Tuesday, November 30, 2010

கடகம் குருப் பெயர்ச்சி பலன்கள்

கடக இராசிக்குள்ள குருப்பெயர்ச்சி பொது பலன்கள்


"Cancer is Sensitive" என்பதற்கேற்ப எதிலும் துடிப்புடனும், ஈடுபாட்டுடனும் ஈடுபடும் கடக இராசி வாசகர்களே! எளிதில் உணர்ச்சிவசப்படுபவ்ர் நீங்கள். உங்கள் கடமையிலும், காரியத்திலும் கண்ணாக இருப்பீர்கள். சோம்பலை விரும்ப மாட்டீர்கள். எந்த வேலையையும் முதல் முறையிலேயே முடிக்க வேண்டும் என நினைப்பவர்கள் நீங்கள். கொஞ்சம் சந்தேகப்புத்தி(Detective Mind) உடையவர்கள் நீங்கள்.

எப்படி இருக்கப் போகிறது இந்த குருப் பெயர்ச்சி:

எந்த வேலையை எடுத்தாலும் தடங்கல், வீட்டிலும் சின்ன சின்ன சண்டை சச்சரவுகள், வெளியில் சென்றாலே ஏதாவது பிரச்சினை வந்து விடுமோ என்ற பயம் என கடந்த ஒரு வருடத்தில்....யப்பா...உங்கள் பிரச்சினைக்கு பதில்கள் தர குரு தங்களது 9ம் இடமான பாக்கியஸ்தானத்திற்கு வந்து விட்டார். குரு பார்க்க கோடி நன்மை என்பார்களே அதற்கேற்ப தடையாய் இருந்த காரியங்கள் அனைத்தையும் சிறப்பாக நடத்தி வைப்பார். நமது சொற்களுக்கு மதிப்பில்லையே என அங்கலாய்ப்பவர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி அனுகூலமாக அமையும். உங்கள் வீட்டில் சுபகாரியங்கள் நடைபெறும் நேரமிது. தள்ளி தள்ளி போய்க் கொண்டிருந்த அனைத்து சுபகாரியங்களையும் குரு நடத்தி வைப்பார். தயாராக இருங்கள். எந்த காரியத்தை நினைத்தாலும், எடுத்தாலும் பயந்து கொண்டிருந்தீர்களே, இனி அந்த பயத்தை எல்லாம் தூக்கி தூர வையுங்கள். எந்த காரியத்தையும் துணிந்து செய்யுங்கள். இளைய ச்கோதரத்தின் உடல்நிலையில் கவனம் தேவை. தாயார் தாய்வழி உறவில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வீடு, வாகனம் யோகம் ஏற்படும். ரொம்ப நாளாக வசூலாகாமல் இருந்த கடன் வசூலாகும். பிள்ளைகளின் படிப்பு மிகவும் நன்றாக இருக்கும்.உங்கள் பிள்ளைகள் படிப்பில் சாதனைகள் புரிய வேண்டிய காலமிது. பயன்படுத்திக் கொள்ளுங்கள். உடல்நிலையில் கவனம் தேவை. இயந்திரங்களை கையாளும் மிகுந்த எச்சரிக்கை தேவை. தீ, டூவீலர் ஆகியவற்றிலும் கவனம் தேவை. கணவன் மனையின் உறவில் நல்ல முன்னேற்றம் உண்டு. கொஞ்சம் கோபத்தை குறைத்து கொள்வது நல்லது. நண்பர்களிடத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டிய நேரமிது. தந்தையாருடன் உறவு மேம்படும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு முக்கியத்துவம் தரப்படும். உங்கள் பேச்சு எடுபடும். முக்கியஸ்தர்களின் பழக்கம் ஏற்படும். பணியிட மாற்றம் ஏற்படலாம். சிலருக்கு வேலையே மாறலாம். முதலீடுகள் செய்யும்போது மனைவியின் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். தூங்கப் போகும் போது தேவையற்ற வீண் குழப்பங்களை களையுங்கள்.

நக்ஷத்திர ரீதியான பலன்கள்:

புனர்பூசம் 4: புதிய சொத்துக்கள் வாங்க வேண்டிய நேரமிது. குடும்பத்தில் கருத்து வேற்றுமை ஏற்பட்டாலும் உங்கள் கருத்து ஏற்கப்படும். பெரிய முதலீடுகளில் ஈடுபடும்போது தகுந்த நபரிடம் ஆலோசனை பெற்று செய்யவும். சூடு, நரம்பு சம்பந்தப்பட்ட உடல் உபாதைகள் ஏற்படலாம். எச்சரிக்கை. குரு பகவானை நினைத்து எதையும் ஆரம்பித்தால் எதிலும் வெற்றிதான்.

பூசம்: முதலில் அனைவரையும் நம்புவதை விடுங்கள். உங்கள் மேல் யார் கரிசனையுடன் நடந்து கொள்கிறார்களோ அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். உங்களுக்கு நெருக்கமானவர்களே உங்களுக்கு துரோகம் செய்யும் நிலையிருந்து மாற்றம் வந்துவிட்டது. வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்து போங்கள். பணப்பற்றாக்குறை இன்றி இருக்க சியாமளா தண்டகம் படியுங்கள்.

ஆயில்யம் : உத்தியோகம் மாற்றத்திற்கு சிறிது காலம் பொறுங்கள். உங்களுக்கும் நல்ல காலம் பிறந்து விட்டது என்பதனை உணருங்கள். திருமணம் செய்யும் காலகட்டம் இது. உத்தியோகத்தில் இடமாற்றம், பணிஉயர்வு உண்டு. எதிர்பாராத செலவினம் ஏற்படலாம். கூட்டுத்தொழிலில் ஈடுபடுபவர்கள் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும்.

லக்ன ரீதியான பலன்கள்:

லக்னம் இராசி பலன்கள் பரிகாரம்
மேஷம் கடகம் 70/100 சௌந்தர்யலஹரி சொல்வது.
ரிஷபம் கடகம் 80/100 ஸ்ரீ மன் நாராயணீயம் சொல்வது.
மிதுனம் கடகம் 60/100 கணபதி பூஜை மற்றும் விஷ்ணு ஸகஸ்ரநாமம் சொல்வது,மகான்களை வழிபடவும்
கடகம் கடகம் 60/100 அம்மன் வழிபாடு
ஸிம்ஹம் கடகம் 60/100 ஆதித்யஹ்ருதயம் சொல்வது
கன்னி கடகம் 60/100 விஷ்ணு ஸகஸ்ரநாமம் சொல்வது, முடிந்த வரை இராம நாமம் சொல்வது, மகான்களை வழிபடவும்
துலாம் கடகம் 60/100 நவக்ரஹ மூலமந்த்ரம் சொல்வது, துர்க்கா ஸூக்தம் சொல்வது.
விருச்சிகம் கடகம் 70/100 முடிந்த வரையில் அம்பாள் நாமாவை சொல்வது.
தனுர் கடகம் 65/100 ஹனுமத் கவசம் சொலவது.
மகரம் கடகம் 65/100 கணபதி வழிபாடு மற்றும் குலதெய்வ வழிபாடு செய்வது.
கும்பம் கடகம் 60/100 லலிதா ஸகஸ்ரநாம பாராயணம் மற்றும் மூகபஞ்சக சதீ சொல்வது, தன்வந்திரி ஸ்லோகம் சொல்வது.
மீனம் கடகம் 60/100 துர்க்கா காயத்ரி சொல்வது, வீட்டிலுள்ள முன்னோர்களை வழிபடவும்.
லக்னமே தெரியாது கடகம் 70/100 அம்மன் வழிபாடு
குறிப்பு:

[1] மேலே உள்ள டேபிளை எப்படி பயன்படுத்துவது?

நீங்கள் கடக இராசியில் பிறந்து லக்னம் தெரிந்ததென்றால் அதற்குள்ள பலனைத் தெரிந்து கொள்ளவும். அதற்குள்ள பரிகாரத்தை தெரிந்து கொள்ளவும். உதாரணமாக, நீங்கள் கடக இராசியில் பிறந்து மேஷம் லக்னத்தில் பிறந்தவரென்றால் உங்களுக்கு 70% சதவிகிதம் நல்ல பலன்கள் கிடைக்கும். மேலும் நீங்கள் செய்ய வேண்டிய பரிகாரம்: சௌந்தர்யலஹரி சொல்வது. எனக்கு லக்னமேத் தெரியாது ஆனால் கடக இராசி என்பவர்கள் அம்மன் வழிபாடு செய்யவும்.

[2] இங்கு கொடுக்கப்பட்டிருப்பது பொதுபலன்களே. இவை ஜாதகத்திற்கு ஜாதகம் திசை ரீதியாக மாறலாம்.

நக்ஷத்திர வாரியாக சில குறிப்புகள்:

* நக்ஷத்திரங்கள்
பலன்கள் புனர்பூசம் - 4ம் பாதம் பூசம் ஆயில்யம்
இராசி கடகம் கடகம் கடகம்
இராசியாதிபதி சந்த்ரன் சந்த்ரன் சந்த்ரன்
நக்ஷத்திர அதிபதி குரு சனி புதன்
அதிதேவதைகள் அதிதி குரு சர்ப்பம்
கணம் தேவகணம் தேவகணம் இராக்ஷஸ கணம்
நாடி பார்ஸுவ - இடது மத்ய பார்ஸுவ - இடது
மிருகம் பெண் பூனை ஆண் ஆடு ஆண் பூனை
பக்ஷி அன்னம் நீர்க்காக்கை சிட்டுக்குருவி
விருக்ஷம் மூங்கில் அரசு புன்னை
இரஜ்ஜு உதர ரஜ்ஜு தொடை பாதம்
வேதை நக்ஷத்ரம் உத்திராடம் பூராடம் மூலம்
அதிர்ஷ்டம் தரும் எண்கள் 2, 3, 4, 5, 9 2, 3, 4, 5, 9 2, 3, 4, 5, 6, 9
அதிர்ஷ்டம் தரும் திசைகள் வடக்கு மேற்கு, வடக்கு வடக்கு
குறிப்பு:

அதிர்ஷ்டம் தரும் எண்களும், திசைகளும் ஜாதகத்திற்கு ஜாதகம் மாறும். இங்கு கொடுக்கப்பட்டிருப்பது பொதுவானவையே.

4 comments:

Anonymous said...

wonderful!
shylaja

kanavu said...

மிக்க நன்றி. உங்கள் சேவை தொடரட்டும்

srini said...

great and fully relieved after seeing your prediction and now onwards I will try with more confidence
srini

ashhok.kumar said...

Very Nice

Ashok