இன்றைய நாள் - திருப்தியான நாள் - 13.11.2012
மேஷம்: குடும்பத்தில் அமைதி நிலவும். வீட்டில் வசதி வாய்ப்புகள் பெருகும். தம்பதிகளிடையே அன்பும் பாசமும் அதிகரிக்கும். கருத்துக்களை பரிமாறும் முன் பொறுமை மற்றும் நிதானம் அவசியம் என்பதை உணருங்கள். திருமணமாகாமல் அதற்குண்டான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு திருமணம் இனிதே நடந்தேறும்.
ரிஷபம்: புதிதாக வீடு, மனை வாங்க வேண்டும் என்று யோசனை செய்தவர்களின் எண்ணம் ஈடேறும். மிகவும் விரும்பிய நண்பர்களை விட்டுப் பிரிய வேண்டிய நிலை வரலாம். உங்களின் பொருட்களை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ளவும். தூக்கம் இல்லாமல் தவிக்கும் நிலையில் உள்ளவர்களுக்கு யோகா போன்ற பயிற்சிகளை செய்வது நன்மையைத் தரும்.
மிதுனம்: உங்களுடைய தாய்மாமனிடம் கருத்து மோதல்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகமான உழைப்பினை கொடுக்க வேண்டி வரலாம். வேலையில் கவனமுடன் செல்வது நல்லது. ஓட்டுனர்கள், இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகளில் வேலை செய்வோருக்கு மிக நல்ல காலகட்டமிது.
கடகம்: உங்களது திறமையினை நிர்வாகம் சரியாக பயன்படுத்திக் கொள்ளும். உங்கள் பணி நிரந்தமாகும். மேல் அதிகாரிகள் மற்றும் உடன் பணி செய்வோரிடம் வீணான வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். ஆகவே எல்லோரையும் அனுசரித்துச் செல்லவும்.
சிம்மம்: உங்களைப் பற்றி நீங்களே தாழ்வான எண்ணம் கொண்டிருந்தால் அதனை மாற்றிக் கொள்ளவும். மற்றவர்களிடம் கடனோ அல்லது பொருளோ ஏதேனும் வாங்கியிருந்தால் அதனை உடனடியாக பைசல் செய்வதற்குண்டான வழிமுறைகளைப் பின்பற்றவும்.
கன்னி: புதியதாக வாகனங்கள் ஏதேனும் வாங்கும் எண்ணமிருந்தால் நன்கு ஆராய்ந்தும், ஆலோசனைகள் செய்தும் வாங்குவது நல்லது. மின்னணு மற்றும் மருத்துவ சம்பந்தமான பொருட்களை விற்பவர்கள் நல்ல லாபம் பெறலாம். முதலீடு இல்லாத புதிய தொழில் தொடங்குவதற்கும் உங்களுக்கு நண்பர்கள் உதவி செய்வார்கள்.
துலாம்: பண விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கை தேவை. தங்களது அலுவலக கணக்கு வழக்குகளை மிகச்சரியாக கையாளுதல் நல்லது. வாட்டர் சப்ளை, ஐஸ்கிரீம் போன்ற பொருட்களை விற்பனை செய்தால் நல்ல லாபம் பார்க்கலாம். பங்கு மார்க்கெட்டில் முதலீடு செய்வதற்கு முன் தகுந்த ஆலோசனைகள் பெறுவது அவசியமாகிறது.
விருச்சிகம்: உங்களின் சேமிப்புகளில் கை வைக்க வேண்டி வரலாம். கவனம் தேவை. எனவே அதை முடிந்த வரை தவிர்க்கவும். விவசாயிகள் சிறப்புடன் இருப்பார்கள். நெல் கோதுமை போன்ற பயிர்கள் லாபம் தரும். விவசாயத்திற்குத் தேவையான புதிய கருவிகளை வாங்குவதற்கு அரசின் மானியம் உங்களுக்குக் கிடைக்கும்.
தனுசு: கணவன் மனைவி இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கூடுதல் சுமைகள் வந்து சேரும். வேலையில் எரிச்சல் மற்றும் சோம்பேறித்தனத்தை முற்றிலும் விடுவது நல்லது.
மகரம்: சிலருக்கு குழந்தைகளால் அவமானம் ஏற்படலாம். பொறியியல், தத்துவம், சமையற்கலை, திரைப்படம் சம்பந்தமாகப் படிப்போருக்கு சிறப்பான பலன்கள் கிட்டும். மேற்படிப்பு சம்பந்தமாக வெளியூர் சென்று தங்கி பயிலும் வாய்ப்பு கிட்டும். பெரியவர்களின் ஆசிர்வாதம் பரிபூரணமாகக் கிடைக்கும்.
கும்பம்: கலைத்துறையை சார்ந்தவர்களுக்கு தங்களது முழுத்திறமைகளையும் காட்டினால் மட்டுமே வாய்ப்புகள் அதிகமாகக் கிடைக்கும். அடிக்கடி வெளியூர் பயணங்கள் வந்து சேரும். ஒரே நேரத்தில் பலவிதமான வாய்ப்புகள் வந்து சேரும்போது தகுந்த ஆலோசனைகளை மேற்கொண்டு முடிவுகளை எடுப்பது நல்லது.
மீனம்: படிப்பில் கவனம் செலுத்த பொன்னான காலகட்டமிது. வெளிநாடு சென்று பயில வேண்டும் என்று நினைத்தவர்களுக்கு அதற்குண்டான காலம் கனிந்து வரும். போட்டிகளில் வெற்றி பெற்று பதக்கம் பெறும் வாய்ப்புகள் வந்து சேரும். கலைத்துறையினர் சார்ந்தவர்களுக்கு சிறப்பான முன்னேற்றம் உண்டு.
---------------------------------------------------------------------------
No comments:
Post a Comment