Sunday, February 27, 2011

Important - எனது விளக்கம்

அனைவருக்கும் வணக்கம்.

இதற்கு மேலும் நான் பொறுமையாக இருந்தால் நான் மிருகத்திற்கும் கேவலமாகி விடுவேன் என்ற காரணத்தினால் இந்த விளக்கத்தை அளிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியிருக்கிறேன். என்னுடைய நண்பர்கள் பலர்(ஏன் ஜோதிட துறையில் இருப்பவர்கள் கூட) எனக்கு வழங்கிய அறிவுரை என்னவென்றால் “டேய் ராமகிருஷ்ணா, ஜோதிடத்தை தொழிலாக செய்!!! சேவையாக செய்யாதே. மக்களில் சிலருக்கு சேவை செய்பவனை கண்டால் இந்த காலத்தில் இளிச்சவாயனாக தெரியும். நீ மட்டும் ஆய்வு, நல்லது என்றெல்லாம் பேசி உன்னுடைய காலத்தை கெடுத்து கொள்ளாதே” என சொன்னார்கள். அதையும் மீறி கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் என்னுடைய நேரத்தையெல்லாம் வீணாக்கி விட்டேன் என இப்போது உணர்கிறேன். மக்களுக்கு பயன்படும் வகையினில் எவ்வளவோ காரியங்கள் செய்திருக்கிறேன். ஏன் இதே சென்னையில் கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக நான் காசு வாங்கி ஜோதிடம் சொன்னதில்லை. இதுவும் எனது நண்பர்கள் பல பேருக்கு தெரியும்.கடந்த 1999 உலகக்கோப்பை முதல் ஒவ்வொரு Occasionsன் போதும் நான் ஜோதிட ரீதியாக சில விளக்கங்களை அளித்து வருகிறேன். அது போலதான் கடந்த இந்திய வங்கதேசம் போட்டியின் போதும் சரி, இன்று நடைபெற்ற இந்திய இங்கிலாந்து போட்டியின் போதும் சரி, நான் இந்தியா வெற்றி பெறும் என ஜோதிட ரீதியாக சில விளக்கங்களை அளித்தேன்.இன்றைய போட்டி டையில் முடிவடைந்தது. ஜோதிட ரீதியாக சில விஷயங்களை சொன்னேன். அது நடக்கவில்லை. ஆனால் ஏதோ நான் சொன்னது நடக்கவில்லை என்பதற்காக என்னையும், எனது குடும்பத்தினரையும், எனது பரம்பரை தொழிலான ஜோதிடத்தையும் கேவலமாக திட்டி எனக்கு மெயில் செய்திருக்கிறார்கள்.

நான் என்ன ஊரை ஏமாற்றி காசு சம்பாதித்து விட்டேனா? அல்லது பரிகாரம் என்ற பெயரில் லட்சக்கணக்கில் சம்பாதித்து விட்டேனா? இல்லையே. இதுவரை நான் காசாகவோ, பொருளாகவோ வாங்கி யாருக்கும் எந்த ஜோதிடமும் சொன்னதுமில்லை. பரிகாரங்கள் செய்து கொடுத்ததும் கிடையாது.

நான் செய்தது என்ன?

மக்களுக்கு இருக்கும் ஆன்மீக அறியாமையை அகற்றுதல், ஜோதிடம் படிப்பவர்களுக்கு பலன் சொல்வதற்கு வசதியாக ஆய்வுகளுக்கு பயன்படும் கருத்துக்களை பரப்புதல், ஜோதிடத்தில் பரிகாரம் என்பதே கிடையாது என விளக்குதல் என என்னை பின் தொடர்ந்து வருபவர்களுக்கு தெரியும். இதற்கெல்லாம் பயந்து ஓடி விட மாட்டேன். ஏனென்றால் ஜோதிடத்தை நாங்கள் தொழிலாக செய்யவில்லை. எங்களது பரம்பரை ஜோதிடத்தை தொண்டாக செய்கிறது. இன்றளவும் நாங்கள் செய்து வருகிறோம். எனது தாழ்மையான கருத்து என்னவென்றால் எனது பதிவு என்றில்லை எந்த பதிவாக இருந்தாலும் சரி தங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் தாராளமாக டெலிட் செய்து விடலாம். அதற்காக என்னை கருத்தே சொல்லக்கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமையில்லை. என்னை திட்டி யாரும் மெயில் செய்தால் நான் கவலைப்படவும் மாட்டேன். கோபமும் அடையமாட்டேன்.

எனினும் நான் இப்போதும் சொல்கிறேன். யாருக்கும் பயந்து எனது கருத்துகளை சொல்லாமல் விடமாட்டேன். வழக்கம்போல் எனது பதிவுகள் தொடர்ந்து வரும். என்ன இனி இலவச சேவையாக ஜோதிடமே சொல்லபோவதில்லை என முடிவுக்கு என்னையும் வரவைத்து விட்டனர். எனவே ஜோதிடம் சொல்வதற்கு சிறு கட்டணம் வசூலிக்கபடும். அந்த கட்டணத்தை நான் செலவழித்தால் அது எனது பரம்பரைக்கு களங்கம் சேர்க்கும் விதமாக அமைந்துவிடும். எனவே அப்படி வாங்கும் கட்டணத்தை தமிழ்நாட்டில் உள்ள நலிந்த கோவில்களுக்கும், அனாதை ஆசிரமங்களுக்கும், ஏழை குழந்தைகளுக்கும் எமது நண்பர்கள் மூலமாக நற்காரியங்கள் செய்ய திட்டமிட்டிருக்கிறேன். நானாக யாரிடத்திலும் நன்கொடைகளும் வசூலிக்க போவதில்லை. என்னிடம் ஜோதிடம் பார்க்கும் தொகையை மட்டுமே செலவழிக்க போகிறேன்.

இப்பொதும் சொல்கிறேன்.....

ஜோதிடம் எனது தொழிலல்ல.....எனது உயிர்.

என்றும் நன்றிமறவா..

பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர்.

Friday, February 18, 2011

இந்தியா வங்கதேசம் போட்டி முடிவு - India Bangladesh Result - ஜோதிட ரீதியாக

உலகக் கோப்பை துவங்கி விட்டது. எத்துனையோ பேர் “ஐயா! ஜோதிடர் அவர்களே! தாங்கள் உலகக் கோப்பை தொடர்பாக ஏதேனும் பதிவு உண்டா?” என என்னிடம் கேட்க நான் இட்லிவடையிடம் கேட்டேன். அவர் உடனடியாக ஒரு ஐடியா கொடுத்தார். அதனால் விளைந்தது இந்த பதிவு.

முதலில் இந்திய அணியின் தலைவர் தோனி ஜாதகத்தை ஆராய்வோம்.

dhoni.JPG

தோனிக்கு ராகு திசை சனி புக்தி நடக்கிறது.

-----------------------------------

வங்கதேச அணியின் தலைவர் ஷாகிப் அல் ஹாஸன் ஜாதகத்தை ஆராய்வோம்.

Shakib Al Hasan.JPG

ஹாஸனுக்கு ராகு திசையில் வியாழ புக்தி நடக்கிறது.

போட்டி நடைபெறும் நாளன்றைய கிரஹ நிலை

19022011.JPG

ஜோதிடத்தில் ஒரு விஷயாதி ஆரம்பிக்கும் போதுதான் நேரம் காலம் பார்க்க வேண்டுமே தவிர விசேஷம் நடக்கும் நேரம் எடுத்துக் கொள்ள கூடாது என்று ஒரு விதி இருக்கிறது. எனவே முதலில் நாம் அதை நினைவில் வைத்து கொள்ள வேண்டும். நல்லது. தோனிக்கு ராகு திசையில் சனி புக்தி நடக்கிறது. ஹாஸனுக்கு ராகு திசையில் வியாழ புக்தி நடக்கிறது. இனி சில பாய்ண்ட்டுகள் ஜோதிட ரீதியாக இருக்கும். புரியாதவர்கள் விட்டு விடலாம்.

போட்டி நடைபெறும் அன்றுள்ள ஜாதக நிலைப்படி லக்னேசன் புதன். தோனி பிறந்த லக்னேசன் புதன். ஹாஸன் பிறந்த லக்னேசன் சுக்கிரன். ராகு லக்னத்திற்கு 7ல் அமர்ந்திருக்கிறார். இங்கு இருவருக்குமே ராகு திசை நடக்கிறது. புக்தி மட்டுமே வேறுவேறு. தோனியின் புக்திநாதன் சனி 4ல் அமர்ந்திருக்கிறார்(பாவத்தில் 5ல் அமர்ந்திருக்கிறார்). ஹாஸனின் புக்திநாதன் வியாழன் 10ல் அமர்ந்திருக்கிறார்(பாவத்திலும்). போட்டி நடைபெறும் அன்றைய ஜாதகப்படி லக்னேசன் வியாழ பகவானின் 12ல் அமர்ந்திருக்கிறார். இதே போன்று பல விதமான ஆராய்ச்சிகள் செய்து முடிவு:

இந்தியா வெற்றி பெற வாய்ப்புகள் அதிகம். ஆனாலும் போராட்ட வெற்றியாகத்தான் இருக்கும். இரு அணிகளுக்குமே ஸம வாய்ப்பு இருந்தாலும் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்.

சதவீத கணக்கு: இந்தியா: 66% - வங்கதேசம்: 34%