Monday, October 22, 2012

இன்று - 23.10.2012

இன்று - 23.10.2012


நந்தன வருஷம்
ஐப்பசி மாஸம் 07ம் தேதி - அக்டோபர் 23 2012
தக்ஷிணாயனம்
வருஷ ரிது
செவ்வாய்கிழமை
திதி: சுக்லபக்ஷம்(வளர்பிறை) நவமி இரவு 11.50 வரை பின் தசமி
நக்ஷத்ரம்: திருவோணம் இரவு 10.05 வரை பின் அவிட்டம்
யோகம்: சூலம் 41.52 வரை
கரணம்: பாலவம் நாழிகை 16.17
சூரிய உதயம் 06.10
மாலை மணி 06.09
அஹசு: நாழிகை 29.23
லக்ன இருப்பு: துலாம் காலை மணி 07.24
இராகு காலம்: மாலை 3.10 முதல் 4.40 வரை
எமகண்டம்: காலை 9.10 முதல் 10.40 வரை
குளிகை: மதியம் 12.10 முதல் 1.40 வரை
சூலம்: வடக்கு - வடமேற்கு
பரிகாரம்: பால்
நக்ஷத்திர யோகம்: சித்தயோகம்
சந்திராஷ்டமம்: திருவாதிரை, புனர்பூசம்


குறிப்பு:

[1] நல்லநேரம்: காலை 7.40 - 9.10, மாலை 4.40 முதல் 6.10 வரை
[2] மேல்நோக்கு நாள்
[3] நவராத்திரி பூஜை 8ம் நாள்
[4] சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை
[5] திருவோண விரதம்
[6] திருவனந்தபுரம் ஸ்ரீஅனந்தபத்மநாபஸ்வாமி, திருவட்டாறு ஸ்ரீஆதிகேசவப் பெருமாள் உற்ஸவ ஆராட்டு
[7] மயா நவமி

-------------------------------------------------------------------------
கிரக பாதசாரம்

சூரியன் - சித்திரை 3
சந்திரன் - மகரம்
செவ்வாய் - கேட்டை 1
புதன் - விசாகம் 2
குரு(வியாழன்) - ரோகினி 4(வக்ர கதியில்)
சுக்ரன் - பூரம் 4
சனி - சித்திரை 4
ராகு - விசாகம் 4
கேது - கிருத்திகை 2


பஞ்சாங்கம் கணிப்பு:  பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

-------------------------------------------------------------------------

மேஷம்: உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். உற்சாகத்துடன் அனைத்து காரியங்களிலும் ஈடுபடுவீர்கள்.சுகங்களும், சந்தோஷங்களும் பெருகும். நிலம், வீடு போன்றவற்றில் உள்ள பிரச்சனைகள் முடிவுக்கு வரும். தந்தையின் ஆதரவும் உண்டு.

ரிஷபம்: வழக்கில் வெற்றி அல்லது நீண்ட நாட்களாக இழுபறியில் உள்ள பிரச்சினை முடிவில் செல்வம், உரிமை, அதிகாரம் கிடைக்கப் பெறுவீர்கள். தவறான வழிமுறைகளில் செல்வம் கரையவும் வாய்ப்புண்டு. எச்சரிக்கையாக இருக்கவும்.

மிதுனம்: இளைய சகோதரர் சகோதரி வேலை நிமித்தம் வெளியூர் செல்ல வேண்டி வரலாம். அண்டை அயலாருடன் இருக்கும் மனக்கசப்புகள் நீங்கி உற்சாகம் பிறக்கும். பிள்ளைகளிடம் அன்பு, பாசம் காட்டுவது நல்லது.

கடகம்: சுகம் பெருகும். மகிழ்ச்சி கூடும். பொருள் வரவு அதிகரிக்கும். பழைய பாக்கிகள் எளிதில் வசூலாகும். புகழ் தேடி வரும். ஒரு பெரிய அரசியல் கட்சி அல்லது அரசாங்கத்தின் அனுகூலம் கிடைக்கப் பெறுவீர்கள்.

சிம்மம்: நிலம், வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புகள் கை கூடி வரும். குழந்தைகளின் கல்வி, நடத்தை ஆகியன நன்றாக இருக்கும். நீதிமன்ற வழக்குகளிலிருந்து விடுபடுவீர்கள். வேதாந்த விஷயங்களில் நாட்டம் அதிகரிக்கும்.

கன்னி: சுகம், பாக்கியம், தொழில், லாபம் ஆகியவை நன்றாக உள்ளன. பொருள் வரவில் குறைவு ஏற்பட வாய்ப்பு இல்லை. எனினும் குடும்பத்தில் சிறு சிறு பிணக்குகள் வந்து மறையும். கோபம் கலந்த வார்த்தைகளை உதிர்க்காமல் இருப்பது நன்று.


துலாம்: நெஞ்சு சம்பந்தப்பட்ட சிறு சிறு உபாதைகள் தோன்றலாம். எனினும் கவனம் தேவை. உறுதியும், துணிவும் நிறைந்திருக்கும். பிரபலங்களின் நட்பும், ஆதரவும் கிடைக்கும். இசையில் உள்ள திறமையை காட்டுவதற்கு மிக
சரியான காலகட்டமிது. உங்கள் திறமை பளிச்சிடும்.


விருச்சிகம்: ஆன்மீக, மத நம்பிக்கைகள் அதிகரிக்கும். பேச்சுதிறமையால் வழக்குகளில் வெற்றிகள் காண்பீர்கள். தாயாரின் உடல்நலம் சீராகும். வியாபாரத்தில் நல்ல லாபம் பெறலாம். கலைத் துறையினர் பெரும் பொருள் ஈட்டுவர்.

தனுசு: குடும்பத்தில் உள்ளவர்களுக்கு வாக்கு கொடுப்பதற்கு முன் யோசனை செய்து கொள்ளவும். எனினும் அவர் யோககாரகர் என்பதனால் காரிய வெற்றி மற்றும் பெரும் பொருள் குவியும். எடுத்த செயல்கள், முயற்சிகள் யாவும்
இன்னலின்றி முடியும்.


மகரம்: உடன் இருப்பவர்களால் எற்பட்ட தொல்லைகள் மறையும். சுப காரியங்களில் இதுவரை இருந்த சுணக்க நிலை மாறும். புதிய வாகனம் வாங்கி மகிழ்வீர்கள். வீடு கட்டுவதற்கு இருந்த தடைகள் மாறும். 

கும்பம்: வேலை செய்யுமிடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிட்டும். தொழிலில் எதிர்பாராத வகையில் பெரும் லாபம் கிடைக்கும். கலைத் துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கைவரப் பெறும்.  

மீனம்: சுபநிகழ்ச்சிகள் இனிதே நிறைவேறும். பெரும் பொருள்வரவை எதிர்பார்க்கலாம். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த செல்வம் உங்களிடம் வந்து சேரும். விலகிச் சென்ற சொந்த பந்தங்கள் உங்களிடம் வந்து சேர்வர். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.
---------------------------------------------------------------------------

No comments: