Saturday, May 30, 2020

ஜோதிட உண்மை - 03:

ஜோதிட உண்மை - 03:
மாந்தி கிரகம் என்பது சனி கிரகத்துடன் தொடர்புடையது. சனி பகவானின் மைந்தன் என்றும், சனியின் உப கிரகம் என்றும் கூறுகின்றனர்.

ஒருவரின் ஜாதகத்தில் மாந்தி எங்கு அமர்ந்திருக்கின்றாரோ அந்த ஸ்தானம் பாதக ஸ்தானமாக பார்க்கப்படுகின்றது. அதன் காரணமாக அந்த ஸ்தான அதிபதியும் பாதகத்தை ஏற்படுத்தக் கூடியவராக மாறுகிறார். மாந்தி இருக்கும் நட்சத்திரமும் பாதகமானதாக பார்க்கப்படுகின்றது.

ஆனால் உண்மை வேறாக இருக்கிறது. 



மாந்தியை நாம் தற்காலிக கிரக சூழ்நிலைக்கு மட்டும்தான் பார்க்க வேண்டுமே தவிர ஏனைய பலன்களுக்கு அல்ல - அதாவது கோச்சார ரீதியாக பலன்கள் உரைப்பதற்கு மட்டுமே நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். 

லக்னத்தில் மாந்தி இருந்தால் வளர்ச்சியே இருக்காது என்றெல்லாம் பலன்கள் தற்போது வருகிறது. மாந்தியை நினைத்து பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. பயமுறுத்துவற்காக ஜோதிடத்தில் இருக்கக்கூடிய விஷயங்களில் இதுவும் ஒன்று. கிரகங்களைத்தான் முக்கியமானவைகளாக நாம் எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர உபகிரகங்களை அல்ல. உபகிரகங்கள் என்பது ஒரு support, அவ்வளவுதான்.

குறிப்பு: இங்கு சொல்லியிருப்பது எம்முடைய கருத்துக்களே. 

பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர்
+91 7845 11 9542
Email: ramjothidar@gmail.com

No comments: