Thursday, January 4, 2018

அஸ்வினி - மகம் - மூலம் நக்ஷத்திரங்களில் பிறந்தவர்களுக்கு ஓர் வாழ்நாள் பரிகாரம்

அஸ்வினி - மகம் - மூலம் நக்ஷத்திரங்களில் பிறந்தவர்களுக்கு ஓர் வாழ்நாள் பரிகாரம். 

பரிகாரம்:
எதற்கும் படபடப்பு வேண்டாம். நிதானம் அவசியம். தினமும் 10 நிமிடம் தியானம் செய்யுங்கள். இதுவே போதுமானது. 




விளக்கம்:
நீங்கள் கேதுவின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். கேதுவின் அதிதேவதை கணபதி. கணபதியின் உருவம் யோகத்தைக் கொடுக்கக் கூடியது. எனவே யோகா - தியானம் செய்வது நன்மை தரும். 


பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 7845119542
Email: ramjothidar@gmail.com

04/01/2018 to 10/01/2018 வார ராசி பலன்கள் - பண்டிகை நாட்களில் திதி வந்தால் என்ன செய்வது? - ஜோதிட குறிப்பு

Weekly Tamil Horoscope From 04/01/2018 to 10/01/2018 | வார ராசி பலன்கள் | Tamil The Hindu


பண்டிகை நாட்களில் திதி வந்தால் என்ன செய்வது? - ஜோதிட குறிப்பு


https://youtu.be/AbstDRiBcok




சூரியன் - தொடர்: பகுதி 02

சூரியன் - தொடர்: 02

அனுபவ ஜோதிடம்:
கேது - அஸ்வினியை - செயல்படும் மூளையாகவும்
சுக்கிரன் - பரணியை - அழகு நெற்றி, புருவம், உடலமைப்பு
சூரியன் - கார்த்திகையை - வெப்பம் கொண்ட கண்ணாகவும்
சந்திரன் - ரோகினியை - குளிர் கொண்ட நாசியாகவும்
செவ்வாய் - மிருகசீரிஷம் - அடக்கம் வேண்டிய நாவாகவும்
ராகு - திருவாதிரை - இயக்கம் கொண்ட உடலாகவும்
குரு - புனர்பூசம் - நல்ல மனமாகவும்
பூசம் - சனி - வாழ்க்கைக்குத் தேவையான வயிறு, உணவு, தொழிலாகவும்
ஆயில்யம் - புதன் - வாழத் தகுதியான நேர்மையாகவும்
எடுத்துக் கொள்ள வேண்டும்.

உதாரணமாக சூரியனின் சஞ்சாரத்தை எடுத்துக் கொண்டால் சித்திரை மாதம் மேஷ ராசியில் சஞ்சாரம் செய்யும் போது - காலபுருஷத் தத்துவம் படி படிப்படியாக தலையிலிருந்து இறங்கும் போது புருவத்திற்கு வரும் போது சுக்கிரனின் நக்ஷத்ரமான பரணியின் மூன்றாம் பாதத்தில் சஞ்சாரம் செய்யும் அதாவது புருவத்தில் சூரியன்  சஞ்சரிக்க ஆரம்பிக்கும் போது அக்னி நக்ஷத்ரம் ஆரம்பிக்கும். 



ஆன்மீக ரீதியாக சிவனுக்கு நெற்றிக்கண் உண்டு. நெற்றிக்கண்ணிலிருந்து பிறந்தவர் முருகன். முருகனுக்கு உகந்தது கிருத்திகை. என்ன ஒரு ஒற்றுமை பாருங்கள்.

அதனால்தான் கண்ணைக் குறிக்கக்கூடிய கிரகம் சூரியன் என்று நமது முன்னோர்கள் சொன்னார்கள். கண்ணுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் சூரிய நமஸ்காரம் செய்வது முக்கியமாகும். இதுவே பரிகாரம். கண் கண்ணாடி அணியும் ஒரு சிலருக்கு தினமும் சூரிய நமஸ்காரம் செய்த பின் கண்ணாடி தற்போது உபயோகிப்பதில்லை.

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 7845119542
Email: ramjothidar@gmail.com

Wednesday, January 3, 2018

வீட்டில் அதிக யந்திரங்கள் வைத்திருப்பது

வீட்டில் அதிக யந்திரங்கள் வைத்திருப்பது நல்லது இல்லை. ஏதேனும் யந்திரம் வைத்திருந்தால் அதற்கு தினமும் அபிஷேகம் செய்வதே முறையாகும். தேவையில்லாத யந்திரங்கள் வைத்திருந்தால் அதை கடலில் தூக்கி வீசுங்கள். அபிஷேகம், பூஜை செய்யாத யந்திரங்கள் எதிர்மறை சக்திகளை உருவாக்கலாம். 

புத்தகங்களில் இலவசமாகக் கொடுக்கக்கூடிய யந்திரங்கள் - ப்ராண ப்ரதிஷ்டை செய்யாத யந்திரங்கள் பலன் தராது தராது தராது.





பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 7845119542
Email. ramjothidar@gmail.com

சூரியன் - தொடர்: 01

ஜோதிட காரகத்துவத்தில் அரசு, அரசியலைக் குறிக்கக் கூடிய கிரகம் சூரியன். பொதுவில் சுப கிரகங்களில் முதல் கிரகம்: சூரியன். அனைவரையும் தலைமை தாங்கும் பண்பு கொண்டவர். ராஜகிரகம் என்று அழைக்கப்படுபவர். ஆனாலும் திருமணப் பொருத்தத்தில் பாவ ஸாம்ய கணக்கிற்கு சூரியனையும் எடுத்துக் கொள்கிறோம்.




பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 78451 19542
Email: ramjothidar@gmail.com

Tuesday, January 2, 2018

சந்திரனின் நக்ஷத்ரங்கள்

ரோகினி - ஹஸ்தம் - திருவோணம் ஆகிய நக்ஷத்ரங்கள் சந்திரனின் நக்ஷத்ரங்கள் ஆகும். அவர்களை அவர்கள் போக்கிலேயே விட்டு விட்டால் பிரச்சனைகள் இல்லை. ஆனால் அவர்களை கொச்சைப்படுத்தும் போதோ அவர்களுடைய நிலைப்பாட்டை கிண்டல் செய்தாலோ - முக்கியமாக அவர்களது EGOவை தொட்டால் - அவர்கள் வளர்ச்சி பெறுவார்கள்.




பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 89390 41417
Email: ramjothidar@gmail.com

Thursday, December 28, 2017

Friday, December 22, 2017

அறிவிப்பு

மிக மிக மிக மிக மிக கடுமையான பணிச்சுமை - அதனால் ஏற்படும் மனப்புழுக்கம். எனவே சிற் சில நாட்களுக்கு Facebookல் இருந்து விலகி நிற்கிறேன். மேலும் வரும் ஜனவரி 01 முதல் முழுவீச்சில் புதுமையான முழுமையான ஜோதிட தகவல்கள் - அரிதினும் அரிதான விஷயங்களுடன் அனைவரையும் சந்திப்பேன்.
ஜனவரி முதல் வாரம் வரை நேரில் வரும் அன்பர்கள் யாருக்கும் ஜோதிடம் பார்த்து சொல்ல முடியாத நிலையில் இருக்கிறேன்.
ஏற்கனவே கிட்டத்தட்ட 500 இமெயில்களின் வரிசை இருக்கிறது. அவற்றை ஒன்றன் பின் ஒன்றாக அனுப்பி வருகிறேன். தாமதமான அனைவருக்கும் சனிப் பெயர்ச்சி பலன்கள் போனஸாக Recordingல் இருக்கும்.
தை மாதத்திற்கு முன் அதிகபட்சமாக அனைவருக்கும் அனுப்பி விடுவேன்.
நன்றி.

Saturday, December 16, 2017

பயம் வேண்டாம் - சொந்தங்களே

மிக மிக முக்கியமான அறிவிப்பு:
Note: Please share this post.
தற்போது நடக்கக்கூடிய சனிப் பெயர்ச்சியை நினைத்து பயப்படாதீர்கள். முக்கியமாக ரிஷபம், மிதுனம், கன்னி, தனுசு ராசிக்காரர்கள் பயப்படாதீர்கள், எந்த ராசிபலனையும் பார்த்து பயப்படாதீர்கள்.
ராசிபலன்கள் அனைத்துமே பொதுவானவைதான். உங்கள் ஜாதகப்படி மாறும்.



உங்கள் ஜாதகத்தில் லக்னம், தசாபுத்தி, சனியின் சாரம், ஷட்பலம், அஷ்டவர்க்க பரல்கள் என எவ்வலவோ உள்ளன. பொதுவான பலன்களை நினைத்து குழப்பிக் கொள்ளாதீர்கள்.
உங்கள் கடமைகளை சரிவர செய்யுங்கள் - முடிந்த வரை முயலுங்கள் - சரியான நேரத்தை கடைபிடியுங்கள் - சோம்பேறித்தனத்தை விட்டொழியுங்கள் - எதிர்மறை கருத்துக்களை விதைப்பவர்களின் தொடர்புகளை துண்டியுங்கள் - குல தெய்வத்தை வணங்குங்கள் - முன்னோர்களை தினமும் வணங்குங்கள். இந்த பரிகாரங்களே போதுமானது.
உங்கள் மீது நீங்கள் முதலில் நம்பிக்கை வையுங்கள் - உங்களால் இந்த சனிப்பெயர்ச்சியை எதிர்கொள்ள முடியும் என்பதை நீங்கள் முதலில் நம்புங்கள்.

Thursday, December 14, 2017

சனிப் பெயர்ச்சி பலன்கள் - 2017

சனிப் பெயர்ச்சி பலன்கள் - ஓர் அறிமுகம்



சனிப் பெயர்ச்சி பலன்கள் - மேஷம்



சனிப் பெயர்ச்சி பலன்கள் - ரிஷபம்



சனிப் பெயர்ச்சி பலன்கள் - மிதுனம்



சனிப் பெயர்ச்சி பலன்கள் - கடகம்



சனிப் பெயர்ச்சி பலன்கள் - சிம்மம்



சனிப் பெயர்ச்சி பலன்கள் - கன்னி



சனிப் பெயர்ச்சி பலன்கள் - துலாம்



சனிப் பெயர்ச்சி பலன்கள் - விருச்சிகம்



சனிப் பெயர்ச்சி பலன்கள் - தனுசு



சனிப் பெயர்ச்சி பலன்கள் - மகரம்



சனிப் பெயர்ச்சி பலன்கள் - கும்பம்



சனிப் பெயர்ச்சி பலன்கள் - மீனம்