Friday, November 30, 2012

சிம்மம் - ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - பாகம் ஆறு

சிம்மம்:

தன்னம்பிக்கையே வாழ்க்கையில் முன்னேறுவதற்கு வழிகாட்டி என்பதை மற்றவர்களுக்கு தங்களது செயலால் உணர்த்தும் சிம்ம ராசி அன்பர்களே நீங்கள் எதிலும் தனித்தன்மையுடன் விளங்குவீர்கள்.எந்த வேலை செய்தாலும் உங்களின் திறமையை வெளிப்படுத்துவீர்கள்.

இதுவரை உங்களது ராசிப்படி ஜீவனஸ்தானமான பத்தாமிடத்தில் கேதுவும்,  சுகஸ்தானமான 4ம் இடத்தில் ராகுவும் இருந்தார்கள். இனி கேது பாக்கியஸ்தானமான 9ம் இடத்திற்கும், ராகு தைரியவீர்யஸ்தானமான 3ம்  இடத்திற்கும் பெயர்ச்சி ஆகிறார்கள்.
கிரகங்களின் பார்வை:
ராகு ராசியையும், பூர்வபுண்ணியஸ்தானமான ஐந்தாமிடத்தையும், பாக்கியஸ்தானமான  ஒன்பதாமிடத்தையும் பார்க்கிறார். கேது தைரியவீர்யஸ்தானமான மூன்றாமிடத்தையும், களத்திரஸ்தானமான எட்டாமிடத்தையும், லாபஸ்தானமான பதினொன்றாமிடத்தையும் பார்க்கிறார்.

குடும்பத்தில் சில நேரங்களில் உங்கள் வார்த்தைகளால் பிரச்சனை வரலாம். எனவே பிறர் மனம் நோகும்படியான வார்த்தைகளை உபயோகிக்காதீர்கள். யாருக்காவது ஏதேனும் வாக்குறுதிகள் கொடுத்திருந்தால் அவைகளை உடனடியாக நிறைவேற்றுங்கள். திருமணம் நல்ல வரனாக அமையும். வாழ்க்கைத்துணை வழியில் இருந்து உதவிகள் கிட்டும். எதிரிகளை சிறப்பான முறையில் திட்டமிட்டு வீழ்த்துவீர்கள். உங்களுக்கு பெயரும் புகழும் கிடைக்கும். சொத்து வகையில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். யாரையும் நம்பி ஜாமீன் கையெழுத்து போடும் முன் தகுந்த ஆலோசனைகளைப் பெறவும். உறவினர்களிடமும், நண்பர்களிடமும் அன்புடனும் அரவணைப்புடனும் பழகக் கற்றுக் கொள்ளுங்கள். உங்களின் மதிப்பு மரியாதைக்கு எந்த விதமான பங்கமும் வராது. பொருளாதார நிலையில் சுமாரான நிலை இருக்கும். தொழிற்கல்வி பயில்வோர் சிறப்பான முன்னேற்றம் ஏற்படும். பிறதுறை சம்பந்தப்பட்ட மாணவர்கள் அதிகமாக முயற்சி எடுத்து படித்தல் அவசியம். வெளிநாடு சென்று படிக்கக்கூடிய வாய்ப்புகள் வந்து சேரும். விரும்பிய கிடைக்கவில்லை என கவலை கொள்ள வேண்டாம். கவனமுடன் உங்கள் கல்வியைத் தொடரவும். கலைத்துறையை சார்ந்தவர்களுக்கு நடனம் மற்றும் சண்டைப் பயிற்சியாளர்கள் சிறந்த நிலைக்கு வரலாம். வேலை விஷயமாக பயணம் மேற்கொள்ள வேண்டியதிருக்கும். அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். வாய்ப்புகள் வந்து குவியும். எந்த ஒரு வாய்ப்பையும் நிராகரிக்க வேண்டாம். பணப்புழக்கம் அதிகமாக இருக்கும். பத்திரிகைத்துறை சார்ந்த நண்பர்களுக்கு நல்ல ஏற்றம் இருக்கும். வழக்கறிஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் சிறப்பான பலனையும், பணவரவையும் பெறுவார்கள். வியாபாரிகளுக்கு முதலீடு செய்வதற்குண்டான பணவசதி வந்து சேரும். அதனால் கடன் தொல்லை கொஞ்ச கொஞ்சமாக குறையும். கூட்டுத்தொழில் செய்பவர்கள் தங்கள் பங்காளிகளிடம் பரிவுடன் நடந்து கொள்ளவும். எந்த நேரத்திலும் பதட்டம் அடையவே கூடாது. மனைவி வகை உறவினர்களால் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். உங்களுடைய பேச்சுத் திறமையால் வியாபாரம் செழிப்படையும். பணம் கொடுத்து உதவி செய்வதற்கு முன் தகுந்த ஆலோசனை வாழ்க்கைத்துணையுடன் செய்யுங்கள். அரசாங்கம் சம்பந்தப்பட்ட கணக்கு வழக்குகளை சரியாக வைத்துக் கொள்ளவும். வழக்கு விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். கல்லூரி, இன்ஷ்யூரன்ஸ் மற்றும் தகவல் தொடர்புத் துறையில் பணிபுரிபவர்கள் நல்ல முன்னேற்றம் காணலாம். மே 2013க்குப் பின் இடமாற்றம் கிடைக்கும். உங்களது கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். உங்களது எதிரிகளை நீங்கள் ஜெயிப்பதற்கு நேரத்தை சரியான வழியில் செலவிடவும். உங்களது சேமிப்புகளை பெருக்கிக் கொள்ளுங்கள். நெல், கரும்பு, மஞ்சள், எள், கோதுமை போன்ற பயிர்களில் நல்ல லாபம் கிடைக்கும். பருத்தி ஆடைகள் சார்ந்த துறையினருக்கும் பொன்னான காலமிது. தங்களது வியாபாரங்களைப் பெருக்கிக் கொள்ள பொன்னான காலமிது. பெண்களுக்கு, கணவரிடத்திலும், பிள்ளைகளிடத்திலும் அன்பும் பாசமும் அதிகரிக்கும். குடும்பத்தில் ஏதேனும் சண்டை சச்சரவுகள் வந்தால் அதனைப் பெரிதாக்க வேண்டாம். விட்டுக் கொடுத்து செல்லும் மனப்பாங்கை வளர்த்துக் கொள்ளவும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு நினைத்த இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். கர்ப்பிணிப் பெண்கள் கவனமுடன் தங்களைக் கவனித்துக் கொள்ளவும். முக்கியமாக கிரஹண காலங்களில் கவனம் தேவை. தேவை இல்லாத மனக் குழப்பத்திற்கும், வீணான பிரச்சனைகளுக்கும் இடம் கொடுக்காதீர்கள். பிள்ளைகள் மேலம் குடும்பத்திற்கு அவப்பெயர் வராமலிருக்க அவர்களை கண்கானிப்பது அவசியம். சுபகாரியங்கள் தடைபடாமல் நடக்க தகுந்த பிரார்த்தனைகளை செய்ய வேண்டியது அவசியம். தெய்வ காரியங்களை மேற்கொள்வதில் சில சிக்கல்கள் வராமல் இருக்க குலதெய்வ வழிபாடும் முக்கியம். சில வேளைகளில் வேலைப்பளு காரணமாக உணவு சரியான நேரத்தில் உட்கொள்ள முடியாமல் போகலாம். கவனம் தேவை. பரம்பரை சொத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் சுமூகமான முடிவு வந்து சேரும். புதிய வழக்குகளை எதிர்கொள்ளாமல் இருப்பதற்கு தகுந்த நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளவும். நிலம், வயல் ஏதேனும் வாங்க வேண்டி வந்தால் மனைவி பெயரிலும் அதை சேர்த்துக் கொள்வது நல்லது. கால்நடைகளை வளர்ப்பதால் நல்ல வருவாய் கிட்டும். நிலத்தை திருத்தியமைக்க பணம் வந்து சேரும். திருடு போன பொருட்கள் வந்து சேரும். சொந்தமாக தொழில் செய்ய விருப்பமுள்ளவர்களுக்கு அரசாங்கம் மூலமாக கடன் வாங்கி ஆரம்பிக்கலாம். ஆனால் ஆரம்பிக்கும் முன் தகுந்த ஆலோசனைகளைப் பெறுவது நல்லது.  அரசியல், சமூக பொறுப்பில் உள்ளவர்கள் சுயநலம் பாராமல் உழைக்க வேண்யதிருக்கும். அதனால் உழைப்பிற்கு ஏற்ற பலன்கள் வந்து சேரும். பதவியையோ, பணத்தையோ எதிர்பாராமல் உங்களால் முடிந்த அளவிற்கு பிறருக்கு நன்மை செய்யுங்கள். நீங்கள் எடுக்கும் காரியங்களில் அவ்வப்போது தடைகள் வந்தாலும் கவலை கொள்ளாதீர்கள். எல்லாம் தாமதமானாலும் நல்லபடியாகவே நடக்கும். நீண்ட நாள் நண்பர்கள் உங்களுக்கு உதவிகள் செய்வார்கள். தந்தை மற்றும் மனைவி உடல்நலனில் அக்கறை செலுத்தவும். நரம்பு, நெஞ்சு, வயிறு சம்பந்தமான நோய்கள் வந்தால் உடனே தக்க ஆலோசகரை அணுகவும். மருத்துவச் செலவுகள் அதிகமாகலாம். உடல்நலனில் தகுந்த அக்கறையுடன் செயல்படுங்கள்.


பரிகாரம்: ஞாயிறுதோறும் அருகிலிருக்கும் சிவனுக்கு இளநீர் அபிஷேகம் செய்யவும். பிரதோஷ காலங்களில் அபிஷேகத்திற்கு மஞ்சள் பொடியை அபிஷேகத்திற்குக் கொடுக்கவும்.

சொல்ல வேண்டிய மந்திரம்: ஸ்ரீஆதித்யஹ்ருதயம் பாராயணம் செய்யவும்
லக்ன ரீதியான பலன்கள்:
லக்னம் இராசி பலன்கள் பரிகாரம்
மேஷம் ஸிம்ஹம் 60% கந்த ஷஷ்டி கவசம் சொல்வது
ரிஷபம் ஸிம்ஹம் 60% ஸ்ரீஸூக்தம் சொல்வது
மிதுனம் ஸிம்ஹம் 60% கணபதி பூஜை மற்றும் விஷ்ணு ஸகஸ்ரநாமம் சொல்வது,மகான்களை வழிபடவும்
கடகம் ஸிம்ஹம் 60% புருஷ ஸூக்தம், நாராயண ஸூக்தம், விஷ்ணு ஸுக்தம் சொல்வது மற்றும் சூரிய வழிபாடு
ஸிம்ஹம் ஸிம்ஹம் 60% ஆதித்யஹ்ருதயம் சொல்வது
கன்னி ஸிம்ஹம் 60% விஷ்ணு ஸகஸ்ரநாமம் சொல்வது, முடிந்த வரை இராம நாமம் சொல்வது, மகான்களை வழிபடவும்
துலாம் ஸிம்ஹம் 55% கணபதி காயத்ரி, நவக்ரஹ மூலமந்த்ரம் சொல்வது, ஸ்ரீஸூக்தம் சொல்வது.
விருச்சிகம் ஸிம்ஹம் 60% கணபதி பூஜை மற்றும துர்ஹா ஸூக்தம் சொல்வது, முடிந்த வரையில் அம்பாள் நாமாவை சொல்வது.
தனுர் ஸிம்ஹம் 60% கணபதி அதர்வஷீர்ஷ உபநிஷத், துர்க்கா மூலமந்த்ரம் மற்றும் ஹனுமத் கவசம் சொலவது.
மகரம் ஸிம்ஹம் 65% கணபதி வழிபாடு மற்றும் குலதெய்வ வழிபாடு செய்வது.
கும்பம் ஸிம்ஹம் 65% லலிதா ஸகஸ்ரநாம பாராயணம் மற்றும் மூகபஞ்சக சதீ சொல்வது, தன்வந்திரி ஸ்லோகம் சொல்வது.
மீனம் ஸிம்ஹம் 60% தன்வந்திரி ஸ்லோகம் சொல்வது மற்றும் துர்க்கா காயத்ரி சொல்வது, வீட்டிலுள்ள முன்னோர்களை வழிபடவும்.
லக்னமே தெரியாது ஸிம்ஹம் 60/100 ஸ்ரீஆதித்யஹ்ருதயம் பாராயணம்
குறிப்பு: [1] மேலே உள்ள டேபிளை எப்படி பயன்படுத்துவது?
நீங்கள் ஸிம்ஹம் இராசியில் பிறந்து லக்னம் தெரிந்ததென்றால் அதற்குள்ள பலனைத் தெரிந்து கொள்ளவும். அதற்குள்ள பரிகாரத்தை தெரிந்து கொள்ளவும். உதாரணமாக, நீங்கள் ஸிம்ஹ இராசியில் பிறந்து கடகம் லக்னத்தில் பிறந்தவரென்றால் உங்களுக்கு 60% சதவிகிதம் நல்ல பலன்கள் கிடைக்கும். மேலும் நீங்கள் செய்ய வேண்டிய பரிகாரம்: புருஷ ஸூக்தம், நாராயண ஸூக்தம், விஷ்ணு ஸுக்தம் சொல்வது மற்றும் சூரிய வழிபாடு. எனக்கு லக்னமேத் தெரியாது ஆனால் ஸிம்ஹ இராசி என்பவர்கள் ஆதித்யஹ்ருதயம், மஹாலக்ஷிமி காயத்ரி, ஹனுமத் காயத்ரி சொல்வத பரிகாரமாகும்.

[2] இங்கு கொடுக்கப்பட்டிருப்பது பொதுபலன்களே. இவை ஜாதகத்திற்கு ஜாதகம் திசை ரீதியாக மாறலாம்.


நக்ஷத்திர வாரியாக சில குறிப்புகள்:


* நக்ஷத்திரங்கள்
பலன்கள் மகம் பூரம் உத்திரம் 1ம் பாதம்
இராசி ஸிம்ஹம் ஸிம்ஹம் ஸிம்ஹம்
இராசியாதிபதி சூரியன் சூரியன் சூரியன்
நக்ஷத்திர அதிபதி கேது சுக்ரன் சூரியன்
அதிதேவதைகள் பித்ருக்கள் அர்யமா பகன்
கணம் இராக்ஷஸ மனுஷ்யகணம் மனுஷய கணம்
நாடி பார்ஸுவ - இடது மத்ய பார்ஸுவ - வலது
மிருகம் ஆண் எலி பெண் எலி பசுமாடு
பக்ஷி ஆண் கழுகு பெண் கழுகு கழுகு
விருக்ஷம் ஆலமரம். புரசு இலந்தை
இரஜ்ஜு பாத ரஜ்ஜு தொடை தொப்புள்
வேதை நக்ஷத்ரம் ரேவதி உத்திரட்டாதி பூரட்டாதி
அதிர்ஷ்டம் தரும் எண்கள் 1, 3, 4, 7, 9 1, 3, 4, 6, 7, 9 1, 3, 4, 5, 7, 9
அதிர்ஷ்டம் தரும் திசைகள் கிழக்கு கிழக்கு, வடக்கு கிழக்கு
குறிப்பு: அதிர்ஷ்டம் தரும் எண்களும், திசைகளும் ஜாதகத்திற்கு ஜாதகம் மாறும். இங்கு கொடுக்கப்பட்டிருப்பது பொதுவானவையே.

No comments: