Friday, November 30, 2012

ரிஷபம் - ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - பாகம் மூன்று

ரிஷபம்:

பொறுமையாக நிதானமும் கொண்ட ரிஷப ராசி அன்பர்களே நீங்கள் அமைதியாக இருந்து எதையும் சிறப்பை செய்து முடிக்கும் வல்லமை கொண்டவர்கள். 

இதுவரை உங்களது ராசிப்படி ராசியில் கேதுவும், 7ம் இடத்தில் களத்திரஸ்தானத்தில் ராகுவும் இருந்தார்கள். இனி கேது அயனசயனபோகஸ்தானமான 12ம் இடத்திற்கும், ராகு ரணருணரோகஸ்தானமான 6ம் இடத்திற்கும் பெயர்ச்சி ஆகிறார்கள். 


கிரகங்களின் பார்வை:
ராகு சுகஸ்தானமான நான்காம் இடத்தையும், ஆயுள்ஸ்தானமான அஷ்டமஸ்தானத்தையும், அயனசயனபோக ஸ்தானமான  பன்னிரெண்டாமிடத்தையும் பார்க்கிறார். கேது தனவாக்குகுடும்ப ஸ்தானத்தையும், ரணருணரோகஸ்தானமான ஆறாமிடத்தையும், லாபஸ்தானமான பதினொன்றாமிடத்தையும் பார்க்கிறார்.

