Thursday, November 8, 2012

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருநாள் - அப்டேட் பாகம் ஒன்று

உலகப் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா, வரும் 18ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தீபத் திருநாளன்று 20 லட்சம் பக்தர்கள் வரை கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் நவீன முறையில் கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


கடந்த 2010ம் ஆண்டு கார்த்திகை தீபத் திருநாள் உற்சவத்தின் போது மலையிலிந்ருந்து எடுக்கப்பட்ட நினைத்தாலே முக்தி தரும் அண்ணாமலை
அண்ணாமலையார் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் பவுர்ணமியை ஒட்டி தீபத்திருநாள் 10 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டிற்கான தீபத்திருவிழா கொடியேற்றம் வரும் 18ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்பனும் அம்மையும்



27ல் மகாதீபம்
விழாவின் 7ம் நாளான 23ம் தேதி வெள்ளித் தேரோட்டமும், 24ம் தேதி மகா தேரோட்டமும் நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து, 27ம் தேதி அதிகாலை பரணி தீபமும், மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படும். தீபத்திருவிழாவில் சுமார் 20 லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கொஞ்சம் பழைய படம்


பாதுகாப்பில் மாற்றம்
இந்த ஆண்டு மகா தீபத்தன்று அண்ணாமலையார் கோயிலுக்குள் பக்தர்களை அனுமதிக்கும் வழக்கமான நடைமுறைகள் மாற்றப்பட்டுள்ளன. எனவே, பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதன்படி, 12 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். மேலும், தீபம் ஏற்றும் மலையில் அவசர கால மீட்பு மற்றும் கண்காணிப்பு பணியில் கமாண்டோ வீரர்கள் ஈடுபடுகின்றனர்.

அருணாசல மலையிருந்து எடுக்கப்பட்ட அண்ணாமலையாரின் கோவில்


ஆளில்லா விமானங்கள் கண்காணிக்கும்
கடந்த ஆண்டு போக்குவரத்து மற்றும் கூட்ட நெரிசலை முறைப்படுத்த ராட்சத பலூன் மூலம் கண்காணிப்பு கேமரா பொருத்தி போலீசார் கண்காணித்தனர். ஆனாலும் அனைத்து பகுதிகளையும் ஒருங்கிணைத்து கண்காணிக்க முடியவில்லை. இந்த ஆண்டு அதற்கு மாற்றாக ஆளில்லாத குட்டி விமானம் மூலம் கண்காணிப்பு பணியை மேற்கொள்ள போலீசார் திட்டமிட்டுள்ளனர். இந்த விமானத்தில் உள்ள நவீன தொழில் நுட்ப வசதிகள் மூலம் கூட்ட நெரிசல், போக்குவரத்து சிக்கல் ஆகியவை கேமரா மூலம் படம் பிடிக்கப்பட்டு கட்டுபாட்டு அறைக்கு தெரிவிக்கப்படும். திருவிழா நெருங்குவதை ஒட்டி இந்த விமானத்தின் மூலம் முன்னோட்டம் பார்க்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

No comments: