Wednesday, October 24, 2012

இன்று - 24.10.2012

இன்று - 24.10.2012நந்தன வருஷம்
ஐப்பசி மாஸம் 08ம் தேதி - அக்டோபர் 24 2012
தக்ஷிணாயனம்
வருஷ ரிது
புதன்கிழமை
திதி: சுக்லபக்ஷம்(வளர்பிறை) தசமி இரவு 10.55 வரை பின் ஏகாதசி
நக்ஷத்ரம்: அவிட்டம் இரவு 9.48 வரை பின் ஸதயம்
யோகம்: கண்டம் 37.03 வரை
கரணம்: தைதுலம் நாழிகை 13.26
சூரிய உதயம் 06.10
மாலை மணி 06.09
அஹசு: நாழிகை 29.23
தியாஜ்ஜியம்: நாழிகை 57.11
லக்ன இருப்பு: துலாம் காலை மணி 07.16
இராகு காலம்: மதியம் 12.10 முதல் 1.40 வரை
எமகண்டம்: காலை 7.40 முதல் 9.10 வரை
குளிகை: காலை 10.40 முதல் 12.10 வரை
சூலம்: வடக்கு - வடகிழக்கு
பரிகாரம்: பால்
நக்ஷத்திர யோகம்: மரணயோகம் இரவு 9.48 வரை பின் சித்தயோகம்
சந்திராஷ்டமம்: புனர்பூசம், பூசம்

குறிப்பு:

[1] நல்லநேரம்: காலை 9.10 - 10.40, மாலை 4.40 முதல் 6.10 வரை
[2] மேல்நோக்கு நாள்
[3] நவராத்திரி பூஜை 9ம் நாள்
[4] விஜயதசமி
[5] குழந்தைகளுக்கு அக்ஷரப்யாசம் செய்ய நல்ல நேரம்: காலை 9.10 - 10.40
[6] தசரதலளித கௌரீ விரதம்
[7] ஸோபபதம் த்விளத விரதம்
[8] திருக்கோஷ்டியூர் ஸ்ரீஎம்பெருமாள் ஊஞ்சலில் காக்ஷயருளல்
[9] திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் ஸகஸ்ர கலசாபிஷேகம்

------------------------------
-------------------------------------------

கிரக பாதசாரம்

சூரியன் - சித்திரை 4 காலை 7.758 வரை பின் ஸ்வாதி 1
சந்திரன் - மகரம் காலை 11.00 வரை பின் கும்பம்
செவ்வாய் - கேட்டை 1 மாலை 3.18 வரை பின் கேட்டை 2
புதன் - விசாகம் 3 - (காலை 9.46க்கு வக்ரம் ஆரம்பம்) பின் விசாகம் 2
குரு(வியாழன்) - ரோகினி 4(வக்ர கதியில்)
சுக்ரன் - உத்திரம் 2
சனி - சித்திரை 4 இரவு அதிகாலை 2.46க்கு கிழக்கில் உதயம்
ராகு - விசாகம் 4
கேது - கிருத்திகை 2

பஞ்சாங்கம் கணிப்பு:  பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்


-------------------------------------------------------------------------

மேஷம்: விளையாட்டு துறைகளில் உள்ளவர்களுக்கு சாதனைகள் படைக்க வாய்ப்புண்டு. புத்திரர்கள், வாழ்க்கைத்துணை மற்றும் பெற்றோர்கள் வழிகளில் நல்ல ஆதாயம் பெற வாய்ப்புண்டு. திருமணத் தடைகள் யாவும் நீங்கி மங்கள காரியங்கள் நடக்க வாய்ப்புண்டு.

ரிஷபம்: இசைத் துறையில் உள்ளவர்களுக்கு நற்பெயர் கிடைக்கும். பூர்வீக சொத்துகளில் லாபம் கிடைக்கும். மின்சாரம், இரசாயணம் தொழில் சார்ந்தவர்களுக்கு வேலை நிரந்தரமாகும். தொழில் காரணமாக வாங்கிய கடனை திரும்ப செலுத்துவீர்கள். 

மிதுனம்:  உடல்நலம் சிறக்கும். தாய், தாய் வழி உறவினர்கள் மூலம் வீண் செலவுகள் நேரிடலாம். பொருளாதார வளர்ச்சி ஏற்ற இறக்கமாகவே இருக்கும். இளைய சகோதரத்துக்கு உடல் உபாதைகள் ஏற்படலாம். குடும்ப உறுப்பினர்களுடன் விட்டுக் கொடுத்து போவது நல்லது.

கடகம்: ஆடை ஆபரண சேர்க்கை அதிகரிக்கும். புதிய வீடு கட்டும் பணியோ அல்லது நிலம் வாங்கும் பணியோ மேற்கொள்வீர்கள். மிக நல்ல பலன்களை தடையின்றி அனுபவிப்பீர்கள். திட்டமிட்ட சில காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள்.

சிம்மம்: வீண்பழி சுமத்தி உங்களை விட்டு பிரிந்து சென்ற உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மீண்டும் உங்களிடம் வந்து சேர்வர். இலக்கியம், கதை, கவிதைத் துறைகளில் உள்ளவர்களுக்கு புகழ் கிடைக்கும். வேலையாட்கள் மூலம் சில தொந்தரவுகள் நேரிடலாம்.

கன்னி: உங்களது பொருளாதார நிலைமையை உயர்த்துவதாகும். வசதி வய்ப்புகள் அதிகரிக்கும். குழப்பங்கள் அகன்று குதூகலத்தை தரக்கூடிய அமைப்பாகும். நூதனப் பொருட்கள் சேர்க்கை அதிகரிக்கும்.


துலாம்: தாய் வழியில் இருந்த பிரச்சனைகள் அகன்று சந்தோஷம் பிறக்கும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். பிள்ளைகள் உங்களுக்கு சந்தோஷத்தை கொடுப்பர். குழந்தைகளின் கல்யாண தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். 

விருச்சிகம்: பெண்களால் இருந்த தொல்லைகள் மறைந்து நிம்மதி பிறக்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். அண்டை அயலாரின் ஆதரவு கிடைக்கும். குறுகிய பயணங்கள் அதிகரிக்கும். நிலம், மனை சம்பந்தமான தொந்தரவுகள் நீங்கும்.

தனுசு: குடும்பத்தை சாராத ஒருவரால் தொழிலில் சிரமம் ஏற்பட்டு பின் மறையும். பதற்றத்தை தவிர்த்து நிதானத்தை கடைபிடியுங்கள். சிற்சில விரையங்கள் ஏற்பட்டாலும் அவை யாவுமே சுபச்செலவுகள் தான் என்பதை உணருங்கள். எனினும் பணவரவு திருப்திகரமாக இருக்கும். 

மகரம்: உங்கள் தன்னம்பிக்கை, திறமை திறன் அதிகரிக்கும். நுண்கலை, கட்டிடக்கலை சார்ந்த தொழில் செய்பவர்களுக்கு நன்மை கிடைக்கும். உடலைப் பற்றி தவறான எண்ணங்கள் தோன்றி மறையும். குடும்பத்தில் நல்ல சந்தோஷ தருணங்கள் ஏற்படும். நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் வரும்.  

கும்பம்: அழகிய வீடு மற்றும் வாகன வசதிகள் பெருகும். நண்பர்களிடம் கருத்து மோதல்களை தவிர்ப்பது அவசியம். பாகப்பிரிவினை சுமூகமாக முடியும். பிறருக்கு பொறுப்பு சொல்லி வாங்கிக் கொடுத்த தொகை பிரச்சனையின்றி வந்து சேரும். வாகனங்கள், மற்றும் இயந்திரங்களை பிரயோகப்படுத்தும் போது கவனம் தேவை.   
மீனம்: சுஉடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பொருளாதார பிரச்சனைகள் உண்டாகாது. சொன்ன வாக்கை காப்பாற்ற முடியாமல் போகலாம். குடும்பத்தில் பிள்ளைகளை முன்னிட்டு விவாதங்கள் ஏற்படலாம். தெய்வ நம்பிக்கைகளிலும் சடங்குகள் சமிபிரதாயங்களில் நாட்டம் அதிகரிக்கும்.


---------------------------------------------------------------------------

No comments: