Sunday, October 14, 2012

அக்டோபர் 17 முதல் 31 வரைக்கும் உண்டான பொது ராசிபலன்கள்

அக்டோபர் 17 முதல் 31 வரைக்கும் உண்டான பொது ராசிபலன்கள்

இப் பலன்கள் கோசார ரீதியிலான பொதுப் பலன்களே என்பதனை வாசகர்கள் கவனத்திந் கொள்க.
மேஷம் : அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்.
உங்கள் ஆற்றல் பெருகும். மற்றையோரை அடக்கி ஆள்வீர்கள். அரசாங்கத்தாலும் முக்கிய மனிதர்களாலும் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். பிள்ளைகளால் ஓரிரு காரியங்கள் வெற்றிகரமாக நடைபெறும். தான தர்ம காரியங்களில் ஈடுபடுவீர்கள். இரக்க சுபாவம் மேம்படும். தாயாராலும் தாய் வழி உறவினர்களாலும் காரியங்கள் தடையின்றி நடைபெறும். பிதுரார்ஜித சொத்துக்கள் கிடைக்க வேண்டிய தடைகள் நீங்கும். கலைத்துறையை சார்ந்தவர்கள் முன்னணிக்கு வருவார்கள். கணவன் மனைவி இடையே உறவுநிலை சீராக இருக்கும். புதிய ஆடை அணிகலன்கள் சேரும்.வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக் கொள்ள சந்தர்ப்பம் உண்டாகும்.  சிற்சில குழப்பங்கள் அவ்வப்போது வந்தாலும் குடும்பத்தில் மகிழ்ச்சிக்குக் குறைவிருக்காது. பேச்சில் நிதானம் தேவை. எதிலும் அவசரப்படாமல் நிதானமாக ஈடுபடுவது நல்லது. அதிக சங்கடமான சம்பவங்கள் உண்டாகாமல் இருக்க குரு வழிபாடு முக்கியம். நண்பர்கள் உற்றார் உறவினர்களால் நலம் உண்டாகும். மாதப் பின்பகுதியில் முக்கியமாக நீங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறும். வேற்று மொழி பேசுவோர், மதக்காரர்கள் மூலம் சங்கடம் ஏற்படலாம். விழிப்புடன் பழகுவது அவசியம். கிழக்கும், தென்கிழக்கும் அனுகூலமான திசைகளாகும்.

பரிகாரம்: அம்மனை வழிபடுவது வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும்.
ரிஷபம்: கார்த்திகை 2, 3, 4ம் பாதம், ரோகினி, மிருகசீரிஷம் 1, 2ம் பாதம்
குரு ராசியில் உலவுவதால் சிறப்பாக இருக்கும். விசேடமான நன்மைகள் வந்து சேரும். கடுமையாக உழைத்தவர்களுக்கு இந்த நேரத்தில் அதிர்ஷ்டம் வந்து சேரும். அலைச்சல்கள் அதிகரிக்கும். உடல்நலம் சீராக இருக்காது. கவனம் தேவை. சுபகாரியங்கள் நிகழ்வதற்க்கு உள்ள காரியங்கள் தங்கு தடையின்றி நடக்கும். கெட்டவர்களின் தொடர்பை விலக்கிக் கொண்டு நல்லவர்களின் நட்புறவை வளர்த்துக் கொள்ளுங்கள். அவர்களின் ஆலோசனைப்படி நடப்பதன் மூலம் சங்கடங்களை குறைத்துக் கொள்ளலாம்.  தசா புக்தி பலன்கள் நன்றாக இருக்குமானால் கவலை கொள்ளத் தேவையில்லை. அப்படியில்லாதவர்கள் இறைவழிபாட்டில் முழுமனதோடு ஈடுபடுவதன் மூலம் மனஅமைதி காணலாம். வியாபாரிகளுக்கு மாமூலான வளர்ச்சி இருக்கும். கணிதம், எழுத்து, பத்திரிகை, சிற்பம், ஓவியம் போன்ற துறைகளைச் சார்ந்தவர்களுக்கு திறமைகள் வெளிவந்து வளர்ச்சி ஏற்படும். கலைத்துறையினருக்கு உள்ள பிரச்சனைகள் விலகும். பெண்களுக்கு உற்சாகமான சூழ்நிலை உருவாகும். புதிய ஆடை அணிகலன்கள் வந்து சேரும். தம்பதிகளிடையே இருந்து வந்த சலசலப்புகள் ஓரளவு குறையும். பணநடமாட்டம்
அதிகரிக்கும். குடும்பத்தில் குதூகலம் கூடும். பேச்சாற்றலாலும் கவர்ச்சி அம்சத்தாலும் ஓரிரு சாதனைகளை ஆற்றுவீர்கள். விருந்து, கேளிக்கை, உல்லாசங்களிலும் ஈடுபாடு கூடும். வடதிசை நலம் தரும்.

பரிகாரம்: பெருமாள் கோவிலுக்கு சென்று வணங்குவது.
மிதுனம்: மிருகசீரிஷம் 3, 4ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2 ,3ம் பாதம்
உங்கள் திறன்கள் வெளிப்படும். எதிரிகள் அஞ்சி நடுங்குவார்கள். வழக்கு வியாஜ்ஜியங்களில் வெற்றி காணலாம். பிரச்சனைகள் சுலபமாக தீரும். விளையாட்டு விநோதங்களில் ஈடுபாடு பரிசுகளை வெல்லுவார்கள். பாராட்டுகளும் பெறுவார்கள். தெய்வப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். சட்டம், காவல், ராணுவம், மின்சாரம், நெருப்பு, கட்டிடக்கலை சம்பந்தப்பட்ட துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு வரவேற்பு கூடும். நல்லவர்களது தொடர்பால் நலம் பெறலாம். பொருள் வரவு கூடுமென்றாலும் எதிர்பாராத செலவுகள் இழப்புகள் ஆகியவை ஏற்படுமெனத் தெரிவதால் சேமிப்புகளை பத்திரப்படுத்துதல் நன்மையைத் தரும். தம்பதிகளிடையே சின்னச் சின்ன சச்சரவுகள் தென்பட்டாலும் உறவுநிலை சீராக இருக்கும். கலைஞர்கள், பெண்கள் அரசியல்வாதிகள், சமூக சேவை செய்வோருக்கு சில சங்கடங்கள் ஏற்பட்டாலும் நன்மைகள் நடக்கும். கேளிக்கை, உல்லாசங்களைத் குறைத்துக் கொள்வது நல்லது. தந்தையால் தொல்லைகள் தானாக விலகும். கண்கள் உபத்திரவம் ஏற்படாமல் இருக்க கவனம் தேவை. உஷ்ணத்தை உடம்பில் தங்க விடக் கூடாது. பொதுவில் நீங்கள் உங்கள் கடமைகளைச் சரிவராத செய்தால் நன்மைகள் அதிகமாக கிடைக்கும். தெற்கு, வடமேற்கு திசைகள் நலம் தரும்.

பரிகாரம்: சக்தி வழிபாடு செய்தால் சங்கடம் குறையும்.
கடகம்: புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்
அறிவாற்றலும் செயல்திறமையும் கூடும். வியாபாரத்தில் அபிவிருத்தி காணலாம். உழைப்பு வீண் போகாது. பொதுநலப்பணியாளர்களுக்கு நற்பெயர் கிட்டும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புகள் ஆக்கம் லாபம் தரும். இரும்பு, எண்ணெய் வகையறாக்கள், தோல் பொருட்கள், ஏற்றுமதி இறக்குமதி இனங்கள் அதிக லாபம் தரும். ஸ்பெகுலேஷன் துறைகள் அளவோடு நன்மை தரும். கணவன் மனைவி இடையே உறவுநிலை சிறக்க விட்டுக் கொடுத்தல் அவசியமாகிறது. கூட்டுத்தொழிலில் அதிகம் அக்கறை தேவை.
கலைத்துறையினர், மாதர்கள் ஆகியோருக்கெல்லாம் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். வாழ்க்கைத்துணைவரின் நலனில் அக்கறை செலுத்த வேண்டி வரும். பொருளாதாரம் சமப்ந்தப்பட்ட துறைகளைச் சேர்ந்தவர்கள், உத்தியோகஸ்தர்கள் ஆகியோர் பொறுப்புடன் செயல்படுவது நல்லது. திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கு ஜாதகம் வலுவான நிலையில் இருக்க வேண்டும். திடீர்ச் செலவுகள் ஏற்படும். சிக்கன நடவடிக்கை அவசியம் தேவை. உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து அயராது பாடுபவர்கள் அதிகப் பயன் பெறுவார்கள். பயணத்தால் அனுகூலம் உண்டு. பாதுகாப்பு அவசியம். உடன்பிறந்தவர்களால் அதிக நன்மைகள் ஏற்படும். தென்மேற்கு, மேற்கு திசைகள் நலம் தரும்.

பரிகாரம்: விநாயகர் வழிபடுவதால் மனச்சலனம் அகலும்.
சிம்மம்: மகம், பூரம், உத்திரம் 1
உங்கள் பராக்கிரமம் வெளிப்படும். செயலில் வேகம் பிறக்கும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் நிறைவேறும். அரசியல்வாதிகள், அரசுப்பணியாளர்கள், நிர்வாகத் துறைகளைச் சேர்ந்தவர்கள், மருத்துவர்கள் ரசாயனத் துறைகளில் உள்ளவர்கள், விஞ்ஞானிகள் ஆகியோர் தங்கள் துறைகளில் வளர்ச்சி காண்பார்கள். நிலம் வீடு மனை வாகனம் போன்ற சொத்துக்கள் சேர்க்கையோ அல்லது அவற்றால் ஆதாயமோ கிடைக்கப் பெறுவார்கள். மாணவமணிகள் தங்கள் திறமைக்குரிய வளர்ச்சியைக் காண்பார்கள். கலைத்துறையினர் எண்ணம் ஈடேறும். சமுதாய நலப்பணியாளர்களுக்குப் பாராட்டுகள் குவியும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புகள் ஆக்கம் தரும். பணநடமாட்டம்
சீராக இருந்து வரும். இடமாற்றம், நிலைமாற்றம் ஆகியவை சிலருக்கு ஏற்படும். தம்பதிகளுக்குள் ஒவ்வொருவரால் அனுகூலம் ஏற்படும். எதிரிகள் அடங்கிப் போவார்கள். கூட்டுத் தொழிலில் ஈடுபாடு உள்ளவர்கள் அதிகம் லாபம் பெறுவார்கள். பிள்ளைகளால் சந்தோஷங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். அதிர்ஷ்ட வாய்ப்புகள் கைகூடி வரும். தாய் உடல் நலனில் கவனம் செலுத்தி வருவது அவசியமாகும். தெற்கு, தென்கிழக்கு திசைகள் அனுகூலம் தரும்.

பரிகாரம்: சிவனுக்கு இளநீர் அபிஷேகம் செய்வது நன்மையைத் தரும்.
கன்னி: உத்திரம் 2, 3 ,4, ஹஸ்தம், சித்திரை 1, 2
தைரியமாக பீடு நடை போட்டு உங்கள் வேலைகளை செய்வீர்கள்.  வெப்பம் சம்பந்தபட்ட உடல் உபாதைகள் ஏற்படலாம். கவனம் தேவை. தம்பதிகளிடையே ஒற்றுமை மேலோங்கும். எனினும் மனைவி வழியில் உள்ள உறவினர்களுடன் கருத்து பரிமாற்றங்கள் செய்யும் போது மிகுந்த எச்சரிக்கை தேவை. முயற்சிகளில் தடைகள் வந்தாலும் குரு பகவானின் வல்லமையால் அதையெல்லாம் முறியடித்து வெற்றிப் பாதையில் பயணீப்பீர்கள். தாய் வழி உறவினர்களுடன் சின்ன கருத்து மோதல்கள் வரலாம். நீங்கள் சொன்ன வாக்கைக் காப்பாற்ற சிறிது போராட வேண்டிவரலாம். மேலும் வீண் அலைச்சலும் ஏற்படலாம். தனியார் வேலையில் இருப்பவர்களுக்கு சிறு வாக்குவாதங்கள் வரலாம். வரவுக்கேற்ற செலவுகளும் வந்து சேரும். எனினும் வருங்காலத்திற்குத் தேவையான முதலீடுகளை அதற்குண்டான நபர்களிடம் ஆலோசனைகள் செய்து முதலீடுகள் செய்வீர்கள். பிரச்சனைகளை முறியடிக்கும் வல்லமை உங்களை வந்து சேரும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு மிகுந்த உகந்த காலகட்டமிது. கைக்கு எட்டிய அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி முன்னேற்றப் பாதையில் செல்வீர்கள். மாணவக் கண்மணிகளுக்கு படிப்பில் நிதானமும் கவனமும் தேவை.

பரிகாரம்: ஆஞ்சநேயர், துர்க்கையை வழிபடுவது நன்மையைத் தரும்.
துலாம்: சித்திரை 3, 4, ஸ்வாதி, விசாகம் 1, 2, 3
பொருளாதார வளம் மேம்படும். தொழில் உன்னத நிலையை அடையும். குடும்பத்தில் முன்னேற்றமும் சுபநிகழ்ச்சிகளும் நடைபெறும். பணவிரையமும் காரியத்தாமதமும் ஏற்படலாம். எனினும் எந்த பிரச்சனையையும் முறியடிக்கும் வல்லமை உங்களுக்கு வந்து சேரும். வீட்டிற்குத் தேவையான பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கும். பிள்ளைகள் வழியில் சிற்சில கசப்பூட்டும் சம்பவங்கள் நடந்தாலும் சில அனுகூலம் ஏற்படும். அவர்களால் முன்னேற்றம் ஏற்படும். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிக்கலாம். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு இது சிறப்பான காலகட்டமாகும். தொழிலில் நற்பெயர் கிடைக்கும். மேலதிகாரிகளின் அனுசரனை கிடைக்கும். அரசு சார்ந்த விஷயங்களில் பிரத்தியேகமான சலுகைகளை பெற முடியாமல் போகலாம். ஆனாலும் பதவி உயர்வும் சம்பள உயர்வும் தங்கு தடையின்றி கிடைக்கும். வியாபாரிகள் முன்னேற்றப் பாதையில் செல்ல முடியும். நல்ல லாபம் கிடைக்கும். புதிய தொழில் ஆரம்பிக்கக் கூடிய முயற்சிகள் ஆலோசனைகளில் ஈடுபடலாம். வரவு செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும்.

பரிகாரம்: ராகு, சனிக்கு விளக்கு ஏற்றி வழிபடுதல் நலம்.
விருச்சிகம்: விசாகம் 4, அனுஷம், கேட்டை
வாழ்க்கைவளம் முன்னேறும். சகோதர சகோதரிகளிடம் நெருக்கம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தினில் சிற்சில பிரச்சனைகள் வரலாம். உடன் வேலை செய்வோரின் ஆதரவால் அதனைச் சமாளிப்பீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் தங்கு தடையின்றி நடக்கும். தேவைகள் பூர்த்தியாகும். கணவன் மனைவி இடையே அன்பு நீடிக்கும். ஆனாலும் வீட்டில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் தலைதூக்கலாம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போவதால் நிலைமையைச் சமாளிக்கலாம். உறவினர் வகையிலும் கூட
ஒருவருடன் மனஸ்தாபம் உருவாகலாம். அதீத எதிர்பார்ப்புகள் வேண்டாம். சிலருக்கு தூரத்திலிருந்து விரும்பத்தகாத செய்திகள் வரலாம். தீவிர முயற்சிகளின் பேரில் சிலருக்கு சுபமான நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். உழைப்புக்கு ஏற்ற பிரதிபலன் கிடைக்காமல் இருந்தவர்களுக்கு தற்போதைய காலகட்டத்தில் நன்மை நடக்கும். சிலருக்கு இடமாற்றம் சம்பந்தப்பட்ட ஆலோசனைகள் நடக்கும். வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும். அலைச்சல் இருக்கும். தொழில் நிமித்தமாக சிலர் குடும்பத்தை விட்டு பிரிய
நேரிடலாம்.

பரிகாரம்: ஊனமுற்றவர்களுக்கு உதவுதல், கோபத்தை அகற்றுதல்
தனுசு: மூலம், பூராடம், உத்திராடம் 1
வெளியூர் பயணம் ஏற்படும். அதீத உழைப்பின் மூலமே அனைத்து நற்பலன்களையும் பெற முடியும். பல்வேறு முன்னேற்றங்களைப் பெறலாம். இருந்து வந்த தடைகள் அகலும். உங்கள் முயற்சிகளில் வெற்றியையும், பொருளாதார வளத்தையும் பதினொன்றாம் இடத்தில் இருக்கும் ராகு அள்ளித் தருவார். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் தேவைகள் பூர்த்தியாகும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் பெருகும். உறவினர்கள் வகையில் நிலவி வந்த பிரச்சனைகள் அனைத்தும் அடியோடு மறையும். சுபநிகழ்ச்சிகள்
நடக்கும். பெண்களால் அனுகூலம் கிடைக்கும். மிகவும் உதவிகரமாக இருப்பர். குழந்தை பாக்கியம் கிடைக்கும். வீடு மனை வாங்கும் யோகம் சிலருக்கு கூடி வரும். மாதக் கடைசியில் புதிய சொத்துக்கள் வாங்க நேரம் கைகூடி வரும். வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும். ஆனால் அதற்காக சிலர் கடன் வாங்க வேண்டி வரலாம். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு முன்னேற்றம் காண்பர். பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை தங்கு தடையின்றி கிடைக்கும். உடன் பணிபுரிபவர்கள் ஆதரவுடன் இருப்பர். வேலையின்றி இருப்பவர்கள் வேலை கிடைக்கப் பெறலாம்.

பரிகாரம்: திருமுருகனை வழிபடுவது சிறப்பான பலன்களைத் தரும்.
மகரம்: உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அவிட்டம் 1, 2
குழந்தை பாக்கியம் கிடைக்கும். கணவன் மனைவி இடையே அன்பு நீடிக்கும் என்றாலும் சிற்சில பிரச்சனைகள் வரத்தான் செய்யும். எனவே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போகவும். அதே போல் உறவினர் வகையிலும் அதிக நெருக்கம் வேண்டாம். சிலர் தொழில் நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிய நேரிடலாம். தூரத்தில் இருக்கும் உறவினரால் நனமை ஏற்படும். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு வேலைப் பளு அதிகரிக்கும். ஆனாலும் வருமானத்தில் எந்த குறையும் இருக்காது. உடன் பணிபுரிவோரிடம் அனுசரனையாக நடந்து கொள்ளவும். சிலர் எதிர்பாராத இடமாற்றத்தை சந்திக்கலாம். சொந்தத் தொழில் புரிவோர் சிறிது சிரத்தை எடுத்து உழைக்க வேண்டியிருக்கும். ஆனாலும் உழைப்புக்கேற்ற லாபம் கிடைக்கும்.  தொழில் நிமித்தமாக நீண்ட தூரம் பயணம் போக வேண்டி வரும். எதிரிகள் வகையில் அசட்டையாக இருத்தல் கூடாது.  கலைத்துறையினருக்கு முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். ஆனால் பொருளாதார ரீதியாக சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும்.

பரிகாரம்: அய்யனார் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்துவது.
கும்பம்: அவிட்டம் 3, 4, ஸதயம், பூரட்டாதி 1, 2, 3
பலவிதமான பிரச்சனைகளிலிருந்து விடுபடுவீர்கள். பின்தங்கிய நிலையிருப்பவர்கள் முன்னேற்றப் பாதையில் செல்வார்கள். தாயின் உடல்நலத்தில் கவனம் தேவை. உங்களுடைய உடல்நலத்தை பொறுத்த வரை உஷ்ணம் மற்றும் தோல் சம்பந்தப்பட்ட உபாதைகள் வரலாம். சிலருக்கு ஊர் விட்டு ஊர் செல்லும் நிலை ஏற்படலாம். நல்ல பணப்புழக்கம் இருக்கும். எடுத்த காரியம் அனுகூலத்தைக் கொடுக்கும். மதிப்பு மரியாதை சீராக இருக்கும். வீன்விவாதங்களைத் தவிர்க்கவும். குடும்பத்தில் தம்பதிகளிடையே இடையே இருந்து வந்த பிரச்சனைகள் சுமூகமாக மறையும். பிரிந்திருந்த குடும்பம் ஒன்று சேரும். முயற்சிகளின் பேரில் சுபகாரியங்கள் தங்கு தடையின்றி நடைபெறும். குழந்தை பாக்கியம் கிட்டும். வீட்டிற்குத் தேவையான அனைத்து வசதிகளும் கிடைக்கும். புதிய வீடு, மனை ஆகியவற்றை வாங்கும் போது கவனம் தேவை. ஒருமுறைக்கு இருமுறை விசாரித்து வாங்குவது நல்லது. நண்பர்கள், உறவினர்கள் அன்னியோன்னியமாக இருப்பர். உத்தியோகத்தில் இருப்பவ்ர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும்.

பரிகாரம்: திருமாலையும், மஹாலக்ஷிமியையும் வழிபடுவது நன்மையான பலன்களைத் தரும்.
மீனம்: பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி
மதிப்பு மரியாதை கூடி செல்வாக்கு அதிகரிக்கும். முயற்சிகளில் சிறுசிறு தடைகள் வரலாம். உங்களைப் பற்றி உங்கள் குடும்பத்தார் புரிந்து கொண்டு அனுசரனையாக நடந்து கொள்வர்.  தடைகளை முறியடித்து காரிய வெற்றி காணலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஆனந்தமும் பெருகும். ஏதேனும் ஒரு காரணத்தால் குடும்பத்தைவிட்டு பிரிந்து சென்றவர்கள் என்று சேருவார்கள். கணவன்-மனைவி இடையே அன்பும் பாசமும் பெருகும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் இனிதே நடக்கும். நல்ல வரனாகவும் கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிட்டும். உறவினர்கள், நண்பர்கள் மூலம் அனுகூலம் கிடைக்கும். உடல்நலனைப் பொறுத்த வரை சிறப்பாக இருக்கும். சளி மற்றும் மார்புத்தொல்லை வரலாம். கவனம் தேவை.  உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். கோரிக்கைகள், ஒப்பந்தங்கள் நிறைவேறும். உடன்பணி செய்வோர், மேலதிகாரிகள் ஆகியோரிடம் மிகுந்த நல்ல பெயர் ஏற்படும். சம்பள உயர்வு கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வேலை இல்லாமல் தவித்தவர்களுக்கு தகுந்த சம்பளத்துடன் சிறந்த வேலை கிடைக்கும். தொழில் செய்வோருக்கு கடந்த காலத்தை விட வளர்ச்சி விகிதம் அதிகரிக்கும். லாபம் கூடும்.

பரிகாரம்: லக்ஷ்மி பூஜை பலன்களை அள்ளித் தரும்.
நன்றி.
---
ஜோதிடம் எங்களது தொழிலல்ல...
எங்களது உயிர்.

அடியேன் தாஸன்
பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast)
நவதிருப்பதி ஸ்தலம் பெருங்குளம் கோவில், கிராமம் பரம்பரை ஜோதிடர்
இருப்பு:சென்னை.
ஜோதிடம்: http://kuppuastro.blogspot.com/

No comments: