Saturday, October 27, 2012

இன்று - 27.10.2012

இன்று - 27.10.2012

நந்தன வருஷம்
ஐப்பசி மாஸம் 11ம் தேதி - அக்டோபர் 27 2012
தக்ஷிணாயனம்
வருஷ ரிது
சனிக்கிழமை
திதி: சுக்லபக்ஷம்(வளர்பிறை) திரயோதசி இரவு 11.08 வரை பின் சதுர்த்தசி
நக்ஷத்ரம்: உத்திரட்டாதி இரவு 11.43 வரை பின் ரேவதி
யோகம்: துருவம் 30.12 வரை
கரணம்: பவம் நாழிகை 11.02
சூரிய உதயம் 06.10
மாலை மணி 06.09
அஹசு: நாழிகை 29.23
தியாஜ்ஜியம்: நாழிகை 59.18
லக்ன இருப்பு: துலாம் காலை மணி 07.34
இராகு காலம்: காலை 9.10 முதல் 10.40 வரை
எமகண்டம்: மதியம் 1.40 முதல் 3.10 வரை
குளிகை: காலை 6.10 முதல் 7.40 வரை
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்
நக்ஷத்திர யோகம்: சித்தயோகம் இரவு 11.43 வரை பின் மரணயோகம்
சந்திராஷ்டமம்: மகம், பூரம்


குறிப்பு:

[1] நல்லநேரம்: காலை 7.40 - 9.10, மாலை 4.40 முதல் 6.10 வரை
[2] மேல்நோக்கு நாள்
[3] சனிப்பிரதோஷம்
[4] தானபல விரதம்
[5] மருதுபாண்டியர்கள் விரதம்
[6] இன்று வாஸ்து செய்ய நல்ல நாள் - காலை மணி 7.44 முதல் 8.20க்குள், வீடு, மனை, மடம், ஆலயம், கிணறு வெட்ட வாஸ்து செய்ய மிக நல்ல நாள்.


-------------------------------------------------------------------------


கிரக பாதசாரம்

சூரியன் - ஸ்வாதி 1
சந்திரன் - மீனம்
செவ்வாய் - கேட்டை 2
புதன் - விசாகம் 2
குரு(வியாழன்) - ரோகினி 4(வக்ர கதியில்)
சுக்ரன் - உத்திரம் 3
சனி - சித்திரை 4
ராகு - விசாகம் 4
கேது - கிருத்திகை 2


பஞ்சாங்கம் கணிப்பு:  பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

-------------------------------------------------------------------------

மேஷம்: ஆடை ஆபரண சேர்க்கை அதிகரிக்கும். பிதுரார்ஜித சொத்து விஷயங்களில் ஒரு நல்ல முடிவுகள் வந்து சேரும். குடும்பச் செலவினங்கள் தாராளமாகும். பிள்ளைகள் வழியில் கடன்பெற வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்களுக்கு பார்த்துக் கொண்டிருக்கும் வேலையில் இடமாறுதல்கள் ஏற்படலாம்.

ரிஷபம்: புதிய பொறுப்புகள் வந்து சேரும். கிடப்பில் போட்டிருந்த வேலைகளை செய்வீர்கள். ஊதிய விஷயங்களில் நல்ல மனநிலை இருக்கும். வியாபாரிகளுக்கு லாபம் ஈட்டும் காலமிது. பணியாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். இலக்கியம், கதை, கவிதைத் துறைகளில் உள்ளவர்களுக்கு புகழ் கிடைக்கும். பங்குதாரர்கள் மூலம் சில தொந்தரவுகள் நேரிடலாம்.


மிதுனம்:  அழகுநிலையம் வைத்திருப்போர், காஸ்மெட்டிக்ஸ் வியாபாரம் செய்வோர் மற்றும் ஆடை அணிகலன்கள் விற்பனை செய்வோருக்கு ஏற்ற காலமிது. தங்கள் தொழிலை விரிவுபடுத்திக் கொள்ள சரியான சமயமிது. கலைத்துறையினருக்கு ஓரளவு முன்னேற்றம் கிடைக்கும். தாங்கள் மேன்மையடைந்திட புதிய வாய்ப்புகள் வந்து சேரும்.

