் இருந்த குருபகவான் இனி மூன்றாமிடத்தில் அமர்ந்து என்னென்னெ பலன்கள் தரப்போகிறார் என்பதைப் பார்ப்போம்.


இதுவரை பட்ட காலிலேயே படும் என்பது போன்ற நிலை மாறும். நீங்கள் செய்யாத தவறுக்கெல்லாம் மாட்டிக் கொண்டீர்களே, இனி நீங்கள் அதிலிருந்து தப்பிப்பீர்கள். கோர்ட், போலீஸ் என்றிருந்த நிலைமை மாறும். இதுவரை இருந்த வந்த உங்களுக்கு எதிராக இருந்த நிலைமை மாறும். வாழ்க்கைத்துணையுடன் இருந்த பிணக்க நிலை மாறும். முன்கோபம், பிடிவாதம் நீங்கும். குடும்பத்தில் இருந்த வந்த மந்த நிலை மாறி உற்சாகம் துளிர்விடும். உங்களது வார்த்தைக்கு முக்கியத்துவம் கிடைக்கும். சிறியவர்களிடம் கூட கெட்ட பெயர் வாங்கினீர்களே? இனி அந்த நிலைமை மாறும். வரவுக்கு மேல் செலவு இருந்த நிலைமையும் மெல்ல மெல்ல மாறும். படிப்பில் மிகுந்த கவனம் தேவை. மிகுந்த நிதானமாக எந்த காரியத்தையும் செய்ய வேண்டும். வார்த்தைகளில் நிதானம் தேவை. தேவை இல்லாத இடங்களில் கருத்து கூற முயல வேண்டாம். கேட்டால் மட்டும் உதவி செய்யுங்கள். உதவி கேட்காதவர்களுக்காக நீங்களாக யாருக்கும் உதவி செய்தல் கூடாது. உடல் ஊனமுற்றோருக்கு உதவிகள் செய்யலாம். ஏழைக் குழந்தைகளை படிக்க வைத்தல் நலம் பயக்கும். எதற்கெடுத்தாலும் பிள்ளைகளை சத்தம் போடுவதை குறையுங்கள். உங்கள் பிள்ளைகள் உங்களை விட புத்திசாலிகள். தாய், தாய்வழி உறவினர்களுடன் உறவு பலிக்கும். வீடு, மனை வாங்குவதில் வரும் 3 மாதத்திற்கு சிக்கல் ஏற்பட்டு பின் சரியாகும். மருத்திவ செலவுகள் காத்திருக்கிறது. கவனம் தேவை. நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் மிகுந்த கவனம் தேவை. வாழ்க்கைத்துணைக்கு சந்தேகம் ஏற்படும்படி நடந்து கொள்வதை தவிருங்கள். த்ந்தாயாருடன் தர்க்கம் கூடவே கூடாது. நண்பர்களின் மீது கோபம் கொள்வதையும் தவிர்க்கவும். தொழில் செய்யும் இடத்தில் தர்க்கம் கூடாது. மேலதிகாரிகள் பளு கொடுக்கலாம். எதையும் செய்யும் திறமை உங்களிடம் இருப்பதை உணருங்கள்.அடுத்தவருக்கு சொல்லும் யோசனையை நீங்களும் கொஞ்சம் பயன்படுத்தி பாருங்களேன். அதீத கற்பனை கூடாது. அப்படியே கற்பனை செய்தாலும் மற்றவரிடம் சொல்லி மற்றவரை குழப்ப முயற்சிக்காதீர்கள். கலைஞர்களுக்கு பாராட்டுகளும், பரிசுகளும் குவியும் காலம் இது. மொத்தத்தில் இதுவரை இருந்த வந்த வறுமை மற்றும் மன உளைச்சல் நீங்கி செல்வவளமும், நிம்மதியும் ஏற்படும்.

நக்ஷத்திர ரீதியான பலன்கள்:

உத்திராடம் 2,3,4ம் பாதம் : உடல்நலம் உற்சாகமாக இருக்கும். அனைவரிடமும் நல்ல பெயர் எடுக்க வேகமும், விவேகமும் அவசியமாகும். சூர்யனை வணங்கி எதையும் ஆரம்பித்தால் வெற்றிதான்.

திருவோணம் : நண்பர்களால் அதிக நன்மைகள் கிடைக்கும். திருமணம் மற்றும் சுபகாரியங்கள் தங்குதடையின்றி நடக்கும். ஸ்ரீமஹாவிஷ்ணுவை வணங்குங்கள், நன்மைகள் பல கிடைக்கும்.

அவிட்டம் 1,2 ம் பாதம் : வியாபாரம் பெருகும். மிகவும் தைரியமாக உபதொழில் ஒன்றும் ஆரம்பிப்பீர்கள். உத்தியோக ரீதியாக அயல்நாடு செல்ல வேண்டி வரும். உடல்நிலை சிறப்பாக இருக்கும். முருகனை வணங்குங்கள், வாழ்வு சிறக்கும்.

குறிப்பு: இது மாணவ மணிகளுக்கு: ஸ்ரீ ஸரஸ்வதி ஸ்லோகம் படிப்பது நன்மையைத்தரும்.

லக்ன ரீதியான பலன்கள்:

லக்னம் இராசி பலன்கள் பரிகாரம்
மேஷம் மகரம் 60/100 சண்முக கவசம் படிப்பது
ரிஷபம் மகரம் 65/100 ஸ்ரீமஹால்க்ஷ்மி அஷ்டகம் சொல்வது
மிதுனம் மகரம் 60/100 விஷ்ணு ஸகஸ்ரநாமம் சொல்வது
கடகம் மகரம் 70/100 ஸ்ரீசௌந்தர்யலஹரி சொல்வது
ஸிம்ஹம் மகரம் 60/100 ஆதித்யஹ்ருதயம், மஹாலக்ஷிமி காயத்ரி, நாராயண காயத்ரி, நவக்ரஹ காயத்ரி சொல்வது
கன்னி மகரம் 60/100 விஷ்ணு ஸகஸ்ரநாமம் சொல்வது, முடிந்த வரை இராம நாமம் சொல்வது, மகான்களை வழிபடவும்
துலாம் மகரம் 60/100 நவக்ரஹ ஸூக்தம் சொல்வது, ஸ்ரீஸூக்தம் சொல்வது.
விருச்சிகம் மகரம் 65/100 கணபதி பூஜை மற்றும துர்ஹா ஸூக்தம் சொல்வது, முடிந்த வரையில் அம்பாள் நாமாவை சொல்வது
தனுசு மகரம் 60/100 கோளறு பதிகம் சொல்லுங்கள், ஹனுமன் வழிபாடு
மகரம் மகரம் 60/100 குலதெய்வ வழிபாடு செய்வது மற்றும் முன்னோர்களை வழிபடுவது.
கும்பம் மகரம் 60/100 துர்க்கா ஸகஸ்ரநாம பாராயணம் மற்றும் மூகபஞ்சக சதீ சொல்வது
மீனம் மகரம் 60/100 தன்வந்திரி ஸ்லோகம் சொல்வது மற்றும் கணபதி உபநிஷத் சொல்வது
லக்னமே தெரியாது மகரம் 70/100 குலதெய்வ வழிபாடு செய்வது மற்றும் முன்னோர்களை வழிபடுவது.s
குறிப்பு:

[1] மேலே உள்ள டேபிளை எப்படி பயன்படுத்துவது?

நீங்கள் மகரம்


இராசியில் பிறந்து லக்னம் தெரிந்ததென்றால் அதற்குள்ள பலனைத் தெரிந்து கொள்ளவும். அதற்குள்ள பரிகாரத்தை தெரிந்து கொள்ளவும். உதாரணமாக, நீங்கள் மகரம் இராசியில் பிறந்து மீனம் லக்னத்தில் பிறந்தவரென்றால் உங்களுக்கு 60% சதவிகிதம் நல்ல பலன்கள் கிடைக்கும். மேலும் நீங்கள் செய்ய வேண்டிய பரிகாரம்: தன்வந்திரி ஸ்லோகம் சொல்வது மற்றும் கணபதி உபநிஷத் சொல்வது. எனக்கு லக்னமேத் தெரியாது ஆனால் மகரம் இராசி என்பவர்கள் குலதெய்வ வழிபாடு செய்வது மற்றும் முன்னோர்களை வழிபடுவது.

[2] இங்கு கொடுக்கப்பட்டிருப்பது பொதுபலன்களே. இவை ஜாதகத்திற்கு ஜாதகம் திசை ரீதியாக மாறலாம்.

நக்ஷத்திர வாரியாக சில குறிப்புகள்:

* நக்ஷத்திரங்கள்
பலன்கள் உத்திராடம் 2,3,4 திருவோணம் அவிட்டம் 1,2
இராசி மகரம் மகரம் மகரம்
இராசியாதிபதி சனி சனி சனி
நக்ஷத்திர அதிபதி சூரியன் சந்திரன் செவ்வாய்
அதிதேவதைகள் விஸ்வேதேவர் விஷ்ணு வஸுக்கள்
கணம் மனுஷ்ய கணம் தேவ கணம் இராக்ஷஸ கணம்
நாடி பார்ஸுவ - இடது பார்ஸுவ - வலது மத்ய நாடி
மிருகம் பசு பெண் குரங்கு பெண் சிங்கம்
பக்ஷி வலியன் காரை வண்டு
விருக்ஷம் பலாமரம் எருக்கு வன்னி
இரஜ்ஜு வயிறு கண்ட இரஜ்ஜு சிரோ
வேதை நக்ஷத்ரம் புனர்பூசம் திருவாதிரை மிருகசீர்ஷம், சித்திரை
அதிர்ஷ்டம் தரும் எண்கள் 1, 4, 5, 7, 9 1, 3, 6, 7, 9 1, 3, 6, 7, 9
அதிர்ஷ்டம் தரும் திசைகள் கிழக்கு, மேற்கு கிழக்கு, தெற்கு கிழக்கு, தெற்கு
குறிப்பு:

அதிர்ஷ்டம் தரும் எண்களும், திசைகளும் ஜாதகத்திற்கு ஜாதகம் மாறும். இங்கு கொடுக்கப்பட்டிருப்பது பொதுவானவையே.

No comments: