Tuesday, November 20, 2012

திருக்குறள் இருக்கக் குறையொன்றுமில்லை - இசைக்கவி ரமணன்


ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நடத்தும் 'திருக்குறள் இருக்கக் குறையொன்றுமில்லை' தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி:



 
அன்பர்களே!

வணக்கம்! 

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நடத்தும் 'திருக்குறள் இருக்கக் குறையொன்றுமில்லை' தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி:
நாள் / தேதி : செவ்வாய் /20.11.2012


இடம் : காமகோடி சிற்றரங்கம், கிருஷ்ணகான சபா, தி.நகர், சென்னை

நேரம் : மாலை 6.30 மணி

டிசம்பர் மாதம் திருக்குறள் நிகழ்ச்சிகள் இருக்காது என்று நினைக்கிறேன். ஏனெனில், சங்கீத சீசன் துவங்கி விடுவதால், அரங்கம் கிடைக்காது.

அனைவரும் வருக!

அன்புடன்,
ரமணன்
யார் இந்த ரமணன்? - அவரே சொல்கிறார்

Ramanan lecturing 

பிறந்தது நெல்லையில். வளர்ந்தது சென்னையில். கவிதையோடும், நண்பர்களோடும் மரத்தடியில் பொழுதைக் கழித்து மதிப்பெண்களைக் கோட்டை விட்டது ஜெயின் கல்லூரியில். வேலையின்றித் திண்டாடி, ‘தி ஹிந்து’ பத்திரிகையில் (சென்னை-பெங்களூரு-மதுரை-பெங்களூரு-சென்னை-விசாகப்பட்டினம்) என்று 28 ஆண்டுகள் நிறைய உற்சாகமாய் ஊர்சுற்றி, போதுமடா இந்த உப்பு, புளி, மிளகாய்ப் பொல்லாப்பு என்று மார்ச் 2005ல், ஒரெயடியாய் உத்தியோகத்தை உதறினேன். அன்பான மனைவி அனுராதா. இரட்டை மகன்கள் ஆனந்த், விக்ரம். இருவரும் தாத்தாவைப்போல ஜர்னலிஸ்டுகள். நொய்டா சி என் என் – ஐ பி என்னில் பணிபுரிகிறார்கள். மருமகள்கள் ப்ரியா, தீப்தி மகள்களாகவே நேசமாய் இருக்கிறார்கள்.
கொஞ்சம் வெளிநாடுகள் பார்த்தேன். இந்தியாவில் எத்தனை பார்த்தாலும் கொஞ்சமே பார்த்ததுபோல் தோன்றுகிறது. 22 முறை இமயப் பயணம் மேற்கொண்டும், அடுத்த பயணத்திற்கு ஆவலாக உள்ளேன். சுமாராய்ப் புகைப்படம் பிடிப்பேன்.
ஆன்மிகப் பயணம். முறையற்ற முகவரிகள். அகமெல்லாம் காயம். இற்று விழுந்த நிலையில், சற்குரு ஸ்ரீ சிவானந்த மூர்த்தி (பீமுனிப்பட்டினம்) அவர்களின் திருவடியில் புகலெய்தினேன்.
எந்தச் சிறப்பும் இல்லாமல், எந்தக் குறையும் இல்லாத வாழ்க்கை அமைந்த பாக்கியவானே நான்.

No comments: