எதேச்சையாக ஒரு வீடியோ பார்க்க நேர்ந்தது. அவர் ஓர் ஜோதிட பேராசிரியர். பல பட்டங்களுக்கு சொந்தக்காரர். ராசிபலன் சொல்லும் ஜோதிடர்கள் அனைவரையும் வறுத்தெடுத்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று ஒரு செய்தியை போகிற போக்கில் சொன்னார். அதாவது ”தமிழ்நாட்டில் இருக்கும் எவருக்குமே ஜோதிடம் தெரியாது. தெலுங்கு பிராமணர்கள் வந்துதான் இங்கு ஜோதிடம் சொல்லி கொடுத்தார்கள். மேலும் இங்கு இருப்பவர்களுக்கு ஜோதிடத்தில் ஒரு அ ஃ கூட தெரியாது. தமிழ்நாட்டில் இருப்பவர்கள் எதற்கும் லாயக்கில்லை” என சொல்லி விட்டு தனது அடுத்த கருத்துக்கு போய் விட்டார். அந்த பேராசிரியர் தான் சொன்னதை தஞ்சாவூர் கோவில் கல்வெட்டில் எழுதி வைத்துவிட வேண்டியதுதான்.
சரி நம்ம விஷயத்திற்கு வருவோம். ரொம்பல்லாம் மெனக்கெட வேண்டாம். இங்கு ஜோதிடம் இருந்தது என சொல்வதற்கு ஒரு சிறிய ஆதாரமே போதுமானது. வானிலை கணிப்பதற்கு கணியர் என்றொரு சாதியும் - அவர்கள் கணித்ததை பலன்கள் சொல்ல வள்ளுவர் என்றொரு சாதியும் இருந்தது, இருக்கிறது. அரசியல் காரணமாக இருவரையும் பிரித்தார்கள். தமிழ் அறிஞர் குணா அவர்கள் எழுதிய வள்ளுவ பார்ப்பாரியம் படிக்க வேண்டும்.
இன்னும் என்னென்னல்லாம் பார்க்க வேண்டி இருக்கிறதோ?
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்