Sunday, July 7, 2013

வார பலன்கள் - 07 ஜூலை முதல் ஜூலை 14 வரை

மின்னஞ்சல் முகவரி: ramjothidar@gmail.com
 
மேஷம்: அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்.
உழைப்பால் உயரும் மேஷ ராசி வாசகர்களே உற்சாகத்துடன் அனைத்து காரியங்களிலும் ஈடுபடுவீர்கள். சுகங்களும், சந்தோஷங்களும் பெருகும். நிலம், வீடு போன்றவற்றில் உள்ள பிரச்சனைகள் முடிவுக்கு வரும். தந்தையின் ஆதரவும் உண்டு. வழக்கில் வெற்றி அல்லது நீண்ட நாட்களாக இழுபறியில் உள்ள பிரச்சினை முடிவில் செல்வம், உரிமை, அதிகாரம் கிடைக்கப் பெறுவீர்கள். இளைய சகோதரர் சகோதரி வேலை நிமித்தம் வெளியூர் செல்ல வேண்டி வரலாம். அண்டை அயலாருடன் இருக்கும் மனக்கசப்புகள் நீங்கி உற்சாகம் பிறக்கும். பிள்ளைகளிடம் அன்பு, பாசம் காட்டுவது நல்லது. கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் தேடி வரும். அரசியலில் குறுக்கு வழிகளில் ஈடுபட வேண்டாம். மாணவர்கள் கல்வியில் சிறப்பான தேர்ச்சியினைக் காண்பார்கள்.

ரிஷபம்: ரிஷபம்: கார்த்திகை 2, 3, 4ம் பாதம், ரோகினி, மிருகசீரிஷம் 1, 2ம் பாதம்
தனஸ்தானம் வலிமை பெற்றிருப்பதால் சுகம் பெருகும். மகிழ்ச்சி கூடும். பொருள் வரவு அதிகரிக்கும். பழைய பாக்கிகள் எளிதில் வசூலாகும். புகழ் தேடி வரும். ஒரு பெரிய அரசியல் கட்சி அல்லது அரசாங்கத்தின் அனுகூலம் கிடைக்கப் பெறுவீர்கள். குல தெய்வ ஆராதனைகளிலும், புனிதப் பயணங்களிலும் ஈடுபடுவீர்கள். தாய் வழி உறவினர்களால் நன்மை ஏற்படும். ஆடை ஆபரணங்கள் சேரும் காலமிது. உடன்பிறப்புகளால் நன்மை கிட்டும். விளையாட்டுதுறையில் உள்ளவர்களுக்கு பரிசும், பாராட்டுதல்களும் கிடைக்கும். பயணங்களால் மகிழ்ச்சியும், ஆதாயமும் கிடைக்கும். நிலம், வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புகள் கை கூடி வரும். குழந்தைகளின் கல்வி, நடத்தை ஆகியன நன்றாக இருக்கும். நீதிமன்ற வழக்குகளிலிருந்து விடுபடுவீர்கள்.

மிதுனம்:  (மிருகசீரிஷம் 3, 4ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2 ,3ம் பாதம்) -
எதிலும் நிதானத்தை கடைபிடிக்கும் மிதுன ராசி வாசகர்களே சுகம், பாக்கியம், தொழில், லாபம் ஆகியவை நன்றாக உள்ளன. பொருள் வரவில் குறைவு ஏற்பட வாய்ப்பு இல்லை. எனினும் குடும்பத்தில் சிறு சிறு பிணக்குகள் வந்து மறையும். கோபம் கலந்த வார்த்தைகளை உதிர்க்காமல் இருப்பது நன்று. நெஞ்சு சம்பந்தப்பட்ட சிறு சிறு உபாதைகள் தோன்றலாம். எனினும் கவனம் தேவை. உறுதியும், துணிவும் நிறைந்திருக்கும். பிரபலங்களின் நட்பும், ஆதரவும் கிடைக்கும். இசையில் உள்ள திறமையை காட்டுவதற்கு மிக சரியான காலகட்டமிது. உங்கள் திறமை பளிச்சிடும். ஆன்மீக, மத நம்பிக்கைகள் அதிகரிக்கும். பேச்சுதிறமையால் வழக்குகளில் வெற்றிகள் காண்பீர்கள். தாயாரின் உடல்நலம் சீராகும். வியாபாரத்தில் நல்ல லாபம் பெறலாம்.
கடகம்: புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம் -
குடும்பத்தில் உள்ளவர்களுக்கு வாக்கு கொடுப்பதற்கு முன் யோசனை செய்து கொள்ளவும். காரிய வெற்றி மற்றும் பெரும் பொருள் குவியும். எடுத்த செயல்கள், முயற்சிகள் யாவும் இன்னலின்றி முடியும். உடன் இருப்பவர்களால் ஏற்பட்ட தொல்லைகள் மறையும். சுப காரியங்களில் இதுவரை இருந்த சுணக்க நிலை மாறும். புதிய வாகனம் வாங்கி மகிழ்வீர்கள். வீடு கட்டுவதற்கு இருந்த தடைகள் மாறும். தந்தையின் வியாபாரத்தில் சிறிது கவனம் தேவை. வேலை செய்யுமிடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிட்டும். தொழிலில் எதிர்பாராத வகையில் பெரும் லாபம் கிடைக்கும். கலைத் துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கைவரப் பெறும். அரசியலில் உள்ளவர்களுக்கு மனதிலுள்ள எண்ணங்கள் ஈடேறும். மாணவர்களுக்கு கல்வியில் கவனம் தேவை.

சிம்மம்:  (மகம், பூரம், உத்திரம் 1 )
எடுத்த காரியத்தில் உறுதியாக இருக்கும் சிம்ம ராசி வாசகர்களே ! தள்ளிப் போய்க் கொண்டிருந்த சுபநிகழ்ச்சிகள் இனிதே நிறைவேறும். பெரும் பொருள்வரவை எதிர்பார்க்கலாம். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த செல்வம் உங்களிடம் வந்து சேரும். விலகிச் சென்ற சொந்த பந்தங்கள் உங்களிடம் வந்து சேர்வர். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். இளைய சகோதரத்தின் ஆரோக்கிய விஷயங்களில் கவனம் தேவை. உடன்பிறப்புகள் இடையே பாசப் பிணைப்பு அதிகரிக்கும். பேசும் பேச்சில் இனிமையும் நளினமும் அதிகரிக்கும். வீர தீர ளையாட்டுகளில் பாராட்டப்படுவீர்கள். பயணங்களினால் ஆதாயம் உண்டு. பிள்ளைகளுக்கு எதிர்பார்த்திருந்த வெளிநாடு பயணம் கைகூடி வரும். திருமணக் கனவுகள் நனவாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். வியாபார முன்னேற்றத்தை முன்னிட்டு சிலர் வெளிநாடு பயணம் செல்வர்.

கன்னி:  (உத்திரம் 2, 3 ,4, ஹஸ்தம், சித்திரை 1, 2)
உழைப்பினை உலகிற்கு சொல்லும் கன்னி ராசி வாசகர்களே !
பொருள் வரவு நிறைந்திருக்கும். குடும்பத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் வரலாம். எனினும் குரு பார்வை இருப்பதால் உடனடியாக மறையும். உடன் பிறந்தோரிடம் மனக்கசப்பு ஏற்படலாம். எனவே அவர்களை அனுசரித்து செல்லுங்கள். சுற்றியிருப்பவர்கள் உங்கள் சொல்லை செயலாக்க உங்களுக்கு உதவி புரிவர். வீண் குழப்பங்களிலிருந்து விடுபடுவீர்கள். குறுகிய பிரயாணமோ நீண்ட பிரயாணமோ எதுவாகினும் கவனமுடன் இருங்கள். பூமி யோகம் உண்டு. வாகன மாற்றம் செய்யும் சூழல் ஏற்படும். வாகனங்களை பிரயோகபடுத்தும் முன் சரி பார்த்து பின்னர் உபயோகப்படுத்தவும். இல்லம் தேடி வரும் விருந்தினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். ஆடை ஆபரணங்களுக்கு செலவு செய்வீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த மாற்ரம் நிகழும். தொல்லை தந்தவர்கள் விலகிச் செல்வார்கள். பிரபலங்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழில் வளர்ச்சி பெருகும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

துலாம்: (சித்திரை 3, 4, ஸ்வாதி, விசாகம் 1, 2, 3)
துலாம் ராசி வாசகர்களே, வரவுக்கு ஏற்றவாறு செலவுகளும் தேடி வரும். ஆரோக்கியத்தில் கவனம் கொள்ள வேண்டும். சிலருக்கு நரம்பு சம்பந்தப்பட்ட உபாதைகள் ஏற்படலாம்.  எதிர்பார்த்திருந்த பண வரவுகள் தேடி வந்தடையும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் சிறு சிறு மனத்தாங்கல்கள் ஏற்படலாம். உள்ளத்தில் மகிழ்ச்சி நிலைத்து இருக்கும். சகோதர சகோதரிகளுக்கு திருமணம் சம்பந்தப்பட்ட பேச்சு வார்த்தைகள் கை கூடி வரும். மகிழ்ச்சி தரும் தகவல்கள் வந்து சேரும். பிள்ளைகளுக்காக செலவுகள் செய்ய வேண்டி வரும். வீடு, நிலம் வாங்குவதில் சிக்கல்கள் ஏற்படலாம். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். சென்ற நாட்களில் நடைபெறாத சில காரியங்கள் முக்கியஸ்தர்கள் மூலமாக இனிதே நிறைவேறும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய நண்பர்களோடு சேர்ந்து கூட்டுத் தொழில் செய்வீர்கள்.
விருச்சிகம்: ( விசாகம் 4, அனுஷம், கேட்டை)
எதிலும் நேர்படப் பேசும் விருச்சிக ராசி வாசகர்களே தடை பட்டிருந்த காரியங்கள் அனைத்தும் இனிதே நடைபெறும். ஆரோக்கியத்தில் இருந்த குறைபாடுகள் அகலும். பொருள்வளம் சிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் தொடரும். தொட்ட காரியங்களில் வெற்றி கிட்டும். இனிமையாக பேசுவதில் வல்லவரான நீங்கள் காரியங்களை சாதித்து கொள்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். நண்பர்கள் உறவினர்கள் மூலம் நல்ல செய்திகள் உங்களை வந்தடையும். பயணங்களால் பயன் கிடைக்கும். வங்கிகளில் சேமிப்புகள் உயரும். விலையுயர்ந்த ஆடைகள் ஆபரணங்களை வாங்குவீர்கள். தெய்வ காரியங்களில் கவனத்தை செலுத்துவீர்கள். பெற்றோரின் உடல்நிலை சீராக இருக்கும். உறவினர்களிடம் உங்களின் மதிப்பும் மரியாதையும் உயரும். நிலம் வீடு சம்பந்தமாக உள்ள முயற்சிகள் கைகூடும்.

தனுசு: தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1)
அனைத்து விதங்களிலும் நன்மைகளையே பெறும் காலகட்டத்தில் இருக்கிறீர்கள். சுப காரியங்களுக்கான வாய்ப்புகள் தேடி வரும். கொடுக்கல் வாங்கலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கண் சம்பந்தப்பட்ட உபாதைகள் வரலாம். கவனம் தேவை. தந்தையின் தொழில் வளம் பெருகும். குடும்ப பிரச்ச்னைகளும் முடிவுக்கு வரும். வெளிவட்டாரப் பழக்கங்கள் நன்மையை தரும். நற்செய்திகள் உங்களை தேடி வரும். உடன்பிறப்புகள் அனைவரும் சந்தோஷமாக இருப்பார்கள். அவர்களுக்காக சில தியாகங்களையும் செய்வீர்கள். வீடு நில புலன்கள் உங்களை வந்தடையும். அதிலுள்ள பிரச்சனைகளும் தீரும். குழந்தைகளின் கல்வி, நடத்தை மிகவும் நன்றாக இருக்கும். பொன் பொருள் ஆபரண சேர்க்கை உண்டு. வியாபாரிகள் வெளிநாட்டு பயணம் செல்வார்கள். கலைதுறையினர் அயல்நாடு செல்வார்கள்.

மகரம்:  (உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அவிட்டம் 1, 2)
குடும்பத்தில் சின்ன சின்ன குழப்பங்கள் வந்து வந்து மறையும். எனினும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. பாராட்டும் புகழும் கிடைக்கும். பிள்ளைகளின் மீது தனி கவனம் தேவை. சிலருக்கு பிள்ளைகளுடன் கருத்து மோதல்கள் வரலாம். வாகன வசதிகள் பெருகும். தாய்க்காக எந்த தியாகத்தையும் செய்து அதற்கான அங்கீகாரத்தை பெறுவீர்கள். சகோதர சகோதரிகளிடையே பாசப் பிணைப்பு அதிகரிக்கும். கல்வி சம்பந்தமான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு அதற்கான பாராட்டுதல்கள் பரிசுகளை ஆகியவற்றைப் பெறுவீர்கள். இயந்திரம் சம்பந்தமான வியாபாரத்தில் செல்வம் பெருகும். சிலருக்கு பரம்பரை தொழிலில் லாபம் கிடைக்கும். உலக வாழ்க்கை, ஆன்மீக வாழ்க்கை இரண்டிலும் நாட்டம் அதிகரிக்கும். உங்கள் வளர்ச்சியினால் உங்கள் தந்தை சந்தோஷம் அடைவார்.

கும்பம்:  (அவிட்டம் 3, 4, ஸதயம், பூரட்டாதி 1, 2, 3)
கும்ப ராசி வாசகர்களே குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒத்துப்போக வேண்டியதை காட்டுகிறது. சகோதர சகோதரிகளுடன் உறவு சிறக்கும். உடன்பிறந்தவர்களுக்கு உயர் பதவி கிடைக்கும். மன உறுதி அதிகரிக்கும். பயணத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.  பாராட்டுகளும் விருகளும் கிடைக்கும். மத நம்பிக்கை அதிகரிக்கும். ஆன்மீக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பிள்ளைகளால் சந்தோஷம் அதிகரிக்கும். அவர்களுக்கு புதிய வாகனம் வாங்கி கொடுப்பீர்கள். புதிய உத்தியோகம் கிடைக்கும். உங்கள் தொழில் மூலம் பணவரவு அதிகரிக்கும். செம்பு, தங்க வியாபாரிகள் பெருத்த லாபம் அடைவர். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு வெளிநாடு பயணங்களால் பணவரவு அதிகரிக்கும். அரசியலில் உள்ளவர்களுக்கு தைரியம் அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் கவனத்தை செலுத்த வேண்டியது அவசியம்.

மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி)
குடும்பத்தில் உங்களுக்கு பெரிய பொறுப்பு தேடி வரும். உடல்நலத்தில் சிறு குறைபாடு வரலாம். நாவன்மையால் உங்கள் வேலைகளை சாதித்துக் கொள்வீர்கள். எனினும் குடும்ப ஸ்தானத்தை சனி பார்ப்பது சிறிய அளவிலான குழப்பத்தை தரலாம். ஆன்மீக சொற்பொழிவுகள், உபன்யாசங்கள் செய்வோருக்கு உகந்த காலமாகும். அரசாங்கத்தால் அனுகூலம் ஏற்படும். உடன்பிறந்த ஒருவருக்கு உங்களால் யோகம் கிடைக்கும். உங்களால் உங்களுக்கு பெருமையும் செல்வமும் கிடைக்கும். வாகன வழிகளில் விரையம் ஏற்படலாம். நிலம் வீடு வாகனம் வாங்கும் போது கவனம் தேவை. முதலீடுகள் செய்யும் போதும் கவனத்துடன் செய்யவும். பிள்ளைகளின் மேல் மிக எச்சரிக்கையாக இருக்கவும். தந்தையாருடன் மனக்கசப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எதிரிகளின் தொல்லைகள், கடன்சுமைகள் அடங்கும். தாய் மாமனால் அனுகூலம் கிடைக்கும். தடைபட்டிருந்த திருமணம் இனிதே நடைபெறும்.

No comments: