Thursday, October 25, 2012

இன்று - 26.10.2012

இன்று - 26.10.2012நந்தன வருஷம்
ஐப்பசி மாஸம் 10ம் தேதி - அக்டோபர் 26 2012
தக்ஷிணாயனம்
வருஷ ரிது
வெள்ளிக்கிழமை
திதி: சுக்லபக்ஷம்(வளர்பிறை) துவாதசி இரவு 10.35 வரை பின் திரயோதசி
நக்ஷத்ரம்: பூரட்டாதி இரவு 10.34 வரை பின் உத்திரட்டாதி
யோகம்: துருவம் 30.12 வரை
கரணம்: பவம் நாழிகை 11.02
சூரிய உதயம் 06.10
மாலை மணி 06.09
அஹசு: நாழிகை 29.23
தியாஜ்ஜியம்: நாழிகை 59.18
லக்ன இருப்பு: துலாம் காலை மணி 07.00
இராகு காலம்: காலை 10.40 முதல் 12.10 வரை
எமகண்டம்: மதியம் 3.10 முதல் 4.40 வரை
குளிகை: காலை 7.40 முதல் 9.10 வரை
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்
நக்ஷத்திர யோகம்: சித்தயோகம்
சந்திராஷ்டமம்: ஆயில்யம், மகம்


குறிப்பு:

[1] நல்லநேரம்: காலை 9.10 - 10.40
[2] கீழ்நோக்கு நாள்
[3] கோதுவாதசி
[4] நக்ஷத்ர துவாதசி
[5] திருப்பதி ஸ்ரீமலையப்பஸ்வாமி கத்தவால் ஸமஸ்தான மண்டபம் எழுந்தருளல்
[6] சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்பாள் தங்கப்பாவாடை தரிசனம்


-------------------------------------------------------------------------

கிரக பாதசாரம்

சூரியன் - ஸ்வாதி 1
சந்திரன் - கும்பம் மாலை மணி 4.34க்குப் பின் மீனம்
செவ்வாய் - கேட்டை 2
புதன் - விசாகம் 2
குரு(வியாழன்) - ரோகினி 4(வக்ர கதியில்)
சுக்ரன் - உத்திரம் 2 இரவு 10.28க்குப் பின் உத்திரம் 3
சனி - சித்திரை 4
ராகு - விசாகம் 4
கேது - கிருத்திகை 2


பஞ்சாங்கம் கணிப்பு:  பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

-------------------------------------------------------------------------

மேஷம்: நல்ல பணப்புழக்கத்தையும், பொருளாதார ஏற்றமும் இருக்கும்.  பிள்ளைகளால் அனுகூலம் ஏற்படும். எந்த பிரச்சனையையும் சந்தித்து முறியடிக்கும் வல்லமையைப் பெறலாம். காரியத்தடைகள் நீங்கி அனுகூலம் பிறக்கும்.

ரிஷபம்: மதிப்பு மரியாதை சுமாராகவே இருக்கும். வீண் வதங்களைத் தவிர்க்கவும். குடும்பத்தின் தேவைகள் பூர்த்தியாகும். புதிய வீடு வாங்க வாய்ப்பு உண்டு. குழந்தை பாக்கியம் கிடைக்கும். கணவன் மனைவி இடையே அன்பு நீடிக்கும் என்றாலும் தம்பதிகளுக்குள் சிற்சில பிரச்சனைகள் வரத்தான் செய்யும்.


மிதுனம்:  உறவினர் வகையில் அதிக நெருக்கம் வேண்டாம். சிலர் தொழில் நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிய நேரிடலாம். தூரத்தில் இருக்கும் உறவினரால் நனமை ஏற்படும். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு வேலைப் பளு அதிகரிக்கும்.

கடகம்: வருமானத்தில் எந்த குறையும் இருக்காது. உடன் பணிபுரிவோரிடம் அனுசரனையாக நடந்து கொள்ளவும். சிலர் எதிர்பாராத இடமாற்றத்தை சந்திக்கலாம். சொந்தத் தொழில் புரிவோர் சிறிது சிரத்தை எடுத்து உழைக்க வேண்டியிருக்கும். 


சிம்மம்: உழைப்புக்கேற்ற லாபம் கிடைக்கும்.  தொழில் நிமித்தமாக நீண்ட தூரம் பயணம் போக வேண்டி வரும். எதிரிகள் வகையில் அசட்டையாக இருத்தல் கூடாது.  ஏழரைச் சனியின் கடைசி காலகட்டத்தில் இருந்தாலும் புதிய முதலீடுகளின் போது ஆலோசனைகள் அவசியமாகிறது. பணவிஷயத்தில் தொடர்ந்து அக்கறை தேவை. 

கன்னி: எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும். அரசியல்வாதிகள், பொதுநல சேவை புரிவோருக்கு பண விஷயம் திருப்திகரமாக இருக்கும். ஆனால் எதிர்பார்த்த பதவி கிடைப்பதில் வாக்குவாதம் ஏற்படலாம். ஆனால் பொருளாதாரம் மிகவும் சிறப்பாக இருக்கிறது.


துலாம்: குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் தேவைகள் பூர்த்தியாகும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் பெருகும். உறவினர்கள் வகையில் நிலவி வந்த பிரச்சனைகள் அனைத்தும் அடியோடு மறையும். சுபநிகழ்ச்சிகள் நடக்கும். பெண்களால் அனுகூலம் கிடைக்கும். 

விருச்சிகம்: வீடு மனை வாங்கும் யோகம் சிலருக்கு கூடி வரும். புதிய சொத்துக்கள் வாங்க நேரம் கைகூடி வரும். வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும். ஆனால் அதற்காக சிலர் கடன் வாங்க வேண்டி வரலாம். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு முன்னேற்றம் காண்பர். 


தனுசு: வேலையின்றி இருப்பவர்கள் வேலை கிடைக்கப் பெறலாம். வியாபாரிகளுக்கு தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். அலைச்சல் இருக்கும். ஆனால் கடந்த காலத்தை விட கூடுதல் வருவாயைப் பெறலாம். புதிய வியாபாரம் தொடங்குவதற்கு முன் ஒன்றுக்கு மேற்பட்டவர்களிடம் ஆலோசனை செய்யவும்.  

மகரம்: உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். உழைப்புக்கு ஏற்ற பிரதிபலன் கிடைக்காமல் இருந்தவர்களுக்கு தற்போதைய காலகட்டத்தில் நன்மை நடக்கும். சிலருக்கு இடமாற்றம் சம்பந்தப்பட்ட ஆலோசனைகள் நடக்கும். உடன்பணிபுரிவோரால் அனுகூலம் உண்டு. 
     

கும்பம்: உங்கள் பொறுப்புகளை வேறு நபரிடம் ஒப்படைக்க வேண்டாம். வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும். அலைச்சல் இருக்கும். தொழில் நிமித்தமாக சிலர் குடும்பத்தை விட்டு பிரிய நேரிடலாம்.      

மீனம்: கூட்டு வியாபாரத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. எதிலும் முதலீடு செய்வதற்கு முன் குடும்ப உறுப்பினர்களுடன் ஆலோசனை செய்து கொள்ளவும். இருப்பதைக் கொண்டு சிறப்பாக வாழ்ந்திட முயற்சியுங்கள். 

No comments: