Friday, November 30, 2012

மிதுனம் - ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - பாகம் நான்கு


மிதுனம்:

சீரியசிந்தனையும், நல்ல பேச்சாற்றலும் கொண்ட மிதுனராசி அன்பர்களே யார் தயவும் இன்றி சொந்த காலில் நின்று மூன்னேற வேண்டும் என துடிப்பவர்கள் நீங்கள். 

இதுவரை உங்களது ராசிப்படி அயனசயனபோக ஸ்தானத்தில் கேதுவும், 6ம் இடத்தில் ரணருணரோகஸ்தானத்தில் ராகுவும் இருந்தார்கள். இனி கேது லாபஸ்தானமான 11ம் இடத்திற்கும், ராகு பூர்வபுண்ணியஸ்தானமான 5ம்  இடத்திற்கும் பெயர்ச்சி ஆகிறார்கள்.

கிரகங்களின் பார்வை:
ராகு தைரியவீர்யஸ்தானமான மூன்றாம் இடத்தையும், களத்திரஸ்தானமான ஏழாமிடத்தையும், லாபஸ்தானமான  பதினொன்றாமிடத்தையும் பார்க்கிறார். கேது ராசியையும், பூர்வபுண்ணியஸ்தானமான ஐந்தாமிடத்தையும், பாக்கியஸ்தானமான ஒன்பதாமிடத்தையும் பார்க்கிறார்.

கடந்த சில ஆண்டுகளாக உங்களது குடும்பத்தில் உள்ளவர்கள் பிரச்சனைகளைக் கொடுத்திருப்பார்கள். இப்போது அவையெல்லாம் தீர்ந்து ஒரு சுமூகமான சூழ்நிலை உருவாகப் போகிறது. சகோதர சகோதரிகளிடத்தில் பாசம் பந்தம் பளிச்சிடும். அவர்களிடம் முழுமையான அன்பை எதிர்பார்க்கலாம். மற்ற சொந்த பந்தங்களிடத்தில் சிறுசிறு பிரச்சனைகள் வரலாம். அதனை விட்டுக் கொடுத்து போவது நல்லது. முயற்சிகளின் மூலம் புதிய வீடு வாய்ப்பு கிட்டும். திருமணம் கைகூடும். வாழ்க்கைத்துணையை இழந்தவர்களுக்கு மீண்டும் வாழ்வில் வசந்தம் வீசும். உங்களின் அந்தஸ்திற்கு சமமாக இல்லாதவர்களிடம் உறவு வைப்பதைத் தவிர்க்கவும். பிறர் உங்களிடம் ஏளனம் செய்தால் அதற்காக வருந்தாமல் வாழ்க்கையை வாழத் தொடங்குங்கள்.  குடும்பத்திற்குத் தேவையான வசதி வாய்ப்புகள் வந்து சேரும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் சற்று இழுபறிக்குப் பின்னே நடைபெறும். கொஞ்சம் சிரமம் எடுத்தால் மிக சிறப்பாக நடந்தேறும். முக்கிய முடிவுகளை குடும்பப் பெரியோர்களின் ஆலோசனைகளைக் கேட்டு எடுக்கவும். தெய்வ அனுகூலம் இருப்பதால் எந்த பிரச்சனையும் இராது. தொழிற்கல்வி மற்றும் ஆய்வு சம்பந்தப்பட்ட கல்வியில் சிறந்து விளங்குவதற்கு பொன்னான காலமிது. அதிகமாக முயற்சி எடுத்து படித்தால் சாதனைகள் செய்யலாம். விரும்பிய பாடம் எடுத்து படிப்பதற்கு மிகச் சரியான காலகட்டமிது. பெரியோர்கள், மூத்தோர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோரின் ஆலோசனைகளை கேட்டு நடக்கவும். குடும்பப் பிரச்சனைகளால் உங்கள் கல்விக்கு தடைகள் வரலாம். கவனம் தேவை. எதையும் போட்டு மனதில் குழப்பிக் கொள்ளாமல் படிப்பினில் மட்டும் கவனத்தைச் செலுத்தவும். நடனக் கலைஞர்கள் மற்றும் கலைத்துறையைச் சார்ந்த தொழிற்நுட்பக் கலைஞர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். பிற மொழிகளில் நடிப்பதற்கு ஏற்ற வாய்ப்புகள் வந்து சேரும். வரும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளவும். வேலைபளு அதிகமாக இருந்தாலும் அதற்கேற்ற பணவரவும் இருக்கவே செய்யும். எழுத்தாளர்கள், சட்ட வல்லுனர்கள், கட்டுரையாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் ஆகியோருக்கு விருதுகள் கிடைக்கும். கற்பனை வளம் அதிகரிக்கும். இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்களின் மீது லாபம் கிடைக்கும். தண்ணீர் சம்பந்தப்பட்ட வியாபாரமும் நன்மை பயக்கும். சட்ட விரோதமான பணிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். முக்கியமாக பொருட்களை பதுக்கி வைத்தல் போன்ற பணிகள் செய்வதை முற்றிலுமாகத் தவிர்க்கவும். அலைச்சல், சோர்வு உண்டாகலாம். எனவே எதிலும் திட்டமிடல் அவசியம். பலன்கள் சற்று தாமதமாகி கிடைக்கும். மற்றவர்களின் பிரச்சனைகளில் வீண் தலையீடு வேண்டாம். நண்பர்களாக இருப்பவர்கள் கூட விரோதிகளாக மாறும் காலகட்டம் என்பதால் கவனம் தேவை. கூட்டுத்தொழில் புரிபவர்கள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு, சம்பள் உயர்வு, மேல் அதிகாரிகளின் அனுசரனையும் கிடைக்கும். தனியார் ஊழியர்களுக்கு நல்ல நிலைமை வந்து சேரும். குறிப்பாக சேவைத்துறையில் பணியாற்றுபவர்களுக்கு சிறப்பான காலகட்டமிது. வேலை இல்லாமல் காத்திருந்தவர்களுக்கு சரியான வேலை அமையும். புதிதாக பணியில் சேர்ந்தவர்களுக்கு சிறப்புடன் பணியாற்றுவதற்கு பொன்னான காலகட்டமிது. மற்றவர்களுக்கு தேவையில்லாமல் அவர்களின் வாழ்க்கைக்கோ, வேலைக்கோ அறிவுரை சொல்ல வேண்டாம். அவர்களின் விஷயத்தில் தேவையில்லாமல் தலையிடுவதைத் தவிர்க்கவும். பூர்வீக சொத்தில் விளைச்சல் நன்றாக இருக்கும். தரிசு நிலங்களிலும் முயற்சி செய்து மாற்றுப் பயிர்களைப் பயிரிடலாம். பணச் செலவுகள் பெருகும். கால்நடைகளை வளர்ப்பவர்களுக்கு வீண் செலவுகள் வரலாம். வழக்கு வியாஜ்ஜியங்களில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க முன்னெச்சரிக்கை அவசியமாகிறது. தாய் வழி உறவினர்களிடத்தில் சின்னச் சின்ன பிரச்சனைகளும், அவ்வப்போது சில மன விரோதங்களும் ஏற்படலாம். எனவே அவர்களிடம் கொஞ்சம் அனுசரணையாக போக்கை கடைபிடித்தல் நலம். பெண்கள் முன்னேற்றம் காண்பர். வாழ்க்கைத் துணையுடன் இருந்து வந்த வீண் வாதங்களைத் தவிர்க்கவும். அடிக்கடி அவசியமில்லாமல் பயணம் செய்வதைத் தவிர்க்கவும். பணியிடமாற்றம் உறுதிபடுத்தப்படுகிறது. பெற்றோருக்கு உதவி செய்வதால் மிகுந்த நன்மைகள் உண்டாகும். குழந்தைகளிடம் அன்புடன் பழகுங்கள். மேலும் அவர்களிடம் கோபத்தைக் காட்டாமல் மனிதாபிமானத்துடன் பழகுங்கள். இதன்மூலம் மனக்கவலை மறைந்து மனதில் நிம்மதியும் மகிழ்ச்சியும் நிம்மதியும் ஏற்படும். புதிய பொருட்கள் வந்து சேரும். ஆனால் அவற்றை நீண்ட நாட்கள் வைத்திருக்க அதன்மீது கவனம் தேவை. பழைய வீடு, வாகனங்கள் வந்து சேரும். அரசியலில் உள்ளவர்கள், பொதுவாழ்க்கையில் உள்ளவர்களுக்கு மிகவும் சிறப்பான பலன்களைக் காண்பர். அரசிடம் இருந்து சலுகைகள் கிடைக்கும். உயர்பதவிகள் கிடைக்கும். அதே வேளையில் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். நீங்கள் மற்றவர்களிடம் காட்டும் அன்பும், அரவணைப்பும் உங்களின் பொது வாழ்க்கைக்கு உறுதுணையாகவே இருக்கும். உங்களுக்கு நற்பெயர் கிடைக்கும். மருத்துவ செலவு அதிகரிக்கலாம். தந்தையாரின் உடல்நலனில் கவனம் செலுத்த வேண்டி வரும். தலைவலி, வயிறு மற்றும் நரம்பு சம்பந்தப்பட்ட ரோகம் வரலாம். தாயின் உடல்நலனில் இருந்து வந்த மந்தநிலை மாறும். சந்தோஷம் பெருகும்.

பரிகாரம்: புதன்தோறும் அருகிலிருக்கும் நவக்கிரக கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்யவும். ராகு காலத்தில் நடைபெறும் பைரவர் பூஜையில் கலந்து கொள்ளவும்.

சொல்ல வேண்டிய மந்திரம்: ஸ்ரீகிருஷ்ணாஷ்டகம் பாராயணம் செய்யவும், விஷ்ணு ஸகஸ்ரநாமம் பாராயணமும் செய்யலாம்.


லக்ன ரீதியான பலன்கள்:
லக்னம் இராசி பலன்கள் பரிகாரம்
மேஷம் மிதுனம் 55% கந்த ஷஷ்டி கவசம் சொல்வது, ஷண்முக கவசம் சொல்வது
ரிஷபம் மிதுனம் 60% ஸ்ரீ மன் நாராயணீயம் சொல்வது.
மிதுனம் மிதுனம் 55% கணபதி பூஜை மற்றும் விஷ்ணு ஸகஸ்ரநாமம் சொல்வது
கடகம் மிதுனம் 60% புருஷ ஸூக்தம், நாராயண ஸூக்தம்  சொல்வது.
ஸிம்ஹம் மிதுனம் 65% ஆதித்யஹ்ருதயம், மஹாலக்ஷிமி காயத்ரி சொல்வது
கன்னி மிதுனம் 55% விஷ்ணு ஸகஸ்ரநாமம் சொல்வது
துலாம் மிதுனம் 60% கணபதி காயத்ரி, நவக்ரஹ மூலமந்த்ரம் சொல்வது,
முடிந்த வரை இராம நாமம் சொல்வது, மகான்களை வழிபடவும்
விருச்சிகம் மிதுனம் 65% முடிந்த வரையில் அம்பாள் நாமாவை சொல்வது.
தனுர் மிதுனம் 60% துர்க்கா மூலமந்த்ரம் மற்றும் சியாமளா தண்டகம் சொல்வது
மகரம் மிதுனம் 65% கணபதி வழிபாடு மற்றும் குலதெய்வ வழிபாடு செய்வது.
கும்பம் மிதுனம் 55% லலிதா ஸகஸ்ரநாம பாராயணம் மற்றும் மூகபஞ்சக சதீ சொல்வது.
மீனம் மிதுனம் 55% தன்வந்திரி ஸ்லோகம் சொல்வது மற்றும் துர்க்கா காயத்ரி சொல்வது.
லக்னமே தெரியாது மிதுனம் 55% ஸ்ரீகிருஷ்ணாஷ்டகம் பாராயணம் செய்யவும், விஷ்ணு ஸகஸ்ரநாமம் பாராயணமும் செய்யலாம்.
குறிப்பு:
[1] மேலே உள்ள டேபிளை எப்படி பயன்படுத்துவது?
நீங்கள் மிதுன இராசியில் பிறந்து லக்னம் தெரிந்ததென்றால் அதற்குள்ள பலனைத் தெரிந்து கொள்ளவும். அதற்குள்ள பரிகாரத்தை தெரிந்து கொள்ளவும். உதாரணமாக, நீங்கள் மிதுன இராசியில் பிறந்து லக்னத்தில் பிறந்தவரென்றால் உங்களுக்கு 55% சதவிகிதம் நல்ல பலன்கள் கிடைக்கும். மேலும் நீங்கள் செய்ய வேண்டிய பரிகாரம்:கந்த ஷஷ்டி கவசம் சொல்வது, ஷண்முக கவசம் சொல்வது. எனக்கு லக்னமேத் தெரியாது ஆனால் மிதுன இராசி என்பவர்கள் ஸ்ரீகிருஷ்ணாஷ்டகம் பாராயணம் செய்யவும், விஷ்ணு ஸகஸ்ரநாமம் பாராயணமும் செய்யலாம். 

[2] இங்கு கொடுக்கப்பட்டிருப்பது பொதுபலன்களே. இவை ஜாதகத்திற்கு ஜாதகம் திசை ரீதியாக மாறலாம்.


நக்ஷத்திர வாரியாக சில குறிப்புகள்:* நக்ஷத்திரங்கள்
பலன்கள் மிருகசீரிஷம் - 3,4 ம் பாதங்கள் திருவாதிரை புனர்பூசம் - 1,2,3ம் பாதங்கள்
இராசி மிதுனம் மிதுனம் மிதுனம்
இராசியாதிபதி புதன் புதன் புதன்
நக்ஷத்திர அதிபதி செவ்வாய் இராகு குரு
அதிதேவதைகள் சந்த்ரன் பரமசிவன் அதிதி
கணம் தேவகணம் மனுஷ்யகணம் தேவகணம்
நாடி மத்ய பார்ஸுவ - இடது பார்ஸுவ - இடது
மிருகம் சாரைப் பாம்பு பெண் நாய் பெண் பூனை
பக்ஷி கோழி அண்டில் அன்னம்
விருக்ஷம் கருங்காலி செங்கருங் மூங்கில்
இரஜ்ஜு சிரோ ரஜ்ஜு கண்ட உதர ரஜ்ஜு
வேதை நக்ஷத்ரம் சித்திரை, அவிட்டம் திருவோணம் உத்திராடம்
அதிர்ஷ்டம் தரும் எண்கள் 2, 3, 4, 5, 9 2, 3, 4, 5, 9 2, 3, 4, 5, 6, 9
அதிர்ஷ்டம் தரும் திசைகள் கிழக்கு, வடக்கு மேற்கு, வடக்கு வடக்கு
குறிப்பு: அதிர்ஷ்டம் தரும் எண்களும், திசைகளும் ஜாதகத்திற்கு ஜாதகம் மாறும். இங்கு கொடுக்கப்பட்டிருப்பது பொதுவானவையே.
No comments: