Sunday, October 14, 2012

இன்றைய ராசிபலன் - 14.10.2012

இன்றைய ராசிபலன் - 14.10.2012

மேஷம்: உங்கள் ஆற்றல் பெருகும். மற்றையோரை அடக்கி ஆள்வீர்கள். அரசாங்கத்தாலும் முக்கிய மனிதர்களாலும் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். பிள்ளைகளால் ஓரிரு காரியங்கள் வெற்றிகரமாக நடைபெறும். தான தர்ம காரியங்களில் ஈடுபடுவீர்கள்.

ரிஷபம்: இரக்க சுபாவம் மேம்படும். தாயாராலும் தாய் வழி உறவினர்களாலும் காரியங்கள் தடையின்றி நடைபெறும். பிதுரார்ஜித சொத்துக்கள் கிடைக்க வேண்டிய தடைகள் நீங்கும். கலைத்துறையை சார்ந்தவர்கள் முன்னணிக்கு வருவார்கள். கணவன் மனைவி இடையே உறவுநிலை சீராக இருக்கும்.

மிதுனம்: புதிய ஆடை அணிகலன்கள் சேரும்.வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக் கொள்ள சந்தர்ப்பம் உண்டாகும். சிற்சில குழப்பங்கள் அவ்வப்போது வந்தாலும் குடும்பத்தில் மகிழ்ச்சிக்குக் குறைவிருக்காது. பேச்சில் நிதானம் தேவை. எதிலும் அவசரப்படாமல் நிதானமாக ஈடுபடுவது நல்லது.

கடகம்: அதிக சங்கடமான சம்பவங்கள் உண்டாகாமல் இருக்க குரு வழிபாடு முக்கியம். நண்பர்கள் உற்றார் உறவினர்களால் நலம் உண்டாகும். முக்கியமாக நீங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறும். வேற்று மொழி பேசுவோர், மதக்காரர்கள் மூலம் சங்கடம் ஏற்படலாம். விழிப்புடன் பழகுவது அவசியம்.

சிம்மம்: அதிர்ஷ்டம் வந்து சேரும். அலைச்சல்கள் அதிகரிக்கும். உடல்நலம் சீராக இருக்காது. கவனம் தேவை. சுபகாரியங்கள் நிகழ்வதற்க்கு உள்ள காரியங்கள் தங்கு தடையின்றி நடக்கும். கெட்டவர்களின் தொடர்பை விலக்கிக் கொண்டு நல்லவர்களின் நட்புறவை வளர்த்துக் கொள்ளுங்கள்.

கன்னி: பெருமைகள் கூடும். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். அதே வேளையில் அதற்குண்டான வழிமுறைகளுக்கு நண்பர்கள் உதவிகள் செய்வார்கள். உடன் பணி புரிவோரால் பிரச்சனைகள் ஏற்பட்டாலும் சுமூகமான முறையில் அது மறையும்.

துலாம்: இறைவழிபாட்டில் முழுமனதோடு ஈடுபடுவதன் மூலம் மனஅமைதி காணலாம். வியாபாரிகளுக்கு மாமூலான வளர்ச்சி இருக்கும்.  கணிதம், எழுத்து, பத்திரிகை, சிற்பம், ஓவியம் போன்ற துறைகளைச் சார்ந்தவர்களுக்கு திறமைகள் வெளிவந்து வளர்ச்சி ஏற்படும்.

விருச்சிகம்: கலைத்துறையினருக்கு உள்ள பிரச்சனைகள் விலகும். பெண்களுக்கு உற்சாகமான சூழ்நிலை உருவாகும். புதிய ஆடை அணிகலன்கள் வந்து சேரும். தம்பதிகளிடையே இருந்து வந்த சலசலப்புகள் ஓரளவு குறையும். பணநடமாட்டம் அதிகரிக்கும். குடும்பத்தில் குதூகலம் கூடும்.

தனுசு: பேச்சாற்றலாலும் கவர்ச்சி அம்சத்தாலும் ஓரிரு சாதனைகளை ஆற்றுவீர்கள். விருந்து, கேளிக்கை, உல்லாசங்களிலும் ஈடுபாடு கூடும். வடதிசை நலம் தரும். பெருமாள் கோவிலுக்கு சென்று வணங்குவது நல்லது.

மகரம்: உங்கள் திறன்கள் வெளிப்படும். எதிரிகள் அஞ்சி நடுங்குவார்கள். வழக்கு வியாஜ்ஜியங்களில் வெற்றி காணலாம். பிரச்சனைகள் சுலபமாக தீரும். விளையாட்டு விநோதங்களில் ஈடுபாடு பரிசுகளை வெல்லுவார்கள். பாராட்டுகளும் பெறுவார்கள். தெய்வப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.

கும்பம்: சட்டம், காவல், ராணுவம், மின்சாரம், நெருப்பு, கட்டிடக்கலை சம்பந்தப்பட்ட துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு வரவேற்பு கூடும். நல்லவர்களது தொடர்பால் நலம் பெறலாம். பொருள் வரவு கூடுமென்றாலும் எதிர்பாராத செலவுகள் இழப்புகள் ஆகியவை ஏற்படுமெனத் தெரிவதால் சேமிப்புகளை பத்திரப்படுத்துதல் நன்மையைத் தரும். 

மீனம்: தம்பதிகளிடையே சின்னச் சின்ன சச்சரவுகள் தென்பட்டாலும் உறவுநிலை சீராக இருக்கும். கலைஞர்கள், பெண்கள் அரசியல்வாதிகள், சமூக சேவை செய்வோருக்கு சில சங்கடங்கள் ஏற்பட்டாலும் நன்மைகள் நடக்கும். கேளிக்கை, உல்லாசங்களைத் குறைத்துக் கொள்வது நல்லது. தந்தையால் தொல்லைகள் தானாக விலகும்.

நன்றி.
---
ஜோதிடம் எங்களது தொழிலல்ல...
எங்களது உயிர்.

அடியேன் தாஸன்
பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast)
நவதிருப்பதி ஸ்தலம் பெருங்குளம் கோவில், கிராமம் பரம்பரை ஜோதிடர்
இருப்பு:சென்னை.
ஜோதிடம்: http://kuppuastro.blogspot.com/

No comments: