Tuesday, November 30, 2010

தனுசு - குருப் பெயர்ச்சி பலன்கள்

உங்களைப் பற்றி:

எதிலும் அப்பாவியாக இருக்கும் தனுசு இராசி வாசகர்களே, நீங்கள் மனசாட்சிக்கு விரோதமான காரியங்களை செய்ய மாட்டீர்கள். வானத்தில் கோட்டை கட்டுபவர்கள். பிறருக்கு கொடுத்து கொடுத்தே மகிழ்ச்சியடைவீர்கள். பொதுவாக நீங்கள் சாதுவானவர்.

எப்படி இருக்கப் போகிறது இந்த குருப் பெயர்ச்சி:

இது வரை மூன்றாவது ஸ்தானத்தில் இருந்த குருபகவான் இனி சுகஸ்தானத்தில் அமர்ந்து என்னென்னெ பலன்கள் தரப்போகிறார் என்பதைப் பார்ப்போம்.

இளைய சகோதரத்துடன் சின்ன சின்ன நெருடல்கள், வேலை கிடைப்பதில் குழப்பம், தகுதியற்ற வேலை, வேலை செய்யும் இடத்தில் குழப்பம், என ஒரு குழப்பமான சமயத்தில் குருப் பெயர்ச்சியை சந்திக்கின்றீர்கள். நல்லது. சின்ன சின்ன குழப்பங்களனைத்தும் மறையும் காலமிது. உங்கள் குடும்பத்தில் நல்ல நல்ல விஷயங்கள், விஷேசங்கள் நடக்கப்போகும் காலமிது. உங்கள் தைரியத்திற்கு இறைவனை வேண்டுங்கள். பாதியில் விட்ட படிப்பை தொடர வாழ்த்துக்கள். படிப்பில் சாதனைகள் புரிய வேண்டிய காலகட்டம் இது. தாயார் தாய்வழி உறவினர்களுடன் இருந்த மனக்கசப்புகள் குறையும். வீடு, மனை, வாகனம் யோகம் அமையும். நெடுநாளாக இந்த விஷயத்தில் இருந்த வந்த சுணக்க நிலை மாறும். பிள்ளைகளின் மேல் கவனம் வைக்க வேண்டிய நேரம் இது. முன்னோர்களை அமாவாசை தோறும் வழிபடவும். மறைவிடங்களில் சிலருக்கு அலர்ஜி ஏற்படலாம். கவனம் தேவை. வாழ்க்கைத்துணையுடன் இருந்த வந்த மனக்கசப்பு நீங்கி புதிய உத்வேகம் பிறக்கும். நல்ல நண்பர்களின் மூலம் பல நன்மைகளைப் பெறுவீர்கள். தந்தையாருடன் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து மறையும். நினைத்த இடத்தில் நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் அங்கீகரிக்கப்படுவீர்கள். தாய் தந்தை ஆரோக்கியத்தின் மீது கவனம் தேவை. அவர்களின் மருத்துவ செலவிற்கு சிறிது தொகையை செலவழிக்க வேண்டி வரலாம். லாபகரமான முதலீடுகளில் யாரையும் நம்பவேண்டாம். உங்கள் மீது யார் மிகுந்த அன்பு வைத்திருக்கிறார்களோ அவர்களை நம்பவும். மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி தடைபட்டிருந்த பாக்கியங்களை அள்ளித்தருவதுடன் பணம், பட்டம், பதவி ஆகியவற்றை தருவதாக அமையும்.

நக்ஷத்திர ரீதியான பலன்கள்:

மூலம்: எதிலும் அவசரம் கூடாது. எச்சரிக்கை தேவை. பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டாலும் செலவுகளும் முன் வந்து நிற்கும். ஹனுமனை வணங்கி எதையும் ஆரம்பித்தால் வெற்றி கிடைக்கும்.

பூராடம்: பேசுவதைக் குறையுங்கள் பாதி பிரச்சனை தீர்ந்து விடும். குடும்பத்தில் சிறுசிறு சலசலப்பு ஏற்பட்டு நீங்கும். பண விஷயத்தில் மிகுந்த கவனம் தேவை. திருமண முயற்சியில் வெற்றியடைவீர்கள். ஸ்ரீமஹாலக்ஷிமியை வணங்குங்கள், தன முன்னேற்றம் ஏற்படும்.

உத்திராடம் 1ம் பாதம் : உடல் நலத்தில் சற்று கவனமுடன் இருக்கவும். தந்தையாரின் உடல்நிலையில் கவனம் தேவை. உத்தியோகம் பார்க்கும் இடத்தில் மேலதிகாரிகளிடம் கவனமாக பழகவும். யாரையும் அனுசரித்து போனால் பிரச்சினை இல்லை. மஹான்களை வழிபட தடைபட்டிருந்த காரியங்கள் தடை விலகி நன்மை ஏற்படும்.

குறிப்பு: இது மாணவ மணிகளுக்கு: ஸ்ரீ விநாயகர் அகவல் படிப்பது நன்மையைத்தரும்.

லக்ன ரீதியான பலன்கள்:

லக்னம் இராசி பலன்கள் பரிகாரம்
மேஷம் தனுசு 55/100 கந்த ஷஷ்டி கவசம் படிப்பது
ரிஷபம் தனுசு 70/100 ஸ்ரீஸூக்தம் சொல்வது
மிதுனம் தனுசு 60/100 விஷ்ணு ஸகஸ்ரநாமம் சொல்வது
கடகம் தனுசு 70/100 ஸ்ரீசௌந்தர்யலஹரி சொல்வது
ஸிம்ஹம் தனுசு 60/100 ஆதித்யஹ்ருதயம், மஹாலக்ஷிமி காயத்ரி, நாராயண காயத்ரி, நவக்ரஹ காயத்ரி சொல்வது
கன்னி தனுசு 50/100 விஷ்ணு ஸகஸ்ரநாமம் சொல்வது, முடிந்த வரை இராம நாமம் சொல்வது, மகான்களை வழிபடவும்
துலாம் தனுசு 60/100 நவக்ரஹ ஸூக்தம் சொல்வது, ஸ்ரீஸூக்தம் சொல்வது.
விருச்சிகம் தனுசு 70/100 கணபதி பூஜை மற்றும துர்ஹா ஸூக்தம் சொல்வது, முடிந்த வரையில் அம்பாள் நாமாவை சொல்வது மற்றும் சண்முக கவசம் சொல்வது.
தனுசு தனுசு 60/100 கோளறு பதிகம் சொல்லுங்கள், ஹனுமன் வழிபாடு
மகரம் தனுசு 65/100 குலதெய்வ வழிபாடு செய்வது மற்றும் முன்னோர்களை வழிபடுவது.
கும்பம் தனுசு 50/100 லலிதா ஸகஸ்ரநாம பாராயணம் மற்றும் மூகபஞ்சக சதீ சொல்வது
மீனம் தனுசு 60/100 தன்வந்திரி ஸ்லோகம் சொல்வது மற்றும் கணபதி காயத்ரி சொல்வது
லக்னமே தெரியாது தனுசு 60/100 கோளறு பதிகம் சொல்லுங்கள், ஹனுமன் வழிபாடு
குறிப்பு:

[1] மேலே உள்ள டேபிளை எப்படி பயன்படுத்துவது?

நீங்கள் தனுசு இராசியில் பிறந்து லக்னம் தெரிந்ததென்றால் அதற்குள்ள பலனைத் தெரிந்து கொள்ளவும். அதற்குள்ள பரிகாரத்தை தெரிந்து கொள்ளவும். உதாரணமாக, நீங்கள் தனுசு இராசியில் பிறந்து கும்பம் லக்னத்தில் பிறந்தவரென்றால் உங்களுக்கு 50% சதவிகிதம் நல்ல பலன்கள் கிடைக்கும். மேலும் நீங்கள் செய்ய வேண்டிய பரிகாரம்: லலிதா ஸகஸ்ரநாம பாராயணம் மற்றும் மூகபஞ்சக சதீ சொல்வது. எனக்கு லக்னமேத் தெரியாது ஆனால் தனுசு இராசி என்பவர்கள் கோளறு பதிகம் சொல்லுங்கள், ஹனுமன் வழிபாடு.

[2] இங்கு கொடுக்கப்பட்டிருப்பது பொதுபலன்களே. இவை ஜாதகத்திற்கு ஜாதகம் திசை ரீதியாக மாறலாம்.

நக்ஷத்திர வாரியாக சில குறிப்புகள்:

* நக்ஷத்திரங்கள்
பலன்கள் மூலம் பூராடம் உத்திராடம் 1ம் பாதம்
இராசி தனுசு தனுசு தனுசு
இராசியாதிபதி வியாழன் வியாழன் வியாழன்
நக்ஷத்திர அதிபதி கேது சுக்ரன் சூரியன்
அதிதேவதைகள் நிருதி ஜலதேவதை விஸ்வேதேவர்
கணம் இராக்ஷஸ் கணம் மனுஷ்ய கணம் மனுஷ்ய கணம்
நாடி பார்ஸுவ - வலது மத்ய பார்ஸுவ - இடது
மிருகம் பெண் நாய் ஆண் குரங்கு பசு
பக்ஷி செம்பரத்தி கௌதாரி வலியன்
விருக்ஷம் மராமரம் வஞ்சிமரம் பலாமரம்
இரஜ்ஜு பாதம் தொடை வயிறு
வேதை நக்ஷத்ரம் ஆயில்யம் பூசம் புனர்பூசம்
அதிர்ஷ்டம் தரும் எண்கள் 1, 3, 4, 7, 9 1, 3, 6, 7, 9 1, 3, 6, 7, 9
அதிர்ஷ்டம் தரும் திசைகள் கிழக்கு, வடக்கு கிழக்கு, தெற்கு கிழக்கு
குறிப்பு:

அதிர்ஷ்டம் தரும் எண்களும், திசைகளும் ஜாதகத்திற்கு ஜாதகம் மாறும். இங்கு கொடுக்கப்பட்டிருப்பது பொதுவானவையே.