Sunday, June 26, 2011

ஜூலை 1 முதல் ஜூலை 15 வரை - ராசிபலன்கள்

ராசிபலன்

குறிப்பு: இங்கு கொடுக்கப்பட்டிருப்பது பொதுவான பலன்களே, இவை 
ஜாதகத்திற்கு ஜாதகம் மாறலாம்.


0 குரு செவ் கேது சூரி சுக்
0 கிரஹநிலை புதன்
0 0
0 ராகு 0 சனி

மேஷ ராசி:
எதையும் தாங்கும் வலிமை உடைய செவ்வாயை ராசியாதிபதியாக கொண்ட மேஷ ராசி வாசகர்களே தற்போதைய கிரகநிலைப்படி தங்களுக்கு ஏற்றமான நிலை தென்படுகிறது. வெகுநாட்களாக வரவேண்டிய பணம் மற்றும் பொருட்கள் வந்து சேரும். குடும்பத்தில் சின்ன சின்ன குழப்பங்கள் வந்து மறையும். தேவையில்லாத வீண் ஆடம்பர செலவுகளை குறையுங்கள். கல்வி மற்றும் ஞானம் சம்பந்தமான விஷயங்களில் குழப்பம் முடிவுக்கு வரும். சோம்பேறித்தனம் உடையவர்கள் கொஞ்சம் அதை விடுத்து வேலைகளை ஆரம்பிக்கவும். வாழ்க்கைத்துணையுடன் ஒத்துப் போவீர்கள். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. தந்தையாரிடம் கருத்து வேற்றுமை வரலாம். கவனம் தேவை. வேலைபார்க்கும் இடத்தில் உங்கள் மதிப்பு உயரும். குலதெய்வ வழிபாடு மற்றும் வியாழக்கிழமைகளில் தக்ஷிணாமூர்த்தியை வழிபடுவது நன்மையைத் தரும்.


ரிஷப ராசி: யாரிடமும் சீக்கிரம் பழகி விடும் தன்மையுடைய சுக்கிரனை ராசியாதிபதியாக கொண்ட ரிஷப ராசி வாசகர்களே பூமி மற்றும் வீடு சம்பந்தப்பட்ட விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலகட்டம் இது. தேவையில்லாத வீண் பேச்சு மற்றும் விஷயங்களில் ஒதுங்கி இருக்க வேண்டியது அவசியமாகிறது. பிள்ளைகளின் மீதும் அவர்களின் கல்வியின் மீதும் பார்வை தேவை. வாழ்க்கைத்துணையுடன் சின்ன சின்ன கருத்து மோதல்கள் வந்து மறையும். வேலை செய்யுமிடத்தில் உங்களுக்கு நற்பெயர் கிடைக்கும். சின்ன சின்ன சுபசெலவுகள் வரலாம். வெள்ளிக்கிழமை தோறும் மஹாலக்ஷ்மியை வழிபடுவதும் மற்றும் ஸ்ரீ ஸூக்தம் சொல்வதும் நன்மையைத் தரும்.


மிதுன ராசி: எதிலும் புத்தி கூர்மையை உடைய புதனை ராசியாதிபதியாக கொண்ட மிதுன ராசி வாசகர்களே கொஞ்சம் செலவுகளை குறைத்து மூதலீடு செய்ய ஆரம்பிக்க வேண்டிய காலகட்டமிது. கடந்த சில நாட்களாக வீட்டில் உங்களுக்கு இருந்த கெட்ட பெயர் மறைந்து நற்பெயர் வரும். எதிலும் தைரியமாகவும் நம்பிக்கையாகவும் இறங்குவதற்கு முன் கொஞ்சம் முன் யோசனை அவசியம். மாணவ கண்மணிகள் படிப்பில் மிகுந்த உழைப்பினை கொடுக்க வேண்டிய காலகட்டமிது. தாயாரிடம் சின்ன சின்ன கருத்து மோதல்கள் வரலாம். வேலை செய்யுமிடத்தில் கவனம் தேவை. யாரிடமும் வீண் பேச்சு கூடவே கூடாது. புதன் மற்றும் சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில் சென்று வருவது பலனைத் தரும்.


கடக ராசி: யாரையும் விரைவில் கவர்ந்து விடும் சந்திரனை ராசியாதிபதியாக கொண்ட கடக ராசி வாசகர்களே, வரவுக்கு முன்பே செலவுகள் வந்து பயமுறுத்திய காலகட்டம் மாறப்போகிறது. உங்கள் உடன்பிறந்தோரிடம் சின்ன சின்ன கருத்து மோதல்கள் ஏற்பட்டு மறையும். வேலை விஷயமாக வெளிநாடு வாய்ப்புகள் வரும். பிள்ளைகளின் உடல்நலம் மீது கவனம் தேவை. திருமணத்தைடை நீங்கும் காலகட்டமிது. கோவில் மற்றும் புனித யாத்திரை புறப்பட தயாராகும் காலமிது. வழக்கு வியாஜ்ஜியங்களில் வெற்றி உங்களை வந்தடையும் காலகட்டமிது. வேலை செய்யுமிடத்தில் உங்களுடைய பேச்சை மேலதிகாரிகள் மதிக்கும் காலகட்டமிது. பஞ்சமி தோறும் அம்மனை வழிபட உங்கள் எதிர்காலம் பிரகாசமாயிருக்கும்.


ஸிம்ஹ ராசி: யாரையும் எளிதில் வீழ்த்தி விடும் பலம் பொருந்திய சூரியனை ராசிநாதனாக கொண்ட ஸிம்ஹ ராசி வாசகர்களே உங்கள் பேச்சில் முதிர்ச்சி தெரியும் காலமிது. கடந்த 7 ஆண்டுகளாக தாங்கள் கஷ்டப்பட்டு உழைத்து விதைத்த உழைப்பை அறுவடை செய்யும் காலத்தில் நீங்கள் இருக்கிறீர்கள். வீடு மற்றும் மனை வாங்கும் யோசனை இருந்தால் வாழ்க்கைத்துணையையின் பெயரையும் இணைத்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. உங்கள் குல தெய்வ வழிபாட்டை முறையாக மேற்கொண்டால் மேலும் உங்களுக்கு பலம் கூடும். வேலை செய்யுமிடத்தில் உங்கள் மதிப்பு உயரும். லாபமான முதலீடுகளை செய்யும் காலகட்டமிது. திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சிவன் கோவில் சென்று வழிபடுவது நன்மையைத் தரும்.


கன்னி ராசி: யாரையும் சீக்கிரமாக நம்பி விடும் புதனை ராசிநாதனாக கொண்ட கன்னி ராசி வாசகர்களே உங்களுடைய பேச்சுக்கும் மற்றவர்கள் மதிப்பு கொடுப்பார்கள். நீங்கள் இருக்குமிடத்தில் உள்ள பிரச்சினைகள் கொஞ்ச கொஞ்சமாக மறைய துவங்கியுள்ளது. உங்கள் தைரியம் மிளிரும் காலமிது. கல்வி சம்பந்தப்பட்ட விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்தவும். வாழ்க்கைத்துணையுடன் ஒத்து போகவும் இந்த காலகட்டம் வழிவகுக்கும்.தாய் தந்தையருடன் சிறிய கருத்து மோதல்கள் ஏற்பட்டு மறையும். அடிக்கடி கோவிலுக்கு சென்று நவக்ரஹத்தை வலம் வருவதும், முன்னோர்களை வழிபடுவதும் மிகுந்த நன்மையைத் தரும்.


துலாம் ராசி: யாரையும் பார்த்த உடனே எடை போட்டு விடும் துலாம் ராசி வாசகர்களே கடந்த சில நாட்களாக உங்கள் மனதில் இருந்த நீங்காத குறையொன்று மறையும் காலமிது. தேவையில்லாத வீண் பேச்சுக்களயும் விவாதங்களையும் குறைத்து கொள்ளுங்கள். மிகவும் தைரியமாக எந்த காரியத்திலும் இறங்கலாம். சகோதர சகோதரிகளிடம் பாசம் மிளிரும். கல்வி சம்பந்தமான விஷயங்களில் மிகவும் நன்மை தரும் காலமிது. வாழ்க்கைத் துணையுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. வேலை செய்யுமிடத்தில் உங்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும். சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில் சென்று வழிபடுவதும், ஆஞ்சனேயரை வழிபடுவதும் நன்மையைத் தரும்.


விருச்சிகம் ராசி: யாரிடமும் அனாவசியமாக பேசாத செவ்வாயை ராசியாதிபதியாக கொண்ட விருச்சிக ராசி வாசகர்களே, வெகுநாட்களாக இருந்த வராக் கடன்கள் வசூலாகும் காலமிது. வெளிநாடு சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருந்த சுணக்க நிலை மாறும். கல்வி சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகுந்த நன்மை தரும். பித்தம் சம்பந்தப்பட்ட பொருட்களை தவிர்ப்பது நல்லது. வாழ்க்கைத்துணையுடன் ஒத்துப் போவீர்கள். தேவையில்லாத வீண் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். தந்தையாருடன் உறவு சிறக்கும். வேலை நிமித்தமாக வெளியூர் செல்ல வேண்டி வரலாம். செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவில் சென்று வழிபடுவது நன்மையைத் தரும்.


தனுசு ராசி: மற்றவரின் அங்கீகாரத்திற்கு மதிப்பளிக்கும் வியாழனை(குருவை) அதிபதியாக கொண்ட தனுசு ராசி வாசகர்களே நீண்ட நாட்களாக இருந்த திருமணத் தடை நீங்கும் காலகட்டமிது. வேலையில்லாதவர்களுக்கு நல்ல இடத்தில் நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை கிடைக்கும். கல்வியில் நீண்ட நாட்களாக இருந்த இழுபறி நீங்கும். தாயாருடன் இருந்த கருத்து வேறுபாடுகளும் மறையும். பிள்ளைகளுக்கு இருந்த தடைகளும் நீங்கும். வாழ்க்கைத் துணையுடன் ஒத்துப் போவீர்கள். வேலை செய்யுமிடத்தில் கவனம் தேவை. சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில் வலம் வருவதும், பெரியோர்களை வணங்குதலும் நன்மையைத் தரும்.


மகர ராசி: மற்றவர்களின் நிறை குறைகளை கண்டுபிடிக்கும் சனியை ராசியாதிபதியாக கொண்ட மகர ராசி வாசகர்களே வீட்டில் நிலவிய சண்டை சச்சரவுகள் மறைந்து இன்பம் பொங்கும் காலமிது. கல்வி, வீடு, வாகனம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் லாபம் உண்டு. வெப்பம் ஏற்படுத்தும் பொருட்களை தவிர்ப்பது நல்லது. வாழ்க்கைத்துணையுடன் கருத்துக்கள் ஒத்துப் போகும். பெற்றோருடன் ஒத்துப் போவீர்கள். மிகுந்த லாபமான முதலீடுகள் செய்வீர்கள். வேலை செய்யுமிடத்தில் உங்கள் திறன் அதிகரிக்கும். உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். அடிக்கடி பெருமாள் கோவில் சென்று வருவதும், நவக்ரஹ வழிபாடு செய்வதும் நன்மையைத் தரும்.


கும்ப ராசி: தனது பேச்சால் யாரையும் எளிதில் வீழ்த்தி விடும் சனியை அதிபதியாக கொண்ட கும்ப ராசி வாசகர்களே கடந்த 2 வருடங்களாக இருந்து வந்த வறண்ட நிலை மாறும் காலகட்டமிது. உங்கள் வாழ்க்கையில் இருந்து வந்த சுணக்க நிலை மாறும் காலகட்டமிது. பெற்றோருடன் இருந்து வந்த கருத்து மோதல்கள் மறையும். பிள்ளைகளின் மதிப்பு உயரும். நீண்ட நேரம் தூங்காமல் இருப்பதை தவிர்க்கவும். பணியின் நிமித்தமாகவும், கல்வி நிமித்தமாகவும் வெளிநாடுகளுக்கு சென்று வர வாய்ப்புகள் தென்படுகிறது. நீண்ட நாட்களாக உங்கள் மீது இருந்த கெட்ட பெயர் நீங்கும். சனிக்கிழமைகளில் குல தெய்வ வழிபாடு செய்வதும் ஆஞ்சனேயருக்கும் வெண்ணை சாத்துவதும் நன்மையைத் தரும்.


மீன ராசி: நட்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் வியாழனை அதிபதியாக கொண்ட மீன ராசி வாசகர்களே கடந்த சில நாட்களாக இருந்த மன உளைச்சல்கள் நீங்கும் காலகட்டமிது. உங்கள் பேச்சுக்கு அங்கீகாரம் வரும் காலகட்டமிது. மிகவும் தைரியமாக எந்த காரியத்திலும் இறங்கும் முன் திட்டமிடுதல் அவசியம். பிள்ளைகளின் மீது இருந்து வந்த வேறுபாடுகள் நீங்கும். வாழ்க்கைத்துணையுடன் இணைந்து திட்டமிட்டு எதையும் செய்யவும். தந்தையாருடன் கருத்து மோதல்கள் ஏற்படலாம். வேலை செய்யுமிடத்தில் உங்கள் குரல் ஒலிக்கும். வியாழக்கிழமைகளில் சாய்பாபா, ராகவேந்திரர் கோவிலுக்கு சென்று வழிபடுவதும், முன்னோர்கள் வழிபாடும் நன்மையைத் தரும்.

3 comments:

Anonymous said...

Thank you posting this.

Sakthi-tamildasan said...

Nandri. Sevai thodara vaazhthukkal.

Sakthi-tamildasan said...

Nandri. Seavai thodara vaazhthukkal.