Sunday, November 18, 2012

நவம்பர் 16 - 30க்குமான பொது ராசிபலன்கள்

நவம்பர் 16 - 30க்குமான பொது ராசிபலன்கள்




அடுத்து வரும் இரு வாரங்களில், பன்னிரு ராசிகளுக்கான  கோசார பலன்களை இங்கே.

மேஷ ராசி: (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1)

குடும்பத்தில் அமைதி நிலவும். வீட்டில் வசதி வாய்ப்புகள் பெருகும். தம்பதிகளிடையே அன்பும் பாசமும் அதிகரிக்கும். கருத்துக்களை பரிமாறும் முன் பொறுமை மற்றும் நிதானம் அவசியம் என்பதை உணருங்கள். திருமணமாகாமல் அதற்குண்டான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு வரக்கூடிய பங்குனி மாதத்திற்குப் பின் திருமணம் இனிதே நடந்தேறும். புதிதாக வீடு, மனை வாங்க வேண்டும் என்று யோசனை செய்தவர்களின் எண்ணம் ஈடேறும். மிகவும் விரும்பிய நண்பர்களை விட்டுப் பிரிய வேண்டிய நிலை வரலாம். உங்களின் பொருட்களை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ளவும். தூக்கம் இல்லாமல் தவிக்கும் நிலையில் உள்ளவர்களுக்கு யோகா போன்ற பயிற்சிகளை செய்வது நன்மையைத் தரும். உங்களுடைய தாய்மாமனிடம் கருத்து மோதல்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகமான உழைப்பினை கொடுக்க வேண்டி வரலாம். வேலையில் கவனமுடன் செல்வது நல்லது. ஓட்டுனர்கள், இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகளில் வேலை செய்வோருக்கு மிக நல்ல காலகட்டமிது. உங்களது திறமையினை நிர்வாகம் சரியாக பயன்படுத்திக் கொள்ளும். உங்கள் பணி நிரந்தமாகும். மேல் அதிகாரிகள் மற்றும் உடன் பணி செய்வோரிடம் வீணான வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். ஆகவே எல்லோரையும் அனுசரித்துச் செல்லவும்.
பரிகாரம்: ராகு கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். துர்க்கை வழிபாடு நடத்துங்கள்.

ரிஷபம்: (கார்த்திகை 2,3,4, ரோஹினி, மிருகசீரிஷம் 1,2)
உங்களைப் பற்றி நீங்களே தாழ்வான எண்ணம் கொண்டிருந்தால் அதனை மாற்றிக் கொள்ளவும். மற்றவர்களிடம் கடனோ அல்லது பொருளோ ஏதேனும் வாங்கியிருந்தால் அதனை உடனடியாக பைசல் செய்வதற்குண்டான வழிமுறைகளைப் பின்பற்றவும்.  புதியதாக வாகனங்கள் ஏதேனும் வாங்கும் எண்ணமிருந்தால் நன்கு ஆராய்ந்தும், ஆலோசனைகள் செய்தும் வாங்குவது நல்லது. மின்னணு மற்றும் மருத்துவ சம்பந்தமான பொருட்களை விற்பவர்கள் நல்ல லாபம் பெறலாம். முதலீடு இல்லாத புதிய தொழில் தொடங்குவதற்கும் உங்களுக்கு நண்பர்கள் உதவி செய்வார்கள். பண விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கை தேவை.  தங்களது அலுவலக கணக்கு வழக்குகளை மிகச்சரியாக கையாளுதல் நல்லது. வாட்டர் சப்ளை, ஐஸ்கிரீம் போன்ற பொருட்களை விற்பனை செய்தால் நல்ல லாபம் பார்க்கலாம். பங்கு மார்க்கெட்டில் முதலீடு செய்வதற்கு முன் தகுந்த ஆலோசனைகள் பெறுவது அவசியமாகிறது. உங்களின் சேமிப்புகளில் கை வைக்க வேண்டி வரலாம். கவனம் தேவை. எனவே அதை முடிந்த வரை தவிர்க்கவும். விவசாயிகள் சிறப்புடன் இருப்பார்கள். நெல் கோதுமை போன்ற பயிர்கள் லாபம் தரும். விவசாயத்திற்குத் தேவையான புதிய கருவிகளை வாங்குவதற்கு அரசின் மானியம் உங்களுக்குக் கிடைக்கும். அதிக செலவைத் தரும் பயிர்களைப் பயிரிடும் முன் தகுந்த அதிகாரிகளிடம் ஆலோசனைகள் பெறவும்.

பரிகாரம்: பெருமாள் கோவிலுக்கு சென்று வணங்குவது.

மிதுனம்: (மிருகசீரிஷம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3)
உடன்பிறந்தவர்கள் வகையில் நிலவி வந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். பணப் பற்றாக்குறை படிப்படியாக குறையும். வீண் செலவுகளைத் தவிர்ப்பது நலம். சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். வீடு கட்டும் வாய்ப்பு கூடி வரும். இதுவே அதற்கு ஏற்ற காலமாகும். புதியதாக வீடு, வாகனம் வாங்கலாம். பழைய வீட்டைப் புதுப்பிப்பதற்கும் சிறந்த காலமாகும். பிறருடைய மனம் நோகும்படி வார்த்தைகளை வாங்கிக் குவிப்பீர். பொழுதுபோக்கான விழாக்களில் கலந்து கொள்வீர்கள். உங்களை விட்டுப் பிரிந்த நண்பர்கள் ஒன்று சேர்வார்கள். எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் பையோகெமிஸ்ட்ரி மற்றும் ஜியாலஜி சம்பந்தப்பட்ட துறைகளில் பயில்வோருக்கு மிகச் சிறப்பான காலமாகும். விரும்பிய பாடம் கிடைக்காவிட்டால் கிடைத்த பாடத்தை விருப்பத்துடன் படியுங்கள். நல்ல மதிப்பெண்கள் கிடைக்கப் பெறுவீர்கள். படிப்பில் கவனம் செலுத்த பொன்னான காலகட்டமிது. வெளிநாடு சென்று பயில வேண்டும் என்று நினைத்தவர்களுக்கு அதற்குண்டான காலம் கனிந்து வரும். போட்டிகளில் வெற்றி பெற்று பதக்கம் பெறும் வாய்ப்புகள் வந்து சேரும். கலைத்துறையினர் சார்ந்தவர்களுக்கு சிறப்பான முன்னேற்றம் உண்டு. இசைத் துறைகளைச் சார்ந்தவர்களுக்கு பொன்னான வாய்ப்புகள் வந்து சேரும். வேலை நிமித்தமாக அடிக்கடி வெளியூருக்கும் வெள்நாட்டிற்கும் செல்ல வேண்டி வரும். உங்களது உடமைகளை கவனமுடன் பார்த்துக் கொள்ளவும்.
பரிகாரம்: சக்தி வழிபாடு செய்தால் சங்கடம் குறையும்.

கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்)
பணம் மற்றும் புதிய நண்பர்கள் சேர்க்கை கிடைக்கும். செய்கின்ற தொழிலில் கவனமுடன் செய்ய வேண்டும். ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் நன்மைகள் கிடைக்கப் பெருவீர்கள். புதிய தொழில் தொடங்கலாம். கூட்டுத்தொழிலில் லாபம் கிடைக்கும். நம்பிக்கை உகந்தவர்களாக பழகுவார்கள். வரவுக்குத் தகுந்த செலவை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். வரி செலுத்துவதில் முறைகளைப் பின்பற்றுங்கள். வேலையாட்கள் சில பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். வழக்கு வியாஜ்ஜியங்களில் வெற்றி கிடைக்கும். வாகனங்களுக்கு வீண் செலவுகள் வைக்கலாம். உறவினர்களாலும் தொல்லைகள் வரலாம். வழக்கறிஞர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள் போன்ற சேவைத்துறையில் இருப்பவர்களுக்கு சீரான நிலையில் இருப்பார்கள். வேலை பார்த்து கொண்டே உபதொழில் செய்பவர்களுக்கு லாபம் கிடைக்கும். இடமாற்றம் கிடைக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். தொடர்ந்து சற்று சிரத்தை எடுத்து உழைக்க வேண்டியிருக்கும். உங்கள் உழைப்புக்கு தகுந்த செல்வாக்கும் பணவரவும் கிடைக்கும். மேல அதிகாரிகளிடம் அனுசரனையாக நடந்து கொள்ளவும். உங்கள் பொறுப்புகளை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம். வேலைப்பளு அதிகரிக்கும். மனஉளைச்சல் மற்றும் உடல் களைப்பை தூக்கி எறிந்து விட்டு உழைக்க ஆரம்பியுங்கள்.

பரிகாரம்: விநாயகர் வழிபடுவதால் மனச்சலனம் அகலும்.

சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1)
கடந்த சில ஆண்டுகளாக உங்களது குடும்பத்தில் உள்ளவர்கள் பிரச்சனைகளைக் கொடுத்திருப்பார்கள். இப்போது அவையெல்லாம் தீர்ந்து ஒரு சுமூகமான சூழ்நிலை உருவாகப் போகிறது. சகோதர சகோதரிகளிடத்தில் பாசம் பந்தம் பளிச்சிடும். அவர்களிடம் முழுமையான அன்பை எதிர்பார்க்கலாம். மற்ற சொந்த பந்தங்களிடத்தில் சிறுசிறு பிரச்சனைகள் வரலாம். அதனை விட்டுக் கொடுத்து போவது நல்லது. முயற்சிகளின் மூலம் புதிய வீடு வாய்ப்பு கிட்டும். திருமணம் கைகூடும். வாழ்க்கைத்துணையை இழந்தவர்களுக்கு மீண்டும் வாழ்வில் வசந்தம் வீசும். உங்களின் அந்தஸ்திற்கு சமமாக இல்லாதவர்களிடம் உறவு வைப்பதைத் தவிர்க்கவும். பிறர் உங்களிடம் ஏளனம் செய்தால் அதற்காக வருந்தாமல் வாழ்க்கையை வாழத் தொடங்குங்கள்.  குடும்பத்திற்குத் தேவையான வசதி வாய்ப்புகள் வந்து சேரும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் சற்று இழுபறிக்குப் பின்னே நடைபெறும். கொஞ்சம் சிரமம் எடுத்தால் மிக சிறப்பாக நடந்தேறும். முக்கிய முடிவுகளை குடும்பப் பெரியோர்களின் ஆலோசனைகளைக் கேட்டு எடுக்கவும். தெய்வ அனுகூலம் இருப்பதால் எந்த பிரச்சனையும் இராது. தொழிற்கல்வி மற்றும் ஆய்வு சம்பந்தப்பட்ட கல்வியில் சிறந்து விளங்குவதற்கு பொன்னான காலமிது. அதிகமாக முயற்சி எடுத்து படித்தால் சாதனைகள் செய்யலாம். விரும்பிய பாடம் எடுத்து படிப்பதற்கு மிகச் சரியான காலகட்டமிது. பெரியோர்கள், மூத்தோர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோரின் ஆலோசனைகளை கேட்டு நடக்கவும்.
பரிகாரம்: சிவனுக்கு இளநீர் அபிஷேகம் செய்வது நன்மையைத் தரும்.

கன்னி: (உத்திரம் 2, 3, 4, ஹஸ்தம், சித்திரை 1, 2)
குடும்பப் பிரச்சனைகளால் உங்கள் கல்விக்கு தடைகள் வரலாம். கவனம் தேவை. எதையும் போட்டு மனதில் குழப்பிக் கொள்ளாமல் படிப்பினில் மட்டும் கவனத்தைச் செலுத்தவும். நடனக் கலைஞர்கள் மற்றும் கலைத்துறையைச் சார்ந்த தொழிற்நுட்பக் கலைஞர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். பிற மொழிகளில் நடிப்பதற்கு ஏற்ற வாய்ப்புகள் வந்து சேரும். வரும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளவும். வேலைபளு அதிகமாக இருந்தாலும் அதற்கேற்ற பணவரவும் இருக்கவே செய்யும். எழுத்தாளர்கள், சட்ட வல்லுனர்கள், கட்டுரையாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் ஆகியோருக்கு விருதுகள் கிடைக்கும். கற்பனை வளம் அதிகரிக்கும். இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்களின் மீது லாபம் கிடைக்கும். தண்ணீர் சம்பந்தப்பட்ட வியாபாரமும் நன்மை பயக்கும். சட்ட விரோதமான பணிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். முக்கியமாக பொருட்களை பதுக்கி வைத்தல் போன்ற பணிகள் செய்வதை முற்றிலுமாகத் தவிர்க்கவும். அலைச்சல், சோர்வு உண்டாகலாம். எனவே எதிலும் திட்டமிடல் அவசியம். பலன்கள் சற்று தாமதமாகி கிடைக்கும். மற்றவர்களின் பிரச்சனைகளில் வீண் தலையீடு வேண்டாம். நண்பர்களாக இருப்பவர்கள் கூட விரோதிகளாக மாறும் காலகட்டம் என்பதால் கவனம் தேவை. கூட்டுத்தொழில் புரிபவர்கள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு, சம்பள் உயர்வு, மேல் அதிகாரிகளின் அனுசரனையும் கிடைக்கும்.
பரிகாரம்: ஆஞ்சநேயர், துர்க்கையை வழிபடுவது நன்மையைத் தரும்.

துலாம்: (சித்திரை 3,4, ஸ்வாதி, விசாகம் 1, 2, 3)

வாழ்க்கைவளம் முன்னேறும். சகோதர சகோதரிகளிடம் நெருக்கம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தினில் சிற்சில பிரச்சனைகள் வரலாம். உடன் வேலை செய்வோரின் ஆதரவால் அதனைச் சமாளிப்பீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் தங்கு தடையின்றி நடக்கும். தேவைகள் பூர்த்தியாகும். கணவன் மனைவி இடையே அன்பு நீடிக்கும். ஆனாலும் வீட்டில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் தலைதூக்கலாம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போவதால் நிலைமையைச் சமாளிக்கலாம். உறவினர் வகையிலும் கூட ஒருவருடன் மனஸ்தாபம் உருவாகலாம். அதீத எதிர்பார்ப்புகள் வேண்டாம். சிலருக்கு தூரத்திலிருந்து விரும்பத்தகாத செய்திகள் வரலாம். தீவிர முயற்சிகளின் பேரில் சிலருக்கு சுபமான நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். உழைப்புக்கு ஏற்ற பிரதிபலன் கிடைக்காமல் இருந்தவர்களுக்கு தற்போதைய காலகட்டத்தில் நன்மை நடக்கும். சிலருக்கு இடமாற்றம் சம்பந்தப்பட்ட ஆலோசனைகள் நடக்கும். வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும். அலைச்சல் இருக்கும். தொழில் நிமித்தமாக சிலர் குடும்பத்தை விட்டு பிரிய நேரிடலாம்.
பரிகாரம்: ராகு, சனிக்கு விளக்கு ஏற்றி வழிபடுதல் நலம்.

விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை)
தனியார் ஊழியர்களுக்கு நல்ல நிலைமை வந்து சேரும். குறிப்பாக சேவைத்துறையில் பணியாற்றுபவர்களுக்கு சிறப்பான காலகட்டமிது. வேலை இல்லாமல் காத்திருந்தவர்களுக்கு சரியான வேலை அமையும். புதிதாக பணியில் சேர்ந்தவர்களுக்கு சிறப்புடன் பணியாற்றுவதற்கு பொன்னான காலகட்டமிது. மற்றவர்களுக்கு தேவையில்லாமல் அவர்களின் வாழ்க்கைக்கோ, வேலைக்கோ அறிவுரை சொல்ல வேண்டாம். அவர்களின் விஷயத்தில் தேவையில்லாமல் தலையிடுவதைத் தவிர்க்கவும். பூர்வீக சொத்தில் விளைச்சல் நன்றாக இருக்கும். தரிசு நிலங்களிலும் முயற்சி செய்து மாற்றுப் பயிர்களைப் பயிரிடலாம். பணச் செலவுகள் பெருகும். கால்நடைகளை வளர்ப்பவர்களுக்கு வீண் செலவுகள் வரலாம். வழக்கு வியாஜ்ஜியங்களில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க முன்னெச்சரிக்கை அவசியமாகிறது. தாய் வழி உறவினர்களிடத்தில் சின்னச் சின்ன பிரச்சனைகளும், அவ்வப்போது சில மன விரோதங்களும் ஏற்படலாம். எனவே அவர்களிடம் கொஞ்சம் அனுசரணையாக போக்கை கடைபிடித்தல் நலம். பெண்கள் முன்னேற்றம் காண்பர். வாழ்க்கைத் துணையுடன் இருந்து வந்த வீண் வாதங்களைத் தவிர்க்கவும். அடிக்கடி அவசியமில்லாமல் பயணம் செய்வதைத் தவிர்க்கவும். பணியிடமாற்றம் உறுதிபடுத்தப்படுகிறது. பெற்றோருக்கு உதவி செய்வதால் மிகுந்த நன்மைகள் உண்டாகும். குழந்தைகளிடம் அன்புடன் பழகுங்கள். மேலும் அவர்களிடம் கோபத்தைக் காட்டாமல் மனிதாபிமானத்துடன் பழகுங்கள்.
பரிகாரம்: ஊனமுற்றவர்களுக்கு உதவுதல், கோபத்தை அகற்றுதல்

தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1)
குடும்பத்தில் இதுவரை இருந்து வந்த கடன் தொல்லை இனிமேல் இருக்காது. எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடத்தில் அன்பாகப் பழகவும். புதிய வீடு கட்டலாம். குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ள மூன்றாம் நபர் தலையீடு வேண்டாம். திசைபுக்தி அனுகூலமிருப்பின் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் இனிதே நடந்தேறும். பரம்பரைச் சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சனைகள் மறையும். பெண் நண்பர்களிடம் மிகவும் எச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும் பழகுங்கள். அவர்களால் சில பிரச்சனைகள் எழலாம். உறவினர்களிடம் மென்போக்கை கடைபிடிக்கவும். வீண் விரோதம் வேண்டாம். உடன் பிறந்தவர்களிடம் அன்புடன் பழகுங்கள். அவர்களிடம் பாசம் அதிகரிக்கும். நெருப்பு மற்றும் எலக்ட்ரிக்கல் சம்பந்தப்பட்ட பொருட்களை கையாளும் போது கவனம் தேவை. மருத்துவரின் தெளிவான ஆலோசனைக்குப் பின்னரே எந்த மருந்தையும் உட்கொள்வது நல்லது. சரியான நேரத்தில் மருந்தினை உட்கொள்வதும் நன்மையைத் தரும். கணிணி, சட்டம், எலக்ட்ரிக்கல் மற்றும் சமையற்கலை சம்பந்தப்பட்ட படிப்பினில் உள்ள மாணவர்கள் சிறப்பான பலனைக் காணலாம். அடுத்த கல்வி ஆண்டில் நீங்கள் விரும்பிய பாடம் உங்களுக்குக் கிடைக்கும். அதிக உழைப்பும், விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் இருந்தால் படிப்பில் சாதனைகள் புரியலாம். உங்களின் கவனம் படிப்பை விட்டு சிதறாமல் பார்த்துக் கொள்ளவும்.
பரிகாரம்: திருமுருகனை வழிபடுவது சிறப்பான பலன்களைத் தரும்.

மகரம்: (உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அவிட்டம் 1, 2)
படிப்பில் இடையூறு வரலாம். கெட்டவர்களின் சகவாசத்தை முற்றிலுமாக விட்டொழிக்கவும். இசை அமைப்பாளர்கள் மற்றும் சினிமா சம்பந்தப்பட்ட டெக்னிக்கல் துறையில் சார்ந்தவர்கள் மேன்மை அடைவர். பிற நாடுகளுக்கு சென்று பணியாற்ற வாய்ப்பு இருக்கிறது. புகழ் பாராட்டு கிடைக்கவில்லையே என்று வருத்தப்பட வேண்டாம். காத்திருந்து கடமைகளை சரியாக செய்பவர்களுக்கு வெற்றிக்கனி கிடைக்கும். வெளியூர் படப்பிடிப்புக்கு செல்லும்போது அலைச்சலும் அதன்மூலம் வேலைப்பளுவும் மனதில் சோர்வும் ஏற்படும். சிலர் போட்டியாளர்கள் மூலம் சில பிரச்சனைகள் சந்திக்க வேண்டி வரலாம். வியாபாரிகள் புதிய தொழில் தொடங்கும் போது தகுந்த ஆலோசனைகளின் பேரில் ஆரம்பிக்கவும். பண கஷ்டம் இருக்காது. ஆனால் தொழில் நிமித்தமாக வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டி வரலாம். தொழிலுக்குத் தேவையான உபகரணங்களை வாங்குவீர்கள். மருந்து, சமையல், சிமெண்ட், மற்றும் விவசாயத்திற்குத் தேவையான பொருட்களை வியாபாரம் செய்பவர்களுக்கு மிக அருமையான முன்னேற்றம் ஏற்படும். கடினமாக உழைத்தால் வெற்றி நிச்சயம். அதற்கேற்ற பலன்களும் உடனே கிடைக்கும். கூட்டுத்தொழில் ஆரம்பிக்கும் முன் தகுந்த ஆலோசகரிடம் விவாதித்து செய்யவும். மனைவி பெயரில் தொழில் தொடங்கினால் லாபம் கிடைக்கும். பங்குச் சந்தையில் பங்குகளை வாங்கி விற்பதில் பணம் பண்ணுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. நம்பிக்கைக்கு உரிய ஆட்கள் வேலைக்கு கிடைப்பார்கள்.
பரிகாரம்: அய்யனார் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்துவது.

கும்பம்: (அவிட்டம் 3, 4, ஸதயம், பூரட்டாதி 1, 2, 3)
வாகனங்களை முறையாக பராமரித்தல் அவசியம். அதன் மூலம் வீண் செலவுகள் ஏற்படலாம். உங்கள் மீதான மதிப்பு மரியாதைக்குண்டான பங்கம் விளைவிக்கும் காரியங்களில் ஈடுபட வேண்டாம். செய்தொழிலில் மந்தம் இருந்தாலும் நல்ல அனுபவமாகவே அது அமையும் என்பதில் நம்பிக்கை வையுங்கள். மருத்துவம், ராணுவம், காவல்துறை, தீயணைப்பு மற்றும் தனியார் துப்பறியும் துறையினருக்கு மிகுந்த நன்மைகள் நடக்கும் காலகட்டமிது. பதவி உயர்வில் சிறிது கால தாமதம் ஏற்படலாம். “தன் கையே தனக்குதவி” என்ற மந்திரசொல்லுக்கேற்ப உங்கள் மேல் முழு நம்பிக்கை கொண்டு உங்கள் வேலைகளை நீங்களே செய்யுங்கள். எவ்வளவுதான் கஷ்டம் வந்தாலும் நீங்கள் வேலையை விடுவது நன்மையில்லை. உப தொழில் செய்யும் விருப்பமுடையவர்கள் வேலை பார்த்து கொண்டே செய்வது நல்லது. கஷ்டம் என்பது கானல் நீர் போன்று காணாமல் போகும். 2013 மே மாதத்திற்குப் பிறகு வேலை இல்லாதவர்களுக்கு உங்கள் தகுதிக்கும் திறமைக்கும் ஏற்ற சிறந்த வேலை கிடைக்கும். உடன் பணிபுரிபவர்களும் மேலதிகாரிகளும் உங்களுக்கு சில சங்கடங்களை ஏற்படுத்தினாலும் பொதுவில் நன்மையே நடக்கும். திருமண வயது வந்தும்  திருமணமாகாதவர்களுக்கு தகுந்த வரன் கிடைக்கும். சந்தாண பாக்கியம் கிடைக்கும். குடும்பத்தில் பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும்.
பரிகாரம்: திருமாலையும், மஹாலக்ஷிமியையும் வழிபடுவது நன்மையான பலன்களைத் தரும்.

மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி)
வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். ஆனாலும் அதனால் உயர்பதவி கிடைக்கும். ஆரம்பரச் செலவை குறைக்கவும். அவ்வப்போது ஒருவித சோர்வு ஏற்படலாம். அதை தகுந்த நபர்களிடம் திட்டமிட்டு சரிசெய்யவும். எந்தப் பிரச்சனையானாலும் பொறுமையுடனும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடனும் செயல்படுங்கள். அரசியல் மற்றும் பொது வாழ்க்கையில் உள்ளவர்களுக்கு, நீங்கள் உழைத்த அளவுக்கு பதவிகள் எதிர்பார்த்த அளவிற்குக் கிடைக்காமல் போகலாம். பொறுமையாக உங்கள் கடமைகளைச் சரியாக செய்யவும். உறவினர்கள் மற்றும் உடன் பணிபுரிவோரால் மிகுந்த நன்மைகள் உண்டாகும். உங்களின் குடும்ப சூழ்நிலை நன்றாக இருந்தால்தான் அரசியல் சூழ்நிலையும் சிறப்பாக இருக்கும். எனவே குடும்பத்தினரிடம் அன்பாகப் பழகுங்கள். நெருப்பு, உஷ்ணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் சற்று எச்சரிக்கையாக கையாளவும். நீண்ட நாட்களாக இருந்து வந்த மருத்துவ செலவு குறையும். மனதில் ஏற்படும் வீணான குழப்பத்திற்கு அடிமையாகி விடாதீர்கள். கண் தொடர்பான பிரச்சனைகளில் அலட்சியம் வேண்டாம். சிறிய பிரச்சனை என்றாலும் உடனடியாக மருத்துவரை அணுகவும். சிலருக்கு காது மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகளால் அவதி ஏற்படலாம். புதியதாக உணவு வகைகளில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த வேண்டாம்.
பரிகாரம்: லக்ஷ்மி பூஜை பலன்களை அள்ளித் தரும்.

No comments: