Tuesday, November 6, 2012

திருச்சானூர் ஸ்ரீபத்மாவதி தாயார் பிரம்மோற்சவம்

திருச்சானூர் ஸ்ரீபத்மாவதி தாயார் பிரம்மோற்சவம்

திருப்பதி திருச்சானூர் ஸ்ரீபத்மாவதி தாயார் தெப்பக்குளம் - கடந்த வருட பிரம்மோற்சவத்தின் போது எடுக்கப்பட்டது (பழைய படம்)
  
திருமலை திருப்பதி தேவஸ்தானம் திருச்சானூர் ஸ்ரீபத்மாவதி தாயார் கோயிலில் கார்த்திகை பிரம்மோற்சவம் வரும் 10ம் தேதி தொடங்கி 18ம் தேதி வரை 9 நாட்கள் நடக்கிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 14ம் தேதி காலை பல்லக்கு உற்சவமும், இரவு யானை வாகனமும், 18ம் தேதி காலை பல்லக்கு உற்சவமும், பிற்பகல் பஞ்சமி தீர்த்தமும் நடக்கிறது.

11ம் தேதி பெரிய சேஷ வாகனம், இரவு ஹம்ச வாகனம், 12ம் தேதி காலை முத்து பந்தல் வாகனம், இரவு சிம்ம வாகனம், 13ம் தேதி காலை கல்பவிருஷ வாகனம், இரவு ஹனுமந்த வாகனம், 15ம் தேதி காலை சர்வ பூபால வாகனம், இரவு கருட வாகனம், 16ம் தேதி  காலை சூர்யப்ரபை வாகனம், இரவு சந்திரப்ரபை வாகனம், 17ம் தேதி காலை ரதோத்சவம், இரவு குதிரை வாகனம், 19ம் தேதி மாலை புஷ்ப வாகனம் நிகழ்ச்சி நடக்கிறது.

பக்தர்களுக்கு மஞ்சள், குங்குமம், வளையல் அடங்கிய பிரசாத பை வழங்கப்படுவதுடன் பக்தர்களுக்கு தினமும் அன்னதானம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தினமும் ஆஸ்தான மண்டபத்தில் 6 மணி முதல் 7 மணி வரை ஊஞ்சல் சேவை நடை பெறும்.

08772277777 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்களை தெரிந்து கொள்ளலாம். 

No comments: