Wednesday, November 7, 2012

இன்று நன்மையான நாள் - 08.11.2012

 இன்று நன்மையான நாள் - 08.11.2012
நந்தன வருஷம்
ஐப்பசி மாஸம் 23ம் தேதி - நவம்பர் 08 2012
தக்ஷிணாயனம்
சரத்ரிது
வியாழக்கிழமை
திதி: கிருஷ்ணபக்ஷம்(தேய்பிறை) நவமி மதியம் 1.53 வரை பின் தசமி
நக்ஷத்ரம்: மகம் மாலை 7.55 வரை பின் பூரம்
யோகம்: சுப்ரம் 28.22 வரை
கரணம்: கௌலவம் நாழிகை 19.23
சூரிய உதயம்: காலை மணி 06.10
அஸ்தமனம்: மாலை மணி 06.09
அஹசு: நாழிகை 29.23
லக்ன இருப்பு: துலாம் காலை மணி 06.38
இராகு காலம்: மாலை 1.40 முதல் 3.10 வரை
எமகண்டம்: காலை 6.10 முதல் 7.40 வரை
குளிகை: காலை 9.10 முதல் 10.40 வரை
சூலம்: தெற்கு
பரிகாரம்: தைலம்
நக்ஷத்திர யோகம்: அமிர்தயோகம் மாலை 7.55 வரை பின் சித்தயோகம்
சந்திராஷ்டமம்: திருவோணம், அவிட்டம்


குறிப்பு:

[1] நல்லநேரம்: காலை 10.40 - 12.10
[2] கீழ்நோக்கு நாள்
[3] திருநெல்வேலி ஸ்ரீகாந்திமதியம்பாள் தீர்த்தவாரி, இரவு தங்கச்சப்பரத்தில் தபசுக் காக்ஷி
[4] தென்காசி ஸ்ரீஉலகம்மை அம்பாள் திருவீதிஎழுந்தருளல்
[5] மாயவரம் ஸ்ரீகௌரி மாயூரநாதர் நாற்காலி மஞ்சத்தில் பவனி
[6] இன்று ராமநாம ஜெபம் செய்வது உத்தமம்.

 
-------------------------------------------------------------------------

கிரக பாதசாரம்

சூரியன் - விசாகம் 1
சந்திரன் - சிம்மம்
செவ்வாய் - மூலம் 1
புதன் - ஸ்வாதி 4 (வ) இரவு 10.38க்கு மேல் ஸ்வாதி 3
குரு(வியாழன்) - ரோகினி 4(வக்ர கதியில்)
சுக்ரன் - ஹஸ்தம் 3
சனி - சித்திரை 4
ராகு - விசாகம் 4
கேது - கிருத்திகை 2


பஞ்சாங்கம் கணிப்பு:  பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
-------------------------------------------------------------------------

மேஷம்: புதிதாக வீடு, மனை வாங்க வேண்டும் என்று யோசனை செய்தவர்களின் எண்ணம் ஈடேறும். மிகவும் விரும்பிய நண்பர்களை விட்டுப் பிரிய வேண்டிய நிலை வரலாம். உங்களின் பொருட்களை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ளவும். தூக்கம் இல்லாமல் தவிக்கும் நிலையில் உள்ளவர்களுக்கு யோகா போன்ற பயிற்சிகளை செய்வது நன்மையைத் தரும்.

ரிஷபம்: உங்களுடைய தாய்மாமனிடம் கருத்து மோதல்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகமான உழைப்பினை கொடுக்க வேண்டி வரலாம். வேலையில் கவனமுடன் செல்வது நல்லது. 


மிதுனம்:  ஓட்டுனர்கள், இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகளில் வேலை செய்வோருக்கு மிக நல்ல காலகட்டமிது. உங்களது திறமையினை நிர்வாகம் சரியாக பயன்படுத்திக் கொள்ளும். உங்கள் பணி நிரந்தமாகும். மேல் அதிகாரிகள் மற்றும் உடன் பணி செய்வோரிடம் வீணான வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம்.  


கடகம்: ஆகவே எல்லோரையும் அனுசரித்துச் செல்லவும். உங்களைப் பற்றி நீங்களே தாழ்வான எண்ணம் கொண்டிருந்தால் அதனை மாற்றிக் கொள்ளவும். மற்றவர்களிடம் கடனோ அல்லது பொருளோ ஏதேனும் வாங்கியிருந்தால் அதனை உடனடியாக பைசல் செய்வதற்குண்டான வழிமுறைகளைப் பின்பற்றவும். 


சிம்மம்: புதியதாக வாகனங்கள் ஏதேனும் வாங்கும் எண்ணமிருந்தால் நன்கு ஆராய்ந்தும், ஆலோசனைகள் செய்தும் வாங்குவது நல்லது. மின்னணு மற்றும் மருத்துவ சம்பந்தமான பொருட்களை விற்பவர்கள் நல்ல லாபம் பெறலாம். 

கன்னி: முதலீடு இல்லாத புதிய தொழில் தொடங்குவதற்கும் உங்களுக்கு நண்பர்கள் உதவி செய்வார்கள். பண விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கை தேவை.  தங்களது அலுவலக கணக்கு வழக்குகளை மிகச்சரியாக கையாளுதல் நல்லது. வாட்டர் சப்ளை, ஐஸ்கிரீம் போன்ற பொருட்களை விற்பனை செய்தால் நல்ல லாபம் பார்க்கலாம்.

துலாம்: பங்கு மார்க்கெட்டில் முதலீடு செய்வதற்கு முன் தகுந்த ஆலோசனைகள் பெறுவது அவசியமாகிறது. உங்களின் சேமிப்புகளில் கை வைக்க வேண்டி வரலாம். கவனம் தேவை. எனவே அதை முடிந்த வரை தவிர்க்கவும். விவசாயிகள் சிறப்புடன் இருப்பார்கள். நெல் கோதுமை போன்ற பயிர்கள் லாபம் தரும்.


விருச்சிகம்:  உங்கள் உடல்நலனில் அக்கறை செலுத்துவது நல்லது. குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் உடல்நலனில் கவனமும் கடின வேலைகளைத் தவிர்த்தலும் வேண்டும். சிலருக்கு குழந்தைகளால் அவமானம் ஏற்படலாம். பொறியியல், தத்துவம், சமையற்கலை, திரைப்படம் சம்பந்தமாகப் படிப்போருக்கு சிறப்பான பலன்கள் கிட்டும்.


தனுசு: பெரியவர்களின் ஆசிர்வாதம் பரிபூரணமாகக் கிடைக்கும். அவர்களின் ஆசீர்வாதங்களை உதாசீனப்படுத்த வேண்டாம். கவனமுடன் முயற்சிகள் எடுத்துப் படித்தால் வெற்றி உங்களை வந்தடையும். உங்களின் முன்னேற்றத்திற்கு நண்பர்கள் இருப்பார்கள்.

மகரம்: பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு செல்வாக்கில் சிறிது சரிவு ஏற்படலாம். அதே வேளையில் பதவியும், பொறுப்பும் வந்து சேரும். பணம் வந்த வழி தெரியாமல் செலவழியும். வீண் அலைச்சலும், வாக்குவாதமும் அவ்வப்போது வாட்டி வதைக்கும்.     


கும்பம்: சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். வீடு கட்டும் வாய்ப்பு கூடி வரும். இதுவே அதற்கு ஏற்ற காலமாகும். புதியதாக வீடு, வாகனம் வாங்கலாம். பழைய வீட்டைப் புதுப்பிப்பதற்கும் சிறந்த காலமாகும். பிறருடைய மனம் நோகும்படி வார்த்தைகளை வாங்கிக் குவிப்பீர்.

     
மீனம்: பொழுதுபோக்கான விழாக்களில் கலந்து கொள்வீர்கள். உங்களை விட்டுப் பிரிந்த நண்பர்கள் ஒன்று சேர்வார்கள். எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் பையோகெமிஸ்ட்ரி மற்றும் ஜியாலஜி சம்பந்தப்பட்ட துறைகளில் பயில்வோருக்கு மிகச் சிறப்பான காலமாகும். விரும்பிய பாடம் கிடைக்காவிட்டால் கிடைத்த பாடத்தை விருப்பத்துடன் படியுங்கள்.

---------------------------------------------------------------------------

நன்றி.
---
ஜோதிடம் எங்களது தொழிலல்ல...
எங்களது உயிர்.

அடியேன் தாஸன்
பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast)
நவதிருப்பதி ஸ்தலம் பெருங்குளம் கோவில், கிராமம் பரம்பரை ஜோதிடர்
இருப்பு:சென்னை.
ஜோதிடம்: http://kuppuastro.blogspot.com/

No comments: