Monday, October 15, 2012

இன்றைய ராசிபலன் - 16.10.2012

 இன்றைய ராசிபலன் - 16.10.2012


மேஷம்: நீண்ட நாட்களாக இருந்து வந்த குறைகள் ஒவ்வொன்றாக மாறும். ஒவ்வொரு நாளும் முன்னேற்றத்திற்குண்டான பாதைகளை வகுப்பீர்கள். அதே வேளையில் தெய்வ அனுகூலமும் உங்களுக்கு உண்டு. பொருளாதார வளம் சிறப்படையும். காரிய அனுகூலங்களும் உண்டு.

ரிஷபம்: முயற்சிகளில் தடை வந்தாலும் அதனை முறியடிக்கும் வல்லமை உங்களுக்கு உண்டு என்பதை உணருங்கள். தம்பதிகளிடையே அன்பு அதிகரிக்கும். சுபநிகழ்ச்சிகள் உடனே நிறைவேறாமல் போகலாம். எனினும் முயற்சிகளை தொடர்ந்து செய்வது நல்லது. உத்தியோகம் பார்ப்பவர்கள் தொடர்ந்து சற்று சிரத்தை எடுத்து உழைக்க வேண்டியதிருக்கும்.

மிதுனம்: உங்கள் உழைப்புக்குத் தகுந்த செல்வாக்கும் பணவரவும் கிடைக்கும். உடன்பணிபுரிவோரால் அனுசரனைகள் உண்டு. உங்கள் பொறுப்புகளை தட்டிக் கழிக்க வேண்டாம். எந்த வேலையையும் நேரம் தவறாமல் செய்யவும். தள்ளிப் போடுதலும் கூடாது. தொழில் செய்பவர்கள் பின் தங்கிய நிலையில் இருந்து மீண்டு முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைப்பர்.

கடகம்: பணவரவு அதிகரிக்கும். தோயோர் சேர்க்கையால் அவதிப்பட்டவர்கள் அவர்கள் பிடியில் இருந்து விடுபடுவர். புதிய தொழில் தொடங்குவத்ற்குண்டான ஆர்வம் பிறக்கும். குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்கலாம். அதேநேரம் சிலர் தொழில் நிமித்தமாக வெளியூர் அல்லது நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ள வேண்டி வரும்.

சிம்மம்: வழக்கில் வெற்றி அல்லது நீண்ட நாட்களாக இழுபறியில் உள்ள பிரச்சினை முடிவில் செல்வம், உரிமை, அதிகாரம் கிடைக்கப் பெறுவீர்கள். சுய ஜாதகத்தில் திசாபுக்திகள் அனுகூலமற்றுயிருப்பின் தவறான வழிமுறைகளில் செல்வம் கரையவும் வாய்ப்புண்டு. எச்சரிக்கையாக இருக்கவும்.

கன்னி: நல்ல பொருளாதாரம் வளமும் மேன்மையும் உண்டு. நன்மைகள் அதிகம் கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.  எடுத்த காரியம் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். மதிப்பு மரியாதை சிறப்படையும். செல்வாக்கு ஓங்கும். குடும்பத்தில் குதூகலம் ஏற்படும்.

துலாம்: தம்பதிகளிடையே அன்பு மேலோங்கும். மனைவி வழியில் அவ்வப்போது ஏற்பட்ட கருத்து வேறுபாடு, மோதல்கள் அடியோடு மறையும். பிரிந்த குடும்பம் ஒன்று சேரும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். நல்ல வரன் கிடைக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்தவர்களுக்கு சந்தாண பாக்கியம் கிட்டும்.

விருச்சிகம்: வீடு மனை விஷயத்தில் இருந்து வந்த சுணக்க நிலை மாறும். புதிய சொத்து வாங்கலாம்.தொழில் சிறக்கும். பிள்ளைகளால் பெருமை ஏற்படும். விருந்து விழாவிற்காக செலவுகள் செய்வீர்கள்.  வாகன பிராப்தி உண்டு. வீட்டுக்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கும் போது கவனம் தேவை.

தனுசு: உத்தியோகம் பார்ப்பவர்கள் உன்னத நிலையை அடையலாம். பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை இருக்கும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சக ஊழியர்களின் உதவி கிடைக்கும். சிலர் அதிகாரி அந்தஸ்துக்கு உயர்த்தப்படுவர். வேலையின்றி இருப்பவர்கள் மிகுந்த முயற்சிக்குப் பின் வேளை பெறுவர்.

மகரம்: வேலை நிமித்தமாக வெளியூர் சென்றவர்கள் மீண்டும் குடும்பத்திடம் ஒன்று சேர்வர். வியாபாரிகளுக்கு செய்து வரும் தொழிலில் சிறப்பான பலன்களைக் காணலாம். கடந்த காலத்தை விட கூடுதல் லாபம் கிடைத்தாலும் தொழிலை விரிவுபடுத்துவற்குண்டான வேலைகளை இப்போது ஆரம்பிக்கலாம்.

கும்பம்: தொழில் நிமித்தமாக சிலர் தூர தேச பயணம் மேற்கொள்ள வேண்டி வரலாம். இந்த வேளையில் யாரிடமும் சற்று கவனமுடன் பார்த்து பழக வேண்டியது அவசியமாகிறது. வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்க சரியான தருணமிது. 

மீனம்: கலைஞர்களுக்கு தங்குதடையின்றி புதிய வாய்ப்புகளைப் பெறலாம். புகழ் பாராட்டு வந்து சேரும். அரசியல்வாதிகளுக்கு நற்பெயர் எடுப்பத்ற்குண்டான சூழ்நிலைகள் உருவாகும். எதிர்பார்த்த பதவிகள் வந்து சேரும். மாணவர்கள் நல்ல நிலைக்கு உயர்த்தப்படுவீர்.
---------------------------------------------

நன்றி.
---
ஜோதிடம் எங்களது தொழிலல்ல...
எங்களது உயிர்.

அடியேன் தாஸன்
பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast)
நவதிருப்பதி ஸ்தலம் பெருங்குளம் கோவில், கிராமம் பரம்பரை ஜோதிடர்
இருப்பு:சென்னை.
ஜோதிடம்: http://kuppuastro.blogspot.com/

No comments: