Thursday, October 4, 2012

இன்றைய ராசிபலன் - 04.10.2012

இன்றைய ராசிபலன் - 04.10.2012மேஷம்: குடும்பத்தில் நல்ல செய்திகள் தேடி வரும். குறிப்பாக குடும்ப விஷயம் சம்பந்தமாக தூரத்திலிருந்து செய்திகள் வரும். வெளிநாடுகளில் வசிக்கும் பிள்ளைகள் தாய்நாடு வரலாம். தேவையற்ற வீண் விவாதங்களில் மூக்கை நுழைத்து வம்பை வாங்க வேண்டாம்.

ரிஷபம்: குடும்பத்தில் சமீப காலமாக இழுத்து கொண்டிருந்த ஒரு பிரச்சனை முடிவுக்கு வந்து சேரும். வாகனத்தை ஓட்டும்போதோ பயணிக்கும்போதோ கவனம் தேவை. எந்த விஷயங்களிலும் மந்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம். உங்கள் மேல் அக்கறை காட்டுபவர்களிடத்தில் அன்பு செலுத்துங்கள்.

மிதுனம்: எதிர்பாராத வகையில் திடீரென்று செலவுகள் வரலாம். மனதைப் பக்குவப்படுத்தி செல்வுகளை திட்டமிட்டால் சிறிது சேமிக்கலாம். புதிய தொழில் வாய்ப்புக்கு இன்றைய நாளில் ஆலோசனைகள் மேற்கொள்வீர்கள். வீட்டிலுள்ள பெரியவர்கள் உடல் நலனில் அக்கறை காட்டவும்.

கடகம்: பிரச்சனைகளில் முடிந்தவரை நீங்களே விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. அதனால் உங்களுக்கு மேன்மை ஏற்படும். புதிய தொழில் முயற்சிகளில் தேர்ந்தெடுத்து இறங்குவதற்கு மிகச் சரியான நாளாகும். சிலருக்கு துஷ்ட சகவாசத்தால் துன்பங்கள் நேரிடலாம்.

சிம்மம்: இரவுப் பயணத்தை முடிந்த வரை தவிர்க்கப் பாருங்கள். வீட்டிலும், வெளியிலும் உங்கள் வாதத்திறமையால் எதுவும் சாதிக்கலாம். மிகவும் அமைதியாக இருந்து காரியத்தை முடித்துக் கொள்வீ்ர்கள். நீங்கள் முக்கியமான நபர் ஒருவரை இன்று சந்தித்து லாபம் பெறுவீர்கள்.

கன்னி: நீங்கள் எப்போதுமே வேலையை திட்டமிட்டு முடிப்பீர்கள். சொந்த பந்தங்கள் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து நினைத்த காரியத்தை முடித்துக் கொள்வீர்கள்.  எதிலும் யாரையும் நம்பி கையெழுத்து போடும்முன் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துக் கொள்ளவும்.

துலாம்: சந்தோஷம் துக்கம் இரண்டையும் மாறி மாறி அனுபவிக்கப் போகிறீர்கள். தெய்வீக விஷயங்களில் அதிக ஈடுபாடு கொள்வீர்கள். ஆனால் அதில் முழு நம்பிக்கையுடன் பங்கு பெறுங்கள். வாய்ப்புண் எதுவும் வருவதற்கு காக்க உணவுக் கட்டுப்பாடு அவசியம்.

விருச்சிகம்: கோபத்தைக் கட்டுப்படுத்தி காரியங்களில் கவனத்தை செலுத்தவும். தொழிலை விமர்சிப்பவர்களை அமைதியாக அலட்சியப்படுத்துங்கள். வெற்றிவாகை சூடுவீர்கள். தம்பதிகளுக்குள் ஏற்படும் பிரச்சனைகளை மூன்றாம் நபர் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்.

தனுசு: உங்கள் கவலைகளுக்கும் பிரச்சனைகளுக்கும் தீர்வு காணும் நாள். யார் யாரைப் பற்றி சொன்னாலும் ஆதாரமில்லாமல் எந்த விஷயத்தையும் நம்பக்கூடாது. வீட்டிலுள்ளவர்களிடம் யோசனை கேட்டு எதையும் செய்வது உத்தமம்.

மகரம்: எந்த வேலையிலும் உங்கள் தனித்தன்மை வெளிப்படும். தடைகளை முறியடித்து காரிய வெற்றி பெறலாம். வீடு, நிலம் ஆகியவற்றில் இருந்து வந்த சுணக்க நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்படும். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மேலும் சில பாதிப்புகள் வரலாம். எனவே உணவு கட்டுப்பாடு அவசியமாகிறது.

கும்பம்: உத்தியோகம் பார்ப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். உங்களுடைய கோரிக்கைகளை மேலதிகாரிகள் ஏற்று நடப்பார்கள். விரும்பிய இடத்திற்கு பணி இட மாறுதல் கிடைக்கும். பணத்தை விட அறிவை மூலதனமாக வைத்து செய்யப்படும் தொழில் முன்னேற்றம் ஏற்படும். 

மீனம்: நீங்கள் சொன்ன வாக்கைக் காப்பாற்ற சிறிது போராட வேண்டி வரலாம். மேலும் வீண் அலைச்சலும் ஏற்படலாம். தேவையில்லாத பணவிரையம் ஆகலாம். காரிய அனுகூலம் கிடைக்கும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். தனியார் வேலையில் இருப்பவர்களுக்கு சிறு வாக்குவாதங்கள் வரலாம்.

No comments: