Wednesday, October 10, 2012

இன்றைய ராசிபலன் - 11.10.2012

இன்றைய ராசிபலன் - 11.10.2012



மேஷம்: எடுத்த காரியம் கைகூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். மதிப்பும் மரியாதையும் சிறப்பாக இருக்கும். உங்கள் மீதான அவப்பெயர் மறைந்து செல்வாக்கு மேம்படும்.  உங்கள் சொல்லுக்குப் பிறர் மரியாதை கொடுப்பர்.

ரிஷபம்: வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்ப பிரச்சனை கட்டுக்குள் அடங்கி இருக்கும். ஆனாலும் தேவையான இடங்களில் நீங்கள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. தேவைகள் ஒவ்வொன்றாகப் பூர்த்தியாகும். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருளை வாங்கலாம். நண்பர்கள் இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும்.

மிதுனம்: சுபநிகழ்ச்சிகளுக்கு இப்போது திட்டமிடலாம். வெகுநாட்களாக தடைப்பட்டு வந்த திருமணத்திற்கு உண்டான முயற்சிகளை இப்போது தொடங்கலாம். புதிய வீடு கட்டுவதற்கான வேலைகளையும் இப்போது தொடங்கலாம். வசதியான வீட்டிற்கு குடிபுகவும் வாய்ப்புண்டு. புதிய ஆபரணங்கள் வாங்கலாம்.

கடகம்:  வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். நகைக்கடை, துணிக்கடை வியாபாரிகள் நிறைய சம்பாதிப்பார்கள். ஒன்றிற்கு மேற்பட்ட துறைகளில் இருப்பவர்களுக்கும் பொன்னான காலமிது. கலைத்துறையினருக்கு நன்மைகள் கூடும் காலமிது. சினிமா, நாடகம், நாட்டியம் துறைகளை சார்ந்தவர்களுக்கு புதிய வாய்ப்புகள் வந்து சேரும்.

சிம்மம்: எந்த வேலையிலும் உங்கள் தனித்தன்மை வெளிப்படும். தடைகளை முறியடித்து காரிய வெற்றி பெறலாம். வீடு, நிலம் ஆகியவற்றில் இருந்து வந்த சுணக்க நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்படும். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மேலும் சில பாதிப்புகள் வரலாம். எனவே உணவு கட்டுப்பாடு அவசியமாகிறது. தந்தை, தந்தை வழி உறவினர்கள், பிள்ளைகளுடன் கருத்து மோதல்கள் வரலாம்.

கன்னி: நண்பர்களிடத்தில் மனக்கிலேசம் ஏற்படலாம். சுபச்செலவுகள் நிகழும். எதிர்காலத்திற்குத் தேவையான முறையான சேமிப்புகளுக்குண்டான ஏற்பாடுகளை செய்வீர்கள். எதிரிகளின் இன்னல்கள் இருக்கும் இடம் தெரியாமல் போகும். வரவுக்கு எந்த வித குறையும் இருக்காது. எதிர்பாராத அதிர்ஷ்டம் கிடைக்கும்.

துலாம்: உத்தியோகம் பார்ப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். உங்களுடைய கோரிக்கைகளை மேலதிகாரிகள் ஏற்று நடப்பார்கள். விரும்பிய இடத்திற்கு பணி இட மாறுதல் கிடைக்கும். பணத்தை விட அறிவை மூலதனமாக வைத்து செய்யப்படும் தொழில் முன்னேற்றம் ஏற்படும். அதே நேரம் சில புதிய வியாபார யுக்திகளை நீங்கள் பயன்படுத்த வேண்டி வரும்.

விருச்சிகம்: தீவிர முயற்சிகளினாலேயே அரசு சார்ந்த காரியங்கள் நடைபெறும். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு சீரான வாய்ப்புகள் வந்தாலும் அவ்வப்போது குழப்பமான மனநிலையும் இருக்கும். முன்யோசனையுடன் திட்டமிடல் அவசியம். மாணவ கண்மணிகளுக்கு கல்வியில் புதிய உற்சாகமும் நம்பிக்கையும் கிடைக்கும்.

தனுசு: தம்பதிகளிடையே ஒற்றுமை மேலோங்கும். எனினும் மனைவி வழியில் உள்ள உறவினர்களுடன் கருத்து பரிமாற்றங்கள் செய்யும் போது மிகுந்த எச்சரிக்கை தேவை. முயற்சிகளில் தடைகள் வந்தாலும் அதையெல்லாம் முறியடித்து வெற்றிப் பாதையில் பயணீப்பீர்கள். தாய் வழி உறவினர்களுடன் சின்ன கருத்து மோதல்கள் வரலாம்.

மகரம்: நீங்கள் சொன்ன வாக்கைக் காப்பாற்ற சிறிது போராட வேண்டி வரலாம். மேலும் வீண் அலைச்சலும் ஏற்படலாம். தேவையில்லாத பணவிரையம் ஆகலாம். காரிய அனுகூலம் கிடைக்கும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். தனியார் வேலையில் இருப்பவர்களுக்கு சிறு வாக்குவாதங்கள் வரலாம். வரவுக்கேற்ற செலவுகளும் வந்து சேரும்.

கும்பம்: வருங்காலத்திற்குத் தேவையான முதலீடுகளை அதற்குண்டான நபர்களிடம் ஆலோசனைகள் செய்து முதலீடுகள் செய்வீர்கள். பிரச்சனைகளை முறியடிக்கும் வல்லமை உங்களை வந்து சேரும். காரிய அனுகூலம் கிட்டும். செல்வாக்கில் முன்னேற்றம் ஏற்படும்.   கலைத்துறையில் இருப்பவர்களுக்கு மிகுந்த உகந்த காலகட்டமிது. கைக்கு எட்டிய அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி முன்னேற்றப் பாதையில் செல்வீர்கள்.  

மீனம்: முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். பொருளாதார வளம் மேம்படும். தொழில் உன்னத நிலையை அடையும். குடும்பத்தில் முன்னேற்றமும் சுபநிகழ்ச்சிகளும் நடைபெறும். பணவிரையமும் காரியத்தாமதமும் ஏற்படலாம். எனினும் எந்த பிரச்சனையையும் முறியடிக்கும் வல்லமை உங்களுக்கு வந்து சேரும். வீட்டிற்குத் தேவையான பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கும். பிள்ளைகள் வழியில் சிற்சில கசப்பூட்டும் ஏற்படும்.

No comments: