Tuesday, November 30, 2010

ரிஷப ராசி குருப் பெயர்ச்சி பலன்கள்ரிஷப இராசிக்குள்ள குருப்பெயர்ச்சி பொது பலன்கள்

உங்களைப் பற்றி:

"எருதொடு மாறேல்" என்ற கூற்றுப்படி - எடுத்த காரியத்தையும், கொடுத்த வாக்கையும் காப்பாற்றும் ரிஷப இராசி நேயர்களே! பணப்புழக்கம் தங்களிடம் தட்டுப்பாடின்றி இருக்கும். உங்களது உழைப்பால் மற்றவர்களை வாழவைப்பீர்கள். யார் உங்களிடம் வாக்கு கொடுத்தாலும் அதன்படி அவர்கள் நடந்துகொள்ளாவிட்டால் உங்களுக்கு கோபம் வரும். ஏனென்றால் நீங்கள் தன்மானம் நிறைந்தவர்கள். எந்த சூழ்நிலையிலும் அடுத்தவர் மனம் புண்படாதபடி பேசுவதில் வல்லவர் நீங்கள்.

எப்படி இருக்கப் போகிறது இந்த குருப் பெயர்ச்சி:

இது வரை உங்களது கர்மஸ்தானத்தில் இருந்து மன உளைச்சலை கொடுத்த குருபகவான் இனி லாபஸ்தானத்தில் இருந்து என்னென்னெ பலன் தரப்போகிறார் என்பதைப் பார்ப்போம்.

எதை பேசினாலும் அவமானம், எதை செய்தாலும் தலைகுனிவு என கடந்த 1 வருடமாக இருந்தீர்களே? அந்த நிலை மாறும். உங்களது யோசனைகளை அலுவலகத்திலும், குடும்பத்திலும் மதிக்கும் நேரம் வந்து விட்டது. உங்களது மேலான யோசனைகளை சொல்ல தயாராகுங்கள். நல்லது. சொன்ன வாக்கை காப்பாற்ற முடியாமல் தவித்த நிலையும் மாறப் போகிறது. இனியாவது வாக்கு கொடுப்பதற்கு முன் யோசித்து கொடுக்கவும். தைரியம் பிரகாசிக்கும் நேரமிது. எனவே எந்த முடிவையும் சட்டென்று முடிவெடுங்கள். நல்ல விஷயங்களை தள்ளிப் போட வேண்டாம். வீடு, மனை, ஆடை, ஆபரணங்கள் போனற விஷயங்களில் அவசரம் வேண்டாம். எதையும் ஒரு முறைக்கு இருமுறை யோசித்து முடிவெடுக்கவும். தாயார் மற்றும் தாய்வழி உறவினர்களுடன் மனக்கசப்பு ஏற்பட வாய்ப்புண்டு. கவனம் தேவை. பிள்ளைகள் படிப்பில் மிகுந்த கவனம் தேவை. குழந்தைகள் இல்லாதவர்களுக்கு சந்தாண பாக்கியம் கிட்டும். அவர்களை கடிந்து கொள்ள வேண்டாம். எடுத்து சொல்லுங்கள். அவர்களை அவசரப்படுத்த வேண்டாம். சிறிய நோய் என்றாலும் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. மருத்துவம் சார்ந்த செலவுகள் காத்திருக்கின்றன, கவனம் தேவை. கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். இருந்தாலும் விட்டு கொடுத்து போவது நல்லது. திருமணத்தடை நீங்கி திருமணம் இனிதே நடைபெறும். நண்பர்கள் உதவிகள் செய்வர். தந்தையார் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். வேலைசார்ந்த விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு வெளிநாட்டு பயணங்கள் கிடைக்க கூடும். வேலை இடமாற்றம், பதவிஉயர்வு ஏற்படும். சம்பள உயர்வும் கிடைக்கும். லாபகரமான முதலீடுகள் செய்வீர்கள். மொத்தத்தில் இந்த குருப் பெயர்ச்சி நல்லவைகளை உங்களிடம் கொண்டு வந்து சேர்ப்பதாக அமையும்.

நக்ஷத்திர ரீதியான பலன்கள்:

கிருத்திகா 2, 3, 4: உடல்நலத்தில் கவனம் தேவை. புதிய மனை, வீடு, வாகனம் அமைவதில் சிக்கல் ஏற்படலாம். வழக்கு வியாஜ்ஜியங்களில் வெற்றி கிடைக்கும். உறவினர், நண்பர்கள் ஆதரவு கிடைக்கும். சோம்பலைத் தவிர்த்து முயற்சி மேற்கொண்டால் கல்வியில் சாதனை பெற முடியும். ஸ்ரீ மஹாலக்ஷிமி அஷ்டகம் சொல்லி தினப்பொழுதை ஆரம்பித்தால் எதிலும் வெற்றிதான்.

உரோஹினி: தொழில், கூட்டுவியாபாரம், உத்தியோகம் ஆகியவைகளில் மிகுந்த முன்னேற்றம் ஏற்படும். எந்த ஒரு செயலையும் மனமகிழ்ச்சியோடும் சிறு புன்முறுவலோடும் முயற்சியோடு ஆரம்பியுங்கள். அதற்கான பலன் உங்கள் கைகளில் வரும். புதிய் தொழில் உங்களுக்கு அமையும் பொன்னான காலமிது. ஸ்ரீ துர்க்கா, லக்ஷிமி, ஸ்ரஸ்வதி ஆகியோரின் காயத்ரி மந்த்ரங்களை பாராயணம் செய்யுங்கள், அனைத்தும் உங்களைத்தேடி வரும்.

மிருகசீரிஷம் 1,2 : புதிய உற்சாகத்தோடும், மகிழ்ச்சியோடும் குருச்ப்பெயர்ச்சியை சந்திக்கப் போகிறீர்கள். நீங்கள் சற்று இறங்கி வந்து வாழ்க்கைத்துணையுடனும், நண்பர்களிடமும், உறவினர்களிடமும் அனுசரித்துப் போனீர்களானால் சிறப்பாக இருக்கும். மாணவ மாணவிகளுக்கு கல்வியில் கவனம் தேவை. ஸ்ரீ ஹயக்ரீவர் ஸ்தோத்திரம் சொல்ல சொல்ல சொல்லொன்னாத் துயரமும் அகன்று விடும்.

லக்ன ரீதியான பலன்கள்:

லக்னம் இராசி பலன்கள் பரிகாரம்
மேஷம் ரிஷபம் 60/100 கந்த ஷஷ்டி கவசம் சொல்வது
ரிஷபம் ரிஷபம் 70/100 ஸ்ரீ மஹாலக்ஷ்மி அஷ்டகம் சொல்வது
மிதுனம் ரிஷபம் 65/100 விஷ்ணு ஸகஸ்ரநாமம் சொல்வது
கடகம் ரிஷபம் 80/100 ந்ருஸிம்ம ஸ்தோத்திரம் சொல்வது.
ஸிம்ஹம் ரிஷபம் 60/100 ஆதித்யஹ்ருதயம், மஹாலக்ஷிமி காயத்ரி சொல்வது
கன்னி ரிஷபம் 60/100 விஷ்ணு ஸகஸ்ரநாமம் சொல்வது, முடிந்த வரை இராம நாமம் சொல்வது
துலாம் ரிஷபம் 55/100 நவக்ரஹ மூலமந்த்ரம் சொல்வது.
விருச்சிகம் ரிஷபம் 70/100 துர்ஹா ஸூக்தம் சொல்வது, முடிந்த வரையில் அம்பாள் நாமாவை சொல்வது.
தனுர் ரிஷபம் 60/100 ஹனுமத் கவசம் சொல்வது, ஐயப்பன் வழிபாடு.
மகரம் ரிஷபம் 65/100 அனுமன் வழிபாடு
கும்பம் ரிஷபம் 60/100 லலிதா ஸகஸ்ரநாம பாராயணம்
மீனம் ரிஷபம் 55/100 தன்வந்திரி ஸ்லோகம் சொல்வது
லக்னமே தெரியாது ரிஷபம் 70/100 ஸ்ரீ மஹாலக்ஷ்மி அஷ்டகம் சொல்வது, விஷ்ணு ஸகஸ்ரநாமம் சொல்வது
குறிப்பு:

[1] மேலே உள்ள டேபிளை எப்படி பயன்படுத்துவது?

நீங்கள் ரிஷப இராசியில் பிறந்து லக்னம் தெரிந்ததென்றால் அதற்குள்ள பலனைத் தெரிந்து கொள்ளவும். அதற்குள்ள பரிகாரத்தை தெரிந்து கொள்ளவும். உதாரணமாக, நீங்கள் ரிஷப இராசியில் பிறந்து கன்னி லக்னத்தில் பிறந்தவரென்றால் உங்களுக்கு 60% சதவிகிதம் நல்ல பலன்கள் கிடைக்கும். மேலும் நீங்கள் செய்ய வேண்டிய பரிகாரம்: விஷ்ணு ஸகஸ்ரநாமம் சொல்வது, முடிந்த வரை இராம நாமம் சொல்வது. எனக்கு லக்னமேத் தெரியாது ஆனால் ரிஷப இராசி என்பவர்கள் ஸ்ரீ மஹாலக்ஷ்மி அஷ்டகம் சொல்லலாம், விஷ்ணு ஸகஸ்ரநாமம் சொல்லலாம்.

[2] இங்கு கொடுக்கப்பட்டிருப்பது பொதுபலன்களே. இவை ஜாதகத்திற்கு ஜாதகம் திசை ரீதியாக மாறலாம்.

நக்ஷத்திர வாரியாக சில பாய்ண்ட்ஸ்:

* நக்ஷத்திரங்கள்
பலன்கள் கிருத்திகா - 2,3,4ம் பாதங்கள் உரோகினி மிருகசீரிஷம் - 1,2 ம் பாதங்கள்
இராசி ரிஷபம் ரிஷபம் ரிஷபம்
இராசியாதிபதி சுக்ரன் சுக்ரன் சுக்ரன்
நக்ஷத்திர அதிபதி சூரியன் சந்த்ரன் செவ்வாய்
அதிதேவதைகள் அக்னி ப்ரம்ஹா சந்த்ரன்
கணம் இராக்ஷஸகணம் மனுஷ்யகணம் தேவகணம்
நாடி பார்ஸுவ - வலது பார்ஸுவ - வலது மத்ய
மிருகம் பெண் ஆடு நல்ல பாம்பு சாரைப் பாம்பு
பக்ஷி மயில் ஆந்தை கோழி
விருக்ஷம் அத்தி நவ்வல் கருங்காலி
இரஜ்ஜு உதர இரஜ்ஜு கண்ட சிரோ ரஜ்ஜு
வேதை நக்ஷத்ரம் விசாகம் ஸ்வாதி சித்திரை, அவிட்டம்
அதிர்ஷ்டம் தரும் எண்கள் 1, 3, 6 1, 2, 5, 6 1, 3, 6, 9
அதிர்ஷ்டம் தரும் திசைகள் கிழக்கு மேற்கு கிழக்கு
குறிப்பு:

அதிர்ஷ்டம் தரும் எண்களும், திசைகளும் ஜாதகத்திற்கு ஜாதகம் மாறும். இங்கு கொடுக்கப்பட்டிருப்பது பொதுவானவையே.

1 comment:

srini said...

very good prediction,thanks