Thursday, June 10, 2021

உழைப்பு இல்லாமல் எந்த இலக்கையும் நாம் அடைய முடியாது

அனைவருக்கும் வணக்கம்.

ஓர் அண்ணா உண்டு. மதுரையை சேர்ந்தவர். 1995ல் B.Com முடித்து விட்டு சென்னைக்கு வேலை தேடி வந்தார். ஏதோ ஒரு நிறுவனத்தில் வேலை கிடைத்தது. அதன் பின் நடந்ததுதான் விஷயம். வேலை பார்த்துக் கொண்டே ICW படித்தார். கடும் பணிச்சுமை - எதையும் பொருட்படுத்தாமல் உழைத்தார். பலன் 2 வருடங்களில் கிடைத்தது. ICWல் தேறினார். படிப்படியாக முன்னேறி இப்போது ஓர் நிறுவனத்தில் Vice President அளவிற்கு உயர்ந்து நிற்கிறார். எனக்கு அவரும் ரோல் மாடல். ஒரே நேரத்தில் எப்படி அவரால் உழைக்க முடிந்தது?

வாழ்வில் வெற்றி பெற்றவர்களின் பின்னால் கண்டிப்பாக வலி இருக்கும். வலி இல்லாமல் வாழ்வில் ஜெயிக்க முடியாது. எதையும் உழைக்காமல் பெற முடியாது - அப்படி பெற்றால் அது நிலைக்காது. சிலருக்கு வேண்டுமானால் அதிர்ஷ்டம் கை கொடுக்கலாம்.

எடுத்துக் கொண்ட பாதையில் உறுதி - முயற்சி - உழைப்பு இல்லாமல் எந்த இலக்கையும் நாம் அடைய முடியாது.

சிலர் இன்னும் சோம்பேறிகளாகவும் - காலம் தமக்கு எதையுமே கொடுக்கவில்லை என்பது போலவும் - யாருமே தமக்கு உதவி செய்யவில்லை என்பது போலவும் புலம்பிக் கொண்டே இருப்பார்கள். இவர்களால் எந்த பிரயோஜனமும் இல்லை. இவர்களுக்கு புத்திமதி சொல்வதும் - விழலுக்கு இரைத்த நீரும் ஒன்றுதான். அவர்கள் வாழ்வில் என்றும் ஜெயிக்கப் போவதுமில்லை - மற்றவர்களை நிம்மதியாக இருக்கவிடப் போவதுமில்லை.

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 7845 11 9542
ramjothidar@gmail.com

No comments: