சஷ்டி விரதம்:
ஐப்பசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் சுக்ல பிரதமையில் விரதத்தைத் தொடங்கி தொடர்ந்து சஷ்டி வரை ஆறு நாட்கள் முருகனை வழிபட்டு கடும் விரதமிருப்பது “கந்தர் சஷ்டி விரதம்”. இதனை சிலர் மகா சஷ்டி விரதம் என்றும் சிலர் கூறுவார்கள்.
ஐப்பசி மாத சஷ்டி முருகனது தோற்றத்திற்கான திருநாள். சூரசம்ஹாரம் நடைபெறும் திருநாள். ஆகவே இந்த சஷ்டியை ”மகாசஷ்டி” என்று கூறூவது மிகவும் பொருந்தும். ஐப்பசி மாதத்திற்க்குப் பின்னர் ஒவ்வொரு மாதமும் வளர்பிறை பிரதமை முதல் ஆறுநாள் விரதமிருப்பது சஷ்டி விரதம். இதுவே திதி விரதம். சதுர்த்தி முதற்கடவுள் முருகனின் அண்ணன் விநாயகருக்கு உரியது. ஏகாதசி கார்மேக வண்ணன் நாராயணனுக்கு உரியது. திரயோதசி இறைவன் சிவனுக்கு உரியது. சஷ்டி முருகனுக்கு உரியது. ஆகவே ஒவ்வொரு வாரத்தின் வெள்ளி அல்லது செவ்வாய்க் கிழமைகளும், ஒவ்வொரு தமிழ் மாதம் வரும் கிருத்திகை நக்ஷத்திரமும், ஒவ்வொரு தமிழ் மாதம் வரும் சஷ்டியும், ஒவ்வொரு வருடம் வரும் ஐப்பசி மாத வளர்பிறை சஷ்டியும் முருகனுக்கு உகந்த நாட்களாக அறியப்படுகின்றன.
இவை தவிர மாசி மகம், பங்குனி உத்திரம் முதலியனவும் முருகனை சிறப்பாக வழிபட புனித நாட்களாகும்.
விரதம் என்றால் என்ன?
தொடரும்....
No comments:
Post a Comment