நாளை முருகன் கோவிலில் சூரசம்ஹாரம்
திருச்செந்தூர் முருகன் கோயில் கந்தசஷ்டியின் முக்கிய நிகழ்ச்சியான, சூரசம்ஹாரம், நாளை மாலை நடக்கிறது. இங்கு, கந்தசஷ்டி திருவிழா, நவ.,13ம்தேதி யாகசாலை பூஜையுடன் துவங்கியது. விழாநாட்களில், தினமும் காலை,மாலை யாகசாலை பூஜை, தீபாராதனை, சுவாமி வீதியுலா நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான, சுவாமி, சூரனை சம்ஹாரம் செய்து, தீமை அழியும் உண்மையை உலகிற்கு உணர்த்தும், சூரசம்ஹாரம், ஆறாம் நாளான, நாளை மாலை, கோயில் கடற்கரையில் நடக்கிறது. இதில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர். நவ.,19ம்தேதி சுவாமி -அம்பாள் திருக்கல்யாணம் நடக்கிறது. ஏற்பாடுகளை, தக்கார் கோட்டை மணிகண்டன், இணைஆணையர் சுதர்சன் செய்துள்ளனர்.
மேலும் அனைத்து முருகன் கோவில்களிலும் சூரசம்ஹார விழா நடக்கிறது.
No comments:
Post a Comment