Wednesday, October 3, 2012

இன்றைய ராசிபலன் - 03.10.2012


பன்னிரு ராசிகளுக்குண்டான் இன்றைய பொது ராசிபலன்கள்


மேஷம்: உங்கள் புகழ்பாடும் சாதனைகளைச் செய்வதற்கு உகந்த நாள். சிறிது சோம்பலை மட்டும் விட்டு விட்டால் வெற்றிகளை அடையலாம். பழைய கடன், கொடுக்கல் வாங்கலில் உள்ள பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு முயற்சிகளை எடுப்பீர்கள். எதிலும் இடைத்தரகர் இல்லாமல் பார்த்துக் கொள்வது நன்மையைத் தரும்.

ரிஷபம்: வெளிவட்டார பழக்க வழக்கத்தில் உள்ள பெண்களிடம் மிகவும் ஜாக்கிரதையாக பழகுதல் அவசியம். இளைய சகோதர-சகோதரிகளிடம் தேவையற்ற இடங்களில் அறிவுரைகள் எதுவும் சொல்ல வேண்டாம். உங்களுக்கு அளிக்கப்படும் பொறுப்புகளை மனமுவந்து ஏற்றுக் கொள்ளுங்கள்.

மிதுனம்: பெரியவர்களின் மனதில் இடம் பிடிப்பீர்கள். அவர்களின் ஆசீர்வாதங்களும் உங்களுக்குக் கிடைக்கும். வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படுவதற்குண்டான படிகளை இன்று ஆரம்பிக்கலாம். வீட்டில் சுபநிகழ்ச்சிக்க்குண்டான தேவைகளை திட்டமிடுவீர்கள்.

கடகம்: கையில் இருக்கும் இருப்பை எதிர்கால தேவைக்கு திட்டமிட்டு சேமிக்க வேண்டிய முறைகளைக் கையாளுவீர்கள். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் வந்து மறையலாம். மூன்றாம் மனிதர் தலையீடு இல்லாமல் உங்கள் பிரச்ச்னைகளை நீங்களே பேசி தீர்த்துக் கொள்வது நல்லது.

சிம்மம்: அதிக உழைப்பில் மனதைச் செலுத்துவீர்கள். தேவையற்ற பிரச்ச்னைகளுக்கு முடிவு தானாகவே தேடி வரும். உடனிருப்பவர்கள் அனைவரும் அன்னியமானவர்கள் போல் தோற்றமளிப்பார்கள். வீண் கோபமும் ஆத்திரமும் வேண்டாம். அவற்றைத் தவிர்த்தல் நலம்.

கன்னி: செய்த தவறை மீண்டும் செய்யாலிருப்பதற்குண்டான வழிமுறைகளைப் பற்றி யோசனை செய்வீர்கள். பிறருக்கு உதவும் மனப்பாங்கு உங்களுக்கு ஏமாற்றத்தையும் கோபத்தையும் தரலாம். அதனால் உங்கள் விசாலமான மனதிற்கு சிறு சஞ்சலமும் ஏற்படலாம். 

துலாம்: உஷ்ண உபாதைகள் ஏதேனும் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. குடும்பத்தில் நடைபெற இருக்கும் சுபநிகழ்ச்சிகளில் தெய்வ நம்பிக்கையுடன் செயல்படுவதால் எல்லாமே எளிதாக நிறைவேறும். உங்கள் வேலையை சரியாக செய்தால் வெற்றி தானாகவே வந்து சேரும்.

விருச்சிகம்: உங்களுக்கு நல்ல காலம் பிறந்து விட்டது என்ற நம்பிக்கையுடன் இருக்க வேண்டிய நாள். உங்களுடைய மனஉறுதி வெற்றிப்பாதையில் உங்களை அழைத்துச் செல்லும். உங்களுடைய பிரச்சனைகளை மூன்றாம் நபரிடம் விவாதம் செய்ய வேண்டாம்.

தனுசு: வேலை செய்யும் இடத்தில் உள்ள ஒரு பிரச்சனைக்கு இன்று தீர்வு கிடைக்கும். தம்பதிகளிடத்தில் சிறு கருத்து வேறுபாடு தென்பட்டு மறையும். தெய்வம் துணை இருக்கிறது என்ற நம்பிக்கையுடன் பீடு நடை போடுவீர்கள். மனதிலும் தலையிலேயும் பாரத்தை சுமக்க வேண்டாம்.

மகரம்: எல்லோரும் நன்றாக இருக்க வேண்டி பிரயாசைப்படும் நாளாக இது இருக்கிறது. அடுத்தவர் மேல் உள்ள கோபத்தை வீட்டு மனிதர்களிடம் காட்டுவதை தவிர்த்தல் நலம். உடன் பணிபுரிவோர்களிடத்தில் அதீத உரிமைகளை எடுக்க வேண்டாம்.

கும்பம்: உங்கள் மேல் உண்மையாய் இருக்கிறவர்களின் உணர்வுகளை மதியுங்கள். கடுகு போன்று இருக்கும் பிரச்சனைகளை மலை போல் நினைத்து பயப்பட வேண்டியதில்லை.  மனதையும் உடலையும் பக்குவப்படுத்தி உழைப்பில் கவனத்தைச் செலுத்துங்கள்.

மீனம்: முன்னோர்களின் ஆசீர்வாதத்தால் உங்களுடைய அனைத்து நற்பலன்களும் சிறப்பாகக் கிடைக்கும். அரசிற்கு எதிரான எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடாமல் இருப்பது நல்லது. அது சார்ந்த மனிதர்களின் சகவாசத்தையும் ஒதுக்குவது நல்லது.

குறிப்பு:
 இங்கு கொடுக்கப்பட்டிருப்பதுபொதுவான பலன்களே. இவை திசாபுத்தி பலன்களை பொறுத்து மாறுதலடையலாம்.

No comments: