Friday, October 12, 2012

இன்றைய ராசிபலன் - 12.10.2012

இன்றைய ராசிபலன் - 12.10.2012

மேஷம்: சகோதர, சகோதரிகள் மற்றும் நண்பர்கள் மூலமாக நன்மை அடைவீர்கள். புதிய சொத்துக்களை வாங்குவீர்கள்.  ஆன்மீகப் பெரியோர்களைச் சந்தித்து அவர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். உங்கள் தோற்றத்தில் பொலிவு உண்டாகும். புத்திசாலிகளின் நட்பைப் பெற்று பலனடைவீர்கள்.

ரிஷபம்: எதிரிகளால் தொல்லைகள் ஏற்படாது. வீண் வழக்குகளிலிருந்து விடுபடுவீர்கள். அலைச்சல்களுடன் நடந்த செயல்கள் நல்லபடியாக முடிவடையும். வெளியில் கொடுத்திருந்த பணம் திரும்பவும் கை வந்து சேரும். தக்க சமயத்தில் உயர்ந்தவர்களின் நட்பைப் பெற்று கௌரவக் குறைவு ஏற்படாமல் காக்கப்படுவீர்கள்.

மிதுனம்: களவு போயிருந்த பொருட்கள் திரும்பவும் கிடைக்கும்.  உறுதியின்றிச் செய்த வேலைகளில் ஒரு பிடிப்பு ஏற்பட்டு அவை மளமளவென்று நடந்தேறும். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு தேடி வரும். வருமானம் சீராக இருக்கும். விரும்பிய இடமாற்றங்களும் கிடைக்கும்.

கடகம்: உடல் நலம் சீராகும். வருமானம் சிறப்பாக இருக்கும். உங்களின் பெருந்தன்மையை அனைவரும் பாராட்டுவார்கள். அதேநேரம் ஆடம்பரக் கேளிக்கைகளுக்காக செலவு செய்வதைக் குறைத்துக் கொள்ளவும். சில நேரங்களில் யோசிக்காமல் பேசி வம்பில் மாட்டிக் கொள்ள நேரலாம்.

சிம்மம்: நன்மை, தீமைகள் என இரண்டுமே ஏற்படும். அலுவலகத்தில் பொறுப்பும், சுமையும் அதிகரிக்கும். சகிப்புத் தன்மையுடன் உழைக்க வேண்டியிருக்கும். சோம்பலால் கடமையைப் புறக்கணித்தால் நஷ்டம் ஏற்படலாம். கலைத்துறையினருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களில் வரவேற்பு கிடைக்கும்.

கன்னி: குடும்ப பிரச்சனைகள் நல்ல முடிவுக்கு வரும். குறையாக நின்ற பணிகள் இனி சிக்கலின்றி நடைபெறும். கொடுக்க வாங்கல்கள் ஒழுங்காக இருக்கும். செலவுக்கேற்ற வரவுகள் வந்து சேரும். கைவிட்டுப் போன பொருட்கள் உங்களிடம் வந்து சேரும். அருளாளர்களின் ஆசிர்வாதங்கள் கிடைக்கும்.

துலாம்: பிள்ளைகள் உங்களுக்கு சந்தோஷத்தை கொடுப்பர். பிள்ளைகளுக்காகப் புதிய கடன்கள் வாங்க வேண்டிய சூழ்நிலைகள் வரலாம். அரசல் புரசலாக தங்களை கேலி பேசியவர்கள் கூட தங்களது தவறான போக்கை மாற்றிக் கொள்வர். பாகப் பிரிவினை விஷய பஞ்சாயத்துகள் பைசல் ஆகும்.

விருச்சிகம்: உழைத்த உழைப்பு வீண் போகாது. வாகன கஷ்டம் ஏற்படலாம். குடும்பத்தில் சுபகாரியங்கள் நிகழும். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு பணியில் உள்ள போது விபத்துகள் நேரிடலாம் கவனம் தேவை.
அரசியல்வாதிகளுக்கு வெற்றிக்கனியைப் பறிக்கும் காலகட்டமிது.

தனுசு: குடும்பத்தில் மிகவும் நல்ல நிகழ்ச்சிகள் நடைபெற்று சந்தோஷ தருணங்கள் அதிகரிக்கும். எதிர்பார்த்தபடி தனவரவுகள் வந்து கொண்டிருக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் அகன்று நிம்மதி பிறக்கும். தாய் மற்றும் தாய் வழி உறவினர்களால் மூலம் பாசம் அன்பு பெறுவீர்கள்.

மகரம்: பதவி உயர்வுக்குரிய அறிவிப்பு வந்து சேரும். சிலருக்கு வெளியூருக்கு மாற்றலும் வரும். உடனே கைகூடா விட்டாலும் அதற்கான விதையை இப்போது ஊன்றா வேண்டிய காலகட்டமிது. பெற்றோர் நலம் கவனிக்கப்பட வேண்டிய காலமிது.

கும்பம்: ஓரளவு சோதனைகளும் இருக்கும். முன்னோர்கள் வழிபாடு மிகவும் முக்கியம். நம்பிக்கையுடன் செய்யும் இந்த வழிபாட்டால் நேர்மறையான செயல்கள் அனைத்திலும் வெற்றிகள் கிட்டும். நிலம், வீடு, வாகனங்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளிலிருந்து உங்களை விடுவிப்பதற்கு வழிகள் வந்து சேரும். 

மீனம்:  ஏழைகள் மீது கருணை கொண்டு உதவிகள் செய்தால் இறைவனின் அருள் உங்களுக்கு கிட்டும். குரு வழிபாடும் நன்மையைத் தரும். ஆற்றலும் ஐஸ்வர்யமும் கூடும். துணிவும் தன்னம்பிக்கை உள்ளவர்கள் நீங்கள்.
இப்போதும் அதற்கு பங்கமில்லை.

No comments: