அனைவருக்கும் பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யரின் பணிவான வணக்கங்கள்.
கடந்த
சில நாட்களாக இருந்து வந்த வேலைப் பளுவினால் புரட்டாசி இரண்டாம்
சனிக்கிழமை பூஜை பற்றிய குறிப்புகளை தங்களுக்கு அறிவிக்காமைக்கு மன்னிக்க
வேண்டுகிறோம்.
29.09.2012 அன்று புரட்டாசி இரண்டாம் சனிக்கிழமை அன்று நமது ஸ்ரீஸாய் நவரத்ன விலாஸ் ஜோதிட நிலையம் சார்பாக நவதிருப்பதி ஸ்தலம் பெருங்குளம் கிராமத்தில் உள்ள ஸ்ரீகிருஷ்ண கான சபா பஜனை மடத்தில் வைத்து விஷ்ணு ஸகஸ்ர நாம பாராயணம் இனிதே நடந்து முடிந்தது. ஆனால் மின்வெட்டின் காரணமாக அங்கு நடந்த பூஜைகளை நம்மால் புகைப்படம் எடுக்க முடியவில்லை. மேலும் எங்களால் அந்த பூஜைக்கு செல்லவும் முடியவில்லை. அங்கிருந்த ஒரு நபருக்கு இமெயில் மூலமாக அறிவிக்கைகளைக் கொடுத்து பெயர்கள், நக்ஷத்திரங்கள் போன்ற விவராதிகளையும் அளித்து நடத்தி முடித்தோம்.
இந்த வரும் வாரம் - 3வது புரட்டாசி சனிக்கிழமை - ஸ்வாமியின் அருட்கடாக்ஷத்தால் செந்திலாண்டவனின் திருச்செந்தூர் பதியில் நமது அன்பர்களுக்காக பாராயணம் நடத்த ஏற்பாடுகள் செய்து வருகிறோம். மேலும் நாங்களும் இந்த வாரம் நமது அன்பர்களுக்காக நேரில் சென்று அந்த பூஜைகளை செய்வதற்காக செல்கிறோம். அங்குள்ள திருக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீரங்கநாதர் சன்னிதியிலும் அர்ச்சனைகள் செய்வதற்கு திருக்கோவில் நிர்வாகத்தினரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. பார்ப்போம் என்ன நடக்கிறதென்று? மேலும் பூஜையன்று நமது அன்பர்கள் சார்பாக திருச்செந்தூர் ஸ்தலத்தில் தானமும் கொடுப்பதற்கு ஏற்பாடுகள் செய்து வருகிறோம்.
இதே வேளையில் 108 திவ்யதேசங்களில் ஒன்றும் நவதிருப்பதி ஸ்தலத்தில் ஒன்றுமான பெருங்குளம் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீமாயக்கூத்தர் கோவிலிலும் அர்ச்சனைகள் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்து வருகிறோம்.
இவையெல்லாவற்றையும் தவிர நமது அன்பர்களுக்காக ஒரு மிகப்பெரிய விஷயமும் செய்யப் போகிறோம். அது என்ன புரட்டாசி முடியும் வரை காத்திருங்கள்.
நன்றி.
---
ஜோதிடம் எங்களது தொழிலல்ல...எங்களது உயிர்.
அடியேன் தாஸன்
பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast)
நவதிருப்பதி ஸ்தலம் பெருங்குளம் கோவில், கிராமம் பரம்பரை ஜோதிடர்
இருப்பு:சென்னை.
ஜோதிடம்: http://kuppuastro.blogspot.com/

No comments:
Post a Comment