Monday, November 5, 2012

இன்று இப்படித்தான் - 06.11.2012

இன்று இப்படித்தான் - 06.11.2012

 
நந்தன வருஷம்
ஐப்பசி மாஸம் 21ம் தேதி - நவம்பர் 06 2012
தக்ஷிணாயனம்
சரத்ரிது
செவ்வாய்கிழமை
திதி: கிருஷ்ணபக்ஷம்(தேய்பிறை) ஸப்தமி மதியம் 12.45 வரை பின் அஷ்டமி
நக்ஷத்ரம்: பூசம் மாலை 5.20 வரை பின் ஆயில்யம்
யோகம்: சாத்திய 32.02 வரை
கரணம்: வணஜி நாழிகை 16.16
சூரிய உதயம்: காலை மணி 06.10
அஸ்தமனம்: மாலை மணி 06.09
அஹசு: நாழிகை 29.23
லக்ன இருப்பு: துலாம் நாழிகை 1.40
இராகு காலம்: மாலை 3.10 முதல் 4.40 வரை
எமகண்டம்: காலை 9.10 முதல் 10.40 வரை
குளிகை: மதியம் 12.10 முதல் 1.40 வரை
சூலம்: வடக்கு - வடமேற்கு
பரிகாரம்: பால்
நக்ஷத்திர யோகம்: சித்தயோகம்
சந்திராஷ்டமம்: பூராடம், உத்திராடம்


குறிப்பு:

[1] நல்லநேரம்: காலை 7.40 - 9.10, மாலை 4.40 - 6.10
[2] மேல்நோக்கு நாள்
[3] திருநெல்வேலி ஸ்ரீகாந்திமதியம்பாள் காலை வெள்ளி சப்பரத்தில் கோலாட்ட அலங்காரம் இரவு தங்கக்கிளி வாகனத்தில் உலா
[4] உத்தரமாயூரம் ஸ்ரீவள்ளலார் சன்னதியில் பஞ்சமூர்த்திகள் உற்சவம் ஆரம்பம்.
[5] சிறியநகசு

-------------------------------------------------------------------------

கிரக பாதசாரம்

சூரியன் - ஸ்வாதி 4 மதியம் 3.05க்கு மேல் விசாகம் 1
சந்திரன் - கடகம்
செவ்வாய் - கேட்டை 4 இரவு 10.01க்கு மேல் மூலம் 1
புதன் - ஸ்வாதி 4 (வ)
குரு(வியாழன்) - ரோகினி 4(வக்ர கதியில்)
சுக்ரன் - ஹஸ்தம் 2 இரவு 2.58க்கு மேல் ஹஸ்தம் 3
சனி - சித்திரை 4
ராகு - விசாகம் 4
கேது - கிருத்திகை 2


பஞ்சாங்கம் கணிப்பு:  பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

-------------------------------------------------------------------------

மேஷம்: குடும்பத்தில் இருந்து வந்த சின்ன சின்ன குழப்பங்கள் மறைந்து நன்மைகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிரிந்தவர்கள் ஒன்று சேர்வர். கொள்கைப் பிடிப்பில் தளர்ச்சி ஏற்படலாம். தைரியம் பளிச்சிடும். எந்த வேலையிலும் உங்கள் தனித்தன்மை வெளிப்படும்.

ரிஷபம்: தடைகளை முறியடித்து காரிய வெற்றி பெறலாம். வீடு, நிலம் ஆகியவற்றில் இருந்து வந்த சுணக்க நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்படும். உணவு கட்டுப்பாடு அவசியமாகிறது. தந்தை, தந்தை வழி உறவினர்கள், பிள்ளைகளுடன் கருத்து மோதல்கள் வரலாம்.


மிதுனம்:  நண்பர்களிடத்தில் மனக்கிலேசம் ஏற்படலாம். சுபச்செலவுகள் நிகழும். எதிர்காலத்திற்குத் தேவையான முறையான சேமிப்புகளுக்குண்டான ஏற்பாடுகளை செய்வீர்கள். எதிகளின் இன்னல்கள் இருக்கும் இடம் தெரியாமல் போகும். வரவுக்கு எந்த வித குறையும் இருக்காது. 


கடகம்: எதிர்பாராத அதிர்ஷ்டம் கிடைக்கும். உத்தியோகம் பார்ப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். உங்களுடைய கோரிக்கைகளை மேலதிகாரிகள் ஏற்று நடப்பார்கள். விரும்பிய இடத்திற்கு பணி இட மாறுதல் கிடைக்கும். பணத்தை விட அறிவை மூலதனமாக வைத்து செய்யப்படும் தொழில் முன்னேற்றம் ஏற்படும்.


சிம்மம்: தீவிர முயற்சிகளினாலேயே அரசு சார்ந்த காரியங்கள் நடைபெறும். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு சீரான வாய்ப்புகள் வந்தாலும் அவ்வப்போது குழப்பமான மனநிலையும் இருக்கும். முன்யோசனையுடன் திட்டமிடல் அவசியம். மாணவ கண்மணிகளுக்கு கல்வியில் புதிய உற்சாகமும் நம்பிக்கையும் கிடைக்கும். நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும்.

கன்னி: நல்ல பலன்களையே கிடைக்கப் பெறுவீர்கள். பிள்ளைகளால் இருந்து வந்த தொந்தரவுகள் நீங்கி நல்லவைகள் நடக்க ஆரம்பிக்கும். இறையருளும் தெய்வ நம்பிக்கையும் கூடும். உங்கள் திறமையில் இருந்து வந்த பின்தங்கிய நிலை இனி மாறும்.


துலாம்: தைரியமாக பீடு நடை போட்டு உங்கள் வேலைகளை செய்வீர்கள்.  வெப்பம் சம்பந்தபட்ட உடல் உபாதைகள் ஏற்படலாம்.சில மாற்றங்கள் வந்து சேரும். பதவி உயர்வுக்குரிய அறிவிப்பு வந்து சேரும். சிலருக்கு வெளியூருக்கு மாற்றலும் வரும். உடனே கைகூடா விட்டாலும் அதற்கான விதையை இப்போது ஊன்றா வேண்டிய காலகட்டமிது. பெற்றோர் நலம் கவனிக்கப்பட வேண்டிய காலமிது.


விருச்சிகம்:  தம்பதிகளிடையே ஒற்றுமை மேலோங்கும். எனினும் மனைவி வழியில் உள்ள உறவினர்களுடன் கருத்து பரிமாற்றங்கள் செய்யும் போது மிகுந்த எச்சரிக்கை தேவை. ஏழில் இருக்கும் குரு பகவானின் வல்லமையால் அதையெல்லாம் முறியடித்து வெற்றிப் பாதையில் பயணீப்பீர்கள். தாய் வழி உறவினர்களுடன் சின்ன கருத்து மோதல்கள் வரலாம்.


தனுசு: நீங்கள் சொன்ன வாக்கைக் காப்பாற்ற சிறிது போராட வேண்டி வரலாம். மேலும் வீண் அலைச்சலும் ஏற்படலாம். தேவையில்லாத பணவிரையம் ஆகலாம். காரிய அனுகூலம் கிடைக்கும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். தனியார் வேலையில் இருப்பவர்களுக்கு சிறு வாக்குவாதங்கள் வரலாம். 

மகரம்: வரவுக்கேற்ற செலவுகளும் வந்து சேரும். எனினும் வருங்காலத்திற்குத் தேவையான முதலீடுகளை அதற்குண்டான நபர்களிடம் ஆலோசனைகள் செய்து முதலீடுகள் செய்வீர்கள். பிரச்சனைகளை முறியடிக்கும் வல்லமை உங்களை வந்து சேரும். காரிய அனுகூலம் கிட்டும். செல்வாக்கில் முன்னேற்றம் ஏற்படும்.    


கும்பம்: உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். பொருளாதார வளம் மேம்படும். தொழில் உன்னத நிலையை அடையும். குடும்பத்தில் முன்னேற்றமும் சுபநிகழ்ச்சிகளும் நடைபெறும். பணவிரையமும் காரியத்தாமதமும் ஏற்படலாம். எனினும் எந்த பிரச்சனையையும் முறியடிக்கும் வல்லமை உங்களுக்கு வந்து சேரும்.

     
மீனம்: பிள்ளைகள் வழியில் சிற்சில கசப்பூட்டும் சம்பவங்கள் நடந்தாலும் சில அனுகூலம் ஏற்படும். அவர்களால் முன்னேற்றம் ஏற்படும். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிக்கலாம். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு இது சிறப்பான காலகட்டமாகும். தொழிலில் நற்பெயர் கிடைக்கும். மேலதிகாரிகளின் அனுசரனை கிடைக்கும்.


---------------------------------------------------------------------------

நன்றி.
---
ஜோதிடம் எங்களது தொழிலல்ல...
எங்களது உயிர்.

அடியேன் தாஸன்
பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast)
நவதிருப்பதி ஸ்தலம் பெருங்குளம் கோவில், கிராமம் பரம்பரை ஜோதிடர்
இருப்பு:சென்னை.
ஜோதிடம்: http://kuppuastro.blogspot.com/

No comments: