Tuesday, November 30, 2010

கன்னி - குருப் பெயர்ச்சி பலன்கள்

கன்னி இராசிக்குள்ள குருப்பெயர்ச்சி பொது பலன்கள்

உங்களைப் பற்றி:

"கன்னியான் ஏய்க்கப்படுவான்" என்பதற்கேற்ப யாரையும் எளிதில் நம்பி விடும் பழக்கம் உடையவர். அடுத்தவருக்கு செய்யும் உபதேசத்தில் பாதியளவாவது நீங்கள் அதை கடைபிடியுங்கள். நீங்கள் இந்து மதத்தில் பிறந்தவர் என்றால் பொதுவாக உங்களுக்கு முருகன், விஷணு, ஐயப்பன் சம்பந்தப்பட்ட பெயர்கள் அமைந்திருக்கும். உங்களுக்கு பொதுவாக புத்தி கூர்மையுள்ள மதிநுட்பம் மிகுந்த வாழ்க்கைத்துணை அமைந்திருக்கும்.

எப்படி இருக்கப் போகிறது இந்த குருப் பெயர்ச்சி:

இது வரை உங்களுக்கு பல விதமான முறையிலும் விரையங்களை ஏற்படுத்திய குரு பகவான் இனி என்னென்னெ பலன்கள் தரப்போகிறார் என்பதைப் பார்ப்போம்.

மிகுந்த பொருட்செலவில் சுபவிரையங்கள், எடுத்த காரியங்களில் தடை, எதுவுமே நேர்மாறாக இருப்பது என கடந்த காலங்களை மிகுந்த சிரமத்துடன் கழித்தீர்களல்லவா, இனி வரும்காலம் மிகவும் நல்லகாலம். உங்கள் பேச்சை நீங்களே கேட்காமல் இருந்து வந்த நிலைமை மாறும். குடும்பத்தில் சின்ன சின்ன கருத்து மோதல்கள் வந்து மறையும். கடன் கொடுப்பதற்கு முன் ஒருமுறைகு இருமுறை யோசிக்கவும். வாக்கு கொடுப்பதற்கு முன் யோசனை செய்து கொடுக்கவும். காப்பாற்ற முடியாமல் போகலாம். தைரியம் சிறக்கும். அதற்காக அசட்டு தைரியம் எதிலும் கூடாது. இளைய சகோதரத்திடமிருந்து அனுகூலம் கிடைக்கும். வீடு, மனை, வாகனம் யோகம் உண்டு. பயன்படுத்தி கொள்ளவும். படிப்பில் கவனம் தேவை. எச்சரிக்கையுடன் நேரத்தை வீணாக்காமல் படிக்கவும். வெற்றி நிச்சயம். குறுக்கு வழிகளை நாடக்கூடாது. அவமானம் ஏற்படலாம். குழந்தைகளின் மீது சின்ன சின்ன பாரங்களை சுமத்தாதீர்கள். அவர்களுடன் உட்கர்ந்துபேசி முடிவு செய்யுங்கள். உடல்நிலையில் கவனம் தேவை. மருத்துவத்திற்கு என சேமிக்க பழகுங்கள். திடீர் செலவுகள் வந்து கடுப்பேற்றலாம். கவனம். வாழ்க்கைத்துணையுடன் அமைதியை கடைபிடியுங்கள். உங்கள் முரட்டுதனத்தை விட்டுவிட்டு சற்று இறங்கி வாருங்கள். உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். வாகனம், இயந்திரங்கள், நீர்நிலைகளில் கவனம் தேவை. சோம்பல் கூடவே கூடாது. தந்தையாருடன் நல்ல இணக்கமான சூழ்நிலை நிலவும். எவ்வளவு வேலை செய்து இவ்வளவு நாளும் நல்ல பெயர் கிடைக்கவில்லையே என ஏங்கியிருந்தீர்களே, இனி அந்த நிலை மாறும். உங்களுக்கு பணியிடத்தினில் அங்கீகாரம் கிடைக்கும். சிலருக்கு இடமாற்றம் ஏற்படலாம். லாபகரமான முதலீடுகளில் முதலீடு செய்ய தகுதியானவர்களின் ஆலோசனைகளை பெற்று செய்யவும். தூங்கப்போகும் முன் வீண் கற்பனைகள், சந்தேகங்கள் கூடவே கூடாது. பொதுவில் இந்த குரு பெயர்ச்சி வருங்காலத்திற்கு அச்சாரம் போட வைக்கும்.

நக்ஷத்திர ரீதியான பலன்கள்:

உத்திரம் 2, 3, 4ம் பாதங்கள்: உடல்நலம் சம்பந்தமான விஷயங்களில் கவனம் தேவை. மூன்றாம் நபர் விஷயத்தில் மூக்கை நுழைக்க வேண்டாம். எந்த வேலையிலும் முழுமுயற்சி தேவை. ஆதித்யஹ்ருதயம் மற்றும் ஸ்ரீ விஷணு ஸகஸ்ரநாமம் சொல்வது பயனைத்தரும்.

ஹஸ்தம்: வேலை செய்யும் இடத்தினில் மிகுந்த கவனம் தேவை. செய்யாத தப்பிற்கு மாட்ட வேண்டி வரலாம். பேச்சை குறையுங்கள். தனிநபர் விமர்சனம், பாராட்டு கூடவே கூடாது. முடிந்த வரை நேர்மையை கடைபிடியுங்கள். கூடிய விரைவில் எதிர்பார்த்த திருமணம் நடக்கும். ஸ்ரீ லலிதா த்ரிசதி சொல்ல சொல்ல வாழ்வில் ஒளி பிறக்கும்.

சித்திரை 1, 2 ம் பாதங்கள் : வரவு செலவினங்களில் கவனம் தேவை. முதலீடுகள் செய்யும் முன் கவனம் தேவை. எந்த ஒரு காரியத்திலும் ஆரம்பத்திலுள்ள முயற்சியைக் குறைக்காமலிருந்தால் வெற்றி கிடைக்கும். ஸ்ரீ முருக வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.

குறிப்பு: இது மாணவ மணிகளுக்கு: ஸ்ரீ ஹயக்ரீவர் வழிபாடு மற்றும் சரஸ்வதி தியானம் நன்மையைத்தரும்.

லக்ன ரீதியான பலன்கள்:

லக்னம் இராசி பலன்கள் பரிகாரம்
மேஷம் கன்னி 60/100 கந்த ஷஷ்டி கவசம் சொல்வது
ரிஷபம் கன்னி 65/100 ஸ்ரீ மன் நாராயணீயம் சொல்வது மற்றும் ஸ்ரீஸூக்தம் சொல்வது
மிதுனம் கன்னி 50/100 விஷ்ணு ஸகஸ்ரநாமம் சொல்வது,மகான்களை வழிபடவும்
கடகம் கன்னி 60/100 புருஷ ஸூக்தம், நாராயண ஸூக்தம், விஷ்ணு ஸுக்தம் சொல்வது மற்றும் சூரிய வழிபாடு
ஸிம்ஹம் கன்னி 55/100 ஆதித்யஹ்ருதயம், மஹாலக்ஷிமி காயத்ரி, நாராயண காயத்ரி, ஹனுமத் காயத்ரி சொல்வது
கன்னி கன்னி 50/100 விஷ்ணு ஸகஸ்ரநாமம் சொல்வது, முடிந்த வரை இராம நாமம் சொல்வது, மகான்களை வழிபடவும்
துலாம் கன்னி 65/100 கணபதி காயத்ரி, நவக்ரஹ மூலமந்த்ரம் சொல்வது, ஸ்ரீஸூக்தம் சொல்வது.
விருச்சிகம் கன்னி 65/100 கணபதி பூஜை மற்றும துர்ஹா ஸூக்தம் சொல்வது, முடிந்த வரையில் அம்பாள் நாமாவை சொல்வது.
தனுர் கன்னி 60/100 துர்க்கா மூலமந்த்ரம் மற்றும் ஹனுமத் கவசம் சொலவது.
மகரம் கன்னி 60/100 கணபதி வழிபாடு மற்றும் குலதெய்வ வழிபாடு செய்வது மற்றும் முன்னோர்களை வழிபடுவது.
கும்பம் கன்னி 50/100 லலிதா ஸகஸ்ரநாம பாராயணம் மற்றும் மூகபஞ்சக சதீ சொல்வது, தன்வந்திரி ஸ்லோகம் சொல்வது.
மீனம் கன்னி 55/100 தன்வந்திரி ஸ்லோகம் சொல்வது மற்றும் துர்க்கா காயத்ரி சொல்வது, வீட்டிலுள்ள முன்னோர்களை வழிபடவும்.
லக்னமே தெரியாது கன்னி 50/100 விஷ்ணு ஸகஸ்ரநாமம் சொல்வது, முடிந்த வரை இராம நாமம் சொல்வது, மகான்களை வழிபடவும்
குறிப்பு:

[1] மேலே உள்ள டேபிளை எப்படி பயன்படுத்துவது?

நீங்கள் கன்னி இராசியில் பிறந்து லக்னம் தெரிந்ததென்றால் அதற்குள்ள பலனைத் தெரிந்து கொள்ளவும். அதற்குள்ள பரிகாரத்தை தெரிந்து கொள்ளவும். உதாரணமாக, நீங்கள் கன்னி இராசியில் பிறந்து மீனம் லக்னத்தில் பிறந்தவரென்றால் உங்களுக்கு % சதவிகிதம் நல்ல பலன்கள் கிடைக்கும். மேலும் நீங்கள் செய்ய வேண்டிய பரிகாரம்: தன்வந்திரி ஸ்லோகம் சொல்வது மற்றும் துர்க்கா காயத்ரி சொல்வது, வீட்டிலுள்ள முன்னோர்களை வழிபடவும். எனக்கு லக்னமேத் தெரியாது ஆனால் கன்னி இராசி என்பவர்கள் விஷ்ணு ஸகஸ்ரநாமம் சொல்வது, முடிந்த வரை இராம நாமம் சொல்வது, மகான்களை வழிபடவும்.

[2] இங்கு கொடுக்கப்பட்டிருப்பது பொதுபலன்களே. இவை ஜாதகத்திற்கு ஜாதகம் திசை ரீதியாக மாறலாம்.

நக்ஷத்திர வாரியாக சில குறிப்புகள்:

* நக்ஷத்திரங்கள்
பலன்கள் உத்திரம் 2, 3, 4ம் பாதங்கள் ஹஸ்தம் சித்திரை - 1, 2 ம் பாதங்கள்
இராசி கன்னி கன்னி கன்னி
இராசியாதிபதி புதன் புதன் புதன்
நக்ஷத்திர அதிபதி சூரியன் சந்த்ரன் செவ்வாய்
அதிதேவதைகள் பகன் ஆதித்யன் துவஷ்டா
கணம் மனுஷ்ய தேவகணம் இராக்ஷஸ் கணம்
நாடி பார்ஸுவ - வலது பார்ஸுவ - வலது மத்ய
மிருகம் பசுமாடு எருமை பெண் புலி
பக்ஷி கழுகு பருந்து (கிளி) மரங்கொத்தி
விருக்ஷம் இலந்தை அத்தி வில்வம்
இரஜ்ஜு தொப்புள் ரஜ்ஜு தலை தொப்புள்
வேதை நக்ஷத்ரம் பூரட்டாதி ஸதயம் மிருகசீர்ஷம் அவிட்டம்
அதிர்ஷ்டம் தரும் எண்கள் 1, 3, 4, 5, 7, 9 1, 2, 3, 5, 7, 9 1, 3, 5, 7, 9
அதிர்ஷ்டம் தரும் திசைகள் கிழக்கு கிழக்கு, வடக்கு கிழக்கு
குறிப்பு:

அதிர்ஷ்டம் தரும் எண்களும், திசைகளும் ஜாதகத்திற்கு ஜாதகம் மாறும். இங்கு கொடுக்கப்பட்டிருப்பது பொதுவானவையே.

No comments: