Thursday, November 1, 2012

இன்று - 02.11.2012

 இன்று - 02.11.2012



நந்தன வருஷம்
ஐப்பசி மாஸம் 17ம் தேதி - நவம்பர் 02 2012
தக்ஷிணாயனம்
சரத்ரிது
வெள்ளிக்கிழமை
திதி: கிருஷ்ணபக்ஷம்(தேய்பிறை) திரிதியை காலை 7.43 வரை பின் சதுர்த்தி
நக்ஷத்ரம்: ரோகினி காலை 10.51 வரை பின் மிருகசீரிஷம்
யோகம்: பரீகம் 31.17 வரை
கரணம்: பத்ரம் நாழிகை 3.42
சூரிய உதயம் 06.10
மாலை மணி 06.09
அஹசு: நாழிகை 29.23
தியாஜ்ஜியம்: நாழிகை 19.47
லக்ன இருப்பு: துலாம் நாழிகை 2.20
இராகு காலம்: காலை 10.40 முதல் 12.10 வரை
எமகண்டம்: மதியம் 3.10 முதல் 4.40 வரை
குளிகை: காலை 7.40 முதல் 9.10 வரை
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்
நக்ஷத்திர யோகம்: மரணயோகம் காலை 10.51 வரை பின் சித்தயோகம்
சந்திராஷ்டமம்: விசாகம், அனுஷம்


குறிப்பு:

[1] நல்லநேரம்: மாலை 4.40 - 6.10
[2] மேல்நோக்கு நாள்
[3] சங்கடஹர சதுர்த்தி
[4] திருநெல்வேலி ஸ்ரீகாந்திமதியம்பாள் காலை காமதேனு வாகனத்திலும், மாலை ரிஷப வாகனத்திலும் திருவீதி உலா.
[5] தென்காசி ஸ்ரீஉலகம்மை திருவீதி உலா



-------------------------------------------------------------------------

கிரக பாதசாரம்

சூரியன் - ஸ்வாதி 3
சந்திரன் - ரிஷபம் இரவு 12 மணிக்கு மேல் மிதுனம்
செவ்வாய் - கேட்டை 3 மதியம் 1.04க்குப் பின் கேட்டை 4
புதன் - விசாகம் 1
குரு(வியாழன்) - ரோகினி 4(வக்ர கதியில்)
சுக்ரன் - ஹஸ்தம் 1
சனி - சித்திரை 4
ராகு - விசாகம் 4
கேது - கிருத்திகை 2


பஞ்சாங்கம் கணிப்பு:  பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

-------------------------------------------------------------------------

மேஷம்: குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். தடைப்பட்ட ஆடம்பர பொருட்களை வாங்கலாம். கடந்த காலமாக தடைப்பட்டு வந்த திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் கைகூடும். அதுவும் நல்ல வரனாக அமையும். குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறுவர்.

ரிஷபம்: விருந்து விழா என சென்று வருவீர்கள். குடும்பத்தில் நிலவிவந்த பிரச்சனைகள் அனைத்தும் படிப்படியாக மறையும். தம்பதிகளிடையே நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் மறையும் பிரிந்திருக்கும் குடும்பம் ஒன்று சேரும். உத்தியோகம் பார்ப்பவர்கள் பிந்தங்கிய நிலை மாறி முன்னேற்றம் காண்பர்.

மிதுனம்:  மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். உங்கள் திறமை மேம்படும். கோரிக்கைகள் நிறைவேறும். விரும்பிய இடத்திற்கு பணியிடமாற்றம் கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள் உயர்வு போன்றவை கிடைக்கும். சகஊழியர்கள் உதவிகரமாக இருக்கும். சிலருக்கு முக்கிய பொறுப்புகள் வந்து சேரும். வேலையின்றி தவிக்கும் படித்தவர்களுக்கு வேலை கிடைக்கும்.


கடகம்: பலவிதமான துறைகளில் முன்னேற்றம் கிடைக்கும். தெய்வ அனுகூலம் கிடைக்கும். பொருளாதார வளம் சிறப்படையும். காரிய அனுகூலம் கிட்டும். செல்வாக்கில் முன்னேற்றம் ஏற்படும். உங்கள் முயற்சிகளில் தடைகள் ஏற்பட்டாலும் அதை முறியடிக்கும் வல்லமை கிடைக்கும்.

சிம்மம்: குடும்பத்தில் கணவன் மனைவி இடையே அன்பு நீடிக்கும். சுப நிகழ்ச்சிகள் உடனடியாக நிறைவேறாமல் போகலாம். தெய்வ நம்பிக்கையில் அனைத்தும் சுபமாக நிகழும். உத்தியோகம் பார்ப்பவர்கள் தொடர்ந்து சற்று சிரத்தை எடுத்து உழைக்க வேண்டியதிருக்கும். உங்கள் உழைப்புக்கு தகுந்த செல்வாக்கும் பணவரவும் கிடைக்கும். மேலதிகாரிகளிடம் அனுசரனையுடன் நடந்து கொள்ளவும்.

கன்னி: உங்கள் பொறுப்புகளை பிறரிடம் ஒப்படைத்து விடவேண்டாம். வியாபாரிகள் பிந்தங்கிய நிலையில் இருந்து மீண்டு முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைப்பர். பணவரவு அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்குவதற்கான ஆர்வம் பிறக்கும். குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்கலாம்.


துலாம்: சிலர் தொழில் நிமித்தமாக வெளியூர் அல்லது நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படலாம். கலைஞர்கள் சீரான நிலையில் இருப்பார். அதிக சிரத்தை எடுத்தால்தான் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ஆனால் பணப்புழக்கம் கடந்த காலங்களை விட அதிகம் இருக்கும். 

விருச்சிகம்: உங்கள் பராக்கிரமம் வெளிப்படும். செயலில் வேகம் பிறக்கும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் நிறைவேறும். அரசியல்வாதிகள், அரசுப்பணியாளர்கள், நிர்வாகத் துறைகளைச் சேர்ந்தவர்கள், மருத்துவர்கள் ரசாயனத் துறைகளில் உள்ளவர்கள், விஞ்ஞானிகள் ஆகியோர் தங்கள் துறைகளில் வளர்ச்சி காண்பார்கள்.

தனுசு: நிலம் வீடு மனை வாகனம் போன்ற சொத்துக்கள் சேர்க்கையோ அல்லது அவற்றால் ஆதாயமோ கிடைக்கப் பெறுவார்கள். மாணவமணிகள் தங்கள் திறமைக்குரிய வளர்ச்சியைக் காண்பார்கள். கலைத்துறையினர் எண்ணம் ஈடேறும். சமுதாய நலப்பணியாளர்களுக்குப் பாராட்டுகள் குவியும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புகள் ஆக்கம் தரும். 


மகரம்: மனதில் இருந்த காரணமில்லாத வருத்தங்களும், குழப்பங்களும் மறையும். பணநடமாட்டம் சீராக இருந்து வரும். இடமாற்றம், நிலைமாற்றம் ஆகியவை சிலருக்கு ஏற்படும். தம்பதிகளுக்குள் ஒவ்வொருவரால் அனுகூலம் ஏற்படும். எதிரிகள் அடங்கிப் போவார்கள். கூட்டுத் தொழிலில் ஈடுபாடு உள்ளவர்கள் அதிகம் லாபம் பெறுவார்கள்.    

கும்பம்: உங்களின் உடல் ஆரோக்யத்தில் சிறு பாதிப்புகளை ஏற்படலாம். பிள்ளைகளால் சந்தோஷங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். அதிர்ஷ்ட வாய்ப்புகள் கைகூடி வரும். தாய் உடல் நலனில் கவனம் செலுத்தி வருவது அவசியமாகும். தெற்கு, தென்கிழக்கு திசைகள் அனுகூலம் தரும்.
     
மீனம்: உறவினர்களுடன் கருத்து பரிமாற்றங்கள் செய்யும் போது மிகுந்த எச்சரிக்கை தேவை. முயற்சிகளில் தடைகள் வந்தாலும் குரு பகவானின் வல்லமையால் அதையெல்லாம் முறியடித்து வெற்றிப் பாதையில் பயணீப்பீர்கள். தாய் வழி உறவினர்களுடன் சின்ன கருத்து மோதல்கள் வரலாம். 


---------------------------------------------------------------------------

No comments: