Wednesday, October 10, 2012

இன்றைய ராசிபலன் - 10.10.2012

இன்றைய ராசிபலன் - 10.10.2012



மேஷம்: முயற்சிகளை தொடர்ந்து செய்வது நல்லது. உத்தியோகம் பார்ப்பவர்கள் தொடர்ந்து சற்று சிரத்தை எடுத்து உழைக்க வேண்டியதிருக்கும். உங்கள் உழைப்புக்குத் தகுந்த செல்வாக்கும் பணவரவும் கிடைக்கும். உடன்பணிபுரிவோரால் அனுசரனைகள் உண்டு. உங்கள் பொறுப்புகளை தட்டிக் கழிக்க வேண்டாம்.

ரிஷபம்: எந்த வேலையையும் நேரம் தவறாமல் செய்யவும். தள்ளிப் போடுதலும் கூடாது. தொழில் செய்பவர்கள் பின் தங்கிய நிலையில் இருந்து மீண்டு முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைப்பர். பணவரவு அதிகரிக்கும். தோயோர் சேர்க்கையால் அவதிப்பட்டவர்கள் அவர்கள் பிடியில் இருந்து விடுபடுவர். புதிய தொழில் தொடங்குவத்ற்குண்டான ஆர்வம் பிறக்கும்.

மிதுனம்: நீண்ட நாட்களாக இழுபறியில் உள்ள பிரச்சினை முடிவில் செல்வம், உரிமை, அதிகாரம் கிடைக்கப் பெறுவீர்கள். சுய ஜாதகத்தில் திசாபுக்திகள் அனுகூலமற்றுயிருப்பின் தவறான வழிமுறைகளில் செல்வம் கரையவும் வாய்ப்புண்டு. எச்சரிக்கையாக இருக்கவும். சகோதர சகோதரி வேலை நிமித்தம் வெளியூர் செல்ல வேண்டி வரலாம். அண்டை அயலாருடன் இருக்கும் மனக்கசப்புகள் நீங்கி உற்சாகம் பிறக்கும்.

கடகம்: நல்ல பொருளாதாரம் வளமும் மேன்மையும் உண்டு. நன்மைகள் அதிகம் கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.  எடுத்த காரியம் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். மதிப்பு மரியாதை சிறப்படையும். செல்வாக்கு ஓங்கும். குடும்பத்தில் குதூகலம் ஏற்படும். தமப்திகளிடையே அன்பு மேலோங்கும்.

சிம்மம்: மனைவி வழியில் அவ்வப்போது ஏற்பட்ட கருத்து வேறுபாடு, மோதல்கள் அடியோடு மறையும். பிரிந்த குடும்பம் ஒன்று சேரும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். நல்ல வரன் கிடைக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்தவர்களுக்கு சந்தாண பாக்கியம் கிட்டும். வீடு மனை விஷயத்தில் இருந்து வந்த சுணக்க நிலை மாறும்.

கன்னி: பிள்ளைகளால் பெருமை ஏற்படும். விருந்து விழாவிற்காக செலவுகள் செய்வீர்கள்.  வாகன பிராப்தி உண்டு. வீட்டுக்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கும் போது கவனம் தேவை. உத்தியோகம் பார்ப்பவர்கள் உன்னத நிலையை அடையலாம். பதவி உயர்வு, சம்பள் உயர்வு போன்றவை இருக்கும். மேல் அதிகாரிகளின் ஆத்ரவு கிடைக்கும்.

துலாம்: வேலையின்றி இருப்பவர்கள் மிகுந்த முயற்சிக்குப் பின் வேளை பெறுவர். வேலை நிமித்தமாக வெளியூர் சென்றவர்கள் மீண்டும் குடும்பத்திடம் ஒன்று சேர்வர். வியாபாரிகளுக்கு செய்து வரும் தொழிலில் சிறப்பான பலன்களைக் காணலாம். கடந்த காலத்தை விட கூடுதல் லாபம் கிடைத்தாலும் தொழிலை விரிவுபடுத்துவற்குண்டான வேலைகளை இப்போது ஆரம்பிக்கலாம்.

விருச்சிகம்: தொழில் நிமித்தமாக சிலர் தூர தேச பயணம் மேற்கொள்ள வேண்டி வரலாம். இந்த வேளையில் யாரிடமும் சற்று கவனமுடன் பார்த்து பழக வேண்டியது அவசியமாகிறது. வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்க சரியான தருணமிது. கலைஞர்களுக்கு தங்குதடையின்றி புதிய வாய்ப்புகளைப் பெறலாம்.

தனுசு:  பொருளாதார வளம் சீராக இருக்கும். அதே வேளையில் செலவும் அதிகரிக்கலாம். சிக்கனம் தேவை. குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். மனைவி வழியில் சிற்சில கருத்துவேறுபாடுகள் வரலாம். ஆனாலும் அது நொடிப் பொழுதில் சரியாகி விடும். ஆனால் உறவினர்கள் மத்தியில் தொடர்ந்து கருத்து வேறுபாடு வரலாம்.

மகரம்: மனதில் நிம்மதியும் ஆனந்தமும் ஏற்படும். பிள்ளைகளால் பெருமை காணலாம். அக்கம்பக்கத்தாரிடம் இருந்து வந்த கசப்புணர்ச்சி நீங்கும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் தங்கு தடையின்றி நடைபெறும். சந்தாண பாக்கியம் கிடைப்பதற்கு யோகமான காலகட்டம் இது. புதிய வீடு மனை வங்க தடைகள் ஏற்படலாம்.

கும்பம்: உத்தியோகஸ்தர்களுக்கு அதிக வேலைபளுவை சுமந்தாலும் அனைத்தையும் சுலபமாக செய்வீர்கள். அலைச்சல்கள் வரலாம். சிலருக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். கோரிக்கைகள் நிறைவேறும். சக ஊழியர்கள் உதவிகள் செய்து அனுசரனையாக இருப்பார்கள். உங்களிடம் கொடுக்கப்பட்டுள்ள பொறுப்புகளை நீங்கள் திறமையாகச் செய்வீர்கள். 

மீனம்: வியாபாரிகளுக்கு உங்களுடைய வியாபாரம் சீராக நடக்கும். அதிக உழைப்பை செய்தவர்களுக்கு ஏற்ற பொருளாதார வளம் வந்து சேரும். புதிய தொழில் ஆரம்பித்தவர்களுக்கு பொன்னான காலகட்டமிது. மூதலீடுகளை திருப்பி எடுப்பதோடு மட்டுமல்லாமல் லாபத்தையும் அள்ளுவீர்கள். வாடிக்கையாளர்கள் அதிகமாக வருவார்கள்.

நன்றி.

1 comment:

Anonymous said...

I just added your web page to my bookmarks. I enjoy reading your posts. Thank you!