Tuesday, November 20, 2012

இன்றைய நாள் மிக நல்ல நாள் - 20.11.2012

 இன்றைய நாள் மிக நல்ல நாள் - 20.11.2012

மேஷம்: நீங்கள் பட்ட கடன், பிறர் உங்களுக்கு பட்ட கடன் அனைத்தும் ஒரு முடிவுக்கு வரும். குடும்பத்தில் நிலவி வந்த பிரச்சனைகள் மறையும். சிலருக்கு திருமணம் மற்றும் சுபநிகழ்ச்சிகள் நடப்பதில் தாமதம் ஏற்படும். யாருக்கும் வாக்கு கொடுக்கும் முன் ஆலோசனைகள் செய்து கொள்ளவும்.

ரிஷபம்: வாழ்க்கைத்துணை பெயரில் சிலர் வீடு வாங்குவீர்கள். பொருட்களை களவு கொடுக்க நேரிடலாம். உங்களின் உடமைகள் மீது கண்ணும், கருத்துமாக இருக்க வேண்டும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அறிமுகம் இல்லாதவர்களின் வீட்டில் எதையும் உட்கொள்ள வேண்டாம்.


மிதுனம்:  தகுந்த வரன் கிடைத்து திருமணம் இனிதே நடந்தேறும். இந்த நேரங்களில் வீடு, நிலம் மற்றும் வாகனங்கள் வாங்கலாம். நீங்கள் அமைதியாக இருந்தாலும் வீண் சண்டைகள் மற்றும் வீணான குழப்பங்கள் உங்களைத் தேடி வர வாய்ப்பு இருக்கிறது.  


கடகம்: மிக மிக கவனமுடன் நடந்து கொள்ளுங்கள். மாணவர்களுக்கு போட்டித் தேர்வுகள் சாதகமாக அமையும். சிலர் கல்வி பயில வெளியூர்க்கு செல்ல வேண்டி வரும். மேலாண்மை மற்றும் ஆடிட்டிங் சம்பந்தப்பட்ட துறைகளை சார்ந்தவர்களுக்கு நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். 


சிம்மம்: தங்களுக்கு விரும்பிய பாடம் கிடைக்கும். அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி நீங்கள் விரும்பியதை சாதித்துக் கொள்வீர்கள். காதல், தீயோர் நட்பு மற்றும் தீய பழக்கவழக்கங்களில் இருந்து விலகி நின்று கொள்ளுங்கள்.

கன்னி: கலைஞர்கள், விளம்பரம், ஒப்பனை, ஒலி, ஒளி சம்பந்தப்பட்டவர்கள் மற்றும் எடிட்டிங்  போன்ற துறைகளில் ஈடுபட்டு இருப்பவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பர். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். பிறமொழி பேசுபவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ளவும்.

துலாம்: விருதுகளை வாங்குவதற்கு சிறிது முயற்சிகள் மேற்கொள்ள வேண்டிவரும். வியாபாரிகள் மனைவி பெயரில் புதிய தொழில் தொடங்கலாம். பதிப்பகம், புத்தக் நிலையம், பெயிண்ட் விற்பனையாளர்கள் நல்ல லாபம் கிடைக்கப் பெறலாம். நல்ல பெயர் வாங்குவீர்கள். மூலதனத்திற்குத் தேவையான பணம் வந்து குவியும். எதிரிகள் வகையில் சற்று கவனமுடன் செயல்படவும்.


விருச்சிகம்:  அலைச்சல் இருக்கும். சிலர் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாமல் திண்டாட வேண்டிய நிலை ஏற்படலாம். உங்கள் குழந்தைகளால் சிற்சில பிரச்சனைகள் வரலாம். அதற்காக உங்களின் குழந்தைகள் மேல் ஆத்திரம் கொள்ள வேண்டாம். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் வரும் கஷ்டங்களை தாங்கிக் கொள்ளுங்கள்.


தனுசு: உங்கள் நிலைமை மாறும். நீங்கள் விரும்பியதை கேட்டு பெற்றுக் கொள்ளலாம். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். கன்சல்டன்சி துறைகளில் வேலை செய்பவர்கள் தகுந்த முன்னேற்றம் கிடைக்கும். பள்ளி, கல்லூரிகளில் பணிபுரிபவர்களும் நற்பலன்கள் கிடைக்கப் பெறுவார்கள். பதவி உயர்வு கிடைக்கும்.

மகரம்: குடும்பத்தில் சண்டைகள் அவ்வப்போது நிகழும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நல்ல வரன் கிடைக்கும். சந்தாண பாக்கியம் கிட்டும். வீடு, நிலம் மற்றும் வாகனங்கள் சேர்க்கை பெறுவர். மின்சாரப் பொருட்களை இயக்கும்போது கவனமுடன் நடந்து கொள்ளுங்கள்.      


கும்பம்: சொத்தில் பிரச்சனைகள் வரலாம். ஊர் விட்டு ஊர்களுக்குச் சென்று குடியேறும் நிலை வரலாம். பணவிஷயத்தில் கவனமுடன் செயலபடவும். பிரிந்து சென்ற சொந்தங்கள் ஒன்று கூடுவார்கள். பெண்களால் உயர்ந்த காரியம் நடக்கும். கடன் தொல்லை விலகும்.

     
மீனம்: உறவினர்களிடம் கொஞ்சம் அனுசரித்துப் போகவும். ஏனெனில் அவர்களிடம் கருத்து வேறுபாடு மற்றும் அவர்களிடம் புரிந்து கொள்வதில் பிரச்சனைகள் ஏற்படலாம். கெட்டவர்களின் நடபை முற்றிலுமாக விலகிக் கொள்ளவும். புதியதாக அறிமுகமாகும் பழகும் நண்பர்களிடம் கவனமாக பழகவும்.


---------------------------------------------------------------------------


நன்றி.
---
ஜோதிடம் எங்களது தொழிலல்ல...
எங்களது உயிர்.

அடியேன் தாஸன்
பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast)
நவதிருப்பதி ஸ்தலம் பெருங்குளம் கோவில், கிராமம் பரம்பரை ஜோதிடர்
இருப்பு:சென்னை.
ஜோதிடம்: http://kuppuastro.blogspot.com/

No comments: