Friday, November 14, 2025
Sunday, November 2, 2025
Sunday, July 6, 2025
சாதுர்மாஸ்ய விரதம் அப்டேட்ஸ்:
This year சாதுர்மாஸ்ய விரதம் அப்டேட்ஸ்:
ஸ்ரீமத் அழகிய சிங்கர் ஸ்வாமிகள் - ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீமத் ஆண்டவன் ஸ்வாமிகள் - திருப்புல்லாணி
திருப்பதி ஸ்ரீமத் சின்ன ஜீயர் ஸ்வாமிகள் - திருமலை
திருக்குறுங்குடி ஸ்ரீமத் பேரருளாள ஜீயர் ஸ்வாமிகள் - திருக்குறுங்குடி
வானமாமலை ஸ்ரீமத் மதுரகவி ராமானுஜர் ஜீயர் ஸ்வாமிகள் - வானமாமலை
அடியேன் ராமானுஜதாசன்
பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர்
Monday, June 9, 2025
வாழ்த்து தெரிவித்தமைக்கு நன்றி
அனைவருக்கும் வணக்கம்.
எங்களுடைய மணநாளிற்கு நேரிலும் - போனிலும் - Facebook - Whatsappலும் வாழ்த்து தெரிவித்தமைக்கு நன்றி.
பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர்
பரம்பரை ஜோதிடர்
மகிழ்மாறன் சடகோபன் வையகத்தில் வாழியே
மேதினியில் வைகாசி விசாகத்தோன் வாழியே
வேதத்தைச் செந்தமிழால் விரித்துரைத்தான் வாழியே
ஆதிகுருவாய்ப் புவியிலவதரித்தோன் வாழியே
அனவரதம் சேனையர்கோன் அடிதொழுவோன் வாழியே
நாதனுக்கு நாலாயிரம் உரைத்தான் வாழியே
நன்மதுரகவி வணங்கும் நாவீறன் வாழியே
மாதவன்பொற் பாதுகையாய் வளர்ந்தருள்வோன் வாழியே
மகிழ்மாறன் சடகோபன் வையகத்தில் வாழியே
Wednesday, March 5, 2025
வள்ளுவ பார்ப்பாரியம்
எதேச்சையாக ஒரு வீடியோ பார்க்க நேர்ந்தது. அவர் ஓர் ஜோதிட பேராசிரியர். பல பட்டங்களுக்கு சொந்தக்காரர். ராசிபலன் சொல்லும் ஜோதிடர்கள் அனைவரையும் வறுத்தெடுத்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று ஒரு செய்தியை போகிற போக்கில் சொன்னார். அதாவது ”தமிழ்நாட்டில் இருக்கும் எவருக்குமே ஜோதிடம் தெரியாது. தெலுங்கு பிராமணர்கள் வந்துதான் இங்கு ஜோதிடம் சொல்லி கொடுத்தார்கள். மேலும் இங்கு இருப்பவர்களுக்கு ஜோதிடத்தில் ஒரு அ ஃ கூட தெரியாது. தமிழ்நாட்டில் இருப்பவர்கள் எதற்கும் லாயக்கில்லை” என சொல்லி விட்டு தனது அடுத்த கருத்துக்கு போய் விட்டார். அந்த பேராசிரியர் தான் சொன்னதை தஞ்சாவூர் கோவில் கல்வெட்டில் எழுதி வைத்துவிட வேண்டியதுதான்.
சரி நம்ம விஷயத்திற்கு வருவோம். ரொம்பல்லாம் மெனக்கெட வேண்டாம். இங்கு ஜோதிடம் இருந்தது என சொல்வதற்கு ஒரு சிறிய ஆதாரமே போதுமானது. வானிலை கணிப்பதற்கு கணியர் என்றொரு சாதியும் - அவர்கள் கணித்ததை பலன்கள் சொல்ல வள்ளுவர் என்றொரு சாதியும் இருந்தது, இருக்கிறது. அரசியல் காரணமாக இருவரையும் பிரித்தார்கள். தமிழ் அறிஞர் குணா அவர்கள் எழுதிய வள்ளுவ பார்ப்பாரியம் படிக்க வேண்டும்.
இன்னும் என்னென்னல்லாம் பார்க்க வேண்டி இருக்கிறதோ?
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்