உடன்பிறந்தவர்கள் வகையில் நிலவி வந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். பணப் பற்றாக்குறை படிப்படியாக குறையும். வீண் செலவுகளைத் தவிர்ப்பது நலம். சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். வீடு கட்டும் வாய்ப்பு கூடி வரும். இதுவே அதற்கு ஏற்ற காலமாகும். புதியதாக வீடு, வாகனம் வாங்கலாம். பழைய வீட்டைப் புதுப்பிப்பதற்கும் சிறந்த காலமாகும். பொழுதுபோக்கான விழாக்களில் கலந்து கொள்வீர்கள். உங்களை விட்டுப் பிரிந்த நண்பர்கள் ஒன்று சேர்வார்கள். எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் பையோகெமிஸ்ட்ரி மற்றும் ஜியாலஜி சம்பந்தப்பட்ட துறைகளில் பயில்வோருக்கு மிகச் சிறப்பான காலமாகும். விரும்பிய பாடம் கிடைக்காவிட்டால் கிடைத்த பாடத்தை விருப்பத்துடன் படியுங்கள். நல்ல மதிப்பெண்கள் கிடைக்கப் பெறுவீர்கள். படிப்பில் கவனம் செலுத்த பொன்னான காலகட்டமிது. வெளிநாடு சென்று பயில வேண்டும் என்று நினைத்தவர்களுக்கு அதற்குண்டான காலம் கனிந்து வரும். போட்டிகளில் வெற்றி பெற்று பதக்கம் பெறும் வாய்ப்புகள் வந்து சேரும். கலைத்துறையினர் சார்ந்தவர்களுக்கு சிறப்பான முன்னேற்றம் உண்டு. இசைத் துறைகளைச் சார்ந்தவர்களுக்கு பொன்னான வாய்ப்புகள் வந்து சேரும். வேலை நிமித்தமாக அடிக்கடி வெளியூருக்கும் வெள்நாட்டிற்கும் செல்ல வேண்டி வரும். உங்களது உடமைகளை கவனமுடன் பார்த்துக் கொள்ளவும். பணம் மற்றும் புதிய நண்பர்கள் சேர்க்கை கிடைக்கும். செய்கின்ற தொழிலில் கவனமுடன் செய்ய வேண்டும். ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் நன்மைகள் கிடைக்கப் பெருவீர்கள். புதிய தொழில் தொடங்கலாம். கூட்டுத்தொழிலில் லாபம் கிடைக்கும். நம்பிக்கை உகந்தவர்களாக பழகுவார்கள். வரவுக்குத் தகுந்த செலவை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். வரி செலுத்துவதில் முறைகளைப் பின்பற்றுங்கள். வேலையாட்கள் சில பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். வழக்கு வியாஜ்ஜியங்களில் வெற்றி கிடைக்கும். வாகனங்களுக்கு வீண் செலவுகள் வைக்கலாம். உறவினர்களாலும் தொல்லைகள் வரலாம். வழக்கறிஞர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள் போன்ற சேவைத்துறையில் இருப்பவர்களுக்கு சீரான நிலையில் இருப்பார்கள். வேலை பார்த்து கொண்டே உபதொழில் செய்பவர்களுக்கு லாபம் கிடைக்கும். இடமாற்றம் கிடைக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். தொடர்ந்து சற்று சிரத்தை எடுத்து உழைக்க வேண்டியிருக்கும். உங்கள் உழைப்புக்கு தகுந்த செல்வாக்கும் பணவரவும் கிடைக்கும். மேல அதிகாரிகளிடம் அனுசரனையாக நடந்து கொள்ளவும். உங்கள் பொறுப்புகளை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம். வேலைப்பளு அதிகரிக்கும். மனஉளைச்சல் மற்றும் உடல் களைப்பை தூக்கி எறிந்து விட்டு உழைக்க ஆரம்பியுங்கள். எதைப் பேசினாலும் நன்கு ஆராய்ந்து ஆலோசனை செய்த பின்னரே பேசவும். இல்லையென்றால் உங்கள் பேச்சினால் சில வேண்டாத பிரச்சனைகள் வரலாம். பின்தங்கிய  நிலையில் இருந்து மீண்டு முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்கப் போகிறீர்கள். தீயோர் சேர்க்கையால் அவதிப்பட்டவர்கள் அவர்கள் பிடியில் இருந்து விடுபடுவீர்கள். பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும். உங்களின் மீதான அவப்பெயர் மறைந்து செல்வாக்கு அதிகரித்து மிளிரும். விவசாயிகளுக்கு சிறந்த லாபம் கிடைக்கும். கரும்பு, முந்திரி போன்ற பணப்பயிர்களில் சிறந்த அறுவடை கிடைக்கும். மகசூல் அதிகமாக கிடைக்கும். புதிய சொத்துக்கள் வாங்கலாம். விவசாயத்திற்குப் பயன்படும் உபகரணங்களை வாங்கும் காலகட்டமிது. பாகப்பிரிவினை மற்றும் நிலப்பிரச்சனைகளில் உங்களுக்கு சுமூகமான தீர்வு கிடைக்கும். கணவரின் அன்பையும் அரவணைப்பும் பெறுவீர்கள். கருவுற்றிருக்கும் பெண்கள் தங்களது உடல்நலனில் அக்கறை காட்டுவது நல்லது. வேலைக்கு செல்லும் பெண்கள் உயர் பதவி கிடைக்கும் வாய்ப்பைப் பெறுவீர்கள். மற்றவர்களிடம் தேவைப்பட்டால் ஒழிய கருத்துக்களைத் தெரிவிக்காதீர்கள். நேர்த்திக்கடன்கள் ஏதேனும் இருந்தால் குலதெய்வத்திற்கு செய்வது நன்மையைத் தரும். ஞானிகள், சித்தர்கள், முன்னோர்களின் ஆசீர்வாதங்கள் கிடைக்கும். திருமணம் தள்ளிப் போய் கொண்டிருந்தவர்களுக்கு யோகம் கூடி வரும். குழந்தைகளுக்கு வாழ்வில் முக்கியமாக கருதப்படும் வேலைவாய்ப்பு, திருமணம் மற்றும் சந்தாணபாக்கியம் கிட்டும். சொந்த ஊரில் உங்களின் நன்மதிப்பு உயரும். அரசியல், பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு நல்ல நிலை கிடைக்கும். மற்றவர்களிடத்தில் மதிப்பு மரியாதை கிடைக்கும்.  பணத்தை இழக்க நேரிடலாம். நம்பிக்கையானவர்களிடம் மட்டும் பணத்தைக் கொடுப்பது நல்லது. உயர்பதவிகளை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு நல்ல நிலை வந்து சேரும். உடனிருப்பவர்களால் அவ்வப்போது உங்கள் வாக்கைக் காப்பாற்ற முடியாமல் போகலாம். சிற்சில நேரங்களில் வம்புதும்புகள் வந்து சேரலாம். கவனம்தேவை. அதற்காக வீணான கோபமும் ஆத்திரமும் கொள்ள வேண்டாம். அதை சமாளிக்கும் தைரியமும் தன்னம்பிக்கையும் உங்களிடத்தில் உண்டு என்பதனை உணருங்கள். உடல்நலத்தைப் பொறுத்தவரையில் சுமாராக இருக்கும். மனதில் சோர்வு அவ்வப்போது ஏற்படும். வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படலாம். தந்தை மற்றும் வாழ்க்கைத் துணையின் உடல்நலனில் தனிகவனம் செலுத்தவும்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமை தோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றவும். சனிக்கிழமைதோறும் வீட்டில் தேங்காய் தீபம் ஏற்றவும்

சொல்ல வேண்டிய மந்திரம்: மஹாலக்ஷ்மி அஷ்டகம் பாராயணம் செய்யவும்.


லக்ன ரீதியான பலன்கள்:
லக்னம் இராசி பலன்கள் பரிகாரம்
மேஷம் ரிஷபம் 60/100 கந்த ஷஷ்டி கவசம் சொல்வது
ரிஷபம் ரிஷபம் 80/100 ஸ்ரீ மஹாலக்ஷ்மி அஷ்டகம் சொல்வது
மிதுனம் ரிஷபம் 55/100 விஷ்ணு ஸகஸ்ரநாமம் சொல்வது
கடகம் ரிஷபம் 85/100 லக்ஷ்மி அஷ்டோத்திரம் ஸ்தோத்திரம் சொல்வது.
ஸிம்ஹம் ரிஷபம் 60/100 ஆதித்யஹ்ருதயம் சொல்வது
கன்னி ரிஷபம் 60/100 விஷ்ணு ஸகஸ்ரநாமம் சொல்வது
துலாம் ரிஷபம் 65/100 நவக்ரஹ மூலமந்த்ரம் சொல்வது,
முடிந்த வரை இராம நாமம் சொல்வது
விருச்சிகம் ரிஷபம் 75/100 துர்க்கா ஸூக்தம் சொல்வது
தனுர் ரிஷபம் 65/100 ஹனுமத் கவசம் சொல்வது, ஐயப்பன் வழிபாடு.
மகரம் ரிஷபம் 80/100 கணபதி வழிபாடு.
கும்பம் ரிஷபம் 60/100 லலிதா ஸகஸ்ரநாம பாராயணம்
மீனம் ரிஷபம் 55/100 தன்வந்திரி ஸ்லோகம் சொல்வது

குறிப்பு: [1] மேலே உள்ள டேபிளை எப்படி பயன்படுத்துவது?
நீங்கள் ரிஷப இராசியில் பிறந்து லக்னம் தெரிந்ததென்றால் அதற்குள்ள பலனைத் தெரிந்து கொள்ளவும். அதற்குள்ள பரிகாரத்தை தெரிந்து கொள்ளவும். உதாரணமாக, நீங்கள் ரிஷப இராசியில் பிறந்து மீனம் லக்னத்தில் பிறந்தவரென்றால் உங்களுக்கு 55% சதவிகிதம் நல்ல பலன்கள் கிடைக்கும். மேலும் நீங்கள் செய்ய வேண்டிய பரிகாரம்: தன்வந்திரி ஸ்லோகம் சொல்வது. எனக்கு லக்னமேத் தெரியாது ஆனால் ரிஷப இராசி என்பவர்கள் ஸ்ரீ மஹாலக்ஷ்மி அஷ்டகம் சொல்லலாம்.

[2] இங்கு கொடுக்கப்பட்டிருப்பது பொதுபலன்களே. இவை ஜாதகத்திற்கு ஜாதகம் திசை ரீதியாக மாறலாம்.


நக்ஷத்திர வாரியாக சில பாய்ண்ட்ஸ்:

* நக்ஷத்திரங்கள்
பலன்கள் கிருத்திகா - 2,3,4ம் பாதங்கள் உரோகினி மிருகசீரிஷம் - 1,2 ம் பாதங்கள்
இராசி ரிஷபம் ரிஷபம் ரிஷபம்
இராசியாதிபதி சுக்ரன் சுக்ரன் சுக்ரன்
நக்ஷத்திர அதிபதி சூரியன் சந்த்ரன் செவ்வாய்
அதிதேவதைகள் அக்னி ப்ரம்ஹா சந்த்ரன்
கணம் இராக்ஷஸகணம் மனுஷ்யகணம் தேவகணம்
நாடி பார்ஸுவ - வலது பார்ஸுவ - வலது மத்ய
மிருகம் பெண் ஆடு நல்ல பாம்பு சாரைப் பாம்பு
பக்ஷி மயில் ஆந்தை கோழி
விருக்ஷம் அத்தி நவ்வல் கருங்காலி
இரஜ்ஜு உதர இரஜ்ஜு கண்ட சிரோ ரஜ்ஜு
வேதை நக்ஷத்ரம் விசாகம் ஸ்வாதி சித்திரை, அவிட்டம்
அதிர்ஷ்டம் தரும் எண்கள் 1, 3, 6 1, 2, 5, 6 1, 3, 6, 9
அதிர்ஷ்டம் தரும் திசைகள் கிழக்கு மேற்கு கிழக்கு
குறிப்பு: அதிர்ஷ்டம் தரும் எண்களும், திசைகளும் ஜாதகத்திற்கு ஜாதகம் மாறும். இங்கு கொடுக்கப்பட்டிருப்பது பொதுவானவையே.






No comments: