Friday, November 30, 2012

மேஷம் - ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - பாகம் இரண்டு

மேஷம்:

எதற்கும் அஞ்சாத குணம் கொண்ட மேஷ ராசி வாசகர்களே, நீங்கள் மேன்மையுடனும், கீர்த்தியுடனும், புகழுடனும் விளங்குவீர்கள்.

இதுவரை உங்களது ராசிப்படி 2ம் இடத்தில் கேதுவும், 8ம் இடத்தில் ராகுவும் இனி கேது ராசிக்கும், 7ம் இடத்திற்கும் மாறுகிறார்கள். 

கிரகங்களின் நிலை:
ராகு ராசியையும், பூர்வ புண்ணிய பஞ்சம ஸ்தானத்தையும், பாக்கியஸ்தானமான ஒன்பதாமிடத்தையும் பார்க்கிறார். கேது தைரியவீர்ய ஸ்தானத்தையும், களத்திரஸ்தானமான ஏழாமிடத்தையும், லாபஸ்தானமான பதினொன்றாமிடத்தையும் பார்க்கிறார்.

எதற்கும் அஞ்சாமலும் வீரத்துடனும் தீரத்துடனும் மேன்மையான குணக்குன்றுகளாய் விளங்கும் மேஷ ராசி அன்பர்களே, உங்கள் ராசிப்படி இதுவரை கேது 2ம் இடமான தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து ராசிக்கும், ராகு 8ம் இடமான ஆயுள்ஸ்தானத்திலிருந்து 7ம் இடமான களத்திரஸ்தானத்திற்கும் மாறுகின்றனர். 


குடும்பத்தில் அமைதி நிலவும். வீட்டில் வசதி வாய்ப்புகள் பெருகும். தம்பதிகளிடையே அன்பும் பாசமும் அதிகரிக்கும். கருத்துக்களை பரிமாறும் முன் பொறுமை மற்றும் நிதானம் அவசியம் என்பதை உணருங்கள். திருமணமாகாமல் அதற்குண்டான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு வரக்கூடிய பங்குனி மாதத்திற்குப் பின் திருமணம் இனிதே நடந்தேறும். புதிதாக வீடு, மனை வாங்க வேண்டும் என்று யோசனை செய்தவர்களின் எண்ணம் ஈடேறும். மிகவும் விரும்பிய நண்பர்களை விட்டுப் பிரிய வேண்டிய நிலை வரலாம். உங்களின் பொருட்களை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ளவும். தூக்கம் இல்லாமல் தவிக்கும் நிலையில் உள்ளவர்களுக்கு யோகா போன்ற பயிற்சிகளை செய்வது நன்மையைத் தரும். உங்களுடைய தாய்மாமனிடம் கருத்து மோதல்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகமான உழைப்பினை கொடுக்க வேண்டி வரலாம். வேலையில் கவனமுடன் செல்வது நல்லது. ஓட்டுனர்கள், இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகளில் வேலை செய்வோருக்கு மிக நல்ல காலகட்டமிது. உங்களது திறமையினை நிர்வாகம் சரியாக பயன்படுத்திக் கொள்ளும். உங்கள் பணி நிரந்தமாகும். மேல் அதிகாரிகள் மற்றும் உடன் பணி செய்வோரிடம் வீணான வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். ஆகவே எல்லோரையும் அனுசரித்துச் செல்லவும். உங்களைப் பற்றி நீங்களே தாழ்வான எண்ணம் கொண்டிருந்தால் அதனை மாற்றிக் கொள்ளவும். மற்றவர்களிடம் கடனோ அல்லது பொருளோ ஏதேனும் வாங்கியிருந்தால் அதனை உடனடியாக பைசல் செய்வதற்குண்டான வழிமுறைகளைப் பின்பற்றவும்.  புதியதாக வாகனங்கள் ஏதேனும் வாங்கும் எண்ணமிருந்தால் நன்கு ஆராய்ந்தும், ஆலோசனைகள் செய்தும் வாங்குவது நல்லது. மின்னணு மற்றும் மருத்துவ சம்பந்தமான பொருட்களை விற்பவர்கள் நல்ல லாபம் பெறலாம். முதலீடு இல்லாத புதிய தொழில் தொடங்குவதற்கும் உங்களுக்கு நண்பர்கள் உதவி செய்வார்கள். பண விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கை தேவை.  தங்களது அலுவலக கணக்கு வழக்குகளை மிகச்சரியாக கையாளுதல் நல்லது. வாட்டர் சப்ளை, ஐஸ்கிரீம் போன்ற பொருட்களை விற்பனை செய்தால் நல்ல லாபம் பார்க்கலாம். பங்கு மார்க்கெட்டில் முதலீடு செய்வதற்கு முன் தகுந்த ஆலோசனைகள் பெறுவது அவசியமாகிறது. உங்களின் சேமிப்புகளில் கை வைக்க வேண்டி வரலாம். கவனம் தேவை. எனவே அதை முடிந்த வரை தவிர்க்கவும். விவசாயிகள் சிறப்புடன் இருப்பார்கள். நெல் கோதுமை போன்ற பயிர்கள் லாபம் தரும். விவசாயத்திற்குத் தேவையான புதிய கருவிகளை வாங்குவதற்கு அரசின் மானியம் உங்களுக்குக் கிடைக்கும். அதிக செலவைத் தரும் பயிர்களைப் பயிரிடும் முன் தகுந்த அதிகாரிகளிடம் ஆலோசனைகள் பெறவும். கால்நடைகள் மூலம் அதிக வருமானம் கிடைக்கப் பெறுவீர்கள். கணவன் மனைவி இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கூடுதல் சுமைகள் வந்து சேரும். வேலையில் எரிச்சல் மற்றும் சோம்பேறித்தனத்தை முற்றிலும் விடுவது நல்லது. உங்கள் உடல்நலனில் அக்கறை செலுத்துவது நல்லது. குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் உடல்நலனில் கவனமும் கடின வேலைகளைத் தவிர்த்தலும் வேண்டும். சிலருக்கு குழந்தைகளால் அவமானம் ஏற்படலாம். பொறியியல், தத்துவம், சமையற்கலை, திரைப்படம் சம்பந்தமாகப் படிப்போருக்கு சிறப்பான பலன்கள் கிட்டும். மேற்படிப்பு சம்பந்தமாக வெளியூர் சென்று தங்கி பயிலும் வாய்ப்பு கிட்டும். பெரியவர்களின் ஆசிர்வாதம் பரிபூரணமாகக் கிடைக்கும். அவர்களின் ஆசீர்வாதங்களை உதாசீனப்படுத்த வேண்டாம். கவனமுடன் முயற்சிகள் எடுத்துப் படித்தால் வெற்றி உங்களை வந்தடையும். உங்களின் முன்னேற்றத்திற்கு நண்பர்கள் இருப்பார்கள். கலைத்துறையை சார்ந்தவர்களுக்கு தங்களது முழுத்திறமைகளையும் காட்டினால் மட்டுமே வாய்ப்புகள் அதிகமாகக் கிடைக்கும். அடிக்கடி வெளியூர் பயணங்கள் வந்து சேரும். ஒரே நேரத்தில் பலவிதமான வாய்ப்புகள் வந்து சேரும்போது தகுந்த ஆலோசனைகளை மேற்கொண்டு முடிவுகளை எடுப்பது நல்லது. பத்திரிகை தொழில் சார்ந்தவர்களுக்கு நற்பெயர் கிடைக்கும். பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு செல்வாக்கில் சிறிது சரிவு ஏற்படலாம். அதே வேளையில் பதவியும், பொறுப்பும் வந்து சேரும். பணம் வந்த வழி தெரியாமல் செலவழியும். வீண் அலைச்சலும், வாக்குவாதமும் அவ்வப்போது வாட்டி வதைக்கும். குழந்தைகள் மற்றும் தம்பதிகளின் உடல் நலனில் அக்கறை காட்டவும். எலும்பு சம்பந்தப்பட்ட ரோகம் வந்தால் உடனடியாக மருத்துவரிடம் ஆலோசனைகள் பெறுவது நல்லது.


பரிகாரம்: செவ்வாய்கிழமை தோறும் அருகிலிருக்கும் முருகன் கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றவும். சனிக்கிழமைதோறும் வினாயகர் கோவிலுக்கு சென்று அபிஷேகம் செய்யவும். நவக்கிரகங்களில் அவர்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் போது அர்ச்சனை செய்யுங்கள். காக்கைக்கு சாதமும், குதிரைக்கு கொள்ளும் கொடுக்கலாம்.

சொல்ல வேண்டிய மந்திரம் (ப)
: விநாயகர் அகவலும், கந்தர் ஷஷ்டி கவசமும் பாராயணம் செய்யவும்.

இனி லக்ன ரீதியான பலன்கள்:

லக்னம்
ராசி
பலன்
சொல்ல வேண்டிய மந்திரம்
மேஷம்
மேஷம்
50%
செவ்வாய்தோறும் கந்த ஷஷ்டி கவசம் பாராயணம்
ரிஷபம்
மேஷம்
60%
வெள்ளிதோறும் ஸ்ரீஸூக்தம் பாராயணம் அல்லது அபிராமி அந்தாதி பாராயணம்
மிதுனம்
மேஷம்
60%
புதன்தோறும் ஸ்ரீவிஷ்ணு ஸகஸ்ரநாம பாராயணம் அல்லது திருப்பல்லாண்டு பாராயணம்
கடகம்
மேஷம்
55%
திங்கள்தோறும் ஸ்ரீலலிதா த்ரிசதி பாராயணம் அல்லது திருவிளக்கு போற்றி பாராயணம்
சிம்மம்
மேஷம்
60%
ஞாயிறுதோறும் ஸ்ரீஆதித்யஹ்ருதயம் பாராயணம் அல்லது ஸ்ரீவிநாயகர் அகவல் பாராயணம்
கன்னி
மேஷம்
50%
புதன்தோறும் ஸ்ரீபுருஷசூக்தம் சொல்வது அல்லது திருப்பாவை சொல்வது
துலாம்
மேஷம்
50%
வெள்ளிதோறும் ஸ்ரீசியாமளா தண்டகம் சொல்வது அல்லது அபிராமி அந்தாதி பாராயணம்
விருச்சிகம்
மேஷம்
60%
செவ்வாய்தோறும் கந்த ஷஷ்டி கவசம் சொல்வது
தனுசு
மேஷம்
60%
வியாழன்தோறும் ஸ்ரீதக்ஷிணாமூர்த்தி அஷ்டகம் பாராயணம் அல்லது குரு ஸ்லோகம் சொல்வது
மகரம்
மேஷம்
65%
சனிதோறும் ராமநாமம் சொல்வது
கும்பம்
மேஷம்
65%
சனிதோறும் பெருமாள் சம்பந்தப்பட்ட பாராயணம்
மீனம்
மேஷம்
50%
சனிதோறும் குருபகவான் சம்பந்தப்பட்ட பாராயணம்

 குறிப்பு:

[1] மேலே உள்ள டேபிளை எப்படி பயன்படுத்துவது?
நீங்கள் மேஷம் இராசியில் பிறந்து லக்னம் தெரிந்ததென்றால் அதற்குள்ள பலனைத் தெரிந்து கொள்ளவும். அதற்குள்ள பரிகாரத்தை தெரிந்து கொள்ளவும். உதாரணமாக, நீங்கள் மேஷம் இராசியில் பிறந்து கும்பம் லக்னத்தில் பிறந்தவரென்றால் உங்களுக்கு 65% சதவிகிதம் நல்ல பலன்கள் கிடைக்கும். மேலும் நீங்கள் செய்ய வேண்டிய பரிகாரம்: சனிதோறும் பெருமாள் சம்பந்தப்பட்ட பாராயணம். எனக்கு லக்னமேத் தெரியாது ஆனால் மேஷம் இராசி என்பவர்கள் விநாயகர் அகவலும், கந்தர் ஷஷ்டி கவசமும் பாராயணம் செய்யவும்.

[2] இங்கு கொடுக்கப்பட்டிருப்பது பொதுபலன்களே. இவை ஜாதகத்திற்கு ஜாதகம் திசை ரீதியாக மாறலாம்.நக்ஷத்திர வாரியாக சில பாய்ண்ட்ஸ்:
* நக்ஷத்திரங்கள்
பலன்கள் அசுபதி அபபரணி கிருத்திகா - 1ம் பாதம்
இராசி மேஷம் மேஷம் மேஷம்
இராசியாதிபதி செவ்வாய் செவ்வாய் செவ்வாய்
நக்ஷத்திர அதிபதி கேது சுக்ரன் சூரியன்
கணம் தேவகணம் மனுஷ்யகணம் இராக்ஷஸகணம்
நாடி பார்ஸுவ - வலது மத்ய ஸமான - இடது
மிருகம் ஆண் குதிரை யானை ஆடு
பக்ஷி இராஜாளி காக்கை மயில்
விருக்ஷம் எட்டி நெல்லி அத்திமரம்
இரஜ்ஜு பாத இரஜ்ஜு தொடை தொப்புள், வயிறு
வேதை நக்ஷத்ரம் கேட்டை அனுஷம் விசாகம்
அதிர்ஷ்டம் தரும் எண்கள் 1, 2, 3, 9 2, 7, 5, 9 1, 2, 3, 9
அதிர்ஷ்டம் தரும் திசைகள் கிழக்கு தெற்கு கிழக்கு
குறிப்பு: அதிர்ஷ்டம் தரும் எண்களும், திசைகளும் ஜாதகத்திற்கு ஜாதகம் மாறும். இங்கு கொடுக்கப்பட்டிருப்பது பொதுவானவையே.


ஜோதிடக் குறிப்பு:

காக்கைக்கு சாதம் வைக்கும் முறை:
[1] காலையில் குளித்து விட்டு தீபம் ஏற்றி முன்னோர்களை வணங்க வேண்டும். [பஞ்ச முக தீபமாக இருந்தால் நல்லது]
[2] பச்சரிசி சாதம் + நெல்லிவிதையளவு எள் + 2 ஸ்பூன் நல்லெண்ணெய் + சிறு துண்டளவு வெல்லம் கலந்து வைக்கவும்.

குறிப்பு: சில நாடுகளில், சில இடங்களில் காக்கை இருப்பதில்லை, அங்கு நீங்கள் முன்னோர்களை வணங்கியபின் ஆற்றிலோ, குளத்திலோ, கிணற்றிலோ கரைத்து விடலாம்.No comments: