Friday, November 30, 2012

துலாம் - ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - பாகம் எட்டு

துலாம்:

அனைவருக்கும் சமநீதியை வழங்கும் துலாம் ராசி அன்பர்களே உங்களின் மனதில் பட்ட காரியங்களை மிகத்தெளிவாக அடுத்தவரிடம் வெளிப்படுத்தும் கொண்டவர்கள் நீங்கள்.

இதுவரை உங்களது ராசிப்படி தனவாக்குக் குடும்ப ஸ்தானமான இரண்டாமிடத்தில் ராகுவும், ஆயுள்ஸ்தானமான எட்டாமிடத்தில் கேதுவும் அமர்ந்து இருந்தார்கள். இனி கேது களத்திரஸ்தானமான 7ம் இடத்திற்கும், ராகு ராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள்.
கிரகங்களின் பார்வை:
ராகு தைரியவீர்ய ஸ்தானத்தையும், களத்திரஸ்தானமான ஏழாமிடத்தையும், லாபஸ்தானமான  பதினொன்றாம் இடத்தையும் பார்க்கிறார். கேது ராசியையும், பஞ்சமபூர்வ ஸ்தானமான ஐந்தாமிடத்தையும், பாக்கியஸ்தானமான ஒன்பதாமிடத்தையும் பார்க்கிறார்.

குடும்பத்தில் பிரச்சனைகள் இருந்தாலும் அமைதிக்கு குறைவு இருக்காது. சிலர் வேலை நிமித்தமாக வெளியூர் செல்ல வேண்டி வரலாம். மகான்களின் ஆசியும், ஆசீர்வாதமும் உங்களுக்கு பரிபூரணமாகக் கிடைக்கும். 2013 மே மாததிற்குப் பின் உங்கள் கடன் தொல்லை கொஞ்ச கொஞ்சமாகக் குறையும். பயணம் செய்யும் போது உங்களது உடமைகளை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளவும். வெற்றுத்தாளில் கையோப்பம் இடும் முன் ஆலோசனைகள் அவசியம். உங்கள் பிரச்சனைகளை நம்பிக்கையானவர்களிடம் மட்டுமே சொல்லவும். சில வேளைகளில் மற்றவர்களிடம் சொல்வதே பிரச்சனைகள் ஆகலாம். அறிமுகம் இல்லாதவர்களிடம் எந்த ஒரு பொருட்களையும் வாங்க வேண்டாம். பிரிந்த நண்பர்கள் மற்றும் சொந்தங்கள் ஒன்று சேர்வர். கடுமையான உழைப்பிற்கு ஏற்ற பலன்களை தற்போது அறுவடை செய்வீர்கள். உங்களின் வாழ்க்கையில் புதிய மாற்றங்கள் வரும். தேவையற்ற கவலைகள் உங்கள் மனதை விட்டு அகலும். உங்களின் அணுகுமுறையால் பகைவர்களையும் நண்பர்களாக்கிக் கொள்வீர்கள். வெளிநாட்டில் வசிக்கும் உங்கள் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக உரையாடுவீர்கள். அதனால் சிற்சில ஆதாயங்களும் ஏற்படும். சிலருக்கு புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். மாணவர்களுக்கு மருத்துவம், பொறியியல், தகவல் தொழிற்நுட்பம் மற்றும் விவசாயம் ஆகியோர்கள் நல்ல முன்னேற்றம் காணலாம். விரும்பிய துறைகளில் எடுத்து படிப்போருக்கு சிறந்த மதிப்பெண்கள் கிடைக்கும். ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரின் அறிவுரைகளை உதாசீனப்படுத்தாமல் அதன்படி நடக்கவும். தடைபட்டிருந்த கல்வியைத் தொடர்வதற்கு ஏற்ற காலமிது. கலைஞர்களுக்கு, விளம்பரத்துறை, திரைத்துறை டெக்னிக்கல் மற்றும் சின்னத்திறை சம்பந்தப்பட்ட துறைகளில் பணிபுரிபவர்கள் சீரான பலனைக் காண்பார்கள். ஆனாலும் இரவு பகல் பாராமல் அதிகமான உழைப்பு தேவைப்படும். வரவு அதிகமாக இருக்கும். சிக்கனமாக செலவழிக்கவும். வியாபாரிகளுக்கு, உணவு சம்பந்தப்பட தொழில் செய்பவர்கள் சிறப்பான லாபம் அடையலாம். மீன்கள் சம்பந்தப்பட்ட உணவிற்கு கிராக்கி வரும் என்பதால் அது சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு பொன்னான காலம் இது. உங்களின் குழந்தைகள் பெயரில் தொழில் ஆரம்பித்தால் நல்ல வளர்ச்சியும், அனுகூலமும் கிடைக்கும். உங்களிடம் வேலை செய்பவர்களிடம் கூடுதல் அன்பு செலுத்தவும். கடன் வாங்கியிருந்தால் சரியான முறையில் திருப்பிக் கொடுக்க ஏற்பாடுகள் செய்யவும். யாரையும் நம்பி ப்ளாங் செக் கொடுத்தல் கூடாது. உத்தியோகஸ்தர்களுக்கு, பெற்றோரின் மூலமாக வேலை கிடைக்கும். உங்களுடன் வேலை செய்பவர்களிடம் அனுசரனையாக செல்லவும். வீணான பிரச்சனைகளும் மனக்குழப்பங்களும் வேண்டாம். நீங்கள் செய்யும் உத்தியோகத்தில் சிறந்து விளங்குவீர்கள். 2013 மே மாதத்திற்குப் பின் விரும்பிய பதவி உயர்வு, பணிஇடமாற்றம், சம்பள உயர்வு ஆகியவைகளைக் கிடைக்கப் பெறுவீர்கள். மேலதிகாரிகளிடம் அனுசரனையுடன் நடந்து கொள்ளவும். ஏனெனில் சில பிரச்சனைகள் வரலாம். சகஊழியர்கள் உங்களிடம் ஒத்துழைக்காமல் தன்னிசையாக செயல்படலாம். உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களிடம் நிதானமாக நடந்து கொள்ளவும். ஏனெனில் அவர்கள் செய்யும் தவறுக்கு நீங்கள் ஆளாக நேரிடலாம், அதனால் தண்டனையும் கிடைக்கப் பெறலாம். விவசாயிகள் புதிய சொத்து வாங்கி அதனை திருத்தம் செய்வார்கள். பயறு வகைகளில், பனை பொருட்களில் நல்ல வருவாய் கிடைக்கும். பண்ணைகளில் வேலை செய்பவர்கள் சிறந்த பலனைக் காணலாம். கால்நடைச் செல்வங்கள் பெருகும். பூர்வீகச் சொத்தின் பேரில் இருக்கும் கடன் தீரும். அதில் இருக்கும் வில்லங்கமும் விலகும். விவசாய நிலங்களுக்குத் தேவையான தண்ணீர் கிடைக்கும்.  பயிர்கள் சேதம் அடைவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் பத்திரமாக பார்த்துக் கொள்ளவும். பெண்களுக்கு, திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடி வரும். கர்ப்பிணிப் பெண்கள் கஷ்டமான வேலைகளைச் செய்ய வேண்டாம். உடல்நலனில் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டும். கணவரை விட்டுப் பிரிந்தவர்கள் கணவருடன் மீண்டும் சேர்வார்கள். உங்களின் கணவருக்கு உங்களால் அனுகூலம் உண்டாகும். குழந்தை பாக்கியம் கிட்டும். நீங்கள் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வாய்ப்புகள் கைகூடிவரும். விரும்பிய இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். உங்களிடம் இருந்து பிரிந்த சொந்தங்கள் திரும்பி சேர்வார்கள். அரசியலில் உள்ளவர்களுக்கு மதிப்பு உயரும். போட்டிகளை சமாளிப்பீர்கள். உங்களுக்கு எதிர்பார்க்காத பதவி கிடைக்கும். உங்கள் தொண்டர்கள் உங்களுக்காக உழைப்பார்கள். எந்த சவாலையும் தைரியம் மற்றும் தன்னம்பிக்கையுடன் சமாளியுங்கள். எதிரிகளின் தொல்லை அதிகமாக இருக்கும். திட்டமிட்டு எதையும் செய்யுங்கள். எதிலும் கவனமாக செயல்படுங்கள். உங்களின் நற்பெயருக்கு பங்கம் வரலாம். தைரியத்தை மட்டும் எபோதுமே இழக்கக் கூடாது. சகோதரர்கள் வகையில் பகை வரலாம். ஆகவே அவர்களுக்காக விட்டுக் கொடுத்து வாழ்தல் நலம். உடல்நல்னைப் பொறுத்தவரை பெற்றோரின் உடல்நலனில் அக்கறை செலுத்தவும். அசதி, சோம்பல், காரியத்தைத் தள்ளிப் போடுதல் கூடவே கூடாது. முக்கியமாக கால் பாதங்கள் மற்றும் தொடை பகுதிகளில் பாதிப்பு வரலாம். உங்கள் உடல்நலனில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரிடம் தகுந்த ஆலோசனை  பெறவும். நீங்களாக எந்த ஒரு மருந்தையும் உட்கொள்ளக் கூடாது. தம்பதிகளுக்குள் கருத்தொற்றுமை வரும். மருத்துவ செலவு அதிகரிக்கலாம்.

பரிகாரம்: வெள்ளிதோறும் அருகிலிருக்கும் அம்மன் கோவிலில் துர்க்கைக்கு எலுமிச்சையில் விளக்கு போட்டு அர்ச்சனை செய்யுங்கள். நவக்கிரஹ ஸ்தலங்கள் சென்று வாருங்கள். முக்கியமாக காக்கைக்கு சாதம் வைப்பதும், முன்னோர்கள் வழிபாடும் மிக முக்கியம்.

சொல்ல வேண்டிய மந்திரம்: ஸ்ரீராமஜெயம் எழுதவும், பாராயணம் செய்யவும். ஹரே ராம ஹரே கிருஷ்ண பாராயணமும் செய்யலாம். 


லக்ன ரீதியான பலன்கள்:

லக்னம் இராசி பலன்கள் பரிகாரம்
மேஷம் துலாம் 55% சுப்பிரமணிய புஜங்கம் படிப்பது
ரிஷபம் துலாம் 60% ஸ்ரீஸூக்தம் சொல்வது
மிதுனம் துலாம் 60% விஷ்ணு ஸகஸ்ரநாமம் சொல்வது
கடகம் துலாம் 55% ஸ்ரீ லலிதா ஸகஸ்ரநாமம் சொல்வது
ஸிம்ஹம் துலாம் 60% நாராயண காயத்ரி, ஹனுமத் காயத்ரி சொல்வது
கன்னி துலாம் 55% விஷ்ணு ஸகஸ்ரநாமம் சொல்வது
துலாம் துலாம் 50% ஸ்ரீராமஜெயம் எழுதவும், பாராயணம் செய்யவும். ஹரே ராம ஹரே கிருஷ்ண பாராயணமும் செய்யலாம்.
விருச்சிகம் துலாம் 60% கணபதி பூஜை மற்றும துர்ஹா ஸூக்தம் சொல்வது
தனுர் துலாம் 60% ஹனுமத் கவசம் சொலவது.
மகரம் துலாம் 55% குலதெய்வ வழிபாடு செய்வது மற்றும் முன்னோர்களை வழிபடுவது.
கும்பம் துலாம் 60% லலிதா ஸகஸ்ரநாம பாராயணம் மற்றும் தன்வந்திரி ஸ்லோகம் சொல்வது.
மீனம் துலாம் 55% தன்வந்திரி ஸ்லோகம் சொல்வது மற்றும் துர்க்கா காயத்ரி சொல்வது
லக்னமே தெரியாது துலாம் 50/100 ஸ்ரீராமஜெயம் எழுதவும், பாராயணம் செய்யவும். ஹரே ராம ஹரே கிருஷ்ண பாராயணமும் செய்யலாம்.
குறிப்பு: [1] மேலே உள்ள டேபிளை எப்படி பயன்படுத்துவது?
நீங்கள் துலாம் இராசியில் பிறந்து லக்னம் தெரிந்ததென்றால் அதற்குள்ள பலனைத் தெரிந்து கொள்ளவும். அதற்குள்ள பரிகாரத்தை தெரிந்து கொள்ளவும். உதாரணமாக, நீங்கள் துலாம் இராசியில் பிறந்து ுர் லக்னத்தில் பிறந்தவரென்றால் உங்களுக்கு 60% சதவிகிதம் நல்ல பலன்கள் கிடைக்கும். மேலும் நீங்கள் செய்ய வேண்டிய பரிகாரம்: ஹனுமத் கவசம் சொலவது.  எனக்கு லக்னமேத் தெரியாது ஆனால் துலாம் இராசி என்பவர்கள் ஸ்ரீராமஜெயம் எழுதவும், பாராயணம் செய்யவும். ஹரே ராம ஹரே கிருஷ்ண பாராயணமும் செய்யலாம். 

[2] இங்கு கொடுக்கப்பட்டிருப்பது பொதுபலன்களே. இவை ஜாதகத்திற்கு ஜாதகம் திசை ரீதியாக மாறலாம்.

நக்ஷத்திர வாரியாக சில குறிப்புகள்:

* நக்ஷத்திரங்கள்
பலன்கள் சித்திரை - 3, 4 ம் பாதங்கள் ஸ்வாதி விசாகம் - 1, 2, 3 ம் பாதங்கள்
இராசி துலாம் துலாம் துலாம்
இராசியாதிபதி சுக்ரன் சுக்ரன் சுக்ரன்
நக்ஷத்திர அதிபதி செவ்வாய் இராகு வியாழன்
அதிதேவதைகள் துவஷ்டா வாயு இந்திராக்னி
கணம் இராக்ஷஸ் கணம் தேவகணம் இராக்ஷஸ் கணம்
நாடி மத்ய பார்ஸுவ - இடது பார்ஸுவ - இடது
மிருகம் பெண் புலி ஆண் எருமை ஆண் புலி
பக்ஷி மரங்கொத்தி தேனீ செவ்வாக்
விருக்ஷம் வில்வம் மருது விளா
இரஜ்ஜு தொப்புள் கழுத்து வயிறு
வேதை நக்ஷத்ரம் மிருகசீர்ஷம் அவிட்டம் உரோஹினி கார்த்திகை
அதிர்ஷ்டம் தரும் எண்கள் 1, 3, 4, 6, 7, 9 1, 2, 3, 6, 7, 9 1, 3, 6, 7, 9
அதிர்ஷ்டம் தரும் திசைகள் வடக்கு கிழக்கு, வடக்கு மேற்கு, வடக்கு
குறிப்பு: அதிர்ஷ்டம் தரும் எண்களும், திசைகளும் ஜாதகத்திற்கு ஜாதகம் மாறும். இங்கு கொடுக்கப்பட்டிருப்பது பொதுவானவையே.


1 comment:

usha said...

Thank you for positive predictions.