கடகம்: சிலருக்கு வெளிநாடு வாய்ப்புகள் வரலாம். அதிலும் கலைத்துறையில் டெக்னிக்கல் சம்பந்தப்பட்ட துறைகளில் இருப்பவர்களுக்கு வாய்ப்புகள் குவியும். மாணவமணிகளுக்கு புதியதாக கல்வி பயில மனம் ஆனந்தப்படும். நல்ல நட்பு வட்டாரம் கிடைக்கும். 


சிம்மம்: தந்தைக்கு உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். தாங்களுக்கு வரவேண்டிய பணபாக்கிகள் வந்து சேரும். நீண்ட நாட்களாக இருந்த கடமைகளை நிறைவேற்றிக் கொள்ள சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொள்வீர்கள். சுபகாரிய விஷயமாக வெளியூர் செல்ல நேரிடலாம். 

கன்னி: கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் முடிவுக்கு வரும். வீடு மாற்றிக் கொள்ள விரும்புபவர்கள் மாற்றிக் கொள்ளத்தக்க தருணம் வந்து சேரும். புதிய வாகனம் யோகம் வந்துசேரும். உங்களுக்கு சம்பந்தமில்லாத பிரச்சனைகளில் தலையிடுவதும் கத்து சொல்வதையும் தவிர்த்தல் நலம்.


துலாம்: முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். செலவுகளை திட்டமிட்டு செய்வது நல்லது. புதிய காரியங்களை செய்ய துவங்குவதற்கு முன் நல்ல நேரம் காலம் பார்த்து செய்வது நல்லது. வேலையில் இருந்த பளு கொஞ்ச கொஞ்சமாகக் குறையும். அதில் இருந்து வந்த சுணக்க நிலையும் மாறும். 

விருச்சிகம்: வெளிநாட்டு வேலை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். வியாபாரிகளுக்கு நெடுநாட்களாக இருந்து வந்த கடன்கள் தீரும். கூட்டு வியாபாரத்தில் கணிசமான லாபம் கிடைக்கும். வெளிநாடுக்கு ஏற்றுமதி செய்வோருக்கு புதிய ஆர்டர்கள் வந்து சேரும். 


தனுசு: புதிய இட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். தொழிற்சாலைகள் வைத்திருப்போருக்கு நல்ல லாபம் கிடைக்கும். பொதுவான விஷயங்களில் தலையிடுவோருக்கு உங்கள் கருத்துக்களை மற்றவர்கள் ஆமோதிப்பார்கள். பெண்களால் இருந்த தொல்லைகள் மறைந்து நிம்மதி பிறக்கும்.  

மகரம்: பணத்தேவைகள் பூர்த்தியாகும். அண்டை அயலாரின் ஆதரவு கிடைக்கும். குறுகிய பயணங்கள் அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு சாதகமான முன்னேற்றம் ஏற்படப்போவது உறுதி. நல்ல அறிமுகம் கிடைக்கப் பெற்று முன்னேற்றம் உண்டு.   
   

கும்பம்: சிற்சில விரையங்கள் ஏற்பட்டாலும் அவை யாவுமே சுபச்செலவுகள் தான் என்பதை உணருங்கள். எனினும் பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்கள் தன்னம்பிக்கை, திறமை திறன் அதிகரிக்கும். நுண்கலை, கட்டிடக்கலை சார்ந்த தொழில் செய்பவர்களுக்கு நன்மை கிடைக்கும்.      

மீனம்: உடலைப் பற்றி தவறான எண்ணங்கள் தோன்றி மறையும். நல்ல சந்தோஷ தருணங்கள் ஏற்படும். சுபகாரியங்கள் வெகு லகுவாக கூடி வரும். விலகி நின்ற உறவுகளும் உரிய நேரத்தில் கை கொடுப்பார்கள். புதிய வீட்டிற்கு செல்வது சிறிது தள்ளிப் போகலாம். பிள்ளைகள் உயர்கல்வி செல்வதற்குண்டான வேலைகளை ஆரம்பிப்பது நல்லது. 

No comments: