நவம்பர் - -15 வரையிலான பலன்கள்
மேஷ ராசி: (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1)
எடுத்த காரியத்தை முயற்சி செய்து முடிக்கும் மேஷ ராசி வாசகர்களே மிக முக்கியமான முடிவுகள் எடுக்க வேண்டிய கால கட்டத்தில் இருக்கிறீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவ விட்டு கொடுத்து போவது நல்லது. சகோதர சகோதரிகளிடம் நன்மை பயக்கும். வீடு நிலம் ஆடை ஆபரணங்கள் வந்து சேரும். மிக நீண்ட நாளாக வசூலாகாமல் இருந்த கடன்கள் வசூலாகும். குழந்தைகளிடம் இணக்கமாக இருப்பீர்கள். சோம்பலைத் தவிர்த்தல் நன்மை தரும். வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் வந்து மறையும். வாகனங்கள் ஓட்டும் போது கவனம் தேவை. முன்னோர்களின் ஆசிர்வாதங்கள் பரிபூரணமாக கிடைக்கும். தந்தையாருடன் இணக்கமான சூழ்நிலை நிலவும். வருங்கால சேமிப்புகளுக்கு சம்பாதிக்க சரியான நேரமிது. சின்ன சின்ன சுப செலவுகள் வரலாம்.
பரிகாரம்: ஸ்ரீ முருகனை பூஜிப்பது.
ரிஷபம்: (கார்த்திகை 2,3,4, ரோஹினி, மிருகசீரிஷம் 1,2)
சொன்ன சொல்லை எப்பாடுபட்டும் காப்பாற்றும் ரிஷப ராசி வாசகர்களே சுபவிரையங்கள் ஏற்படும் காலமிது. மிக நீண்ட நாட்களாக வராமல் இருந்த நல்ல செய்தி வந்து சேரும். சகோதர சகோதரிகளிடம் சின்ன சின்ன கருத்து மோதல்கள் வரலாம். நிலம், வீடு, வாகனம், ஆடை போன்றவைகள் புதிதாக வாங்கலாம். தாய், தாய் வழி உறவினர்களுடன் இணக்கமான சூழ்நிலை ஏற்படும். குழந்தைகளை கவனமுடன் கண்கானிக்க வேண்டிய நேரமிது. வாதம் சம்பந்தப்பட்ட வியாதிகள் வரலாம். கவனம் தேவை. வாழ்க்கைத் துணையுடன் இணக்கமான சூழ்நிலை நிலவும். வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் உங்கள் சொல்லுக்கு மதிப்பு கிடைக்கும். தொழில் செய்வோருக்கு மிக நல்ல கால கட்டமிது.
பரிகாரம்: மஹாலக்ஷ்மியை வணங்குவது.
மிதுனம்: (மிருகசீரிஷம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3)
எதிலும் தர்மத்தை கடைபிடிக்கும் மிதுன ராசி வாசகர்களே பல நன்மைகள் கிடைக்கும் காலகட்டத்தில் இருக்கிறீர்கள். பரம்பரை சொத்துக்கள் கிடைக்கும் காலகட்டமிது. உங்கள் குடும்பத்தில் நல்ல காரியங்கள் நடக்கும். சகோதர சகோதரிகளிடம் இணக்கமாக இருப்பீர்கள். உங்கள் அன்பை மற்றவர்கள் புரிந்து கொள்வார்கள். குழந்தைகளிடம் மிகுந்த அன்பு காட்டுவீர்கள். பித்தம் சம்பந்தப்பட்ட நோய்கள் வரலாம். கவனம் தேவை. வாழ்க்கைத் துணையுடன் இனிய சூழ்நிலை நிலவும். வேலை செய்யும் இடத்தில் எதிர்பார்த்த பணி இடமாற்றம், பதவி உயர்வு போன்றவை கிடைக்கும்.
பரிகாரம்: புருஷ ஸூக்தம் சொல்வது.
கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்)
உணர்வுகளை முழுமையாக வெளிப்படுத்தும் கடக ராசி வாசகர்களே வாழ்க்கையில் மற்ற மனிதர்களின் உணர்வுகளை முழுமையாக புரிந்து கொள்ள வேண்டிய கால கட்டத்தில் இருக்கிறீர்கள். நீண்ட நாட்களாக இழுத்து வந்த ஒரு பிரச்சினை சுமூகமாக முடியும். குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை நிலவும். சகோதர சகோதரிகளின் அன்பு முழுமையாக கிடைக்கும். தாய் மற்றும் தாய் வழி உறவினர்களின் பாசம் முழுமையாக கிடைக்கும். குழந்தைகளின் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். தண்ணீரை சம்பந்தப்பட்ட வியாதிகள் வரலாம். பிரிந்து போன நண்பர்கள் ஒன்று சேருவதற்கு ஏற்ற காலகட்டமிது. வாழ்க்கைத்துணையுடன் உற்வு பிரகாசிக்கும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. தந்தை வழி உறவினர்களுடன் உறவு மேம்படும். வேலை செய்யும் இடத்தினில் உங்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும். எந்த முடிவெடுத்தாலும் ஆலோசனை செய்து எடுங்கள்.
பரிகாரம்: திங்கள்கிழமை தோறும் சிவனை வழிபடுவது.
சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1)
எந்த இடத்திலும் சுயமரியாதையை இழக்காமல் சாதிக்கும் சிம்ம ராசி வாசகர்களே நன்மையான பல காரியங்கள் நிகழும் காலகட்டத்தில் இருக்கிறீர்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த திருமணத் தடை நீங்கும். உங்கள் குடும்பத்தில் உங்கள் சொல்லுக்கு மரியாதை கிடைக்கும். உறவினர்களுடன் இருந்து வந்த கருத்து மோதல்கள் முடிவுக்கு வரும். சகோதர சகோதரிகளுடன் பாசம் அதிகரிக்கும். மாணவமணிகளுக்கு நன்மையான காலகட்டமிது. முடிந்த வரை காரியங்களை தள்ளிப் போடாமல் இருப்பது நல்லது. இயந்திரங்களை இயக்கும் போது கவனம் தேவை. வாழ்க்கைத்துணையுடன் சின்ன சின்ன கருத்து மோதல்கள் வந்து மறையும். வீண் செல்வுகளை தவிர்த்தல் நலம். நண்பர்கள் மூலம் நன்மை ஏற்படும். முன்னோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும்.
பரிகாரம்: சூர்ய காயத்ரி சொல்வது.
கன்னி: (உத்திரம் 2, 3, 4, ஹஸ்தம், சித்திரை 1, 2)
எப்போதும் உழைப்பைப் பற்றிய சிந்தனை உடைய கன்னி ராசி வாசகர்களே சொன்ன சொல்லை காப்பாற்ற முடியாமல் போகலாம் எனவே கவனத்துடன் வாக்கு கொடுங்கள். குடும்ப நலம் சிறப்படையும். குடும்பத்தில் சுபகாரியங்கள் மேற்கொள்ள சிறந்த நேரமிது. வேலை இல்லாதவர்களுக்கு அது சம்பந்தமாக நல்ல செய்தி வரும். நன்மையும் தீமையும் கலந்து நடக்குமென்றாலும் நன்மையே அதில் நிறைய நடக்கும். உங்களுடைய நற்குணம் வெளிப்பட்டு ஒரு முக்கிய பிரச்சினையில் அதற்கான பாராட்டு கிடைக்கும். வியாபாரம் தொழில் சிறந்து விளங்கும். பொருளாதார சங்கடங்கள் இருக்காது. உறவினர் வருகையால் அதனால் உருப்படியான காரியங்கள் நிகழும். வேலை செய்யும் இடத்தினில் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது.
பரிகாரம்: புதன்கிழமை தோறும் மஹாவிஷ்ணுவை வணங்குவது.
துலாம்: (சித்திரை 3,4, ஸ்வாதி, விசாகம் 1, 2, 3)
அனைவரையும் தங்களது செயல்காளால் வசீகரிக்கும் துலாம் ராசி வாசகர்களே தற்போதுள்ள சூழ்நிலையில் பொருளாதார சிக்கல்கள் விலகும். விவசாயிகளுக்கு புதியதோர் உற்சாகம் பிறக்கும். வியாபாரம் செழிப்படையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு குறைகள் ஏற்பட்டு மறையும். எதிலும் உஷாராக இருப்பது நல்லது. பெரியோர்களின் ஆசிர்வாதங்களைப் பெற்று எந்த காரியத்தையும் ஆரம்பியுங்கள். முடிந்தவரை தருமப் பணியில் ஈடுபடுவது நல்லது. குடும்பத்தில் சகஜ நிலைமை இருந்து வரும். பெற்றோர் நலம் சிறப்படையும். கடினமாக உழைத்தால் வெற்றி நிச்சயம். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு உற்சாக நிலை உண்டு. தசாபுக்தி சாதகமாக இருப்போருக்கு நற்பலன்கள் விரைந்து நடக்கும். அல்லாதவர்களுக்கு மிகுந்த பிரயாசையின் பேரிலேயே சில நன்மைகளை பெர முடியும்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமை தோறும் மஹாலக்ஷ்மிக்கு விளக்கு ஏற்றி வழிபடுதல் நலம்.
விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை)
உழைப்பால் தன்னையும் தனது குடும்பத்தையும் உயர்த்தும் விருச்சிக ராசி வாசகர்களே உங்களுடைய அன்றாடப் பணிகள் சரிவர நிறைவேறும். சௌகரியம் கூடுதலாக அமையும். பொருளாதார சங்கடங்கள் இருக்காது. குடும்ப நலம் சீராக இருக்கும். குழந்தைகள் விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. முன்விரோதம் காரணமாக ஒரு சிக்கல் வரலாம். அதனை சமாளிக்கும் ஆற்றல் உங்களுக்கு உண்டு என்பதை உணருங்கள். புதிய முயற்சிகளை ஈடுபடும் போது ஆலோசனைகளை மேற்கொள்வது நல்லது. வேலை செய்யும் இடத்தில் நற்பெயர் ஏற்படும். மாணவர்கள் கல்விநிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு சுறுசுறுப்பான நேரமாக அமையும். பெற்றோரால் ஆதரவான நிலை உண்டாகும். பயணங்கள் கிளம்பும் முன் முன்னேற்பாடுகளை முறையாக செய்து கொள்ளுங்கள்.
பரிகாரம்: ஸ்ரீ ஆறுமுக கவசம் சொல்லுங்கள்.
தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1)
எல்லா நேரத்திலும் கடவுளை வணங்கும் தனுசு ராசி வாசகர்களே தங்களுடைய அந்தஸ்து உயரும். அன்றாடப் பணிகள் சிறப்பாக நிறைவேறும். கலைஞர்கள், எழுத்தாளர்களுக்கு தங்களுடைய நிலையை உயர்த்திக் கொள்ள சரியான காலமிது. தொழிலாளர்களுக்கு தொல்லை இராது. பொருளாதார பாதிப்புகளில் இருந்து விலகும் நேரமிது. அவசியம் இருந்தாலன்றி பயணங்களில் அவசரம் வேண்டாம். தெய்வப்பணி போன்றவற்றில் ஈடுபடுத்தி கொள்ள சரியான நேரமிது. வீடு, நிலம் போன்றவற்றில் சரியான முதலீடுகள் செய்ய தகுந்த நேரமிது. வாழ்க்கைத் துணையுடன் மிக இணக்கமான சூழ்நிலை ஏற்படும். குழந்தைகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.
பரிகாரம்: லலிதா த்ரிசதி சொல்வது.
மகரம்: (உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அவிட்டம் 1, 2)
அடுத்தவருடைய குறைகளை பெரிதுபடுத்தாமல் பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளும் மகர ராசி வாசகர்களே குடும்ப நலம் சீராக இருக்கும். தொழிலாளர்கள் நலம் விருத்தி அடையும். புனிதப் பணியில் நாட்டம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் பாராட்டுக்கள் கிடைக்கும். வாழ்க்கைதுணையுடன் சிற்சில கருத்து வேறுபாடுகள் வந்து மறையும். குடும்பத்தில் சுபச் செலவுகள் வரலாம். மனோதிடம் அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு தகுந்த லாபம் கிடைக்கும். உங்கள் பயணத்தால் லாபம் உண்டாகும். கலைஞர்கள் தகுந்த மரியாதையை பெறுவர். அரசு விவகாரங்களில் அனுகூலம் கிடைக்கும். பெருந்தன்மையுடன் நடந்து கொண்டால் வம்பு வந்து சேராது. எந்த ஒரு விஷயத்திலும் கண்ணியத்தை கடைபிடிப்பது நல்லது.
பரிகாரம்: அய்யப்ப கவசம் படிப்பது.
கும்பம்: (அவிட்டம் 3, 4, ஸதயம், பூரட்டாதி 1, 2, 3)
எப்போதும் அடுத்தவர்களுடைய நலனிலேயே அக்கறை கொண்டிருக்கும் கும்ப ராசி வாசகர்களே வியாபாரம் செழிப்படையும். கலைதுறையினர் வளர்ச்சி காண்பார்கள். குடும்ப சுபிட்சம் அதிகரிக்கும். சுக்ர பலம் சீராக இருப்பதால் சங்கடங்களில் ஒரு சில கட்டுப்பாடுகள் வரலாம். உடல்நலம் கூட பாதிக்கப்படலாம். அரசு விவகாரங்களில் சுணக்க நிலை ஏற்படலாம். அவசரப்படாமல் இருப்பது நல்லது. பெரியோர்களின் ஆசிர்வாதங்கள் முழுமையாக கிடைக்கும். செல்வம் வந்து சேரும். வாராக் கடன்கள் வசூலாகும். பிரிந்து போன நண்பர்கள் ஒன்று சேரும் காலகட்டமிது. வாழ்க்கைதுணையுடன் சீரான உறவு நிலை நீடிக்கும். குழந்தைகளால் சந்தோஷம் கிடைக்கும். முதலீடுகளால் சுபிட்சம் பெருகும். உத்தியோகத்தின் காரணமாக வேறு ஒரு இடத்திற்கு பயணம் செய்ய நேரிடலாம்.
பரிகாரம்: சிவ அஷ்டோத்திரம் படிப்பது.
மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி)
தான் மட்டும் உயராமல் தன்னுடன் சார்ந்தவர்களும் உயர வழிவகை செய்யும் மீன ராசி வாசகர்களே உங்களுடைய அடிகளை கவனமாக எடுத்து வைக்க வேண்டிய காலகட்டமிது. பொருள் வசதி பெருகும். பயணத்தால் பலன் கிடைக்கலாம். உடல் நலத்தை கவனத்தில் கவனம் கொள்ளுங்கள். வியாபாரிகளுக்கு கூடுதல் லாபம் கிடைக்கும் காலகட்டமிது. குடும்ப நலம் சீராக அமையும். அந்தஸ்துக்கு சோதனைகள் வரலாம். தடுமாற்றமில்லாத முடிவு எடுங்கள். பொறுப்புகள் அதிகமாக எடுக்க வேண்டிய காலகட்டமிது. அரசு சார்ந்த விஷயங்களுக்கு கூடுதல் கவனம் தேவை. கலைத்துறையை சேர்ந்தவர்களுக்கு அருமையான முன்னேற்றம் ஏற்படும். முன்னோர்களை வணங்குவதால் அதிக முன்னேற்றம் ஏற்படும். எந்தக் காரியத்தை ஆரம்பிக்கும் முன் குல தெய்வத்தை வணங்குங்கள்.
பரிகாரம்: லக்ஷ்மி அஷ்டோத்திரம் படிப்பது.
------------------------------
நன்றி: 4தமிழ்மீடியா
No comments:
Post a Comment