Sunday, November 4, 2012

இந்த நாள் இனிய நாள் - 04.11.2012

இந்த நாள் இனிய நாள் - 04.11.2012

 



நந்தன வருஷம்
ஐப்பசி மாஸம் 19ம் தேதி - நவம்பர் 04 2012
தக்ஷிணாயனம்
சரத்ரிது
ஞாயிற்றுக்கிழமை
திதி: கிருஷ்ணபக்ஷம்(தேய்பிறை) பஞ்சமி மதியம் 12.02 வரை பின் ஷஷ்டி
நக்ஷத்ரம்: திருவாதிரை மதியம் 3.30 வரை பின் புனர்பூசம்
யோகம்: சித்தி 32.30 வரை
கரணம்: தைதுலம் நாழிகை 12.46
சூரிய உதயம்: காலை மணி 06.10
அஸ்தமனம்: மாலை மணி 06.09
அஹசு: நாழிகை 29.23
தியாஜ்ஜியம்: நாழிகை 19.47
லக்ன இருப்பு: துலாம் காலை மணி 06.58 வரை
இராகு காலம்: மாலை 4.40 முதல் 6.10 வரை
எமகண்டம்: மதியம் 12.10 முதல் 1.40 வரை
குளிகை: மாலை 3.10 முதல் 4.30 வரை
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்
நக்ஷத்திர யோகம்: சித்தயோகம்
சந்திராஷ்டமம்: கேட்டை, மூலம்


குறிப்பு:

[1] நல்லநேரம்: காலை 7.40 - 9.10, மாலை 3.10 - 4.40
[2] மேல்நோக்கு நாள்
[3] திருநெல்வேலி ஸ்ரீகாந்திமதியம்பாள் காலை அன்ன வாகனத்தில் திருவீதி உலா.
[4] தூத்துக்குடி ஸ்ரீஅம்பாள் திருவீதி உலா.
[5] தென்காசி உலகம்மை பவனி
[6] இன்று ஞாயிற்றுக்கிழமையில் சூரிய வழிபாடு செய்தால் மிகவும் சிறப்பு. கண் சம்பந்தப்பட்ட ரோகம் நீங்கும்.



-------------------------------------------------------------------------

கிரக பாதசாரம்

சூரியன் - ஸ்வாதி 3
சந்திரன் - மிதுனம்
செவ்வாய் - கேட்டை 4
புதன் - விசாகம் 1
குரு(வியாழன்) - ரோகினி 4(வக்ர கதியில்)
சுக்ரன் - ஹஸ்தம் 1
சனி - சித்திரை 4
ராகு - விசாகம் 4
கேது - கிருத்திகை 2


பஞ்சாங்கம் கணிப்பு:  பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

-------------------------------------------------------------------------

மேஷம்: பிள்ளைகள் வழியில் கடன்பெற வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்களுக்கு பார்த்துக் கொண்டிருக்கும் வேலையில் இடமாறுதல்கள் ஏற்படலாம். புதிய பொறுப்புகள் வந்து சேரும். கிடப்பில் போட்டிருந்த வேலைகளை செய்வீர்கள். ஊதிய விஷயங்களில் நல்ல மனநிலை இருக்கும்.

ரிஷபம்: லாபம் ஈட்டும் காலமிது. பணியாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். இலக்கியம், கதை, கவிதைத் துறைகளில் உள்ளவர்களுக்கு புகழ் கிடைக்கும். பங்குதாரர்கள் மூலம் சில தொந்தரவுகள் நேரிடலாம். அழகுநிலையம் வைத்திருப்போர், காஸ்மெட்டிக்ஸ் வியாபாரம் செய்வோர் மற்றும் ஆடை அணிகலன்கள் விற்பனை செய்வோருக்கு ஏற்ற காலமிது.


மிதுனம்:  தொழிலை விரிவுபடுத்திக் கொள்ள சரியான சமயமிது. கலைத்துறையினருக்கு ஓரளவு முன்னேற்றம் கிடைக்கும். தாங்கள் மேன்மையடைந்திட புதிய வாய்ப்புகள் வந்து சேரும். சிலருக்கு வெளிநாடு வாய்ப்புகள் வரலாம். அதிலும் கலைத்துறையில் டெக்னிக்கல் சம்பந்தப்பட்ட துறைகளில் இருப்பவர்களுக்கு வாய்ப்புகள் குவியும்.


கடகம்: கடமைகளை நிறைவேற்றிக் கொள்ள சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொள்வீர்கள். சுபகாரிய விஷயமாக வெளியூர் செல்ல நேரிடலாம். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் முடிவுக்கு வரும். வீடு மாற்றிக் கொள்ள விரும்புபவர்கள் மாற்றிக் கொள்ளத்தக்க தருணம் வந்து சேரும். புதிய வாகனம் யோகம் வந்துசேரும்.


சிம்மம்: உங்களுக்கு சம்பந்தமில்லாத பிரச்சனைகளில் தலையிடுவதும் கத்து சொல்வதையும் தவிர்த்தல் நலம். முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். செலவுகளை திட்டமிட்டு செய்வது நல்லது. புதிய காரியங்களை செய்ய துவங்குவதற்கு முன் நல்ல நேரம் காலம் பார்த்து செய்வது நல்லது.

கன்னி: வேலையில் இருந்த பளு கொஞ்ச கொஞ்சமாகக் குறையும். அதில் இருந்து வந்த சுணக்க நிலையும் மாறும். வெளிநாட்டு வேலை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். வியாபாரிகளுக்கு நெடுநாட்களாக இருந்து வந்த கடன்கள் தீரும். கூட்டு வியாபாரத்தில் கணிசமான லாபம் கிடைக்கும்.

துலாம்: வெளிநாடுக்கு ஏற்றுமதி செய்வோருக்கு புதிய ஆர்டர்கள் வந்து சேரும். புதிய இட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். தொழிற்சாலைகள் வைத்திருப்போருக்கு நல்ல லாபம் கிடைக்கும். பொதுவான விஷயங்களில் தலையிடுவோருக்கு உங்கள் கருத்துக்களை மற்றவர்கள் ஆமோதிப்பார்கள்.

விருச்சிகம்:  பெண்களால் இருந்த தொல்லைகள் மறைந்து நிம்மதி பிறக்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். அண்டை அயலாரின் ஆதரவு கிடைக்கும். குறுகிய பயணங்கள் அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு சாதகமான முன்னேற்றம் ஏற்படப்போவது உறுதி. நல்ல அறிமுகம் கிடைக்கப் பெற்று முன்னேற்றம் உண்டு.


தனுசு: சுபகாரியங்கள் வெகு லகுவாக கூடி வரும். விலகி நின்ற உறவுகளும் உரிய நேரத்தில் கை கொடுப்பார்கள். புதிய வீட்டிற்கு செல்வது சிறிது தள்ளிப் போகலாம். பிள்ளைகள் உயர்கல்வி செல்வதற்குண்டான வேலைகளை ஆரம்பிப்பது நல்லது. கணவன் மனைவிக்குள் இருந்த மனக்கசப்புகள் நீங்கி உற்சாகம் பிறக்கும். 

மகரம்: உற்பத்தி சார்ந்த தொழிற்துறையாளர்களுக்கு தொய்வு இன்றி தொழில் நடைபெறும். வாகனங்கள், மற்றும் இயந்திரங்களை பிரயோகப்படுத்தும் போது கவனம் தேவை. கலத்துறையினருக்கு பகீரதப் பிரயத்தனம் செய்வதன் மூலமாகவே நல்ல முன்னேற்றம் ஏற்படும். சிறிது முயற்சி செய்வதன் மூலம் சிறந்த வாய்ப்புகள் கைகூடும்.    


கும்பம்: நிலம், வீடு, மனை ஆகியவற்றில் இருந்த சிக்கல்கள் விலகி நன்மையுண்டாகும். குடியிருக்கும் வீட்டினை மாற்றவும் சிலருக்கு வாய்ப்புண்டு. பணவரவில் ஓட்டம் இருக்கும். அதை உரியதாக செலவழிப்பதில்தான் உங்கள் திறமை இருக்கிறது. இரக்கப்பட்டு செய்த உதவி கூட ஏன் செய்தோம் என்று எண்ண வைக்கும்.

     
மீனம்: வேலை இழந்தவர்கள் மீண்டும் பணியில் சேர பொன்னான காலமிது. மேலிடத்தில் உள்ள அதிகாரிகள் உங்களுக்கு அனுசரனையாக நடந்து கொள்வார்கள். வேலை செய்யும் இடத்தில் உள்ள பிரச்சனைகளை நிதானமான அணூகுமுறையுடன் சமாளித்து வெற்றி காண்பீர்கள். தொழில்துறையாளர்களுக்கு மாதம் முழுக்கவே பணி இருக்கும்.


---------------------------------------------------------------------------

நன்றி.
---
ஜோதிடம் எங்களது தொழிலல்ல...
எங்களது உயிர்.

அடியேன் தாஸன்
பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast)
நவதிருப்பதி ஸ்தலம் பெருங்குளம் கோவில், கிராமம் பரம்பரை ஜோதிடர்
இருப்பு:சென்னை.
ஜோதிடம்: http://kuppuastro.blogspot.com/

No comments: