Saturday, October 13, 2012

இன்றைய ராசிபலன் - 13.10.2012

இன்றைய ராசிபலன் - 13.10.2012

மேஷம்: நன்மைகளும் கெடுதல்களும் இணைந்து இருக்கும். உறவினரால் தொல்லைகள் ஏற்படலாம்.  உடல்நலம் பாதிக்கப்படலாம். தனியாரில் வேலை செய்பவர்களுக்கு சில சோதனைகள் ஏற்படலாம். உங்களுக்குண்டான உரிய கௌரவம் கிடைக்கும்.

ரிஷபம்: சுமாராக இருக்கும். பொருளாதார பலம் உண்டாகும். அன்றாடப் பணிகள் சிறப்பாக நடைபெறும். வித்தைகள் சம்பந்தப்பட்ட படிப்புகள் சார்ந்தவர்களுக்கு நல்ல நாளாக அமையும். குடும்பத்தில் சச்சரவு ஏற்பட வழிவகை செய்து கொடுக்க வேண்டாம். கொடுக்கல் வாங்கலில் சச்சரவு ஏற்படாமலிருப்பதற்கு கவனம் தேவை.

மிதுனம்: அந்தஸ்து சிறப்படையும். ஆதாயங்கள் கிடைக்கும். அரசாங்கம் சம்பந்தப்பட்ட காரியங்கள் துரிதமாகவும் சரியாகவும் நடைபெறும். உங்களால் ஆன உதவிகளை செய்து வந்தால் நல்ல பல பலன்களைப் பெறலாம். பொதுவாக நற்பலன்கள் கிடைக்கும்.

கடகம்: தொல்லைகள் குறையும். எந்த பிரச்சனையிலும் வெற்றி பெற வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வீர்கள். சில விஷயங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. பொருளாதார சுபிட்சம் சிறப்பாக இருக்கும்.

சிம்மம்: உதவிகள் கிடைக்கும், நண்பர்கள், உறவினர்கள் என பல வகைகளிலும் உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும்.  லாபம் கிடைக்கும். உங்களுக்குண்டான கௌரவம் உயரும். திருமணமாகாதவர்களுக்கு அதற்கான நேரம் கனிந்து வரும்.

கன்னி: பெருமைகள் கூடும். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். அதே வேளையில் அதற்குண்டான வழிமுறைகளுக்கு நண்பர்கள் உதவிகள் செய்வார்கள். உடன் பணி புரிவோரால் பிரச்சனைகள் ஏற்பட்டாலும் சுமூகமான முறையில் அது மறையும்.

துலாம்: வெற்றிகள் காண்பீர்கள். செய்த முயற்சிகளை மீண்டும் மீண்டும் செய்யுங்கள். உங்களுக்கான லாபங்கள் வந்து சேரும். குடும்பத்தினரால் ஏற்றம் காண்பீர்கள். மேலோரால் ஆசீர்வாதங்கள் பூரணமாகக் கிடைக்கும்.

விருச்சிகம்: நலம் விளையும். பெற்றோர்கள் நலத்தில் கவனம் தேவை. மக்கள் தொடர்புத் துறையில் இருக்கும் நபர்களுக்கு மீண்டும் மீண்டும் பிரச்சனைகள் தலைதூக்கலாம். கவனம் தேவை. மருத்துவத்துறையில் இருப்பவர்களுக்கு மிக நல்ல நாளாக அமையும்.

தனுசு: மகிழ்ச்சி கூடும். வில்லங்கங்கள் அனைத்தும் விலகும். சுறுசுறுப்புடன் இந்த நாளை எதிர்கொள்வீர்கள். மகிழ்ச்சியுடன் அனைத்து பிரச்சனைகளையும் எதிர்கொண்டு சமாளிப்பீர்கள். அந்தஸ்து சிறப்படையும்.

மகரம்: பணவரவு திருப்திகரமாக இருக்கும். வியாபாரிகள் புதிய வாடிக்கையாளர்களை அடையப் பெறுவார்கள். உங்களைவிட தனவந்தர்களாக இருக்கிறவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். வங்கியில் பணத்தை சேமிக்கலாம். பெற்றோர்களால் அனுகூலம் அடையப் பெறுவீர்கள்.

கும்பம்: மக்களால் மகிழ்ச்சி ஏற்படும். சினிமா நாட்டியம் நாடகம் சித்திரம் சிற்பம் முதலிய கலைத்துறை சம்பந்தப்பவர்களுக்கு அமோகமான வரவெற்பு ஏற்படும். பொன்னும் பொருளும் பரிசாகப் பெறுவார்கள். அரசியல்வாதிகளுக்கு வெற்றி தரும் காலமிது. உங்களை விட வலியவர்கள் உங்களுக்குத் தேவையானவற்றைச் செய்ய முன்வருவார்கள். 

மீனம்: சங்கடங்களை அனுபவிக்க வேண்டி இருக்கும். அலைச்சல் கடுமையாக இருக்கும். ஓரிரு பெரியவர்களை பகைத்துக் கொள்ள நேரிடலாம். சனிப்ரீதி செய்து குருவுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். சுமங்கலி பூஜை செய்வதும் நல்லதே. குடும்பத்தில் எந்தவிதமான சங்கடங்களும் இராது.

----------------------------

நன்றி.
---
ஜோதிடம் எங்களது தொழிலல்ல...
எங்களது உயிர்.

அடியேன் தாஸன்
பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast)
இருப்பு:சென்னை.
ஜோதிடம்: http://kuppuastro.blogspot.com/

No comments: