செய்தி:
பதில்:
பிரம்மோற்ஸவத்தின் போது எடுக்கப்பட்ட ராஜகோபுரம் போட்டோ |
மக்களின் பயன்பாட்டிற்காக கர்ப்பகிரகத்தில் 2 வாசல்கள் வைப்பதற்கு ஆலோசனை செய்யப்பட்டிருப்பதாக திரு.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். ஆகம விதிப்படி இன்று வரை எந்த ஒரு விஷயத்தையும் மாற்றாமல் சாஸ்திர சம்பிரதாயங்களை பின்பற்றி வரும் திருப்பதி தேவஸ்தானத்திற்கு நம்முடைய மனமார்ந்த ஆசீர்வாதங்கள். நன்று. ஆனால் இப்போது ஏற்பட்டிருக்கும் பிரச்சனை ஒரு வாசலை இரு வாசலாக்கலாமா? நம்முடைய கருத்து கூடாது என்பதுதான். இதற்கு ஆகம விதிகளில் இடமில்லை. மேலும் சயனம் கொண்ட பெருமாளுக்கு மட்டுமே ஒன்றுக்கும் மேற்பட்ட வாசல்கள் வைக்க ஆகம சாஸ்திரங்கள் அனுமதிக்கின்றன. உதாரணம்: திருவனந்தபுரம் ஸ்ரீஅனந்தபத்மநாப ஸ்வாமி திருக்கோவில். அதுவும் எதற்காகவென்றால் பெருமாளை முழுமையாக நாம் தரிசிப்பிதற்காகவே இந்த வாசல்களை ஆகமங்கள் அனுமதிக்கிறது. நின்றிருக்கும் கோலத்தில் வரும் பக்தர்களுக்கெல்லாம் அருளை வாரி வழங்கும் வள்ளல் பெருமான் ஆலயத்தில் இது போன்று ஆகமங்களுக்கு ஒவ்வாதவை அவனருளால் நடைபெறாது என நம்புவோமாக.
1 comment:
மிக நல்ல செய்தி சொன்னீர்கள் அய்யா நன்றி.
Post a Comment