Saturday, October 20, 2012

இன்று - 21.10.2012

இன்று - 21.10.2012நந்தன வருஷம்
ஐப்பசி மாஸம் 05ம் தேதி - அக்டோபர் 21 2012
தக்ஷிணாயனம்
வருஷ ரிது
ஞாயிற்றுக்கிழமை
திதி: சுக்லபக்ஷம்(வளர்பிறை) ஸப்தமி இரவு 2.54 வரை பின் அஷ்டமி
நக்ஷத்ரம்: பூராடம் இரவு 11.50 வரை பின் உத்திராடம்
யோகம்: அதிகண்டம் 0.46 வரை பின் சுகர்மம் நாழிகை 53.06
கரணம்: கரஜி நாழிகை 24.44
சூரிய உதயம் 06.10
மாலை மணி 06.09
அஹசு: நாழிகை 29.23
லக்ன இருப்பு: துலாம் காலை மணி 07.40
இராகு காலம்: மாலை 4.40 முதல் 6.10 வரை
எமகண்டம்: மதியம் 12.10 முதல் 1.40 வரை
குளிகை: மாலை 3.10 முதல் 4.30 வரை
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்
நக்ஷத்திர யோகம்: சித்தயோகம்
சந்திராஷ்டமம்: ரோகினி, மிருகசீரிஷம்


குறிப்பு:

[1] நல்லநேரம்: காலை 7.40 - 9.10, மாலை 3.10 முதல் 4.30 வரை
[2] கீழ்நோக்கு நாள்
[3] நவராத்திரி பூஜை 6ம் நாள்
[4] உத்த்ரமாயூரம் ஸ்ரீவள்ளலார் சன்னிதியில் ஸ்ரீசந்திரசேகரர் புறப்பாடு
[5] திருவட்டாறு ஸ்ரீஆதிகேசவப் பெருமாள் திருவீதியுலா

-------------------------------------------------------------------------
கிரக பாதசாரம்

சூரியன் - சித்திரை 3
சந்திரன் - தனுசு
செவ்வாய் - கேட்டை 1
புதன் - விசாகம் 2
குரு(வியாழன்) - ரோகினி 4(வக்ர கதியில்)
சுக்ரன் - பூரம் 4
சனி - சித்திரை 4
ராகு - விசாகம் 4
கேது - கிருத்திகை 2

-------------------------------------------------------------------------

மேஷம்: உங்களின் முயற்சிகள் பல மடங்காக உயர்ந்து, அதற்கேற்ற வெற்றி கிடைக்கும். திட்டமிட்ட செயல்கள் துரிதமாக நடக்கும். குடும்பத்தில் அரங்கேறும் சுப நிகழ்ச்சிகளால் சந்தோஷம் அடைவீர்கள். உங்கள் பேச்சில் அவ்வப்போது ஆணவம் தலை தூக்க நேரலாம்.

ரிஷபம்: உங்களின் பேச்சாற்றல் அதிகரிக்கும்; தன்னம்பிக்கை உயரும். உங்களின் எண்ணங்களை அடுத்தவர்கள் நல்ல முறையில் புரிந்து கொள்வார்கள். புதிய பொறுப்புகள் தாமாகவே தேடி வரும்.

மிதுனம்: வருமானம் நல்ல முறையில் வந்தாலும், சிலருக்கு குறுக்கு வழியில் செல்ல மனம் நினைக்கும். எனவே மனதைக் கட்டுப்படுத்திக்கொண்டு நேர் வழியில் செல்லவும். இதன்மூலம் பல பிரச்சினைகளிலிருந்து தப்பிக்கலாம். உத்யோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

கடகம்: மனதில் புத்துணர்ச்சி அதிகரிக்கும். உங்கள் தோற்றத்தில் பொலிவு உண்டாகும். சிலர் நெடுநாட்களாக எதிர்பார்த்திருந்த பதவி உயர்வைப் பெறுவார்கள். மேலும் அலுவலக ரீதியான பயணங்களால் நன்மை உண்டாகும். உங்களின் வேலைகளைச் சரியாகத் திட்டமிட்டு செய்வீர்கள்.

சிம்மம்: மேலிடத்தின் நம்பிக்கைக்கு உரியவராக உயர்வீர்கள். வியாபாரிகள் பொறுமையுடன் செயல்பட்டு வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். வருமானம் சிறப்பாகவே தொடரும். அதேசமயம் கூட்டாளிகளிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும். புதிய முதலீடுகளில் நன்றாகச் சிந்தித்த பிறகே ஈடுபடவும்.

கன்னி: சிறிய நோய் என்றாலும் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. மருத்துவம் சார்ந்த செலவுகள் காத்திருக்கின்றன, கவனம் தேவை. கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். இருந்தாலும் விட்டு கொடுத்து
போவது நல்லது.


துலாம்: நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். நெருங்கியவர்களுக்கு அரிய உதவிகளைச் செய்து கௌரவம் அடைவீர்கள். உங்கள் சிந்தனையில் தெளிவு பிறக்கும். செயலில் வேகம் அதிகரிக்கும். புதிய நிலங்களை வாங்குவதற்குக் கடன் கிடைக்கும்.

விருச்சிகம்: எவரையும் பகைத்துக்கொள்ளாமல் உங்களின் வேலைகளில் மட்டுமே கவனமாக இருக்கவும். கலைத்துறையினருக்கு புகழும், பாராட்டும் கிடைப்பதில் சற்று தாமதம் ஏற்படும். சக கலைஞர்களிடம் உங்களின் ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம்.

தனுசு: குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். உற்றார், உறவினர்கள் உங்களை அணுகிப் பயன் பெறுவார்கள். சேமிப்பில் நல்ல கவனம் செலுத்துவீர்கள். ஆலயங்களுக்குச் சென்று ஆன்மீக பலம் பெறுவீர்கள்.

மகரம்: அனைவரிடமும் விட்டுக் கொடுத்து நடந்துகொண்டு குழப்பங்களைத் தவிர்க்கவும். உபரி நேரங்களில் மனதிற்குப் பிடித்த கேளிக்கைகளிலும், விளையாட்டுகளிலும் ஈடுபட்டு மகிழ்ச்சிக் கடலில் திளைப்பீர்கள். அதேநேரம் நண்பர்களிடம் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுங்கள். 

கும்பம்: கையிருப்புப் பொருட்களையும், பணத்தையும் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளவும். மேலும் குறுக்கு வழியில் எந்தச் செயலையும் செய்ய நினைக்க வேண்டாம். உறுதியான எண்ணத்துடன் பணியாற்றுவீர்கள். 


மீனம்: புதிய வீடு, வாகனம், ஆடை, ஆபரணங்களை வாங்குவீர்கள். நண்பர்களிடம் மன உறுதியுடன் தெளிவாகப் பேசுவீர்கள். உங்களைப் பற்றிப் புறம் பேசும் நபர்களை அடையாளம் கண்டு, அவர்களிடமிருந்து நாசூக்காக விலகி விடுவீர்கள்.


---------------------------------------------------------------------------

No comments: