Saturday, November 3, 2012

இந்த நாள் இப்படித்தான் - 03.11.2012

இந்த நாள் இப்படித்தான் - 03.11.2012

நந்தன வருஷம்
ஐப்பசி மாஸம் 18ம் தேதி - நவம்பர் 03 2012
தக்ஷிணாயனம்
சரத்ரிது
சனிக்கிழமை
திதி: கிருஷ்ணபக்ஷம்(தேய்பிறை) சதுர்த்தி காலை 9.41 வரை பின் பஞ்சமி
நக்ஷத்ரம்: மிருகசீரிஷம் மதியம் 1.18 வரை பின் திருவாதிரை
யோகம்: சிவம் 32.10 வரை
கரணம்: பாலவம் நாழிகை 8.37
சூரிய உதயம்: காலை மணி 06.10
அஸ்தமனம்: மாலை மணி 06.09
அஹசு: நாழிகை 29.23
தியாஜ்ஜியம்: நாழிகை 19.47
லக்ன இருப்பு: துலாம் நாழிகை 02.10
இராகு காலம்: காலை 9.10 முதல் 10.40 வரை
எமகண்டம்: மதியம் 1.40 முதல் 3.10 வரை
குளிகை: காலை 6.10 முதல் 7.40 வரை
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்
நக்ஷத்திர யோகம்: சித்தயோகம்
சந்திராஷ்டமம்: அனுஷம், கேட்டை


குறிப்பு:

[1] நல்லநேரம்: காலை 7.40 - 9.10, மாலை 4.40 - 6.10
[2] சமநோக்கு நாள்
[3] திருநெல்வேலி ஸ்ரீகாந்திமதியம்பாள் காலை ரிஷப வாகனத்திலும், மாலை இந்திர வாகனத்திலும் திருவீதி உலா.
[4] வீரவநல்லூர் ஸ்ரீஅம்பாள் புறப்பாடு கண்டருளல்.
[5] இன்று கருட தரிசனம் செய்தால் மிகுந்த நன்மை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும்.



-------------------------------------------------------------------------

கிரக பாதசாரம்

சூரியன் - ஸ்வாதி 3
சந்திரன் - மிதுனம்
செவ்வாய் - கேட்டை 4
புதன் - விசாகம் 1
குரு(வியாழன்) - ரோகினி 4(வக்ர கதியில்)
சுக்ரன் - ஹஸ்தம் 1
சனி - சித்திரை 4
ராகு - விசாகம் 4
கேது - கிருத்திகை 2


பஞ்சாங்கம் கணிப்பு:  பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

-------------------------------------------------------------------------

மேஷம்: மிகவும் எச்சரிக்கையுடன் படித்தால் சாதனைகள் புரிய வாய்ப்புண்டு். பிள்ளைகளின் வளப்பின் கவனம் தேவை. உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மாத்திரை செலவினங்கள் குறையும். கணவன் மனைவி கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும்.

ரிஷபம்: கவனம் தேவை. வீண் வாக்குவாதம் வேண்டாம். நண்பர்கள் மூலம் அனுகூலம் ஏற்படும். தேவையற்ற வீண் விவாதங்களில் ஏடுபட வேண்டாம். யாரைப் பற்றியும் விமர்சனம் செய்ய வேண்டாம். தந்தையார் உடல்நிலை முன்னேற்றம் ஏற்படும்.

மிதுனம்:  தந்தையுடன் கருத்து பரிமாற்றம் செய்யும் போது கவனம் தேவை. வேலை செய்யும் இடங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். பண விஷயங்களில் தேர்ந்தெடுத்து முதலீடு செய்யவும். தூங்கப் போகும்முன் குலதெய்வத்தை வணங்கி விட்டு படுக்க செல்லவும். தேவையற்ற வீண் குழப்பங்கள், கற்பனைகள் வேண்டாம்.

கடகம்: நல்ல விஷயங்களை தள்ளிப் போட வேண்டாம். வீடு, மனை, ஆடை, ஆபரணங்கள் போனற விஷயங்களில் அவசரம் வேண்டாம். எதையும் ஒரு முறைக்கு இருமுறை யோசித்து முடிவெடுக்கவும். தாயார் மற்றும் தாய்வழி உறவினர்களுடன் மனக்கசப்பு ஏற்பட வாய்ப்புண்டு.


சிம்மம்:பிள்ளைகள் படிப்பில் மிகுந்த கவனம் தேவை. குழந்தைகள் இல்லாதவர்களுக்கு சந்தாண பாக்கியம் கிட்டும். அவர்களை கடிந்து கொள்ள வேண்டாம். எடுத்து சொல்லுங்கள். அவர்களை அவசரப்படுத்த வேண்டாம். சிறிய நோய் என்றாலும் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. மருத்துவம் சார்ந்த செலவுகள் காத்திருக்கின்றன, கவனம் தேவை.

கன்னி: கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். இருந்தாலும் விட்டு கொடுத்து போவது நல்லது. திருமணத்தடை நீங்கி திருமணம் இனிதே நடைபெறும். நண்பர்கள் உதவிகள் செய்வர். தந்தையார் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். வேலைசார்ந்த விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும்.

துலாம்: பணப்புழக்கம் கடந்த காலங்களை விட அதிகம் இருக்கும்.  வெளிநாட்டு பயணங்கள் கிடைக்க கூடும். வேலை இடமாற்றம், பதவிஉயர்வு ஏற்படும். சம்பள உயர்வும் கிடைக்கும். லாபகரமான முதலீடுகள் செய்வீர்கள்.

விருச்சிகம்: உங்கள் வாக்கு வன்மை கூடும். உங்கள் பேச்சிற்கு மதிப்பு கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பர். எந்த காரியத்தையும் செய்யும் முன் ஒரு முறைக்கு இரு முறை யோசித்து செயல்படவும். தைரியத்தை இழக்காதீர்கள்.


தனுசு: எல்லாம் நல்லபடியாக நடக்கும். வீடு, வாகனம், ஆபரணங்கள் வாங்கும் போது கவனம் தேவை. தாயார், தாய் வழி உறவினர்களுடன் தேவைப்படும்போது மட்டும் பேசுங்கள். நிகழ்காலத்தில் இருக்க பழகிக் கொள்ளுங்கள். மாணவமணிகள் மிகுந்த எச்சரிகையுடன் படிக்க வேண்டும். படிப்பில் மந்த நிலை ஏற்படலாம். 

மகரம்: தங்களது முழு திறனையும் பயன்படுத்தினால் வெற்றி நிச்சயம். குழந்தைகள் நலன் சிறக்கும். பிள்ளைகள் நன்றாக படிப்பர். அவ்வப்போது நோய்கள் வந்து மருத்துவம் பார்த்து சரியாகும். கணவன் - மனைவியிடையே கருத்து மோதல்கள் ஏற்பட வாய்ப்புண்டு. பேச்சிலும் செயலிலும் கவனம் தேவை.     

கும்பம்: வேலை செய்யும் இடத்தினில் மேலதிகாரிளுடன் வாக்குவாதம் ஏற்படலாம். உங்களுக்கு கீழ் பணிபுரிபவர்களிடம் மென்மையை கடைபிடியுங்கள். நல்ல பெயர் கிடைக்கும். பணி மாற்றம் கிடைக்கும். புதிய இடத்தில் பணிச்சுமை ஏற்படலாம். புன்முறுவலுடன் ஏற்றுக் கொண்டு பணியினை செவ்வனே செய்யுங்கள்.
     
மீனம்: உறவினர்களுடன் சின்ன கருத்து மோதல்கள் வரலாம்.  லாபகரமான தொழில்களில் முதலீடு செய்யுங்கள். எதிர்காலத்திற்கு சேமித்து வைக்கும் நேரமிது. வீண் ஆடம்பர செலவுகள், தேவையற்ற வீண் பேச்சுகள் ஆகியவற்றை குறையுங்கள்.


---------------------------------------------------------------------------

No comments: