Tuesday, November 30, 2010

விருச்சிகம் - குருப் பெயர்ச்சி பலன்கள்விருச்சிகம் இராசிக்குள்ள குருப்பெயர்ச்சி பொது பலன்கள்


உங்களைப் பற்றி:

எல்லோரிடமும் கண்டிப்பும் கட்டாயமும் உள்ள விருச்சிகம் இராசி வாசகர்களே, நீங்கள் எதிலும் சுறுசுறுப்பாக இருப்பவர்.துணிச்சலுக்கும், தைரியத்திற்கும் பெயர் போனவர். வாக்கு தவறாதவர்.

எப்படி இருக்கப் போகிறது இந்த குருப் பெயர்ச்சி:

இது வரை சுகஸ்தானத்தில் இருந்த குருபகவான் இனி என்னென்னெ பலன்கள் தரப்போகிறார் என்பதைப் பார்ப்போம்.எதிர்பார்த்திருந்த தனலாபம், தேக ஆரோக்கியத்தில் நன்மை, தாயார் தாய் வழி உறவினர்களுடன் இருந்த சுமூக நிலைமை என அனைத்து நல்ல பலன்களும் அப்படியே தொடரப்போகும் காலமிது. நல்லது. எந்த இடத்திற்கு சென்றாலம் ஏதாவது ஒரு தடங்கல் வந்து கொண்டே இருந்ததல்லவா இனி அந்த நிலைமை மாறும். சொன்னால் சொன்ன நேரத்தில் உங்களால் இனி செல்ல முடியும். கடுஞ்சொற்கள் பேசுவதை சற்றே குறைத்து கொள்ளுங்கள். உங்கள் நற்மதிப்பை நீங்களே கெடுத்து கொள்ளாதீர்கள். செலவுகளைப் பற்றி கவலைப்படும் சமயம் வந்து விட்டது. ஆடம்பர செலவுகள் வேண்டாம். இளைசகோதரத்தின் மூலம் லாபம் கிடைக்கும் நேரமிது. சிறப்பான சுகங்களை அனுபவிக்க போகும் காலமிது. புத்தம் புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். சந்தாண பாக்கியம் கிட்டும் காலமிது. தெய்வ யாத்திரை, புனித ஸ்தலங்களுக்கு செல்வது போன்ற நல்ல விஷயங்கள் நடக்கும் காலகட்டம் இது. முன்னோர்களை வழிபட மறக்க வேண்டாம். கோபம் கூடவே கூடாது. ரத்தம் சம்பந்தப்பட்ட வியாதி வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. கவனம் தேவை. வாழ்க்கைத்துணையுடன் உறவு சிறக்கும். நண்பர்கள் மூலம் அனுகூலம் கிடைக்கும். எதிரிகளை வீழ்த்த வியூகம் அமைப்பீர்கள். வழக்கு வியாஜ்ஜியங்களில் உங்கள் பக்கம் வெற்றி கிடைக்கும். தந்தையாருடன் உறவு பிரகாசிக்கும். பிதுரார்ஜித சொத்துக்கள் உங்களை வந்து அடையும் நேரமிது. பணி செய்யும் இடத்தினில் எச்சரிக்கை தேவை.சிலருக்கு பணியின் காரணமாக வெளிநாடு அயலூர் செல்ல வேண்டி வரலாம். லாபகரமான முதலீடுகள் செய்ய தயங்க வேண்டாம். எந்த முதலீடுகளையுமே குறுகிய காலம் செய்யாமல் நீண்ட காலமாக செய்யுங்கள். தாய் தந்தையரை வணங்கி எந்த காரியத்தையும் ஆரம்பித்தால் வெற்றியே. மொத்தத்தில் சோதனைகளை சாதனைகளாக மாற்றும் காலமிது.


நக்ஷத்திர ரீதியான பலன்கள்:

விசாகம் 4ம் பாதம்: போட்டிகள் பொறாமைகள் விலகும். சந்தையில் உங்கள் வியாபாரம் பெருகும். உடல்நிலை சிறப்பாக இருக்கும். வழக்கு வியாஜ்ஜியங்களில் வெற்றிகள் வந்து சேரும். சகோதர சகோதரி்களிடம் அன்பு கூடும். ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தியை வணங்கினால் எல்லாம் தடையின்றி நடக்கும்.

அனுஷம்: சோதனைகள் விலகி சாதனைகள் வரும். தொழிலில் லாபம் கிடைக்கும். கணவன் மனைவி கருத்து வேறுபாடுகள் நீங்கும். அன்னியோன்னியம் ஏற்படும். சுபகாரியங்கள் இனிதே நடக்கும். ஹனுமனை வணங்கி எதையும் ஆரம்பித்தால் வெற்றிதான்.

கேட்டை : தன லாபம், தன சேர்க்கை உங்களைத் தேடி வரும். சோம்பலை விடுங்கள். பிரிந்த சொந்தங்கள் தேடிவரும். ஏற்றுக்கொள்ளுங்கள். உங்கள் பெண்ணுக்கு நல்ல வரன் கிடைக்கும். எதிர்பாராத பயணத்தில் அனுகூலம் உண்டாகும். ஸ்ரீவிஷ்ணு ஸகஸ்ரநாமம் சொல்லுங்கள், நனமைகள் தேடிவரும்.

குறிப்பு: இது மாணவ மணிகளுக்கு: ஸ்ரீ நவக்ரஹ வழிபாடு நன்மையைத்தரும்.

லக்ன ரீதியான பலன்கள்:லக்னம் இராசி பலன்கள் பரிகாரம்
மேஷம் விருச்சிகம் 70/100 கந்த ஷஷ்டி கவசம் படிப்பது
ரிஷபம் விருச்சிகம் 65/100 ஸ்ரீஸூக்தம் சொல்வது
மிதுனம் விருச்சிகம் 60/100 விஷ்ணு ஸகஸ்ரநாமம் சொல்வது
கடகம் விருச்சிகம் 65/100 ஸ்ரீ லலிதா ஸகஸ்ரநாமம் சொல்வது
ஸிம்ஹம் விருச்சிகம் 60/100 ஆதித்யஹ்ருதயம், நவக்ரஹ காயத்ரி சொல்வது
கன்னி விருச்சிகம் 60/100 விஷ்ணு ஸகஸ்ரநாமம் சொல்வது, முருகனை வழிபடுவது, முடிந்த வரை இராம நாமம் சொல்வது, மகான்களை வழிபடவும்
துலாம் விருச்சிகம் 65/100 கணபதி காயத்ரி, நவக்ரஹ ஸூக்தம் சொல்வது, ஸ்ரீஸூக்தம் சொல்வது.
விருச்சிகம் விருச்சிகம் 75/100 கணபதி பூஜை மற்றும துர்ஹா ஸூக்தம் சொல்வது, முடிந்த வரையில் அம்பாள் நாமாவை சொல்வது.
தனுர் விருச்சிகம் 70/100 அபிராமி அந்தாதி சொல்லுங்கள்
மகரம் விருச்சிகம் 65/100 குலதெய்வ வழிபாடு செய்வது மற்றும் முன்னோர்களை வழிபடுவது.
கும்பம் விருச்சிகம் 60/100 லலிதா ஸகஸ்ரநாம பாராயணம் மற்றும் மூகபஞ்சக சதீ சொல்வது, தன்வந்திரி ஸ்லோகம் சொல்வது.
மீனம் விருச்சிகம் 60/100 தன்வந்திரி ஸ்லோகம் சொல்வது மற்றும் கணபதி காயத்ரி சொல்வது
லக்னமே தெரியாது விருச்சிகம் 75/100 கணபதி பூஜை மற்றும துர்ஹா ஸூக்தம் சொல்வது, முடிந்த வரையில் அம்பாள் நாமாவை சொல்வது.
குறிப்பு:

[1] மேலே உள்ள டேபிளை எப்படி பயன்படுத்துவது?

நீங்கள் விருச்சிகம் இராசியில் பிறந்து லக்னம் தெரிந்ததென்றால் அதற்குள்ள பலனைத் தெரிந்து கொள்ளவும். அதற்குள்ள பரிகாரத்தை தெரிந்து கொள்ளவும். உதாரணமாக, நீங்கள் விருச்சிகம் இராசியில் பிறந்து கும்பம் லக்னத்தில் பிறந்தவரென்றால் உங்களுக்கு 60% சதவிகிதம் நல்ல பலன்கள் கிடைக்கும். மேலும் நீங்கள் செய்ய வேண்டிய பரிகாரம்: லலிதா ஸகஸ்ரநாம பாராயணம் மற்றும் மூகபஞ்சக சதீ சொல்வது, தன்வந்திரி ஸ்லோகம் சொல்வது. எனக்கு லக்னமேத் தெரியாது ஆனால் விருச்சிகம் இராசி என்பவர்கள் கணபதி பூஜை மற்றும துர்ஹா ஸூக்தம் சொல்வது, முடிந்த வரையில் அம்பாள் நாமாவை சொல்வது.

[2] இங்கு கொடுக்கப்பட்டிருப்பது பொதுபலன்களே. இவை ஜாதகத்திற்கு ஜாதகம் திசை ரீதியாக மாறலாம்.


நக்ஷத்திர வாரியாக சில குறிப்புகள்:* நக்ஷத்திரங்கள்
பலன்கள் விசாகம் - 4 ம் பாதம் அனுஷம் கேட்டை
இராசி விருச்சிகம் விருச்சிகம் விருச்சிகம்
இராசியாதிபதி செவ்வாய் செவ்வாய் செவ்வாய்
நக்ஷத்திர அதிபதி வியாழன் சனி புதன்
அதிதேவதைகள் இந்திரன், அக்னி மித்திரன் இந்திரன்
கணம் இராக்ஷஸ் கணம் தேவகணம் இராக்ஷஸ் கணம்
நாடி பார்ஸுவ - இடது மத்ய பார்ஸுவ - வலது
மிருகம் பெண் புலி பெண் மான் ஆண் மான்
பக்ஷி செவ்வாக் சாதகம் சக்கிரவா
விருக்ஷம் விளா மகிழ் பிராய்
இரஜ்ஜு வயிறு தொடை பாதம்
வேதை நக்ஷத்ரம் கார்த்திகை பரணி அசுவதி
அதிர்ஷ்டம் தரும் எண்கள் 1, 3, 4, 6, 7, 9 1, 2, 3, 6, 7, 9 1, 3, 5, 6, 7, 9
அதிர்ஷ்டம் தரும் திசைகள் கிழக்கு, வடக்கு கிழக்கு, தெற்கு கிழக்கு
குறிப்பு:

அதிர்ஷ்டம் தரும் எண்களும், திசைகளும் ஜாதகத்திற்கு ஜாதகம் மாறும். இங்கு கொடுக்கப்பட்டிருப்பது பொதுவானவையே.
--

No comments: