Tuesday, November 30, 2010

மேஷ ராசி குருப் பெயர்ச்சி பலன்கள்

மேஷ இராசிக்குள்ள குருப்பெயர்ச்சி பொது பலன்கள்

உங்களைப் பற்றி:

நண்பர்களையும் உறவினர்களையும் அன்பினாலும் பாசத்தினாலும் வீழ்த்துபவர்களே, சமாதானத்தையும், அமைதியையும் விரும்புபவர்களே, கடினமான முட்பாதைகளையும் மலர் பாதைகளாக மாற்றும் சக்தி கொண்டவர்களே, உங்களைப் பற்றி மதீப்பீடு செய்வது மிகவும் கடினம். மிகவும் மன உறுதி உடையவர். எடுத்த வேலையை சரியாக முடிக்கும், எடுத்த முடிவில் மாறாமல் இருக்கும், யாரையும் சாராமல் தனதுழைப்பால் முன்னேறும் மேஷ இராசி வாசகர்களே,

எப்படி இருக்கப் போகிறது இந்த குருப் பெயர்ச்சி:

இது வரை உங்களது லாப ஏகாதச ஸ்தானத்தில் இருந்த குருபகவான் இனி விரைய மோக்ஷஸ்தானமான 12மிடத்தில் இருந்து வரும் ஆறு மாதங்களுக்கு என்னென்னெ பலன் தரப்போகிறார் என்பதைப் பார்ப்போம்.

வீடு வாங்க தடை, மனை வாங்க தடை, சுபகாரியம் செய்வதற்கு தடை, நற்செயல்கள் எது செய்வதற்கும் தடையாக கடந்த 1 வருட காலமாக இருந்து வந்தது. இனி அது மாறும். தாயாருடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். தாய் வழி உறவினர்களுடன் இருந்த மனக்கசப்புகள், பிணக்குகள் நீங்கி புதிய விதமான உறவுகள் நீடிக்கும். வேலைவாய்ப்பில் இருந்த சுணக்கம் மாறும். உங்களது வாக்கு வன்மைகூடும். தைரியம் கூடும். படிப்பில் கவனம் தேவை. மிகவும் எச்சரிக்கையுடன் படித்தால் சாதனைகள் புரிய வாய்ப்புண்டு். பிள்ளைகளின் வளப்பின் கவனம் தேவை. உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மாத்திரை செலவினங்கள் குறையும். கணவன் மனைவி கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும். கவனம் தேவை. வீண் வாக்குவாதம் வேண்டாம். நண்பர்கள் மூலம் அனுகூலம் ஏற்படும். தேவையற்ற வீண் விவாதங்களில் ஏடுபட வேண்டாம். யாரைப் பற்றியும் விமர்சனம் செய்ய வேண்டாம். தந்தையார் உடல்நிலை முன்னேற்றம் ஏற்படும். தந்தையுடன் கருத்து பரிமாற்றம் செய்யும் போது கவனம் தேவை. வேலை செய்யும் இடங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். பண விஷயங்களில் தேர்ந்தெடுத்து முதலீடு செய்யவும். தூங்கப் போகும்முன் குலதெய்வத்தை வணங்கி விட்டு படுக்க செல்லவும். தேவையற்ற வீண் குழப்பங்கள், கற்பனைகள் வேண்டாம். மொத்தத்தில் இந்த குரு பெயர்ச்சி தங்களுக்கு உண்மைகளை புரிய வைக்கும் உரைகல்லாக அமையும்.

நக்ஷத்திர ரீதியான பலன்கள்:

அசுபதி: உங்களுக்கு நல்ல பலன்கள், நல்ல முறையில் வந்து சேரும். பொருளாதார முன்னேற்றம், வழக்கு வியாஜ்ஜியங்களில் வெற்றி என நற்பயன்கள் வந்து சேரும் காலமிது. தாய்தந்தையரை வணங்கி எந்த காரியங்களையும் ஆரம்பியுங்கள், வெற்றிகளைக் குவிப்பீர்கள். குல தெயவ வழிபாடும் நன்மையைத்தரும்.

அபபரணி: உத்தியோகத்தில் பதவிஉயர்வு, இடமாற்றம், பணியாளர்கள் ஆதரவு, மேல்மட்ட அதிகாரிகளின் ஆதரவு என நல்ல பலன்கள் ஏற்படும். சிறுசிறு பாதிப்புகள் வந்தாலும் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஸ்ரீ மஹாலக்ஷிமி காயத்ரி சொல்லி, வணங்கிவிட்டு காரியங்களை ஆரம்பியுங்கள்.

கிருத்திகா: நேரம் கிடைக்கும் போதெல்லாம் உழையுங்கள், அது ஒன்றே உங்களது பலம். அரசாங்க அனுகூல்யம் கிடைக்கும். தடைப்பட்ட சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். ஆடை அணிகலன்கள் சேரும். ஆதிதயஹ்ருதயம் சொல்லுங்கள். ஆதித்யனின் அருளால் அனைத்தும் நடக்கும்.

லக்ன ரீதியான பலன்கள்:

லக்னம் இராசி பலன்கள் பரிகாரம்
மேஷம் மேஷம் 60/100 கந்த ஷஷ்டி கவசம் சொல்வது
ரிஷபம் மேஷம் 70/100 திருப்பாவை படிப்பது
மிதுனம் மேஷம் 60/100 விஷ்ணு ஸகஸ்ரநாமம் சொல்வது
கடகம் மேஷம் 70/100 லலிதா த்ருசதி படியுங்கள்
ஸிம்ஹம் மேஷம் 50/100 ஆதித்யஹ்ருதயம் சொல்வது
கன்னி மேஷம் 50/100 விஷ்ணு ஸகஸ்ரநாமம் சொல்வது, முடிந்த வரை இராம நாமம் சொல்வது
துலாம் மேஷம் 55/100 ஸ்ரீ ஸுக்தம் சொல்வது
விருச்சிகம் மேஷம் 75/100 துர்ஹா ஸூக்தம் சொல்வது
தனுர் மேஷம் 60/100 ஹனுமத் கவசம் சொல்வது
மகரம் மேஷம் 65/100 கணபதி உபநிஷத் பாராயணம்
கும்பம் மேஷம் 60/100 அனுமனை வழிபடுவது
மீனம் மேஷம் 55/100 குரு ஸ்லோகம் சொல்வது
லக்னமே தெரியாது மேஷம் 60/100 கந்த ஷஷ்டி கவசம் சொல்வது
குறிப்பு:

[1] மேலே உள்ள டேபிளை எப்படி பயன்படுத்துவது?

நீங்கள் மேஷ இராசியில் பிறந்து லக்னம் தெரிந்ததென்றால் அதற்குள்ள பலனைத் தெரிந்து கொள்ளவும். அதற்குள்ள பரிகாரத்தை தெரிந்து கொள்ளவும். உதாரணமாக, நீங்கள் மேஷ இராசியில் பிறந்து விருச்சிக லக்னத்தில் பிறந்தவரென்றால் உங்களுக்கு 75% சதவிகிதம் நல்ல பலன்கள் கிடைக்கும். மேலும் நீங்கள் செய்ய வேண்டிய பரிகாரம்: துர்ஹா ஸூக்தம் சொல்வது. எனக்கு லக்னமேத் தெரியாது என்பவர்கள் கந்த ஷஷ்டி கவசம் சொல்லாம்.

[2] இங்கு கொடுக்கப்பட்டிருப்பது பொதுபலன்களே. இவை ஜாதகத்திற்கு ஜாதகம் திசை ரீதியாக மாறலாம்.

நக்ஷத்திர வாரியாக சில பாய்ண்ட்ஸ்:

* நக்ஷத்திரங்கள்
பலன்கள் அசுபதி அபபரணி கிருத்திகா - 1ம் பாதம்
இராசி மேஷம் மேஷம் மேஷம்
இராசியாதிபதி செவ்வாய் செவ்வாய் செவ்வாய்
நக்ஷத்திர அதிபதி கேது சுக்ரன் சூரியன்
கணம் தேவகணம் மனுஷ்யகணம் இராக்ஷஸகணம்
நாடி பார்ஸுவ - வலது மத்ய ஸமான - இடது
மிருகம் ஆண் குதிரை யானை ஆடு
பக்ஷி இராஜாளி காக்கை மயில்
விருக்ஷம் எட்டி நெல்லி அத்திமரம்
இரஜ்ஜு பாத இரஜ்ஜு தொடை தொப்புள், வயிறு
வேதை நக்ஷத்ரம் கேட்டை அனுஷம் விசாகம்
அதிர்ஷ்டம் தரும் எண்கள் 1, 2, 3, 9 2, 7, 5, 9 1, 2, 3, 9
அதிர்ஷ்டம் தரும் திசைகள் கிழக்கு தெற்கு கிழக்கு
குறிப்பு:

அதிர்ஷ்டம் தரும் எண்களும், திசைகளும் ஜாதகத்திற்கு ஜாதகம் மாறும். இங்கு கொடுக்கப்பட்டிருப்பது பொதுவானவையே.